Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 11’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 11’

11 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

மித்ரன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவரை காண வந்தவர் “ஹலோ மிஸ்டர் மித்ரன்..ஹொவ் ஆர் யூ.?”

“ஹலோ ராம் சார்..யா பைன்..பாக்கணும்னு சொன்னிங்க..”

“எஸ் மேன்..ஒரு பெரிய ப்ரொஜெக்ட் வந்திருக்கு..உன்னோட கான்ஸ்டருக்ஷன்ஸ் ஒர்க்ஸ் எல்லாம் கிளைன்ட் பாத்துட்டு நீ தான் இந்த ப்ராஜெக்ட் பண்ணி தரணும்னு கேட்டிருக்காங்க…இட்ஸ் எ கிரேட் அப்பர்ச்சுனிட்டி..பெஸ்ட் ஆர்கிடெக்சர்ஸ், இண்டெரியர் டிசைன்ர்ஸ் பாத்துட்டு இருக்காங்க..ஒரு 2 டு 5 டேஸ்ல எல்லாரும் அரேஞ்ச் பண்ணிடுவாங்க..நீ உங்க டீம் எல்லாம் அவங்களோட சேர்ந்து ப்ராஜெக்ட்ட பாத்துகோ..”

“சுயர் சார்..கண்டிப்பா பெஸ்டா பண்ணிடலாம்..”

“ஒஹ்..அந்த நம்பிக்கை எனக்கு நிறையாவே இருக்கு..அதுனால தானே உன்னை கேட்டதும் நான் யோசிக்காம சரினு சொல்லிட்டேன்..நாலு வருசத்துக்கு முன்னாடி நீ முத தடவ வந்து என்கிட்ட ப்ராஜெக்ட் கேட்டதுல இருந்து நான் உன்னை கனடாக்கு கூட்டிட்டு வந்து, இவளோ நீ அச்சீவ் பண்ணியும்  இப்போவரைக்கும் நீ மாறவேயில்லை…நான் உன் மேல வெச்ச நம்பிக்கை மாதிரியே….நீ உன் வேலை..எப்படித்தான் இப்டி இருக்கியோ? பிரச்னை சந்தோசம்னு உன்கிட்ட பிரிச்சு பாக்குறது ரொம்ப கஷ்டம்..எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன். உதட்டளவில ஒரு சிரிப்பு..என்னோட கவலை எல்லாம் உன்னை பத்தி தான்..நீ உன்னை கவனிச்சுக்காம இவளோ ஓடி வேலை செஞ்சு எதுக்கு யாருக்கு…ஏன் இவளோ ஸ்ட்ரைன் பண்ற?”

அவன் வாய் திறக்கும் முன் அவரே தொடர்ந்து “ஆ..நீ சமாளிக்கதான் போற..கண்டிப்பா பதில் சொல்லமாட்ட..இதுதானே இத்தனை வருசமா நடக்கிது…பாரு..நம்ம 2 பேருக்கும் ஒர்க் விஷயத்தை தாண்டி ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு….அதை நான் நம்புறேன்..எனக்கு பையன் இருந்திருந்தா இந்நேரம் உன் வயசு இருந்திருக்கும்..அவன்கூட எங்களை இவளோ பாத்துகுவானானு தெரில..எனக்கும் என் மனைவிக்கும் நீ அவ்ளோ சப்போர்ட்டா இருந்திருக்க..நாங்க இப்போ ஆசைப்படுற விஷயம் உன் கல்யாணம் தான்..உன் அம்மாவோ அப்பாவோ இருந்திருந்தா கண்டிப்பா இப்போ அதை செஞ்சிருப்பாங்கள?”

மித்ரன் “என்ன சார்…”

“ம்ச்..இப்போ ஆபீஸ் விஷயம் பேசல..பெர்சோனலா தான் பேசிட்டு இருக்கோம்..”

மித்ரன் புன்னகையுடன் “ஓகே ஓகே..ஆனா அங்கிள் நீங்க புரிஞ்சுகோங்க…உங்களையும், ஆண்டியையும் நான் என் அப்பா அம்மா ஸ்தானத்துல தான் பாக்குறேன்..நீங்க என்ன சொன்னாலும் எல்லாமே மனசார செய்றேன்…பட் இந்த கல்யாண விஷயம் வேண்டாமே..அது இன்னொருத்தரோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு..கடமைகின்னேனு அந்த வாழ்க்கைல போயி விழுந்த மாதிரி ஆகிடகூடாதில்லை..ஏதாவது ஒரு சூழ்நிலைல இந்த வாழ்க்கையை என் இஷ்டமில்லாம ஏனோ தானோனு வாழறேன்னு தெரியவரும்போது அந்த பொண்ணு மனசு எவ்ளோ சங்கடப்படும்..எதுக்கு அங்கிள் அவ்ளோ கஷ்டம் குடுக்கணும்.எனக்கா தோணுச்சுன்னா நானே கண்டிப்பா வந்து சொல்றேன் கேக்றேன்..அதுவரைக்கும் ப்ளீஸ்…”

“ம்க்கும்…நீ கேக்கிற ஆளு..அதுவும் கல்யாணத்துக்கு..இதை நான் நம்பணுமா? போடா..வயசு பையனுக்குண்டான ஏதாவது பீலிங்ஸ் உன்கிட்ட இருக்கா..எனக்கு அதுவே சந்தேகம் தான்..போய்த் தொலை..உன்னை திருத்தவேமுடியாது…” என திட்டிவிட்டு கிளம்பியவர் கதவருகே சென்று “மித்ரன் எனக்கு ஒரு டவுட்..”

என்ன அங்கிள்?

“ஒருவேளை உனக்கு லவ் பெயிலியர்..ஏதாவது இருக்கா?”

அவன் அவரை புருவம் உயர்த்தி பார்க்க “வாய்ப்பில்லை தான்..எதுக்கும் எல்லா ஆங்கில்லையும் யோசிக்கலாமேனு..” என்றதும் மித்ரன் புன்னகைக்க

“இதுக்கும் சிரிப்பு தானா?” என கேட்டுவிட்டு அவர் நகர்ந்துவிட தனியே விடப்பட்ட மித்ரனின் மனதில் எண்ணங்கள் கடலலைபோல திரண்டு வந்தது.

 

“எப்போவுமே சிரிச்ச முகமா இருந்தாலே நம்மகிட்ட பேசவரவங்களோட மைண்ட் ரிலாக்ஸ் ஆகிடும்…நாமளும் ஹாப்பியா பீல் பண்ணுவோம்…நீ கோபப்பட்டு தான் ஒருத்தரை மாத்தணும்னு இல்லை..நம்மளோட மௌனம், சின்ன புன்னகை இதுல கூட அவங்களோட தப்பை உணர வெக்க முடியும்..மாத்தமுடியும்..ட்ரை பண்ணி பாரு..அண்ட் சிரிக்கிறதே தெரியாதமாதிரி உதட்டோரம உன்னோட அந்த சின்ன ஸ்மைல்..அது என்னோட பாவரேட்..அது அப்டியே வெச்சுகோ..” மித்துவின் வார்த்தைகள் அவனின் காதில் ஒலிக்க

 

சன்னலை திறந்து வேடிக்கை பார்த்தவனது மனதில்

 

ராஜேஷ் “ஜூனியர்ஸ் எல்லாருக்கும் க்ராஜுவேஷன் முடிஞ்சது..குமார் சென்னைல ஜாப் பாக்குறான்..ஓரளவுக்கு நல்ல ஏர்னிங்..சிவா, மகேஷ், ராஜீவ் சேந்து கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்னு பிளான்ல இருக்கானுங்க போல..குணா அவங்க அப்பாவோட ஷாப் பாத்துக்கறான்..ஒரு 6 மந்த்ஸ் கழிச்சு மகிளா, மகேஷ் லவ்வ வீட்ல சொல்லப்போறாங்களாம்..அப்புறம் மித்ரன் சொல்லமறந்துட்டேன்டா..மித்துக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்காம்…அந்த வாயாடிகிட்ட மாட்டபோறவன் பாவம்?

“ஓஹ் பையன்?”

“பையன் பேமிலி பிரண்ட் போல..நல்ல பழக்கம்…பசங்க எல்லாருமே சொன்னாங்க மித்துவை நல்லா பாத்துகுவாங்கனு..சோ எந்த பிரச்னையும் இல்ல..

அப்புறம் பாலகிருஷ்ணன் சார்கிட்ட அமௌன்ட் குடுத்திட்டேன்டா.. “

டேய் எல்லாரையும்பத்தியும் இவ்ளோ தூரம் விசாரிக்கற..அப்புறம் ஏன்டா யாருக்கும் தெரியாம தனியா எங்கேயோ இருக்க.. கேட்டா என்னோட பாதை வேறடா..எல்லாரோடவும் இருக்கும் போது அவங்களுக்கு பிடிச்சமாதிரி என்னால நிறைய விஷயங்கள் பண்ணமுடியாம போகும்..எனக்கு தோணுன மாதிரியும் வாழ முடியாது..யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம இருக்கறதுதான் எனக்கு அவங்களுக்கு எல்லாருக்குமே நல்லதுன்னு சொல்ற…என்னவோ போ..ஆனா எனக்கு அது மட்டும் காரணமா தெரில…”

மித்ரன் மெலிதாக புன்னகைத்துவிட்டு “வேற என்ன காரணம்னு நீ நினைகிற?”

“கல்யாணமும் வேண்டமாகிற..ஒருவேளை லவ் ப்ரோப்லேம் ஏதாவது இருக்குமோனு தோணுது..ஆனா உனக்கு லவ்வானு நினைக்ககூடமுடில…”

புன்னகைத்துவிட்டு “கரெக்ட் தான்..ஆனா நான் கல்யாணம் வேணாம்னு சொன்னத்துக்கு பல காரணம் இருக்குடா..என்னால சாதாரண குடும்ப வாழ்க்கை, ரொட்டீன் ஒர்க்ஸ், ஜாலியா தோணும் போது என்ஜோய் பண்ணிட்டு இப்டி எல்லாம் நினைக்க முடிலடா..ஆசுரமத்தை டெவெலப் பண்ணனும்..நிறையா மாத்த வேண்டியது இருக்கு….அதைத்தவிர எனக்கு மத்த விஷயம் எல்லாம் தோணவேயில்லை….என் மைண்ட்செட் அப்டி ஆகிடுச்சு…..ஒருவேளை நீ சொல்றமாதிரி தனியாவே இருந்ததுகூட நான் இப்டி இருக்க காரணமா  இருக்கலாம்..ஆனா அதுல நான் கம்பார்டேபிலா இருக்கேன்..சோ எனக்கு இன்னொருத்தர் என் வாழ்க்கைல வேணும்னு தோணல..ஒரு நார்மல் பொண்ணு என்கிட்ட எதிர்பாக்குற சின்ன சின்ன சந்தோசம் எதுன்னு கூட எனக்கு புரிஞ்சுக்கதெரியாது..சில நேரம் புரிஞ்சாலும் எனக்கு அதெல்லாம் செய்ய தோணாது..நான் வேலை என்னோட திங்கிங்னு இப்டியே சுத்திட்டு இருப்பேன்…அது அந்த பொண்ணுக்கு செய்ற துரோகம் தானே..வெறும் பணம் சம்பாரிச்சு குடுத்திட்டா ஒரு பேமிலில எல்லாமே புல்பில் (fulfill) ஆகிடும்னு சொல்லமுடியாதே..பாசம் எனக்கு இருந்தாலும் அவங்க எதிர்பாக்குற அன்பை எனக்கு சரியான நேரத்துல வெளிப்படுத்த தெரியாது…இதை எல்லாம் புரிஞ்சுகிட்டு எனக்கு ஒருத்தி வரது எல்லாம் நடக்குற காரியமா? என் லைப்ல ஒருத்தி வந்தா ஒன்னு அவ எனக்காக ஷாக்ரிபைஸ் பண்ண வேண்டியதாயிருக்கும்…இல்ல நான் ஷாக்ரிபைஸ் பண்ண வேண்டியதாயிருக்கும்..மேரேஜ் லைப்ல அட்ஜஸ்ட் பண்ணி வாழலாம்..ஆனா ஷாக்ரிபைஸ் பண்ணி வாழ்ந்தா அது ஒரு சுமையாகிடும் அம்மா சொல்லுவாங்க…சோ கண்டிப்பா அந்த தப்பை நான் பண்ணமாட்டேன்…சோ இனிமேல் இந்த டாபிக் எடுக்காத சரியா..”

ராஜேஷ் “நல்லா புரிஞ்சது…உனக்கு இந்த ஜென்மத்துல கண்டிப்பா பிரம்மசரியம் தான்….ஆனா இவளோ நல்லவனை கட்டிக்க எந்த பொண்ணுக்கும் குடுத்துவெக்கலனு நினைக்கும் போது தான் பீல் பேட்..இட்ஸ் ஓகே நெக்ஸ்ட் பெர்த்ல பாத்துக்கலாம்…டேக் கேர்டா டா மாப்ள..”

“பை டா..”

 

இன்று :

மித்ரன் வண்டி சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்தவன் “இந்நேரம் கல்யாணம் ஆகி 2 வருசத்துக்கு மேல இருக்கும்..” என்றெண்ணினான்..பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான்.. நடந்து வந்தவன் ஒரு பெஞ்சில் அமர்ந்து அங்கிருந்தவர்களை வேடிக்கை பார்த்தான்..ஆம் அது மித்து சொன்னது..

“ஆதி, ரொம்ப டென்ஷனா, இல்ல மைண்ட் டைவர்ட் பண்ணனும்னு நீ நினச்சா பெருசா எதுவும் தேவையில்லை..வெளில வந்து சும்மா ரோட்ல சுத்தி நடக்கற எல்லா விஷயத்தையும் வேடிக்கை பாரு..சில நேரம் மைண்ட் சேஞ்ச் ஆகும்..சில நேரம் செம காமெடியான விஷயம் எல்லாம் கண்ணுக்கு தெரியும்..யார்கிட்டேயாவது பேச போயி பல்ப் வாங்குறவங்க, டென்ஷனா போறவங்கள இன்னும் டென்ஷன் பண்றமாதிரி நடக்கற விஷயம், மத்தவங்க பிரச்னை என்னனு புரிஞ்சுகாம கத்துறவங்க, ஜாலியா போற குழந்தைங்க, வியாபாரிங்க கஸ்டமர் முன்னாடி பேசுறதும், அவங்க நகர்ந்து போனதும் கிண்டல் பண்ரது, மொபைல்ல பாத்துட்டே ஏதாவது ஸ்லிப் ஆகி விழறதுனு எல்லாமே பாக்க சிரிப்பா இருக்கும்..”

“ம்ம்..எவனாவது விழுகிறது உனக்கு சிரிப்பா இருக்கா?”

“வேற என்ன பண்ண சொல்ற ஆதி? உலகமே என் கைக்குள்ளனு சொல்லி அந்த மொபைல்ல மட்டும் பாத்துட்டு நம்மள சுத்தி இருக்கற உண்மையான உலகத்தையும், நெருக்கமான மனுஷங்களை கண்டுக்காம விடுற இவங்கள என்ன பண்றது? மொபைல் பார்த்துகொண்டே பாதாள சாக்கடையில் தவறி ஒருவர் விழுந்தார்னு சொன்ன அந்த விஷயத்தையே அவங்க மொபைல்ல தான் பாப்பாங்க..

ஒருத்தருக்கு ஆகிஸிடெண்ட் ஆகிடுச்சு உயிருக்கு போராடுற அவங்களுக்காக ப்ரே பண்ணுங்க..இந்த மெசேஜ பார்வேர்ட் பண்ணுங்கன்னு சொல்ராங்க..அவ்ளோ நல்லவங்க அவங்க தெரு, ஏரியா, வீடுனு அங்க இருக்கற பிரச்னைய, தேவைப்படுற உதவிகளை பாத்தாலே போதுமே.. பாத்தாயிரம் மைல் கடந்து இருகிறவங்கனால ஷேர் லைக் மட்டும் தான் பண்ணமுடியும்..பக்கத்துல இருக்கிறவன்னால தான் அவசரத்துக்கு உடனே வந்து உதவி செய்யமுடியும்..அந்த ரியாலிட்டி புரிஞ்சும் இங்க முக்கால்வாசி பேர் அதை ஒரு செய்திய படிச்சுட்டு ஆமால அப்டினு சொல்லிட்டு போய்டுறாங்க…அம்மா இல்லாத அந்த பேஸ்புக், இன்ஸ்டால அவ்ளோ மதர்ஸ் டே விசஸ்..உண்மையா அவங்களா சந்தோஷப்படுத்த நினச்சா அவங்க மனசார ஆசைப்படுறத தெரிஞ்சுகிட்டு அதை செய்யணும்..அது சிறுசோ பெருசோ அது இல்லை விஷயம்..என் பிள்ளை எனக்காக இதை செஞ்சாங்கன்னு சொல்லும்போது அவங்களுக்கு வர நெகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கே..ம்ச்..சான்ஸ்லேஸ் ஹாப்பினஸ்…மனுஷங்களோட மனசு விட்டு பேசனும்..பிடிச்சவங்களோட சந்தோசத்தை, நிம்மதிய கண்ணெதிர பாக்குறது அதுதான் பெரிய வரமே..அது எல்லாம் இங்க எத்தனை பேர் செய்ய தயாராயிருக்காங்க சொல்லு..கம்மி தானே..நம்மகூட யாருக்கும் டைம் ஸ்பென்ட் பண்ண இந்த காலத்துல முடியாது..ரொம்ப கஷ்டம்..சோ நமக்கா தோணும் போது சுத்தி எல்லாரையும் பாத்து நாமளே ரிலாக்ஸ் ஆகிக்கலாம்..”

 

அதை எண்ணி பார்த்தவன் பல நேரங்களில் அதை செய்தும் இருக்கிறான்..அவள் கூறியது போல வேடிக்கை பார்க்கும் போதுதான் நம்மை வருந்த வைக்கும், சிந்திக்க வைக்கும், சிரிக்க வைக்கும் பல நிகழ்வுகள் அவன் கண்ணில் படும்..எத்தனை வகையான மனிதர்கள், எப்படி எல்லாம் பிரச்னைகள்… என தோன்றும்…இன்றும் அப்டி ஒரு மனமாற்றத்திற்காக வந்தவனுக்கு அலைந்து திரிந்து மீண்டும் தன் மனம் ஆரம்பித்து இடத்திற்கே வந்து நின்றது மித்துவின் ஞாபகங்கள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 31’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 31’

31 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் “சரி சொல்லு..பாத்ததால என்ன? அவங்க எதுக்கு கோர்ட்க்கு வந்தாங்க? ஏதாவது ப்ரோப்ளமா? விசாரிச்சியா?” என்று மித்து வினவ “ம்ம்..அவங்க பேமிலில கொஞ்சம் ப்ரோப்லேம் போல..இவங்க நிலத்துல ஏதோ பேக்டரி கட்ட ஒரு கம்பெனிகாரன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 28’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 28’

28 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   வெங்கடாச்சலம் “எனக்கு ஒன்னு புரியல மித்து….இவ்வளவும் உனக்கு தெரியுது..அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்க கேட்டதும் எதுக்கு சரினு சொன்ன?” தலை கவிழ்ந்தபடி “அது ஆதிக்கு ப்ரோமிஸ் பண்ணிருந்தேன் டாடி” என தங்கள்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’

33 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் செல்லும் வழியில் மித்ரா வெளியே புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள் அவன் அமைதியாக வருவதை கண்டவள் “என்ன ஆதி, என் மேல செம காண்டுல இருக்கியோ?” என வம்பிழுக்க அவனும் புன்னகையுடன் “நீ