3 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்
சிவா “எது எதுல விளையாட்றதுன்னு இல்லை? அதுவும் காலேஜ்ல வந்து அர்ரெஸ்ட் ம்ம்? ரொம்ப மோசமானவனா இருந்து இதுக்காகவே உன்கிட்ட பிரச்சனை பண்ணிருந்தா என்ன பண்ணுவ? நாங்க ஏதோ நல்ல பசங்கள இருக்கறதால தப்பிச்சே..”
“அதேதான் நானும் கேட்கறேன்..இப்படியா ஒரு பொண்ணுகிட்ட போயி விளையாட்டுக்குன்னாலும் அவ போட்டோஸ் வெச்சு மாஸ்க் பண்ணுவேன் போஸ்ட் பண்ணுவேன் அசிங்கப்படுத்துவேன்னு சொல்றது.. ரொம்ப பயந்த பொண்ணா இருந்து சூசைட் ஏதாவது பண்ணிருந்தா.. என்ன ஆகுறது.. நான் ஏதோ தைரியமான பொண்ணா இருந்ததால கொஞ்சம் அலெர்ட்டா இருந்து ஹண்டில் பண்ணிட்டேன்..இல்லாட்டி..?”
என அவளும் அதே போல கூற அவர்களும் சீரியஸ தான் ஆகியிருக்கும் என ஒப்புக்கொண்டனர்..
மித்ரா “இந்த மாதிரி கேவலமான ஐடியாவ யார் குடுத்தது..”
அனைவரும் குணாவை பார்க்க அவன் “இல்ல சும்மா…” என
மித்ரா “நினச்சேன்..இந்த மாதிரி எதை பத்தியும் யோசிக்காம லூசு மாதிரி ஒரு ஐடியா வரது அங்கிருந்துதான் இருக்கும்னு” என அவள் முறைக்க
மகேஷ் “நல்லா சொல்லு.. இதுல நேரா போயி hod மேம்கிட்ட வேற சொல்லிட்டான்..முந்திரிக்கொட்டை..”
குணா “சும்மா என்னவே குறை சொல்லாதீங்கபா..நேத்து நைட் கால் வந்தது.. போலீஸ் மிரட்டுனாங்க.. அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.. இல்லாட்டி நான் எவ்ளோ தைரியம் தெரியுமா? அவன் மட்டும் என் கைல கிடைச்சான்…”
ராஜீவ்,சிவா, மகேஷ் மித்துவை சந்தேகமாக பார்க்க “ஆ..அது..ஒரு விஷயம் பண்ணா பக்காவ இருக்கணும்ல.. அதான்.. என் ஸ்கூல் பிரண்ட்கிட்ட சொல்லி டயலாக் எழுதிக்குடுத்து பேசி மிரட்ட சொன்னேன்…நீங்க எல்லாரும் கொஞ்சம் ஷார்ப்.. குணாவை பாத்ததும் தெரிஞ்சிச்சிடுச்சு ரொம்ப இன்னொசென்ட்.. யார் வேணாலும் ஏமாத்தலாம்னு… அதான்..” என அவள் பாவமாக கூற
குணா “ஆமா..நான் ரொம்ப வெகுளி.. இப்டி தான் எல்லாரும் ஏமாத்துறாங்க.. நீயாவது சொல்லாம புரிஞ்சுகிட்டேயே..” என அவன் ஆறுதல் கூறிக்கொள்ள
மகேஷ் “டேய் பைத்தியக்கார அவ புரிஞ்சுக்கிட்டதால தான் உன்னை யூஸ் பண்ணிருக்கா.. நீ தத்தினு சொல்லாம சொல்லிட்டு இருக்கா. யானை காது மாதிரி விரிச்சு வெச்சு கேட்டுட்டு இருக்க..” என
குணா நே என விழித்தான். “இங்க பாரு மித்ரா..போனா போகட்டும்னு பாக்குறேன்.. நீ என்னை ரொம்ப இன்சல்ட் பண்ற.. நான் எவ்ளோ டெரர் தெரியுமா? கேங்கா பொண்ணுங்க நின்னு பேச கூட பயப்படுவாங்க.. நாங்க எல்லாருமே அப்டித்தான்..முரட்டு சிங்கிள்ஸ்..டெரர் பாய்ஸ்…”
மித்து சிரித்துவிட “அதெல்லாம் சும்மா.. முரட்டு சிங்கிள்..நீ? ஹா ஹா ஹா…உங்க எல்லார்கூடவும் இருக்கும்போது தான் இந்த ஸீன் எல்லாம்.. உண்மையா நேத்து குணாவோட நம்பர் வாங்கலாம்னு பிளான் போட்டோம்.. ஜஸ்ட் பொல்லொவ் பண்ணிட்டு என் பிரண்ட் ஒரு பொண்ணு விட்டு அவ மொபைல் அங்க எங்கேயோ மிஸ் ஆகிடுச்சுனு ஒரு கால் பண்ணிக்க இவர்கிட்ட மொபைல் வாங்கி மிஸ்ட் கால் குடுக்க சொல்லி பிளான்… அவளும் ட்ரை பண்ணிட்டு குணாகிட்ட தேங்க்ஸ்னு மொபைல் குடுத்தா..
இந்த முரட்டு சிங்கள் என்ன தெரியுமா பண்ணாரு..
போனவளை வேகமா கூப்பிட்டு இவனோட நம்பர் சொல்லி “உங்க மொபைல் கிடைச்சிட்டா இதே நம்பர்க்கு கால் பண்ணி தேங்க்ஸ் சொல்லுங்க.. உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி உங்க நம்பர் கொடுங்களேன்.. நானும் தேடி பாத்து கிடைச்சதுனா உங்களுக்கு கூப்பிட்டு சொல்றேன்னு சொல்றான்..” என அவள் சிரிக்க
குணா “இதுல சிரிக்க என்ன இருக்கு.. அவ உன் பிரண்ட்னு எனக்கு எப்படி தெரியும்? அதுக்கு என்னமோ அவ என்னை ஒரு ஜந்துவ பாக்குற மாதிரி பாத்திட்டு போற.. சொல்லி வெய்…”
ராஜீவ் “உண்மையாவே நீ லூசாடா.. அந்த பொண்ணு உன் மொபைல்ல இருந்து தானே கால் பண்ணா? உன் மொபைல்ல இருந்தே சேவ் பண்ணிருக்கலாம்ல..திரும்ப அவகிட்ட போய் நம்பர் கேட்டிருக்க? அப்புறம் உன்னை அவ எப்படி மனுஷன் மாதிரியா பார்ப்பா?”
மகேஷ் ” மொபைல் தொலஞ்சிடிச்சுனு தானே கேட்டு வந்தாங்க.. திரும்ப உங்க மொபைல் நம்பர் குடுங்க.. அத கண்டுபுடிச்சா உனக்கு கால் பண்ணி சொல்றேன்னு சொல்றியே..எப்படி பொண்ணுகிட்ட வழிஞ்சு அசிங்கப்பட்டுட்டு இங்க வந்து முரட்டு சிங்கள்…உன்னை எல்லாம்..” என அவனை அடிக்க துரத்தினர்..
இத்தனையும் கேட்டுவிட்டு குமார் மித்ரனிடம் கூற அவனும் அறைக்கு வெளியே நின்றிருந்ததால் அப்போது பேசியதை கேட்டதுமே சிரிப்புடன் நகர்ந்துவிட்டான்.. அதன்பின் இவர்கள் வெளியே பேசியது குமார் சொல்லி கேட்க அவனுக்கு மீண்டும் சிரிப்பு வர இருப்பினும் எப்போதும் போல முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக நகர்ந்துவிட்டான்.
குமார் “அவனுங்க வாங்குன பல்ப்புக்கு அளவே இல்லடா. அதுவும் அந்த குணா பையன் இருக்கானே.. செமடா…அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கே கிளாஸ்ல சொல்லி விழா வெச்சு அவனுங்களை வெறுப்பேத்தணும்.. ”
மித்ரன் “டேய் போதும்டா.. கேட்ட..சிரிச்ச..அதோட விடு.. என்ன இருந்தாலும் சும்மா சொல்லி காமிச்சு இன்சல்ட் பண்ணக்கூடாது… தேவையில்லாம பிரச்னைய வளக்கவேண்டாம்.. ” என அவனை அதட்ட குமார் “உன்னை வெச்சுகிட்டு..போடா… இப்போகூட பாரு அரவிந்த் லைப்ரரில இருந்து கொண்டு வந்த புக்க அவனுங்க ஹாஸ்டல்ல இருந்து எடுத்து எங்கேயோ போட்டுட்டுனானுங்க..அந்த லைப்ரரியன் புது புக் இல்ல அமௌன்ட் குடு வித் பைன்னோடனு உயிரை வாங்குறானாம்.. அவன் காலேஜ் பீசே கட்ட முடில.. இதுல இந்த பிரச்னை வேறையாடானு பொலம்புறான்… அவங்க பணக்கார பசங்கன்னா என்ன வேணாலும் பண்ணுவாங்களா? எப்படி வெறுப்பேத்திருப்பாங்க..சண்டை போடுவானுங்க.. கிடைச்ச சான்ஸ விட சொல்றியே….சின்ன சின்ன பிரச்சனை எல்லாம் விட்ரு..பெருசா பிரச்சனை வந்தா மட்டும் நீ சண்டைபோடு..உன்கூட இருந்ததுக்கு அந்த பொண்ணுகூட பிரண்ட் ஆகிருக்கலாம்… பேசியோ பொய் சொல்லியோ பல்பு குடுத்தட்றா..”
“சரி வா..கிளாஸ் போலாம்..”
“தேவையில்ல..நான் கான்டீன் போறேன்.. நீயே போயி அந்த அறுவையை கவனி..” என மித்ரன் சிரித்துக்கொண்டே சென்றான்.
குணாவை அடிக்க மகேஷ் துரத்திக்கொண்டு ஓட மகிளா அந்நேரம் பார்த்து மித்ராவை தேடி வர மகேஷ் அவளின் மீது மோதிவிட்டான். மகிளா கடுப்புடன் நிமிர்ந்து பார்க்க மகேஷ் சாரி சொல்ல வாயெடுக்குமுன் மித்ராவிடம் அவள் செல்ல இவளை கண்டவளோ சிவாவின் பின் ஒளிந்துகொள்ள மகிளா வந்த கோபத்தை அடக்கிகொண்டு “மித்து உன்கிட்ட பேசணும்..ஒழுங்கா வந்துடு..” என
மித்து தண்ணீரில் இருந்து தவளை போல எட்டிப்பார்க்க குணா இவளே பயப்படற ஒரு ஆளிருக்கே என்றெண்ணியவன் வேகமாக வந்து மித்துவை இழுத்து வந்து மகிளாவின் முன் நிறுத்தினான்..
மகிளா “உன்கிட்ட தனியா பேசணும்..”
மகேஷ் “எதுவானாலும் இங்கேயே கேட்கலாம்..” என்றான் கெத்தாக..
மகிளா “நான் என் பிரண்ட்கிட்ட பேசிட்டு இருக்கேன்..”
“இப்போ மித்து எங்களுக்கும் தான் பிரண்ட் ..இல்லையா மித்து?” என்றதும் மேலும் கீழும் வேகமாக தலையசைக்க மகிளா முறைத்ததும் இடவலமாக சிறிது அசைத்துவிட்டு அமைதியாகினாள்.
மித்து, மகிளாவை சுற்றி அவர்கள் நால்வரும் நிற்க மகிளா எதையும் கண்டுகொள்ளாது “நேத்து என்கிட்ட என்ன சொன்ன? இப்போ என்ன பிரச்சனை பண்ணிருக்க? ஒழுங்கா நடந்த எல்லா உண்மையும் சொல்லிடு”
மித்து “நான் என்ன பண்ணேன்..இதோ இங்க நிக்கிறானே குணா இவன் தான் சீனியர்னு மரியாதை இல்லாம மோர்னிங் சேட்டையா பண்றேனு சொல்லி உன் போட்டோவ ஒட்டி அசிங்கப்படுத்துறேன்னு தப்பு தப்பா பேசி பயமுறுத்தினான்.. அதான் நானும் திருப்பி பேசிட்டேன்.. அது சம்பந்தமா தான் இன்னைக்கு என்குவேரி..எல்லாத்துக்கும் காரணம் இதோ இந்த குணா தான்.. நேத்து எப்படி எல்லாம் பேசுனான் தெரியுமா? சொன்னா நீயும் வருத்தப்படுவேன்னு தான் நான் சொல்லல..சாரி..” என அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற
மகிளா குணாவை முறைக்க “ஹய்யய..அது சும்மா…அவ பொய் சொல்..” அவன் முடிக்கும்முன்
மகிளா “அறிவில்லை உங்களுக்கு.. பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரில..உனக்கு மரியாதையை ஒரு கேடா? என்னடா சீனியர்னா நீ பெரிய இவனா? ஏதோ போனா போகுதுனு பாத்தா ரொம்ப ஓவரா பண்ற.. இவளோ கேவலமா பேசியிருக்க..படிக்கதானே வந்திருக்க.. அதோட என் மித்து இந்த மாதிரி விசயத்துல எல்லாம் பொய் சொல்லமாட்டா.. எனக்கு தெரியும்..நடிக்காத..இன்னொரு தடவ இப்டி நடந்தது போலீஸ்தான் பாத்துக்கோ..” என அவளோ சில நிமிடங்கள் கண்ட்ரோல் இல்லாமல் பொரிந்துதள்ள மித்து மீதி இருந்த அனைவரையும் சற்று நகர்ந்து வர சொல்லி குணாவை மட்டும் மாட்டிவிட அவனுக்கு திட்டு வாங்கி அழுகை வராத குறை தான்.
ராஜீவ் “ஹே அவன் பாவம்..வா..”
மித்து “அதெலாம் ஒன்னும் வேண்டாம்..என்னை மாட்டிவிட பாத்தான்ல.. கொஞ்சம் வாங்கட்டும் விடு..”
மகேஷ் திறந்தவாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான். மித்து இவனின் சிலை கோலத்தை கண்டு சிவா ராஜேஷ் இருவரையும் தட்டி காட்ட மகிளா திட்டி முடித்து “வா மித்து போலாம்..” என்றதும் மித்து உடனே “ஆ..போலாம் போலாம்.” என உடனே ஓடிவிட்டாள்..