Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 67

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 67

நிலவு 67

 

நான்கு நண்பிகளும் அவர்களின் கணவன்களோடு தங்கள் கனவிற்காக அவுஸ்திரேலியாவை நோக்கி குடும்பத்தை விட்டு பயணமானார்கள். அங்கு சென்றவர்கள் முதலில் ஓய்வு எடுத்தனர். அடுத்த இரண்டு நாட்களில் மெச் நடைபெற இருந்தது. கோர்ச் இரண்டு நாட்களும் இவர்களுக்கு தமது மனதை தளரவிடாமல் போட்டியிடுவதற்கான பயிற்சிகளை மட்டுமே கொடுத்தார்.

 

மெச் தினமன்று அந்த ஸ்டேடியம் முழுமையாகவே மக்களால் நிரம்பி இருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பல செனல்கள் அங்கு வந்திருந்தன. இந்தியாவில் இருந்து தமிழ் மொழி மூலமான நேரடி ஒளிபரப்பிற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வந்திருந்தது. இந்தியாவில் four stars மிகவும் பிரபலமானவர்கள் என்பதால் இந்தியாவில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர்.

 

இந்திய வீராங்கனைகள் தன் நேர் நடையுடன் ஸ்டேடியத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அணிந்து இருந்த டீசர்டில் இந்திய இலட்சணை பொருந்தி இருந்தது. பின்புறமாக அவர்களின் பெயர்கள் பொறிகப்பட்டு இருந்தது. மைதானத்தினுள்  முதலாவது கால்களைப் பதிக்கும் இத்தனை வருடங்களாக இதற்காக கடந்து வருகை தந்த பாதை கண் முன் தோன்றியது. கண்கள் கலங்க புன்னகை முகத்துடன் நுழைந்தனர்.

 

பின் இந்திய வீராங்கனைகள் கம்பீரமாக கோர்டினுள் நுழைய அதே கம்பீரத்துடன் இலங்கை அணியும் கோர்டினுள் நுழைந்தது.

 

இரு அணிகளும் கைகளைக் குழுக்கி தத்தமது இடங்களிற்குச் சென்று நின்றனர். பின் டொஸ்அப் செய்யப்பட்டது அதில் இலங்கை அணி சென்டரே பந்தைப் பிடித்தார். பின் செனடர் பாஸ் நடைபெற அதில் இலங்கை அணி ஒரு புள்ளியைப் பெற்றுக் கொண்டது. பின் கிறுவிடம் பந்து வழங்கப்பட அவள் 3 passes முறையின் மூலம் ஒரு புள்ளியைப் பெற அந்த அரங்கமே அதிரும் அளவிற்கு கரகோஷங்கள் நிறைந்தது.

 

அடுத்து இலங்கை அணி சென்டரிடம் பந்து செல்ல அவர்கள் பந்தை மாற்றி மீண்டும் ஒரு புள்ளியைப் பெற்றனர். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் புள்ளிகள் எடுத்து முதலாவது பிரேக்கிற்கு முன் இந்தியா vs இலங்கை 5:5 என்ற புள்ளிகளைப் பெற்றது. இரண்டு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் விளையாடுவதால் பார்வையாளர்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் ஆர்வமாகியது.

 

இடைவேளையின் போது, 

 

“ஏ.கே நாம இப்போ விட்டுக் கொடுத்து விளையாட முடியாது. கண்டிப்பா நம்ம புல் எபர்டையும் போட வேணும். நமளுக்கு ஈகுவலா விளையாடுறாங்க” என்றாள் கீது.

 

“நானும் அதான் சொல்ல இருந்தேன், அவங்களை எந்த காரணத்தைக் கொண்டும் பீரிஆக விட வேணாம். நீங்க முடிஞ்ச அளவு பீரி ஆகுங்க” என்றாள் கிறு.

 

பின் குளுகோசு சாப்பிட்ட பிறகு சைடு மாற்றப்பட்டு மீண்டும் விளையாட ஆரம்பித்தனர். பின் பந்துகள் மாற்றப்பட்டு முழுமூச்சுடன் விளையாடி இரண்டாவது பிரேகிற்கு இந்தியா அணி : இலங்கை அணி 10:8. என்ற விகிதத்தில் புள்ளிகளைப் பெற்றது. இதனால் ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் பெருக்கெடுக்க விசில், கரோகஷங்கள் மூலமாக இந்திய அணியை ஊக்கப்படுத்தினர்.

 

நேரடி ஒளிபரப்பு என்பது வீட்டில் இருந்த அனைவருமே இனி இவர்கள் போட்டியை வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கைப் வலு பெற்று மீண்டும் பார்க்க ஆயத்தமானார்கள். அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்ப்பிக்காமல் இறுதியில் இந்தியா : இலங்கை 18:16 என்ற புள்ளிகளைப் பெற்று முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது இந்தியா அணி.

 

ரசிகர்களின் ஆராவாரம், விசில்கள், கரகோஷங்கள் அனைவரின் காதையும் கிழித்தது. நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் வெற்றியைப் பார்த்து சந்தோஷத்தின் மிகுதியில் துள்ளிக் குதித்தனர். பின் இரண்டு குழுக்களும் கைகளை குழுக்கி, நடுவர்கள் அனைவருடனுமே கைக்குழுக்கிய பிறகு தங்களது இடத்தை அடைந்தனர்.

 

அடுத்த நாள் இந்திய அணி ஸ்பொன்சர்ஸ் இந்திய அணிக்காக ஒரு பார்டியை ஏற்பாடு செய்து இருந்தார். அதில் அனைவருமே பங்கெடுத்து கொண்டாடிய பிறகு அவுஸ்திரேலியாவிலேயே அடுத்த மெச் இருப்பதால் அங்கேயே தங்கினர். ஆரவிற்கும் அவுஸ்திரேலியாவில் ஒரு கன்ட்ரெக்ட் இருப்பதால் அதுவும் அவனுக்கு வசதியாகப் போனது.

 

அடுத்த மெச் இன்னும் பத்து நாட்களில் நியூசிலேன்ட் அணியுடன் என்று அறிவிக்கப்பட அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பமானது. நண்பிகள் நால்வருக்கும் அவர்கள் கணவன்களே அவர்கள் துவண்டு போகின்ற நேரங்களில் ஆறுதலாக, உறுதுணையாக இருந்தனர். பின் நியூசிலேன்டுடன் நடைப்பெற்ற மெச்சிலும் இந்தியா அணியே வெற்றியை ஈட்டியது.

 

இந்திய அணிக்காக ஆதரவு வலை வளைதளங்களில் பெருகிக் கொண்டே சென்றது. பின் இரண்டு மாதங்களாக மெச் நடைபெற அவை அனைத்திலுமே இந்தியா வெற்றியை ஈட்டியது அனைவருக்கும் இது சாதனையாகவே தெரிந்தது. ஏனெனில் இதுவரையில் இந்தியா அணி மூன்று வெற்றிகளை தாண்டிச் சென்றதே இல்லை. ஆனால் இன்று தொடராக வெற்றியை ஈட்டிக் கொண்டு அரை இறுதிச் சுற்றிற்கு அவுஸ்திரேலியாவுடன் விளையாட தெரிவாகியது.

 

அந்த மெச் கனடாவில் இன்னும் இருபது நாட்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு கிடைக்க அனைவரும் தாய்நாட்டிற்குச் செல்ல தயாராகினர். அதற்கு முன் ஐந்து நாட்கள் சுற்றியவர்கள் சென்னையை அடைந்தனர். அப்போது வீராங்கனைகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டதோடு அமோகமான வரவேற்பும் வாழ்த்துக்களும் கிடைத்தது.

 

பல ரசிகர்கள் அவர்கள் அனைவரையும் சுற்றி நின்று செல்பி, ஓடோகிராப் எடுக்க, அவர்களது துணைகள் ஓரமாக நின்று அதை இரசித்தனர். பின் கார்ட்சின் உதவியுடன் கார்களுக்குச் சென்று தத்தமது வீட்டை நோக்கிச் சென்றனர். இவர்கள் இந்தியா வருவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மீராவின் வளகாப்பு, மற்றையது தர்ஷூ, ஜீவி இருவருக்குமே குழந்தை பிறந்து இருந்தது.

 

வீட்டிற்குச் சென்றவர்கள் அன்றைய தினம் முழுவதுமே ஓய்வு எடுத்தனர். அடுத்த நாள் நால்வரும் தர்ஷூவின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் உள்ளே நுழையும் போது, அவர்களின் மேலே மலரிதழ்கள் தூவப்பட்டன. 

 

“வாழ்த்துக்கள் போர் ஸ்டார்ஸ்” என்று மாதேஷ் கூற

 

“அடேய் நாங்க இரண்டு பேர் தான் இங்க இருக்கோம், அப்போ எதுக்கு போர் ஸ்டார்ஸ்ன்னு சொல்ற?” என்று கிறு கேட்க,

 

“சொரி டி டங்கு ஸ்லிப் ஆகிருச்சு” என்று இளித்து வைத்தான்.

 

“நகருடா நந்தி போல இருக்காமல் நான் போய் என் மருமகனை பார்த்துட்டு வரேன்” என்று ஆரவ் கூற 

 

மாதேஷ் புன்னகைத்து வழி விட அனைவருமே தர்ஷூவைப் பார்க்கச் சென்றனர். 

 

அவள் அறையில் குழந்தைக்கு அருகில் குழந்தையை அணைத்துக் கொண்டு கண்களை மூடி சாய்ந்து இருந்தாள். அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்விழித்தாள் தர்ஷூ.

 

“கிறு வாழ்த்துக்கள் டி” என்று எழ முயற்சிக்க மாதேஷ் அவளுக்கு உதவி புரிந்தான்.

 

“நன்றி டி” என்று அவளை அணைத்துக் கொள்ள ஆரவ் கைகளில் குழந்தையை வழங்கினான் மாதேஷ்.

 

நடுங்கும் கைகளுடன் குழந்தையை வாங்கியவன் இரு கைகளிலும் தாங்கி நெற்றியில் இதமாக இதழ்பதித்தான். பின் அவன் குழந்தையைக் கொஞ்ச கிறு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். 

 

“உன் ஆளை சைட் அடிச்சது போதும் கிறு” என்று வினோ கூறி நமட்டுப் புன்னகையைச் சிந்த

 

‘ஐயோ கண்டுபிடிச்சிட்டானே, கிறு கெத்தை விடாத’ என்று தன்னுள் கூறி

 

“நான் சைட் அடிக்கிற அளவுக்கு உன் அண்ணன் வர்த் இல்லை வினோ” என்றாள் ஆரவை ஓரக் கண்ணால் பார்த்தபடி.

 

அதைக் கண்டுக் கொண்ட ஆரவ்

 

“ஆமா வினோ, இப்போ இவங்க இந்தியாவோட ஒரு செலிப்ரிடி டா, நாம எல்லாம் அவங்க கண்ணுல பட்றதே பெரியவிஷயம் தான்” என்றான் ஆரவ்.

 

“ஆமா, என்ன பன்றது? வாழ்க்கை பூரா உன் கூட குப்பை கொட்ட வேணும்னு விதி இருக்கே” என்று பொய்யாய்ச் சலித்துக் கூற

 

ஆரவ் அவளை முறைத்தான். கிறு சிரிக்க பின் அனைவருமே சிரித்தனர்.

 

“தர்ஷூ பையன் பெயர் என்ன?” என்று கிறு கேட்க,

 

“மயூரன்” என்றாள்.

 

“அழகா இருக்குடி” என்றாள் கிறு. பின் தர்ஷூவின் குடும்பத்தினருடன் பேசிய பிறகு சிறிது நேரத்தில் அங்கிருந்து கவினின் வீட்டிற்குச் சென்றனர்.

 

அங்கேயும் இவர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து அனைவருடனும் பேசிய பிறகு ஜீவியின் அறைக்குச் சென்றனர். ஜீவி, கவின் இருவரும் தங்கள் மகனுக்கு “விதுன்” பெயர் இட்டு இருந்தனர். அங்கேயும் அரட்டை அடித்த பிறகு வீட்டிற்குச் சென்றனர் நால்வரும்.

 

அடுத்த நாள் அனைவருமே அங்கே இருந்து கொடிகாமத்தை நோக்கி பயணித்தனர். தர்ஷூ, ஜீவி இருவராலும் மீராவின் வளகாப்புவில் பங்கு கொள்ள முடியாது போனது. அவர்களுக்குத் துணையாக அவர்களின் குடும்பத்தில் ஒருவர் நியமித்த பிறகு அனைவரும் கொடிகாமத்தை அடைந்தனர். மீராவின் வளகாப்புவும் நன்றாகவே நடந்தேறியது. அது மட்டுமில்லாமல் குடும்பத்தின் மூத்த வாரிசு என்பதால் இன்னும் சிறப்பாக அவ்விழா அமைந்தது.

 

அன்றைய தினமே மாதேஷூம், கவினும் தம் துணைகளின்றி இருக்க முடியாது என்று கூறி அனைவரிடம் இருந்து விடைப்பெற்றனர். பெரியவர்கள் உடல் களைப்பினால் நாளை இங்கிருந்து செல்வதாக கூறி கொடிகாமத்திலேயே தங்கினர். கிறு மீராவை விட்டு அவள் உறங்கும் வரையில் அசையவே இல்லை. அவள் உறங்கிய பிறகே தனது அறையை அடைந்தாள். ஆரவினால் தன்னவள் மீராவின் மீது கொண்டுள்ள பாசத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

 

இரண்டு நாட்களில் நண்பிகள் நால்வரும் கனடாவிற்குச் சென்றனர். அங்கே பயிற்சிகள் ஆரம்பமாகின. பின் கனடா vs இந்தியாவிற்கான அரை இறுதிச் சுற்று ஆரம்பமாகியது. அந்த ஸ்டேடியத்தில் அதிகமானோர் இந்தியா அணியின் ஆதரவாளர்களே இருந்தனர். முதலில் கனவுடனான போட்டியில் இந்தியா வீராங்கனைகள் தடுமாறினாலும், பின் தங்களை நிலை நிறுத்தி விளையாடினர். 

 

போட்டி நிறைவடையும் வரையில் அதன் விறுவிறுப்பு குறையவில்லை. இரு அணிகளும் புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர். பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டாலும் இறுதியில் இந்தியா vs கனடா 16:15 என்ற புள்ளிகளைப் பெற்று ஒரு புள்ளியினால் இந்தியா அணி வெற்றியை தட்டிச் சென்று இறுதிச் சுற்றிற்கு தெரிவாகியது. இறுதிச் சுற்று இந்தியாவில் சென்னையில் நடைபெறுவதாகவும் அது இன்னும் பதினைந்து நாட்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

இதைக் கேட்ட இந்தியா அணி சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தது. இறுதிச் சுற்றை நம் தாய்மண்ணில் விளையாடப் போகிறோம் என்று. அடுத்த நாளே இந்தியா அணி முழுவதும் சென்னையை அடைந்தது. அன்றைய தினம் போலவே அனைவருக்கும் வரவேற்புகள் கிடைக்க பொலிசாரின் உதவியுடன் அனைவரும் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

 

வீட்டிற்கு வரும் போது பிரசவத்திற்காக மீரா மற்றும் குடும்பம் முழுவதுமே சென்னையில் இருக்க ஆரவ் கிறு, வினோ சௌமியாவின் வருகையும் இன்னும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கிறு வருகைத் தந்தில் இருந்து உறங்கிக் கொண்டே இருந்தாள். 

 

“கிறுஸ்தி பாருடி பத்து மணியாச்சு எந்திரி” என்று கூற

 

“கண்ணா என்னால் முடியல்லை டா, ரொம்ப டயர்டா இருக்கு” என்று மீண்டும் சுருண்டுக் கொண்டாள்.

 

அவளை வற்புருத்தி எழ வைக்க அவள் கடினப்பட்டு எழுந்து நிற்க அவன் கைகளிலேயே மயங்கிச் சரிந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41

நிலவு 41   “கண்ணா உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியாது. நாம எல்லோருமே இந்த வாட்டி வீட்டிற்கு போன நேரம் நான் தோட்டத்தில் வெளியே உட்கார்ந்து இருந்தப்போ நீ என் கூட பேசின அப்ப கூட நான் வெளிச்சம் இருக்கிற

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 45யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 45

நிலவு 45   கிறு அவளது அலுவலகத்திற்கு சென்று காரில் இருந்து இறங்கும் போதே மெனேஜர் அவளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்க, அவளும் தனது நன்றியை தெரிவித்து உள்ளே செல்ல அனைவரும் அவளை வரவேற்க வரவேற்பரையில் நின்றிருந்தனர்.    அதே நேரம்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 46யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 46

நிலவு 46   அன்று மாலை வேளையில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிஸ்னஸ் பார்ட்டி ஆரம்பமானது. அதில் இந்தியாவின் முதல் இருபது இடத்தில் உள்ள அனைத்து கம்பனிகளின் எம்.டி, சி.இ.ஓ  மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். இது