Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 62

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 62

நிலவு 62

 

அடுத்த நாள் காலையில் கண்விழித்த கிறு ஆரவின் முகத்தைப் பார்த்தாள். நேற்று இரவு நடந்தவைகள் நினைவு வர வெட்கத்தில் மீண்டும் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். அவன் உறக்கம் கலையாமல் மெதுவாக எழுந்தவள் குளித்து இருவருக்கும் சமைத்தாள். ஆரவ் குளித்து கீழே வர குளித்து இடை தாண்டிய கூந்தலில் நீர் சொட்டச் சொட்ட நீல நிற சுடிதாரில் தேவதையென நின்று கார்டுனை இரசித்தாள்.

 

அவளை பிண்ணிருந்து அணைத்தவன், 

 

“ரொம்ப அழகா இருக்கியே பொன்டாட்டி” என்று அவள் கழுத்தில் முகம் புதைக்க, 

 

“மிஸ்டர் ஆரவ் கண்ணா போய் காபி போட்டு எடுத்து வாங்க” என்றாள்.

 

“நீ தாண்டி எனக்கு காபி போட்டு தர வேணும்” என்றான் ஆரவ் அதிர்ச்சியாய்.

 

“எப்போவும் நான் தானே காபி போடுவேன், இன்றைக்கு நீ போட்டு தா பா” என்றாள் கெஞ்சலாய்.

 

அதில் மயங்கியவன் “சரி டி பொன்டாட்டி” என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி சென்றான்.

 

இருவரும் காபியைப் பருகி தத்தமது வேலைகளை கவனிக்கச் சென்றனர். அன்றைய தினம் கிறுஸ்தி மீண்டும் தங்கள் கம்பனியின் பிரான்ச்சிற்கு செல்ல அனைத்து வேலைகளை முடித்து மாலை நேரம் ஆரவின் ஒபிசிற்குச் சென்றாள். அங்கு அவள் ஆரவின் மனைவியாக செல்ல ஷ்ரவன் இல்லாமல் அவளுக்கு ஏதோ போல் இருந்தது. 

 

அதே நேரம் யஷூவிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

“ஏ.கே, ஆரவைப் பற்றி சில விஷயங்கள் தெரிஞ்சது, பட் நான் அதை கன்போர்ம் பன்னிடே சொல்றேன்” என்று தனக்கு தெரிந்த விடயங்களைக் கூற

 

“யஷூ, இதற்கு வாய்ப்பே இல்லை” என்று கிறு கூற 

 

“நான் ஆரம்ப இடத்தில் இருந்து தான் தேடிட்டு இருக்கேன், இது பொய்யாக வாய்ப்பே இல்லை” என்றாள் யஷூ.

 

ஆரவ் தனது அறையில் இருந்து வெளிவருவதைப் பார்த்த கிறு

 

“யஷூ நான் அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

 

ஆரவுடன் சேர்ந்து வேலைகளை முடித்து இருவரும் சேர்ந்தே வீடு திரும்பினர். 

 

“கண்ணா நான் உன் கிட்ட பேசனும்” என்றாள் கிறு.

 

“சொல்லுடி” என்று கூற

 

“உனக்கும் அதர்வாவோட சூசைட்டுக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்க,

 

தண்ணீர் குடித்த ஆரவிற்கு புரையேறியது. தன் தலையை தானே தட்டிக் கொண்டு அவளை ஏறிட்டான், அவளது பார்வையோ ‘ சொல்லு’ என்றது.

 

“அது எதுவுமே இல்லையே” என்றான்.

 

“பொய் சொல்லாத, உன்னை பற்றி எனக்கு தெரியும். அதையும் விட உன் திருட்டு முழியே உன்னை காட்டி கொடுத்துருச்சு” என்று கூறினாள் கிறு.

 

‘ஈஈஈ’ என்று இழித்தவன் அதர்வாவிற்கு நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான்.

 

“டேய் ஏதும் பிரச்சனை வராதே, பி.எம் ரிபோர்ட்ல” என்று பதறி கேட்க 

 

“பி.எம் பன்றதே எங்க ஆளு” என்றான்.

 

“அப்போ எல்லோருமே பிளேன் பன்னி தான் பன்னி இருக்கிங்க?” என்று அவள் கேட்க,

 

“அவன் தானா வந்து எங்க கிட்ட சிக்கினான். அதற்கு அப்பொறம் நாங்க என்ன பன்றது?” என்றான் ஆரவ்.

 

அவள் புன்னகைக்க, அவனும் புன்னகைத்தான்.

 

இவ்வாறு இரண்டு வாரங்களாக இயல்பாய் சென்றது அனைவரது வாழ்க்கையும். அதில் ஒரு நாள் இவர்கள் நால்வரும் இன்டர் நேஷனல் நெட்போல் டீமிற்கு தெரிவு செய்யப்பட்டதாகக் கூற சந்தோஷத்தில் அனைவரும் துள்ளிக் குதித்தனர். ஒரு நாள் தாத்தா ஆரவிற்கு அழைப்பை ஏற்படுத்தினார்.

 

“ஆரவ் பிசியா இருக்கியா பா?” என்று கேட்க,

 

“இல்லை தாத்தா, சொல்லுங்க” என்றான்.

 

“சௌமி, வினோவிற்கு கல்யாண தேதி குறிச்சு இருக்கோம். இன்னும் ஐந்து நாளில் நிச்சயம் அதற்கடுத்த நாள் திருமணம், ரிசப்ஷன் தான். உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்க இல்லை, நெட் போல் மெச் இருக்குன்னு சொன்னதால் இந்த முடிவை அவசரமாக எடுத்தோம்” என்றார் கவலையாக.

 

“தாத்தா இதில் என்ன இருக்கு? பெரியவங்க எதை செய்தாலும் அது சரி தான், நான் கிறுஸ்தியை அழைச்சிட்டு இன்னும் இரண்டு நாளில் வரேன்” என்றான்.

 

அடுத்து இவர்கள் கொடிகாமத்தை நோக்கிச் செல்ல, மும்பையில் இருந்து அஸ்வின் மீரா, சென்னையில் இருந்து மற்றைய ஜோடிகளும் படை எடுத்து வர கொடிகாமத்திலேயே திருமணம் என்று முடிவானதால் பெண் குடும்பத்தினரும் கொடிகாமத்தை வந்தடைந்தனர்.

 

நிச்சயதார்த்த நாளைக்கு யஷூம் வருகை தந்திருந்தாள். கிறுவும், யஷூவும் தங்களுக்கு தனிமை கிடைக்கும் நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர். மாலை நேரமே நிச்சயம் இருப்பதால் அனைவரும் காலையில் இருந்து பரபரப்பாக வேலைகளை செய்துக் கொண்டு இருந்தனர்.

 

கிறு யஷூவிற்கு உணவை எடுத்துக் கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு எடுத்துச் சென்றாள்.

 

“ஹப்பா இப்போவாவது, நீ தனியா மாட்டினியே” என்றாள் யஷூ.

 

கிறு கதவை தாழிட்டு 

 

“நீ சொன்னது உண்மையா?” என்று உண்மையை அறியும் ஆவலில் கேட்க,

 

“ஆமா, ஆரவ் கண்ணா மட்டும் இல்லை ஆரவ் கண்ணா அருணாச்சலம்” என்றாள்.

 

“அப்போ கண்ணா, தேவி அத்தை, அருண்மாமாவோட பிள்ளையா?” என்று அதிர்ச்சியாய் கேட்க,

 

“அதற்கான DNA ரிபோட்” என்று யஷூ ரிபோர்டை வழங்க நடுங்கும் கைகளுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.

 

அதை பார்த்தவளுக்கு உண்மை எனப் புலப்பட கண்கள் கலங்கி அழுதாள். 

 

“இப்போ இது சந்தோஷமான விஷயமாச்சே? எதுக்கு அழற?” என்று யஷூ கேட்க,

 

“இதற்கு அப்பொறம் தான் பூகம்பமே வர இருக்கு, ஆரவ் மாமா அத்தையை ஏத்துக்க மாட்டான், அவன் அவனை பெத்தவங்களை அடியோடு வெறுக்குறான் டி. அவனுக்கு எங்க குடும்பத்து மேலே இருக்கிற பாசம் குறைஞ்சிரும். நான் எப்படி இந்த சிடுவேஷனை சமாளிக்க போறேன்னே தெரியல்லை. இது அவளோ சீக்கிரம் முடியாதுன்னு தோணுது” என்றாள் கலங்கிய குரலில்.

 

“கிறு உன்னால் மட்டும் தான் அவனை பார்த்துக்க முடியும், உன்னால் மட்டும் தான் அவனை மாற்ற முடியும்” என்றாள் யஷூ ஆறுதலாக.

 

கிறுவை அழைக்கும் சத்தம் கேட்க, அவள் அவசரமாக கீழே ஓடினாள். மாலைவேளையில் நிச்சயமும் ஆரம்பமானது. இரு குடும்பத்தாருக்கும் மத்தியில் நிச்சய தட்டு மாற்றப்பட்டு மோதிரமும் மாற்றி இனிதே நிச்சயம் முடிந்தது. ஆனால் கிறுவோ முழுமையாக நிச்சயத்தில் பங்கு கொள்ள முடியாமல் தவித்தாள். அவளைக் கவனித்த ஆரவ் அவள் அருகில் வந்தவன்,

 

“என்னாச்சு கண்ணம்மா? எதுக்கு ஒரு மாதிரி இருக்க? இது உன் பையன் நிச்சயம் டி சந்தோஷமா இரு” என்றான்.

 

அவள் புன்னகைத்து முடியுமான வரை தன்னை அதில் ஈடுபடித்திக் கொண்டாள். அவள் மாமாவையும், அத்தையையும் பார்க்கும் போது ஆரவின் கண்ணீரே நினைவில் வந்து சென்றது. கிறு தனியாக நின்று யோசிக்க அவள் அருகில் மீரா நின்றுக் கொண்டாள். 

 

“என்ன டி பிரச்சனை உனக்கு? சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் முகத்தை தூக்கி வச்சிருக்க?” என்று கேட்க,

 

மீராவை அணைத்துக் கொண்டு கிறு அழ ஆரம்பித்தாள். 

 

“கிறு” என்று அவள் பதற

 

“இந்த சந்தோஷம் நீடிக்காது டி” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

 

“என்ன டி சொல்ற?” என்று மீரா கேட்க,

 

“ஆரவ் வேறு யாரும் இல்லை. தேவி அத்தை, அருண்மாமாவோட மூத்த பிள்ளை, உன் உடன் பிறந்த அண்ணன்” என்றாள்.

 

“ஏஏஏ உண்மையை தான் சொல்றியா? ஆரவ் அண்ணன் என் சொந்த அண்ணனா? அதனால தான் அவரு மேலே ஒரு மரியாதை, பாசம் எல்லாமே வந்துச்சா? பாரேன் ஆரம்பத்துல இருந்தே அவரை அண்ணன் கூப்பிட்டு இருக்கேன்” என்று கூறிக் கொண்டே போக,

 

கிறு உணர்ச்சியற்ற முகத்துடன் நின்று இருந்தாள். 

 

“கிறு என்ன டி ஒன்னுமே சொல்லாமல் இருக்க?” என்று மீரா கேட்க,

 

“அவன் உன்னை தங்கையை ஏத்துக்க மாட்டான் டி, உன்னை மட்டும் இல்லை அத்தை மாமாவையும் தான். அவன் அவனோட பெத்தவங்களை அடியோடு வெறுக்குறான் டி” என்று கீழே அமர்ந்தாள்.

 

“என்ன சொல்ற?” என்று அழுகையோடு கேட்க,

 

“ஆமா டி, இது அவன் கிட்ட சொன்னால் என்ன நடக்குமோ தெரியாது டி” என்றாள்.

 

“கிறு அண்ணா விஷயத்துக்கு இன்றைக்கு ஒரு முடிவுகட்டலாம்” என்றாள் மீரா.

 

“மீரா உன் அம்மா அவங்க மூத்த பிள்ளையை பற்றி ஏதாவது சொல்லி இருக்காங்களா?” என்று கிறு கேட்க,

 

“நான் கூட இதைப் பற்றி யோசிக்கவே இல்லை கிறு, அவங்க இதைப் பற்றி சொன்னதே இல்லை. வினோ தான் அவங்களுக்கு மூத்த பிள்ளைன்னு நினைச்சேன், ஆனால் நீ சொல்றதை பார்த்தால் ஏதோ அவங்க நம்ம கிட்ட மறைச்சி இருக்காங்க” என்று கூற

 

“எனக்கு ஆரம்பத்துல எதையும் நம்ப முடியல்லை, DNA டெஸ்டுக்கு அப்பொறம் தான் நானும் நம்பினேன்” என்று அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்று ரிபொர்டைக் காட்டினாள்.

 

மீராவும் அதைப் பார்த்த பிறகு நம்பினாள். பின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தாத்தாவின் அறைக்கு அழைத்தாள். இரவு என்பதால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவருமே ஆஜராகினர். மாதேஷ், தர்ஷூ, கவின் ஜீவியைத் தவிற அவர்களது குடும்பமும் ஹபீஸ்,ஜெசி,ஷ்ரவன், கீது அவர்களது குடும்பம் அனைவருமே சௌமியின் குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்குச் சென்று இருந்தனர்.

 

“என்ன மீரா எல்லோரையும் இங்கே எதுக்கு வர சொன்ன?” என்று தாத்தா கேட்க, 

 

அவள் கிறுவைப் பார்த்தாள். கிறுவோ உடைந்து நின்று இருக்க ஆரவ் அவள் அருகில் சென்று நின்று அவள் கைகளை இறுகப் பற்றினான். 

 

“கண்ணா என்ன நடந்தாலும் என்னை விட்டுட்டு போக மாட்ட இல்லை?” என்று கிறு கேட்க,

 

“நீ எதுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசுற? நான் எப்போவும் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்றான் அனைவரின் முன்னிலையிலும்.

 

“எல்லாத்துக்கும் சம்மந்தம் இருக்கு, நீயே புரிஞ்சுப்ப” என்றாள் அவன் கொடுத்த தைரியத்துடன்.

 

“தாத்தா கண்ணா வேறு யாரும் இல்லை நம்ம குடும்ப வாரிசு தான்” என்று கூற

 

“என்ன கிறு பேசிட்டு இருக்க?” என்றூ சாவி கூற

 

“அம்மா நான் அவனோட பெத்த அம்மா அப்பாவைப் பற்றி தேட சொல்லி யஷூ கிட்ட கொடுத்து இருந்தேன். அவை தேடி கண்டு பிடிச்சு என்கிட்ட சொன்னால் ஆரவ் கண்ணா வேறுயாரும் இல்லை அருணாச்சலம் மாமா, தேவி அத்தையோட மூத்த பிள்ளை தான். அதற்கான DNA ரிபோர்ட்” என்று அதை தாத்தாவிடம் வழங்க அவர் அதிர்ந்து மகளைப் பார்த்தார்.

 

ஆரவின் கைகள் அவள் கைகளில் இருந்து தானாக விடு பட, கிறுவின் பிடி இறுகியது. அவள் அவன் முகத்தைப் பார்க்க இறுகிய முகத்துடன் இருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 68யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 68

நிலவு 68   அடுத்த நாள் காலையில் கிறு எழமால் இருக்க ஆரவ் அவள் அருகில் வந்தான்.   “கிறுஸ்தி பாருடி பத்து மணியாச்சு எந்திரி” என்று ஆரவ் கூற   “கண்ணா என்னால் முடியல்லை டா, ரொம்ப டயர்டா இருக்கு”

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 51யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 51

நிலவு 51   இறுதியாக AGC அணி வெற்றி பெற்று செம்பியன்ஷிப்பைப்  பெற்றுக் கொண்டது. அவர்களுக்கான மெடல்ஸ், ட்ரோபி என்பவை வழங்கப்பட, அதே இடத்திற்கு பணத்திற்காக விளையாடமாட்டேன் என்று கூறிய நால்வரையும் ஆரவ் மேடைக்கு அழைத்து வந்தான். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கோபம்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 66யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 66

நிலவு 66   “கேர்ள்ஸ் நீங்க ஒரு நாளை சரி வேஸ்ட் பன்ன கூடாது” என்று ஆரவ் கூற   “நீங்க சொன்னதுக்காக திடீர்னு ஒரு ஆளை எங்க கோர்ச்சா ஏத்துக்க முடியாது” என்றாள் ஒருவள்.   “இங்க பாருங்க இப்போ