Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 10’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 10’

10 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

அடுத்து வந்த காலங்களில் எப்போதும் போல படிப்பு காலேஜ் அவ்வப்போது சில பேச்சுகள் பிரச்சனைகள் என சாதாரணமாக சென்றுகொண்டிருக்க அடுத்த ஒரு வருடம் கண்ணிமைப்பதற்குள் ஓடிவிட இறுதி செம் வந்தது. ஆனால் மித்து காதலிக்கிறேன்னு சொன்னதும் மாறவில்லை. மித்ரன் காதலிக்கவில்லை என சொன்னதும் மாறவில்லை.

 

பார்வெல் டே அன்றும் மித்ரா எப்போதும் போல இருக்க மித்ரனிடம் அவனது நண்பர்கள் அனைவரும் மித்துக்கு என்ன பதில் சொல்லப்போற? அவளை ஏன்டா நீ வேணாம்னு சொல்ற? அவ இன்னும் நம்பிக்கையோட இருக்கா..என சொல்ல அவனுக்கு இவர்களை எப்படி சமாளிப்பது என தெரியாமல் நேரடியாக மித்துவிடம் சென்று மாலை பேசி புரியவெக்கலாம் என முடிவுடன் இருந்தான்.

மித்ராவிடம் வந்து தனியாக பேச வேண்டும் என சொன்னதும் அவளும் மகிழ்வுடன் துள்ளி குதித்து ‘பேசலாமே’.

மித்ரன் “நான் நேரா விஷயத்துக்கே வரேன்…நீ ரொம்ப தெளிவான பொண்ணு.. நல்ல பொண்ணும் கூட..பல நேரங்கள நான் உன்னை பாத்து அட்மைர் ஆகியிருக்கேன்…ஆனா நீ என்னை லவ் பண்றத மட்டும் விட்றேன்.. என்னோட திங்கிங் எல்லாம் வேற..என்னால இந்தமாதிரி குடும்பம், குழந்தைங்கனு அந்த லைப் பத்தி யோசிக்ககூட முடில..அது நான் இல்லை…நான் உனக்கு வேண்டாம்…நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்..”

மித்ரா அதே விளையாட்டுடன் “ஆதி ரிலாக்ஸ்..என்னாச்சு..எதுக்கு நீ இவளோ யோசிக்கற..நான் உன்னோட வாழ்க்கைல ஒரு தடையா எப்போவுமே இருக்கமாட்டேன் ஆதி..அத என்னால நினச்சு கூட பாக்கமுடில..முடிஞ்சா உதவியா இருக்கணும்னு தான் நினைப்பேன்… நான் உன்னை லவ் பண்றனு சொன்னதுல இருந்து இப்போவரைக்கும் உன்னை நான் எந்த டார்ச்சரும் பண்ணல.. நீ நீயா தானே இருக்க..அப்புறம் என்ன பிரச்சனை..? என் லவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஆதி..அத ஏன் மாத்த பாக்குற?”

“நீ இந்த விசயத்துல ஏன் இவளோ அடமென்ட்டா இருக்க…நடக்காத விசயத்துக்கு ஆசைப்பட்டு ஏமாறதுக்கு அதை இப்போவே விட்றுனு சொல்றேன்..எனக்காக நீ வெயிட் பண்ணி உன் லைப்ப வேஸ்ட் பண்றதுல எனக்கு இஷ்டமில்லை..”

மெலிதான புன்னகையுடன் மித்ரா “அதுக்காக என்னை என்ன பண்ற சொல்ற ஆதி..? நீ சொல்றது எனக்கு புரியுது..ஆனா எனக்கு உன்கூட வாழற வாழ்க்கை கிடைக்குமா கிடைக்காதான்னு கூட யோசிக்கவே இடம் குடுக்காம விட்று விட்றுனு சொன்னா என்ன பண்றது? ஏன் பசங்க மட்டும் தான் பிடிச்ச பொண்ணுங்களுக்காக வெயிட் பண்ணனுமா என்ன? பொண்ணுங்க லவ் பண்ணாலும் வெயிட் பண்ணலாம் பாஸ்..நான் உன்னை லவ் பண்றேன். உனக்காக வெயிட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். அதுல உனக்கு என்ன பிரச்சனை? நீ பாட்டுக்கு உன் வேலைய பாரு பா..” என சாதாரணமாக கூற

மித்ரன் “ம்ச்…” என மறுபுறம் திரும்ப மித்ரா “அடடடா…என்ன ஆதி..காலேஜ் விட்டு போற நாள் கொஞ்சம் ஜாலியா பேசுவேன்னு பாத்தா இப்டி சண்டை போட்டு இம்சை பண்ற…இப்போ உனக்கு என்ன பண்ணனும்னு சொல்லு..”

மித்ரன் “சரி..உனக்கு இன்னும் காலேஜ் முடிய 2 வருஷம் இருக்கு..அதுகுள்ள உனக்கு நான் வேண்டாம்னு தோணுனாலோ இல்ல வீட்ல வேற மாப்பிளை பாத்து உனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணாலோ நீ ஓகே சொல்லணும்…சண்டைபோட்டு அடம்பன்றது எல்லாம் இருக்ககூடாது…தேவையில்லாம அப்போவும் எனக்காக வெயிட் பண்றனு சொல்லிட்டு சுத்தகூடாது..ப்ரோமிஸ் பண்ணு..என் மேல..”

மித்ரா அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு “அவ்ளோதானே..ஓகே..அதேமாதிரி என் மேல நீ ப்ரோமிஸ் பண்ணு….இப்போ உனக்கு யாரும் வேண்டாம்னு தோணுது..சரி நான் அத தப்புனு சொல்லல..ஆனா எப்போவுமே எல்லாராலும் அப்டியே இருக்க முடியாது. கண்டிப்பா வாழ்க்கைல ஏதாவது ஒரு கட்டத்துல நமக்கே நமக்காகனு ஒருத்தராவது வேணும்னு நம்ம மனசு ஏங்கும்..அப்டி உனக்கு தோணும் போது அது நானா இருந்தா நீ தயங்காம என் லவ்வை ஏத்துக்கணும்…என்கிட்ட சொல்லணும்…என் மேல நீ ப்ரோமிஸ் பண்ணு..”

மெலிதான புன்னகையுடன் “எப்பிடியும் அது நடக்காது..”

மித்து, “ஆல் தி பெஸ்ட்..அப்போ ப்ரோமிஸ் பண்ணு..”

“ஓகே உன் மேல ப்ரோமிஸ்…”

“டன்…நானும் ப்ரோமிஸ்..எனக்கு ஒரு தடவையாவது ஆதி என் லைப்ல வேணுமான்னு யோசிச்சாகூட போதும்..நான் உன்னை லவ் பண்றத விடறேன்..இது ப்ரோமிஸ்…இதுக்கு மேல நீ நார்மல என்கிட்ட பாக்கும் போதாவது பேசலாம்ல…”

அவனும் “ம்ம்..கண்டிப்பா” என இருவரும் தங்களின் முடிவில் மிகதீவிரமாக இருந்தனர்.

 

ஆனால் காலம் இருவரில் யாருக்கு உதவபோகிறதோ கடவுளுக்கே வெளிச்சம்.

 

இரண்டு வருடங்கள் செல்ல குமார், குணா, மகேஷ், ராஜீவ், மகி, பவி என அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்.

குமார், “முதல மாசத்துக்கு ஒருதடவை மீட் பண்ணி அப்புறம் 3 மாசத்துக்கு ஒருதடவை ஆறு மாசத்துக்கு ஒருதடவைன்னு இப்போ வருசத்துக்கு ஒண்ணாகிடுச்சு…”

ராஜீவ் “என்னடா பண்றது, வேலை, வீடு இதுக்கே டைம் சரியா இருக்கு..”

குணா “நம்மளையே இப்டி பொறுப்பாகிட்டாங்களே…எல்லாம் விதிடா…” என வருந்த

பவி “ஆமா இப்போ மட்டும் நீ என்னமோ வேலை பாக்குற மாதிரி சீன் போடாத…அப்பா வெச்சிருக்கிற கடைய பாத்துகறேன்னு சொல்லி அங்க இருக்கிற பொண்ணுங்ககிட்ட வழிஞ்சு வேலைய கெடுத்திட்டு இருக்க…  நீ எல்லாம் பேசாத..”

“யாரு நானா? நாங்க எல்லாம் மொறட்டு சிங்கள்” என அனைவரும் ஸ்லொவ் மோஷனில் திரும்ப குணா “என்ன?”

“டேய் போன் தொலைஞ்சதுனு போன் பண்ண கேட்க வந்த பொண்ணுகிட்ட போன் நம்பர் கேட்ட லூசு தானேடா நீ..” என்றதும் அனைவரும் சிரிக்க குணா  தலை தொங்கிவிட மகேஷ் மௌனமாக இருப்பதை கண்டவர்கள் “என்னாச்சு டா?”

“மித்து, மித்ரனை பத்தி தான்டா நினைச்சிட்டு இருக்கேன்..”

குமார் “ம்ம்..காலேஜ் முடிஞ்சா 6 மாசம் கான்டக்ட்ல இருந்தான்…அப்புறம் எங்க போனான்..என்ன ஆனானே தெரில..”

அந்நேரம் பார்த்து சிவா வந்து அமர “வாடா மச்சி..என்ன இவளோ நேரம் மித்து வரல?”

“வருவா..அவங்க வீட்ல அவளுக்கு மாப்பிளை பாத்திருக்காங்க…அதுக்கு பதில் சொல்ல சொல்லி கேட்டிருக்காங்க அவகிட்ட..”

ராஜீவ் “என்ன பதில் சொல்றா?”

மகி “என்ன சொல்லுவா..மித்ரனை லவ் பண்றேன்னு அதே கதையை தான்..இவளோ நாள் அவங்க வீட்ல பாக்கலாமான்னு கேட்டாங்க..இப்போ பாத்துட்டு வந்து பதில் கேக்கிறாங்க..”

மகேஷ் “இந்த பொண்ணை என்ன பண்றதுனே தெரிலடா…”

குமார் “எதுக்காக வெயிட் பண்றோம்னே தெரியாம வெயிட் பண்ணிட்டு இருக்கா..நம்ம பார்வெல் முடிஞ்சு போனவன் இப்போ இவங்க பார்வெல்லே முடிஞ்சிடிச்சு..அப்போவும் அவன் வேண்டாம்னு தானே சொல்லிட்டு போனான்..இப்போ மட்டும் மாறி இருக்கவா போறான்..அதுவும் எங்க இருக்கானு கூட தெரியாம இந்த பொண்ணு என்ன ஐடியால இருக்குன்னே தெரில..”

அந்நேரம் பார்த்து மித்து “ஹலோ..நான் வந்துட்டேன்…என்னை விட்டு ஒரு ரவுண்டு முடிச்சிட்டீங்களா என்ன?.” என அதே குறும்புத்தனத்தோடு அவள் பேச அனைவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை..

சிவா “மித்து..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..கொஞ்சம் சீரியஸ பொறுமையா நாங்க சொல்றதை கேக்றியா?” என அவள் அனைவரையும் பார்த்துவிட்டு “ம்ம்” என்றாள்..

“வரும்போது அம்மா அப்பாவை பாத்துட்டு தான் வந்தேன்..அவங்க நீ என்ன பதில் சொல்லப்போற? என்ன ஐடியால இருக்கேனு கேக்றாங்க..”

மகி, குமார், ராஜீவ், பவி, மகேஷ், குணா என அனைவரும் ஆளாளுக்கு அவளிடம் இத்துணை நேரம் பேசியதை கூறினர்..

“நீயும் மித்ரனும் ஒன்னு சேரணும்னு நாங்க எல்லாருமே தான் ஆசைப்படுறோம்..நடந்தா ரொம்ப சந்தோசப்படுவோம்..ஆனா நடக்காத ஒரு விஷயத்துக்கு நீ இவளோ தூரம் காத்திருக்கறது சரியா படல..உன்னால வேணும்னா ஒண்ணுமே நடக்காத மாதிரி இருக்கமுடியும்..ஆனா உன்னை இப்டி பாக்க, உங்க அம்மா அப்பா பீல் பண்றதை எங்களால பாக்கமுடில.. உன் வாழ்க்கை என்னாகுமோன்னு எங்களுக்கு கவலையா இருக்கு மித்து…அவன் வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டான்..அவனுக்காக இங்க இருக்குற எல்லாரையும் நீ கஷ்டப்படுத்த போறியா?” என அவர்கள் வெகுநேரம் பேசியும் அவள் மௌனமாக இருந்தாலே தவிர எதுவும் பேசவில்லை..

இறுதியாக “என்ன மித்து அமைதியா இருக்க? வீட்ல என்ன பதில் சொல்ல போற?”

அவள் “மேரேஜ் ஓகேனு சொல்லிடவா?” என்றாள் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள மெலிதான புன்னகையுடன் “அப்போ சரி..வீட்ல இன்னைக்கு போனதும் ஓகே சொல்லிடறேன்..இப்போ சாப்பிடுங்க..” என்றாள்..

அந்த புன்னகையில் வெறுப்பு இல்லை, விரக்தி இல்லை, மகிழ்ச்சி இல்லை..அந்த உணர்ச்சியை யாராலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை..

 

அவள் சென்ற சிறிது நேரத்தில் சிவாவிற்கு கால் வந்தது..மித்து திருமணத்திற்க்கு சரியென்று கூறிவிட்டாள் என..அதை நண்பர்களிடம் கூறினான்..தாங்கள் தான் அந்த முடிவை எடுக்க சொன்னோம் என்பதையும் தாண்டி அவர்கள் யாராலும் இதை நம்பவும் முடியவில்லை..மகிழ்ச்சிகொள்ளவும் முடியவில்லை…ஆனா அவ வாழ்க்கைக்கு இதுதான் சரி என அனைவரும் அதை ஏற்றுகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 20’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 20’

20 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் காலையில் எழுந்தவன் சிவா சந்தியாவை காதலிக்கறேன் என கூறியதை தியாவிடம் கூற அவள் ஷாக் ஆக “என்ன ஆதி சொல்ற? இதெல்லாம் நடக்கற காரியமா? போச்சு, அப்பா, அக்கா இரண்டுபேருமே ருத்ரதாண்டவம் ஆடப்போறாங்க…உன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 7’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 7’

7 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   குணா, ராஜீவ், மகேஷ் இன்னொரு வண்டியில் என மீண்டும் அவர்கள் சங்கத்தோட ஐக்கியமாக ரோட்டோரம் கடையில் நண்பர்கள் கலாட்டாவுடன் சாப்பிட்டனர்.  குணா “ஆமா எப்போவுமே என்னவே எல்லாரும் கிண்டல் பண்ணுங்க..ஏன் இவனுங்கள

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’

25 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மகேஷ், “ஆமாமா மித்து அங்கிருந்திருந்தா என்ன சொல்லிருப்ப?” “சொல்லுங்க சொல்லுங்க மாமா..லாஸ்ட்ல கரென்ட் போயிடிச்சு..” “என்ன பதில் சொன்னிங்க?” என ஆளாளுக்கு சுற்றி நின்று ஆர்ப்பரிக்க மித்ரன் புன்னகையுடன் தியாவின் நெற்றியில் முத்தமிட்டு