Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’

12 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

சாப்பிடும் இடத்தில் ஒரு குழந்தை ஐஸ் கிரீம் கேட்டு அடம்செய்ய அவர்கள் காய்ச்சல் வரும் என தர மறுத்தனர்…இதேபோல மித்துவுடன் இருக்கும் போது நடந்து நிகழ்வு அழையா விருந்தாளியாக அவனுள் வந்தது.

மித்ரா “இதுக்கு பேசாம அந்த குழந்தைக்கு ஐஸ் கிரீம் வாங்கியே குடுத்திடலாம்..பாவம்..”

குணா “ம்ம்..அப்புறம் காய்ச்சல் வந்தா நீயா தூக்கிட்டு போவ?”

“ம்ம்..அப்டின்னா அந்த குட்டி இப்போ அழுது அழுது காய்ச்சல் வந்தா அப்போ மட்டும் என்ன பண்ணுவீங்க?”

குணா “ஆ…அது சேட்டை..அனுபவிக்கட்டும்னு விடவேண்டியது தான்..”

“அதுக்கு மனசார பிடிச்சதை செஞ்சுட்டு உனக்கு வர பிரச்னையை நீயே பாத்துக்கோனு விடவேண்டியதுதானே..”

“ம்ம்..நீ இப்டியே எடக்கு முடக்கா பேசிட்டு இரு..அப்போ கண்ட்ரோலே இல்லாம குழந்தைங்க கேட்டது எல்லாம் வாங்கி தந்திடமுடியுமா?”

“ஒளராதடா..கட்டுப்பாடும் ஓரளவுக்கு இருக்கணும்..இப்டி எல்லாத்துக்கும் கண்ட்ரோல் பண்ணா தேவையான விஷயத்துக்கு அட்வைஸ் பண்ணாலோ அவங்க கேக்க மாட்டாங்க..எது கேட்டாலும் இவங்க நோ தான் சொல்லுவாங்கனு பேரெண்ட்ஸ் மேல ஒரு தப்பான அபிப்ராயம் வந்திடும்…அதுக்கு பதிலா சில நேரங்கள குழந்தைககிட்ட இத பண்ணா இந்த பிரச்னை வரும் அப்போவும் உனக்கு ஓகேவானு சொல்லிட்டு அதை செய்யவிட்டரனும்..அவங்க சொல்றமாதிரி பிரச்னை வந்தா சமாளிச்சு அப்போ வெளில வரணும், அடுத்ததடவ யோசிச்சு பண்ணனும், இல்ல அவங்க சொல்றதை இனி கொஞ்சம் கேட்டு நடக்கணும்னு எண்ணம் வரும்..விடாமலே பிரச்சனை பிரச்னைனு கத்துனா பிடிவாதம்தான் அதிகமாகும்..”

 

இன்றைக்கு மித்துவின் நினைவுகள் அவனை அதிகம் தாக்க வீட்டிற்க்கு சென்றவன் அவனது அலமாரியில் இருந்த அம்மாவின் படத்தை எடுத்தான். வயதை தாண்டிய பக்குவம் இருந்தபோதிலும் அந்த சாந்தமான முகத்தின் பொலிவும்,  புன்னகையும் என்றும் மாறியதில்லை..என எண்ணியவனுக்கு மித்துவிடம் அம்மாவை பற்றி பேசியது நினைவிற்கு வர அவன் எண்ணங்களை அடக்கும் வழியின்றி அதை தொடர்ந்து சென்றான். மித்ரனுக்கு காலேஜ் முடிந்த சமயத்தில் ஒரு நாள் ஆசிரமத்தில் பேசியபோது

மித்ரா “ஹே ஆதி, இவங்க உன் அம்மாவா? ரொம்ப அழகா இருக்காங்க…ஒரு சிலரை பாத்ததும் பழகணும்னு தோணுமே அப்டி ஒரு வசீகரம்..இவங்ககிட்ட இருந்து தான் உனக்கும் அந்த அட்ராக்டிவ் பவர் வந்திருக்கும்..அம்மா கண்ணுல தெரியற அதே நிதானம் உன்கிட்டேயும் இருக்கு…”

மித்ரன் “ம்ம்..அம்மாகிட்ட இருந்து தான் நிறைய விஷயம் கத்துகிட்டேன்…ரொம்ப நல்லவங்க..பொறுமைசாலி..அதிகமா அன்பா இருப்பாங்க…இரக்ககுணம் ஜாஸ்தி… ஆனா பயந்தவங்க…”

மித்ரா “அவ்ளோ பயந்தவங்க எப்படி உன்னை தனியா கூட்டிட்டு இவளோ தூரம் வந்தாங்க..”

மித்ரன் புன்னகையுடன் “பயத்தைவிட அவங்களுக்கு அவங்க பையன் தான் பெருசா தெரிஞ்சது…”

மித்து புரியாமல் விழிக்க மித்ரன் “என் அம்மா கிராமத்திலையே வளந்தவங்க தான்..அங்க எல்லாம் சீக்கரமாவே கல்யாணம் பண்ணிவெச்சுடுவாங்க.. என் அம்மாக்கும் அப்டி தான். முறைப்பையன் பிடிச்சிருக்குனு கேட்டதும் வீட்லயும் கட்டிவெச்சுட்டாங்க..அம்மாக்கும் அப்பாவை பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிருக்காங்க..அவரும் பாசமா தான் இருப்பாராம். அப்பா வெளி வேலை விவசாயம், காடுனு பாக்க போய்டுவாங்களாம்..கிட்டத்தட்ட 15 பேர் அதுக்கு மேல தான் எப்போதுமே வீட்ல ஆளுங்க இருப்பாங்களாம்.. அம்மாக்கு வீட்ல ஆளாளுக்கு வேலை வெப்பாங்களாம்..அம்மா எதையும் எதித்து பேசாம செஞ்சுட்டே இருப்பாங்களாம்..அத்தை சித்தினு இருந்தாலும் யாரும் கூட வந்து வேலை செய்யமாட்டாங்களாம்….சாப்பிட்டியானு கேட்க கூட மாட்டாங்களாம்..சில நேரம் சாப்பிட கூட மாட்டாங்களாம்….நேரமே இருக்காதாம்…அப்பாகிட்ட இதெல்லாம் எப்படி சொல்றதுனும் தெரியாதாம்..எப்போவது பேசி சொன்னாலும் வெளில மத்தவங்களுக்கு எல்லாம் எவ்ளோ பிரச்னை வரதட்சணை, மாமியார் கொடுமைனு எல்லாம் இருக்கு..அது எல்லாம் பாக்கும் போது வேலை செய்றது எல்லாம் பெருசில்லை மா.. குடும்பம்னா அப்டி தான் இருக்கும் நீ தான் அனுசரிச்சு போகணும்னு சொல்லுவாராம்.. அம்மாவுக்கும் அப்போ அது சரினு தான் பட்டதாம்..அதுக்கப்புறம் அம்மாவும் அந்த பேச்சை எடுக்கவேமாட்டாங்களாம்.. ஆனா பிடிச்சு ஆரம்பிச்ச வாழ்க்கை ஒரு கட்டத்துக்கு மேல கடமைகுன்னேனு வாழ ஆரம்பிச்சுட்டாங்களாம்….காடு தோட்டம் எல்லாம் விக்கிறது, அது இதுனு நிறையா பிரச்னை போயிட்டு இருந்ததாம்..கோர்ட்ல கேஸ் போட்டு தீர்ப்பு எல்லாம் இவங்களுக்கு எதிரா வந்திடுச்சாம்..முக்கால்வாசி சொத்தே போயிடிச்சாம்…..பெரியப்பாங்க, சித்தப்பா, மாமா, சித்தி, அத்தைனு ஒவ்வொருத்தரும் மாத்தி மாத்தி உங்களால தான் இவளோ இழப்புனு ஒருத்தர் மேல ஒருத்தர் பழி போட்டு சண்டைபோட்டுட்டு இருந்தநேரம் கொஞ்ச நாள்லையே நான் பொறந்ததும் எல்லாரும் சேர்ந்து இவன் பொறந்த நேரம்தான்னு சொல்லி என்னை கொல்ல சொன்னாங்களாம்….என் அப்பாக்கு சங்கடமா இருந்தாலும் மௌனமாவே இருந்தாராம்..இவனோட தான் இருக்கணும்னா இங்க நீயும் இருக்க முடியாதுனு அம்மாவை எல்லாரும் மிரட்டிருக்காங்க..பயந்த பொண்ணு வேற வழியில்லாம குழந்தைய குடுத்திடுவான்னு நினைச்சு அப்டி பண்ணிருப்பாங்க…ஆனா அம்மா முத தடவையா எல்லாரையும் எதித்து சண்டை போட்டாங்களாம்.

[“என்னங்க நம்ம புள்ளைய கொல்ல சொல்லறாங்க..நீங்க கேட்டுட்டு அமைதியா இருக்கிங்க.”

“வேற என்ன பண்றது கலை (கலைவாணி)..அவன் நேரம் சரில்ல..அதான் இந்த குடும்பத்துக்கு அவன் வேண்டாம்னு சொல்ராங்க..நாம அவங்கள எதித்து என்ன பண்ணமுடியும் சொல்லு.” என்றார் அதுவும் தலைகுனிந்தபடி

கலை “எது அவன் நேரம் சரிஇல்லையா? லாபம் வரும்போது மட்டும் பங்குபோட்டுட்டு பிரச்னை வரும்போது நீங்க அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாரும் ஒத்துமை இல்லாம மாத்தி குறை சொல்றதுக்கு என் பையன் என்ன பண்ணுவான்..நீங்க அன்பா பேசல, அனுசரணையா இல்லேன்னாலும் உங்களுக்கு வெளிக்காட்ட தெரில ஆனா எல்லாருக்கும் வேணும்கிறதா முன்னாடி நின்னு செயிரிங்க..கடமைய விட்டு விலகாதவர் பொறுப்போட இருக்கிறவர்னு நினச்சேன்..ஆனா இப்போதான் தெரியுது உங்க குடும்பத்துக்கு நீங்க சம்பளம் குடுக்காத வேலைக்காரிய தான் இவளோ என்னை பாத்திருக்கிங்க..இனிமேல் என் பையனை நானே வளத்திக்கறேன். இவனால தானே சொத்து போச்சு..உங்களுக்கு பிரச்சனை வரும்னு சொன்னிங்க..கண்டிப்பா இவன் சாதிப்பான்..பலபேர் இவனால தான் வாழறாங்கனு சொல்ற அளவுக்கு சாதிப்பான்..இப்டி ஒருத்தனை வளத்த நமக்கு குடுத்துவெக்கலையேனு நீங்க எல்லாரும் நிச்சயமா வருத்தப்படுவீங்க..]

அப்பாவே இப்டினு சொன்னதும் அம்மா ரொம்ப வெறுத்துப்போயி அங்கிருந்து என்னை கூட்டிட்டு வந்திட்டாங்க.

 

கைகுழந்தையோட பசி மயக்கத்துல அம்மா விழுந்திருந்த போது தான் பாலகிருஷ்ணன் மாமா பாத்து விசாரிச்சு எங்களை ஆசிரமத்துலையே தங்கிக்க சொல்லிருக்காங்க. அம்மாவும் இங்க இருந்த குழந்தைகளை பாத்துகிட்டு சமைக்க மத்த வேலைனு சந்தோசமா தான் இருந்தாங்க..நானும் மத்த குழந்தைகளோட இங்கேயே படிச்சேன் வளந்தேன்..ஆசிரமம் அப்போதான் ஆரம்பிச்சு 2 வருஷம் ஆன சமயம்..பெருசா வசதி, பாதுகாப்புன்னு எல்லாம் இல்லாம இருந்தது..அந்த சமயத்துல தான் ஆசிரமத்துல தீப்பிடிச்சிருச்சு…அந்த விபத்துல தான் என் அம்மா …எல்லா குழந்தைகளையும் காப்பாத்துன என் அம்மா என் கண்ணு முன்னாடியே இறந்திட்டாங்க..அப்போ என் வயசு 6..என்றவன் ஒரு நிமிடம் மௌனத்திற்கு பின் பெருமூச்சுடன் “அதுக்கப்புறம் தான் வெளில, அரசாங்கம்னு கொஞ்சம் ஹெல்ப் பண்ணி ஆசிரமத்துக்கு தேவையான விஷயங்களை பண்ணாங்க..”

எனக்குனு இருந்த ஒரே ஜீவனும் இனி இல்லைனு ஆகிடுச்சு..அப்பா வந்து அப்பவும் இதுக்கு தான் நான் அப்போவே அவகிட்ட சொன்னேன்..கேட்டாளா..இப்டி சாகடிச்சிட்டியேடான்னு கத்துனாரு..எனக்கே தோணும் ஒருவேளை நாம இல்லாம இருந்திருந்தா அம்மா சந்தோசமா இருந்திருப்பங்களோன்னு..அதுனாலையோ என்னவோ என்னால யாருகிட்டேயுமே ஒரு நெருங்கின உறவோட இருக்கமுடியறதில்லை..பாலா மாமாகிட்ட கூட அவருக்கு தேவையானதை செஞ்சுட்டு ஒதுங்கி தான் இருப்பேன்..”

மித்து “என்ன ஆதி..இவளோ தெளிவா எல்லாமே யோசிக்கறவன் எப்படி இப்டி ஒரு முடிவெடுத்த…உன் அம்மாவோட சந்தோசம் அவங்கள மனுசியா கூட மதிக்காத ஒரு குடும்பத்துல வாழுற மெஷின் வாழ்க்கைல இல்லன்னு உனக்கு புரியலையா? உன்னோட இழப்பு அதால உனக்கிருக்கிற வருத்தம் அதுக்கு யாரும் எந்த சமாதானமும் சொல்லமுடியாது..ஆனா நம்மள சுத்தி நடக்கற எல்லா விஷயங்களுக்கும் கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும் ஆதி..”

 

மித்ரன் அவளை பார்த்துவிட்டு “ம்ச்..அதை சொல்லாத..அம்மாவும் இதேதான் சொல்லுவாங்க..எல்லாமே நடக்கணும்னு விதி…அதேமாதிரி எல்லாத்துக்குமே ஏன் அப்டி நடக்கதுன்னு காரணம் இருக்கும்.. அதுவும் ஏதாவது ஒரு நல்லதுக்காக தான் இருக்கும்..இப்போ புரிலேன்னாலும் பின்னாடி அது நமக்கு உணர்த்தும்னு சொல்லுவாங்க..ஆனா என் அம்மா கஷ்டப்பட்டது, இங்க வந்தது, இறந்ததுனு இதுல இருந்து எல்லாம் என்ன யூஸ் இருக்க போகுது..இது எல்லாம் ஏன் எந்த காரணத்துக்காக நடந்தது..இப்போவரைக்கும் எனக்கு பதில் இல்லை…சும்மா எல்லாரும் இதவே சொல்லிட்டு…” என அவன் வருத்தத்தில் சலித்துகொள்ள

 

மித்ரா “சும்மா எல்லாம் சொல்லல ஆதி..இதுல என்ன பதில் கிடைக்க போகுதுனு வீம்புல யோசிச்சா எப்படி தெரியும்..அதேமாதிரி எல்லா காரணமும்  கிடைக்கணும் கிடைக்கணும்னு யோசிக்ககூடாது…

பாலன்ஸ்டா இரண்டுக்கும் நடுவுல இருந்து யோசிச்சா ஒருவேளை பதில் வரும்.. இல்ல என்ன செய்யணும்னாவது தோணும்..” என அவள் முகம் சுருக்கி சொல்ல

 

மித்ரன் “ஓஹோஹ…அப்போ சரி இப்போ நடந்த எல்லாமே நான் உனக்கு சொல்லிட்டேன்ல..எதனால இதெல்லாம்? என்ன பண்ணலாம்னு நீ யோசிச்சு சொல்லு..” என அவனும் வீம்புக்கு பேசினான்..

 

மித்ராவும் சிலுப்பிகொண்டு “ஏன் முடியாது..அப்போ சொன்னது தான்..மதிப்பில்லாத இடத்துல அம்மாவோட உழைப்பு வீணாகுறதை விட மனசார அவங்களுக்கு பிடிச்ச இடத்துல இருக்கணும்னு கூட அப்டி ஒரு பிரச்னை வந்திருக்கலாம்..

ஊர்ல குடும்பத்தில இப்டி ஒருத்தி இருக்கானு கூட யாரும் கண்டுக்கல..ஆனா இத்தனை குழந்தைகளை வளத்தி அவங்க உயிரை காப்பாத்தி இப்போவும் பல பேரோட மனசுல அவங்கள நினைச்சிட்டு தான் இருப்பாங்க..அது இங்க வந்ததால தான் நடந்தது.

அங்க இருந்திருந்தா உனக்கு மட்டும் தான் அம்மாவா அவங்க இருந்திருப்பாங்க..அதுவும் உன்னை எப்படி வளத்துவோமோனு கவலைல..ஆனா இங்க உன்னை மாதிரியே இருந்த பல குழந்தைகளுக்கு அவங்க அம்மாவா இருந்திருக்காங்க..அவ்ளோ பாசமா எல்லாரையும் ஒரே மாதிரி பாத்து வளத்திருக்காங்க..முக்கியமா யாரோட கட்டுப்பாடும் இல்லாம நீ இங்க நீயா வளருவ..நல்ல மனுசனா வாழ்ந்து காட்டுவனு நம்பிக்கையோட இருந்திருக்காங்க..அதனால தான் அவங்க உயிரை பத்திகூட யோசிக்காம மத்த குழந்தைகளை காப்பாத்திருக்காங்க…”

உன் அப்பா அப்பப்போ இங்க வந்தாரு அம்மாவ கூப்பிட்டாரு..அவரு நல்லவரு தான் இருந்தாலும் உன்னால தான் அவங்க பிரிஞ்சுட்டாங்க..உன் அம்மா இறந்துட்டாங்கனு அவரு சொன்னதை நம்பி யாருமே உன் வாழ்க்கைல இனிமேல் வேண்டாம்னு முடிவு பண்ணதா சொல்றேல..ஏன் அப்படிப்பட்டவரு அம்மாவோட சந்தோசத்துக்காக உன்னையும் கூட்டிட்டு போக ஓகே சொல்லிருக்கலாம்ல..தனியா நீ உன் அம்மா அப்பா மட்டும் ஒரு குடும்பமா இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கலாமே..ஏன் அவரு அதை பண்ணலனு யோசிச்சியா?”

மித்ரன் யோசனையுடன் அவளை பார்க்க

மித்ரா தொடர்ந்து “உன் அம்மா சொன்ன அதே பதில் தான்..மனுசங்க நல்லவங்களா இருந்துட்டா மட்டும் போதுமா? நல்லவன்னா நீ என்ன நினைச்ச? யாரையும் தொந்தரவு பண்ணாம அவன் வேலைய மட்டும் பாத்துட்டு இருக்கிறவனா? இல்ல ஆதி..உன் அப்பா அம்மாவோட உணர்ச்சிகளுக்கு மதிப்பு குடுத்து அவங்களோட பிரச்சனைய தீக்க முயற்சி பண்ணிருந்தா அப்போ நீ அவரு சொல்றது கேக்கிறதுல நியாயம் இருக்கு..

அவங்க வீட்ல சொன்னாங்களாம் குழந்தை வேண்டாம்னு இவரும் ஓகே சொல்லிட்டாராம்…என்ன இதெல்லாம்?

அவரு ஒரு பாதுகாப்பான வாழ்க்கைய தான் எதிர்பார்கிறாரு ஆதி..யோசிச்சு பாரு கூட்டிட்டு போனதுக்கு அப்புறம் அம்மாவும் பிரச்னை அவளால உன் உயிர்க்கே ஆபத்து அவளை விட்டுட்டு வந்திடுன்னு சொன்னாலும் இவரு செய்யமாட்டாருனு என்ன நிச்சயம்?

இந்த கேள்வி உன் அம்மாக்கு இருந்திருக்காதுனு சொல்லு..

உன் அம்மா அவங்க வேண்டாம்னு முடிவு பண்ணதுக்கான ஒரு ஆரம்பம் வேணும்னா நீயா இருக்கலாம்..ஆனா காரணம், முடிவு உன் அம்மாவோடது..அவங்க வாழ்க்கையை யோசிச்சு தான் அது ஒத்துவராதுனு விட்டு விலகிருப்பாங்க..

இவ்ளோ பிரச்னைக்கும் நடுவுல அவங்களுக்கு இருந்த நிம்மதி சந்தோசம் நம்பிக்கை எல்லாமே நீ மட்டும் தானே ஆதி..அது எல்லாத்தையும் விட்டுட்டு இப்டி நீ ஒதுங்கி ஏனோதானோனு ஒரு வாழ்க்கை வாழறத பாத்து தான் உன் அம்மா சங்கடப்படுவாங்க..இதுவே நீ உன் அம்மா ஆசைப்படி வாழ்ந்து நல்ல நிலைக்கு வந்தா உன் சந்தோஷத்துல வெற்றில அவங்க இருப்பாங்க..சொன்னமாதிரி அவ பையன வளத்திகாமிச்சிட்டானு எல்லாரும் சொல்லும்போது அங்க உன் அம்மா நிச்சயம் பெருமைப்படுவாங்க..உண்மையான சந்தோசம் அவங்க ஆசைப்பட்ட மாதிரி நீ வாழ்ந்து காட்டுறதுல இருக்கு..அது எல்லாம் விட்டுட்டு அப்பா சொன்னாரு, ஊர்ல இருக்கறவன் பொலம்புனான்னு அவங்க ஒளரத ஒரு விஷயமா பேசிட்டு யாருமில்லாம இருக்கபோறேன், ஏதோ வாழ போறேன்னு பினாத்திட்டு இருக்காத..

உன் பிடிப்பு உன் அம்மான்னா அத விடாத..அவங்க எண்ணங்கள நிறைவேத்த முன்னாடி வர பாரு..உன்கிட்ட எல்லாரும் உன் அம்மாவை பாக்கணும்..நீ என்ன பண்ணனும் எப்படி பண்ணனும்னு எல்லாம் சொல்ல தெரில..ஆனா இது எல்லாம் எனக்கு தோணுனது..இது இல்லாம வேற காரணமும் இருக்கலாம் எனக்கு தெரில..ஆனா கண்டிப்பா காரணமில்லாம எதுவும் நடக்காது..அதுவும் நல்லதுக்கு தான் இருக்கும்னு உன் அம்மா சொன்னதை நான் முழுசா நம்புறேன்..அது எப்படினு எல்லாம் சொல்ல தெரியாது..சும்மா வீம்புக்காக கேட்காத..அதை நீ தான் யோசிக்கணும்..” என கூறிவிட்டு சென்றாள்..

மித்ரா சென்ற பல மணி நேரமாகியும் மித்ரன் அதையே சிந்தித்துகொண்டிருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’

3 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் சிவா “எது எதுல விளையாட்றதுன்னு இல்லை? அதுவும் காலேஜ்ல வந்து அர்ரெஸ்ட் ம்ம்? ரொம்ப மோசமானவனா இருந்து இதுக்காகவே உன்கிட்ட பிரச்சனை பண்ணிருந்தா என்ன பண்ணுவ? நாங்க ஏதோ நல்ல பசங்கள இருக்கறதால

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

13 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அதன் பின் நடந்தவை,  கனடா வந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவன் அப்டியே உறங்கியும் விட்டான். ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது..எதிலும் ஆர்வமும் இன்றி பிடிப்பும் இன்றி அவன் தனது அன்றாட பணிகளை

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’

26 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “அன்னைக்கு ராத்திரியே…உன்னை விட்டுட்டு கொஞ்ச தூரம் நடந்து போனான்..கொஞ்ச நேரம் யோசிச்சேன்..நேரா சிவா வீட்டுக்கு போனேன்..” “அந்த நேரத்துலையா? அதுவும் சிவா பாக்க?” என ஆச்சரியமாக கேட்க “ம்ம்..அப்போவே தான் போனேன்…நான்