Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’

5 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

அவள் ஒரு நொடி இவளை மேலிருந்து கீழ் வரை யாரென பார்க்க

“ஹாய் நான் மித்ரா..நீங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்..உங்களுக்கு பதில் தானே வேணும்…எதனால விட்டு பிரியறதுக்கு சான்ஸ் இருக்குனு நான் சொல்றேன்..சில விஷயம் கேக்கறேன்…அதுல ஏதாவது ஒண்ணுக்கு நீங்க தெளிவான பதில் சொல்லாட்டியும் நீங்க தான் இந்த லவ் வேணுமான்னு திரும்ப யோசிக்கணும்..ஓகே?” என

குமார் “இவளா..” என

மித்ரன் ஆர்வத்துடன் இவள் என்ன செய்ய போகிறாள் என பார்க்க

ரேஷ்மா “நீ யாரு..திடிர்னு உள்ள வந்து நீயா பேசிட்டு இருக்க?”

“இது என்ன வம்பா இருக்கு? நீங்க இப்டி புலம்பி மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணா யாரானாலும் வரத்தான் செய்வாங்க.. நீங்க என்ன சொன்னாலும் அவரு உங்களை லவ் பண்ணமாட்டாரு உங்களுக்கு பதில் வேணும்ல?”

மித்ரனும் அமைதியாக இருக்க ரேஷ்மாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் மௌனமாக இருந்தாள்.

மித்ரா “நீங்க இவரை லவ் பண்றிங்களா? இவரு என்ன படிக்கறாரு? யார்கிட்ட பேசுறாரு, எங்க இருக்காரு? யார்யார் இவருக்கு இருக்காங்க, புடிச்சது எது இந்த மாதிரி பேசிக் விஷயம் தவிர இவரை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? ” என ரேஷ்மா “வேற என்ன தெரிஞ்சுக்கணும்?”

“ஆ..நிறையா இருக்கு..சரி தெரிஞ்சுக்காட்டி விடு ஒண்ணுமில்ல..இவரை எதனால லவ் பண்ண?”

ரேஷ்மா இவ என்ன இப்டி கேள்வி கேக்குறா என புரியாமல் விழிக்க மித்ரா “இல்ல.உனக்கு பாத்ததும் பிடிச்சிருச்சுனு பிரண்ட்ஸ்கிட்ட கேட்டீயா?..பாக்க பையன் நல்லா இருக்கான்..காலேஜ்ல நல்ல நேம் இருக்கு, பிரைட் பியூச்சர் இருக்கும், எந்த கெட்ட பழக்கமும் இல்ல..பொண்ணுங்க பிரச்சனை இப்டி எல்லாம் இல்ல சோ அவனை லவ் பண்றது ஓகேனு சஜ்ஜஸ்ட் பண்ணாங்களா?” என

அவள் ஆமா என்பது போல தலையாட்டி விட்டு “ஆனா எனக்கும் பிடிச்சது..” என முடிக்கும் முன்

மித்ரா “அதான் சொல்றேன்..பிடிச்சது, பட் அது லவ் னு எப்படி நீ டிக்ளர் பண்ண?”

“சொல்லு என்னென்ன யோசிச்ச? எப்போ வரைக்கும் யோசிச்ச? இன்னைக்கு எந்த பிரச்னையும் இல்ல சோ லவ் பண்ற? நாளைக்கே அவன் சரியா படிக்காம இல்ல சம்திங் ஏதாவது கெட்ட பேர் எடுத்துட்டு லைப்பே போச்சுங்கிற நிலமைக்கு போய்ட்டா அப்போ என்ன பண்ணுவ?”

அவள் தோழிகள் வந்து “ஹேய் யாரு டி நீ?”

மித்ரா “ம்ச்..நான் உங்க யாருகிட்டேயும் பேசல..அதோட நான் இன்னும் பேசி முடிக்கவும் இல்ல.. ரேஷ்மா..இவளோ நாள் இவங்க எல்லாரும் சொன்னதை வெச்சு இவன் உன் லைப்க்கு ஓகே னு முடிவு பண்ணேல..இப்போ கொஞ்சம் நான் சொல்றத கேட்டு உனக்கு நீயேவாது பதில் சொல்லிக்கோ..அப்போவும் உனக்கு ஓகேன்னா கண்டிப்பா நீ லவ் பண்ணு கேளு பேசு..அப்போதான் உன் லவ்ல இருக்கற ஸ்ட்ரோங் அவங்களுக்கும் தெரியும்..” என மித்ரன் இருந்த புறம் கைகாட்ட அவளும் மேலும் கீழும் தலையசைக்க

அவளது தோழி “ஹே வேணாம் டி..” என

மித்ரா “சு..நீ சொல்லு ரேஷ்மா, நீ பணத்துலையே வளந்த பொண்ணு..அவன் லைப்ல செட்டில் ஆகுற வரைக்கும் நீ வெயிட் பண்ணனும்..

இல்ல அப்பாகிட்ட ஹெல்ப் கேட்டுக்கலாம் வெளில பாத்துக்கலாம்னு நீ சொன்னாலும் அத இவளோ கரெக்டா இருக்கிற பையன் ஈகோ இல்லாம ஏத்துக்குவானா?

ஏத்துக்காம சண்டை தான் வரும்..அப்போ மட்டுமில்ல மேரேஜ்ல, உங்களுக்கு பொறக்க போற குழந்தை, அத வளக்கறது, ஸ்கூல்ல சேத்திரதுனு எவ்ளோ விஷயம் எல்லாத்துக்கும் உன்னால அவன அட்ஜஸ்ட் பண்ணிட்டு அந்த அளவுக்கு பாமிலிய ரன் பண்ண முடியுமா? இல்ல அவனை கன்வின்ஸ் பண்ணமுடியாம சண்டை போட்டுட்டு இருப்பியா? இன்னைக்கு இவனுக்கு லவ் வரல ஓகே..வரும்னு நீ ஒரு நம்பிக்கைல சொல்ற..வந்த அப்புறம் மேரேஜ் பண்ணிக்கலாம்னு நீ சொல்ற..நைஸ்..சூப்பர்..

ஒருவேளை அவன் சொல்றமாதிரி லவ்வே வராம இருந்துட்டா? அதுவரைக்கும் வெயிட் பண்ணிட்டே இருக்க போறியா என்ன? நீ ஔவையார் மாதிரி ஆகணும்னு விதி இருந்தா யாரு என்ன பண்றது?” என கூறவும் அவள் மத்த எல்லாமே கூட ஓகே..

ஆனா லாஸ்ட்டா சொன்னது ஒருவேளை என ரேஷ்மா சற்று தயங்க

மித்ரா தொடர்ந்து “சரி இன்னைக்கு நீ சொல்றதே அவனோட பர்பெக்சன் தான்..அதே  பர்பெக்சன் அவன் உன்கிட்டேயும் எதிர்பார்த்தா நீ என்ன பண்ணுவ? லைப்ல அட்ஜஸ்ட் பண்ணலாம்..ஆனா சேக்ரிபைஸ் பண்ணறஅளவுக்கு லைப் ஸ்டைலே மாத்திக்கணும்னா எப்படி? அது எந்த அளவுக்கு முடியும் சொல்லு..அவன் காலைல 4 மணிக்கு எந்திருச்சு படிப்பான். பஸ்ட் மார்க் எல்லாத்துலயும் s கிரேட் தான் எடுப்பான்..அதிகமா பிரண்ட்ஸ் இல்ல..பெருசா எதுலயும் கலந்துக்க மாட்டான்..ஒரு பார்ட்டி, படம், என்ஜோய்மென்ட்னு அவனுக்கு எதுமே பிடிக்காது..இன்கிலூடிங் லவ்..

குதிரைக்கு கடிவாளம் போட்டமாதிரி படிப்பு அவனோட வேலை இப்படித்தான்…கிட்டத்தட்ட சாமியார் மாதிரி…அப்டி இருக்கும்போது இது எல்லாமே உன்கிட்ட அவன் எதிர்பார்த்தா என்ன ஆகும்? உனக்கு இது எவ்ளோ நாளைக்கு செட் ஆகும்?

இவனை உனக்கு இப்போ பிடிச்சிருக்கு..இவன் எந்த பொண்ணுக்கிட்டேயும் பெருசா இன்டெரெஸ்ட் காட்டல..சரி..ஒருவேளை அவனோட நேச்சரே அப்டி இருந்து உன்கிட்டேயும் இன்டெர்ஸ்ட் காட்டாம இருந்தா உன்னால அந்த லைப்ல சந்தோசமா இருக்க முடியுமா? சரி அது கரெக்ட்டா அமையுதுனே வெச்சுக்குவோம்..

நீ வீட்ல உங்க லவ் சொல்லி கல்யாணம் பண்ணனும்..சொன்னதும் அவங்க ஸ்டேட்டஸ் பாப்பாங்க..சரி நீ பேசி சமாளிக்கிற..அவங்க ஓகே சொன்னாலும் அடுத்த கேள்வி பையன் தனியா யாருமில்லாம வளந்தவன்..எப்படி இருப்பானோ? என்னவோ? நாளைக்கே ஏதாவது பிரச்னைன்னா என்ன பண்றது? இவளோ கேள்வி வரும்?

இன்னைக்கு நீ இவளோ தூரம் கெஞ்சி தான் லவ்வே ஏத்துக்க வெக்கிறேங்கும் போது நாளைக்கே ஒரு பிரச்சனைன்னு வந்தாலும் நீதானே என்கிட்ட வந்து லவ் பண்ண சொல்லி கெஞ்சுனேனு ஒருவார்த்தை சொல்லிட்டா நம்மளால அத தாங்கிக்க முடியுமா சொல்லு..ஏன்னா பொண்ணுங்க ரொம்ப சென்சிடிவ்..நம்மள இவ்ளோ சீப்பா நினைச்சுட்டாங்களேனு எவ்ளோ பீல் பண்ணுவோம்..எத வேணாலும் கேட்டு வாங்கலாம்..ஆனா லவ் கேட்டு கெஞ்சி வந்தா அது ரொம்ப டேஞ்சர்..எந்தளவுக்கு நிலைச்சு நிக்கும் யோசி.. இதெல்லாம் தேவையான்னு யோசிச்சியா? இதுக்கெல்லாம் பதில் இருக்கா?” என அவள் நன்கு குட்டைய கொழப்பிவிட்டு சற்று ஆசுவாசப்படுத்த ரேஷ்மா பாவமாக பார்த்துவிட்டு இடவலமாக தலையசைக்க

 

மித்ரா நிதானமாக “பாத்தியா..இதுக்கு தான் நான் சொல்றேன்..உன்னை பாத்து பாத்து லவ் பண்றவன் உனக்கு புருஷனா வருவான்..இது எல்லாம் ஜஸ்ட் ஒரு இன்பாக்சுவேஷன்.. சோ நீ ஏதும் போட்டு குழப்பிக்காம ஜாலியா இரு..”

 

அவள் தோழி ஏதோ வாயெடுக்கும்முன் மித்ரா “ஒருவேளை உனக்கு இல்ல அப்போவும் மித்ரன் தான் வேணும்னு தோணுச்சுனா இப்போ நான் கேட்ட எல்லா கேள்விக்கும் மித்ரன் அக்செப்ட் பண்ணிக்கிற மாதிரி பதிலை சொல்லிட்டு அவரையும் லவ் பண்ண வெச்சுட்டு அந்த லைப் ஸ்டார்ட் பண்ணுங்க..ஆல் தி பெஸ்ட்..” என அவனும் அதை ஒப்புக்கொண்டது போல தலையசைக்க ரேஷ்மாவும் அவளது தோழிகளும் இதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை என நகர்ந்தனர்…

 

மித்ரன் இவளை பார்த்து மெலிதாக புன்னகைக்க குமார் உட்பட மற்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்..இருப்பினும் எப்டியோ பேசி அனுப்பிச்சிட்டா.. என எண்ணினர்.

மித்ரன் “நல்லவேளை நீ அவளுக்கு ரியாலிட்டி என்னனு தெளிவா சொல்லி புரியவெச்ச..எப்பிடிடா சமாளிக்கிறதுனு இருந்தது…தேங்க் காட்..” என அவள் பெருமூச்சு விட

மித்ரா புன்னகையுடன் “ம்ம்..இப்போ கடவுள கூப்பிட்டோ பெருமூச்சு விட்டோ என்ன பிரயோஜனம்? முன்னாடியே யோசிக்கணும்..சரி இப்போவும் எதுவும் கெட்டுப்போகல..நீங்க எப்போவும் போல ஸ்டடீஸ் உங்களுக்கு பிடிச்சதை பாருங்க..யாராவது இந்த மாதிரி ப்ரோப்லேம் பண்ணா எதுவா இருந்தாலும் சிவில் டிபார்ட்மென்ட், என் ஜூனியர், என் லவர் மித்ராந்தியாகிட்ட கேட்டுக்கோங்கனு சொல்லிடுங்க..யாராஇருந்தாலும் நான் பாத்துக்கறேன்..சரியா? டோன்ட் ஒர்ரி..எப்போவுமே நான் இருக்கேன் உங்களுக்கு..எல்லார்கிட்டயும் நான் சொல்லி வெச்சிடறேன்..என் லவர டிஸ்டர்ப் பண்ணாதீங்கனு ஓகே..” பை என அவள் வேகமாக கூறிவிட்டு அங்கிருந்த கையசைத்து விட்டு ஜாலியாக தோழிகளிடம் வந்தாள். “ஹே என்ன டி எல்லாரும் வேடிக்கை பாத்துட்டு நிக்கறிங்க…அவனுக்கு ஈகுவள இருக்கணும்ல..s கிரேட் எடுக்கலேனா லவ் இல்லேனு சொல்லிடப்போறன்.. வா வா போயி ஒழுங்கா கிளாஸ்ல படிக்கணும்..” என அவள் சென்றுவிட அவளது தோழிகள் என்ன நடந்தது என புரியாமல் அவள் சொல் படி பின்னோடு சென்றனர்.

 

இங்கே குமார் மற்றும் நண்பர்கள் “ஏன்டா இவ என்ன சொல்லிட்டு போறா…ரேஷ்மாகிட்ட பேசி லவ் வேண்டாம்னு அனுப்பிச்சிட்டு..மித்ரன்கிட்ட லவர் இருக்கானு சொல்ல சொல்றா..ஏதோ புரிஞ்சும்புரியாத மாதிரியும் இருக்கே.. டேய் மித்ரன் உனக்கு மித்ரா என்ன சொல்ல வரானு புரிஞ்சுதா?” என

மித்ரன் அவர்களை பார்த்து நிதானமாக “என்னை அவ லவ் பண்றாளாம்..அதைத்தான் இப்டி சொல்லிட்டு போறா.” என கூறிவிட்டு இவனும் சாதாரணமாக நகர்ந்தான்..

 

வெளியே வந்தவர்கள் “டேய் டேய்..நில்லு..என்ன சொல்லிட்டு நீ பாட்டுக்கு போற?”

மித்ரன் “வேற என்னடா பண்ண சொல்றிங்க? அவ என்கிட்ட பதில் எதிர்பார்க்கல..வந்தா சொன்னா போய்ட்டா…இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?”

“என்னடா உளற? அவ ஏதோ மத்தவங்ககிட்ட விளையாடுற மாதிரி விளையாடபோறாளோ?”

“ஆனா லவ் விசயத்துல அவ இப்டி பண்ணுவாளா? ஒரு வேலை உண்மையா இருந்து அந்த புள்ளை ஏதாவது சீரியஸ இருந்திச்சுன்னா?”

“நீ நோ சொன்னா அவ தாங்கிப்பாளாடா..” என ஆளாளுக்கு ஒவ்வொரு கேள்வி கேட்க

மித்ரன் பொறுமையாக “டேய் எல்லாரும் ஏன் இப்டி பதறிங்க? ரேஷ்மாகிட்ட அவ பேசுனது சொன்ன விஷயம் எல்லாமே நீங்கழும் தானே கேட்டீங்க..சோ அவ தெளிவாதான் இருக்கா..அப்டி எல்லாம் பயந்து ஏதாவது பண்ணிக்கிற அளவுக்கு எல்லாம் அவ இல்ல..எந்த மாதிரி சூழ்நிலைன்னாலும் அவ சமாளிப்பா.. நீங்க ரிலாக்ஸ வாங்க..”

“அப்டினா நீ அவளை லவ் பண்றியா?”

“இப்போ நீங்க தான்டா உளறிங்க..அவ அவளை பத்திரமா பாத்துக்குவா, தப்பா எதுவும் முடிவு எடுக்கமாட்டானு சொன்னா நான் அவளை லவ் பண்றதா அர்த்தமா? என் பதில் எப்போவுமே ஒன்னு தான்..எனக்கு லவ் எல்லாம் ம்கூம்..எனக்கு அதுல எல்லாம் இன்டெரெஸ்ட்டே இல்ல.. இது தான் நான்..அவ கேட்டாலும் இதுதான் என்னோட பதில்..” என அவன் கூறிவிட்டு நகர்ந்துவிட்டான்..

பேயடித்தார் போல அமர்ந்திருந்த தன் தோழிகளை திரும்பி திரும்பி பார்த்துவிட்டு தண்ணீர் தந்து

“என்னாச்சு டி உங்களுக்கு எல்லாம்..யாரு உங்களை இப்டி பண்ணது? ஏன் இப்டி பயந்து போயிருக்கிங்க?” என எதுவுமே நடவாதது போல கேட்க

மகி “நீ பாட்டுக்கு நேரா போயி சீனியர்ஸ்க்கு அட்வைஸ் பண்ணி ரேஷ்மா லவ்வே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு பேசி அவ பிரண்ட்ஸ்ங்கள கடுப்பேத்திவிட்டுட்டு அதே ப்லொல உன் ஆளுகிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டு இப்டி எதுமே நடக்காத மாதிரி கேக்கற?” என அதிர்ச்சியில் இருந்து வினவ

மித்ரா “ஆமால..ப்ரொபோஸ் பண்ணிட்டேன்..அவனுக்கு புரிஞ்சிருக்கும்…ஆனா பிடிச்சிருக்குமா?” என இவள் கனவுலகிற்கு செல்ல

பவ்யா “ஆமா ரேஷ்மாகிட்ட இவளோ கேள்வி கேட்டியே..அது எல்லாம் உனக்கும் பொருந்தும் தானே.. உன்கிட்ட மட்டும் அதுக்கான பதில் இருக்கா?”

மித்ரா கண்ணடிக்க

“ம்ம்..அப்போ உனக்கும் பதில் இல்லை..அப்புறம் ஏன்டி அவளை மட்டும் குழப்பிவிட்ட..”

“நான் கேள்வி தான் கேட்டேன்..அவ அதை எல்லாமே நான் பாத்துகுவேன்னு ஸ்ட்ரோங்கா சொல்லி இவனை தான் லவ் பண்றேன் அப்போவும் எனக்கு வேணும்னு நின்னிருக்கலாமே..அவ அத பண்ணல..அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..அப்டினா அவளே ஒரு ஆசிலேஷனல்ல தான் இருந்திருக்கா..அத கொழப்புனா என்ன கொழப்பாட்டி என்ன?”

சுஜா “அப்போ நீ எல்லாத்துக்குமே ரெடியா தான் இருந்திருக்க..”

 

விஜயா “அப்புறம் எதுக்கு டி எங்ககிட்ட ஐடியா கேக்கறேங்கிற பேர்ல அவ்ளோ யோசிக்க வெச்சு கொடுமை பண்ண? பிப்ரவரி 14னு சொல்லும் போது கூட இழுத்தியேடி..அப்டி பயந்து தயங்குனவளா நீ?”

மித்ரா “நான் எப்போ டி அப்டி சொன்னேன்? பிப்ரவரி 14 வரைக்குமா லவ் சொல்றதுக்கு வெயிட் பண்ணனும்னு தான் இழுத்தேன்..யோசிச்சேன்..நீங்க தான் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..அதோட நீங்களே சொல்லுங்க..என் லவர் அங்க பிரச்னைல இருக்கான்.நான் தானே போயி பாக்கணும்…சோ அவன் பிரச்னையை தீத்துவெச்சுட்டு அப்டியே ஒரு ப்ரோபோசல் குடுத்திட்டு ஜாலியா வந்துட்டேன்..” என இவர்களுக்கு ஹையோ என்றிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’

33 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் செல்லும் வழியில் மித்ரா வெளியே புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள் அவன் அமைதியாக வருவதை கண்டவள் “என்ன ஆதி, என் மேல செம காண்டுல இருக்கியோ?” என வம்பிழுக்க அவனும் புன்னகையுடன் “நீ

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 24’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 24’

24 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் தொகுப்பாளர் : சூப்பர் சார்..அவங்க முழு பேர்? “மித்ராந்தியா” “இரண்டுபேரோட பேருமே இப்டி சிங்க் ஆகுதே..நைஸ் சார்..அவங்களை பத்தி சொல்லுங்க…”   தியாவ பத்தி சொல்லனும்னா “ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப பாசமானவ..எல்லாருக்கும் ஹெல்ப்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’

25 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மகேஷ், “ஆமாமா மித்து அங்கிருந்திருந்தா என்ன சொல்லிருப்ப?” “சொல்லுங்க சொல்லுங்க மாமா..லாஸ்ட்ல கரென்ட் போயிடிச்சு..” “என்ன பதில் சொன்னிங்க?” என ஆளாளுக்கு சுற்றி நின்று ஆர்ப்பரிக்க மித்ரன் புன்னகையுடன் தியாவின் நெற்றியில் முத்தமிட்டு