Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’

2 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

மறுநாள் குணா hod வாசுகி மேடம் முன் தலைகவிழ்ந்த படி நிற்க எதிரே நின்ற சிவா அவனை முறைத்தான். இதை கண்ட வாசுகி “சிவா இப்போ எதுக்கு குணாவ முறைக்கிற?” என தன் தூரத்து உறவான தங்கை பையன் என்ற முறையிலும் டிபார்ட்மென்ட் hod என்ற வகையிலும் அவனை அதட்ட சிவா “இல்ல.. மேம்..அப்படியெல்லாம் இல்ல.”

வாசுகி அவனை விடுத்து “ராஜீவ், மகேஷ் ..நீங்க சொல்லுங்க..என்ன ப்ரோப்லேம் நடந்தது.” என வினவ அவர்களும் மேலோட்டமாக கூறினர். பாதியில் வந்த துணை ஆசிரியர் கனகவேலிடம் “இது சரி வராது. கனகவேல் சார். யார்கிட்டேயாவது சொல்லி மித்ராவ வர சொல்லுங்க..” என்றார். அவரும் சரி என வெளியே வந்தவர் அங்கிருந்த ஆபீஸ் பாயை அழைத்து கூறிவிட்டு ஏற்கனவே கொடுத்த வேறு வேலையை முடிக்காமல் இருந்ததால் திட்டு விழும் என டென்ஷனில் யோசித்துக்கொண்டே இருந்தவர் மீண்டும் நின்றே தூங்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த அறைக்கு வந்து “குட் மோர்னிங் மேம்..கூப்பிட்டீங்களா?” என கேட்டு நின்றான் மித்ரன் என்றழைக்கப்படும் மித்ராதித்தன்.

 

அனைவரும் விழிக்க குணா “டேய் இவனை யாருடா இப்போ வரச்சொன்னது?” என கிசுகிசுக்க வாசுகி கனகவேலை கேள்வியாக நோக்க அவரோ “பின்ன..கூப்பிடமா..மேடம் செம டென்ஷன்ல இருக்காங்க… மித்ரனிடம் திரும்பி நீ டெடிகேட்டட் ஸ்டூடெண்ட்டா இருக்கலாம்..ஆனா நீ என்ன பண்ணாலும் மேடம் மன்னிப்பாங்கனு நினைக்காத.. சிவாகூட உனக்கு என்ன பிரச்சனை பண்ண நீயே சொல்லிடு..” என மிரட்டுவது போல வினவ

ராஜீவ் மகேஷிடம் “ஐயோ..யாருடா இந்த பைத்தியத்தை உள்ள விட்டது..பிரச்சனை என்னன்னே தெரியாம இவனை கூப்பிட்டுவிட்டு…” என புலம்ப மித்ரன் அனைவரையும் புரியாமல் பார்க்க

வாசுகி தலையில் கைவைத்து “கனகவேல் சார்..நீங்க இங்க தானே இருந்திங்க.. இவங்க என்ன பிரச்சனை யாரை சொன்னாங்கனு கூட காதுல வாங்காம தூங்கிட்டு இருந்திங்களா? நான் கூப்பிட சொன்னது பஸ்ட் இயர் ஸ்டுடென்ட் மித்ராவ.. நீங்க கூப்பிட்டது தேர்ட் இயர் ஸ்டுடென்ட் மித்ரனை… என்ன இது?” என கத்த கனகவேல் குழப்பமாக முழித்துவிட்டு “சா.. சாரி மேடம்..எப்போவுமே சிவாவுக்கும் மித்ரனுக்கும் தானே ப்ரோப்லேம் வரும். அதனால தான் சிவாவை பாத்ததும் மித்ரனை வரசொல்லிட்டேன்.” என அவர் திணற

வாசுகி “ஷ்ஷ்..என பெருமூச்சுடன் சாரி மித்ரன்…ஆள மாத்தி கூப்பிட்டாங்க.. இந்த இயர் பீஸ்க்கு ப்ரோசஸ் எல்லாம் முடிஞ்சதில்ல? இந்த செம் ரிசல்ட்டும் சூப்பரா இருக்கனும். ஐ எம் எக்ஸ்பெக்டிங் யூ (I’m expecting you). ”

மித்ரன் “சுயர் மேம்.. கண்டிப்பா பெஸ்டா பண்றேன். ஸ்காலர்ஷிப் போன மாசமே அப்ளை பண்ணிட்டேன் மேம்.. ஆபீஸ்ல சொல்லிட்டேன். இந்த மந்த் எண்ட் ப்ரோஸஸ் ஆகிடும்..” என

வாசுகி “குட். ஓகே மித்ரன்..நீங்க போங்க..” என புன்னகையுடன் சொல்ல அவனுடன் இருந்த குமார் “ஏதாவது ப்ரோப்லேம்மா மேம்..?”

குணா “இப்போ எதுக்கு அத இவன் கேக்குறான்… முதல இந்த குமார அடிக்கணும்டா. அவசரக்குடுக்கை…”

மகேஷ் “உன்னை விடவா..மேம்கிட்ட வந்து வேகமா சொன்னது யாருடா..?” என குணா ராஜீவை பார்க்க “ஏதாவது பிரச்சனை ஆகட்டும்..வெளில வா..மவனே கொல்றேன் உன்னை..” குணா மீண்டும் தலை கவிழ

குமார் “இல்ல..எப்போவுமே சிவா மேல தானே கம்பளைண்ட் வரும்…ஆனா இப்போ அவன் கம்பளைண்ட் பண்ரான்..அதுவும் ஒரு பொண்ணு மேல.. ஆச்சரியமா இருக்கே.. அதுனால..” என சிவா முறைக்க

வாசுகி “பெருசா எதுவும் இல்ல..ஜஸ்ட் பேசுனா சரி ஆகிடும்.. யூ கேரி ஆன்..” என

மித்ரன் “ஓகே மேம்..தேங்க்ஸ்” என டீசெண்டாக வெளியேற குமார் “டேய் என்ன ஏதுன்னு கேட்டிருக்கலாம்ல..”

மித்ரன் “அது மரியாதை இல்லடா.. விடு..விஷயம் தெரியமாவா போகும்..பாத்துக்கலாம்..”.ஆனா அவனுக்கும் அதே கேள்வி இருந்தது… அந்த பெண் யாரென பார்க்கும் எண்ணமும் இருந்தது..அறையை விட்டு வெளியே வந்தும் ஒரு நொடி நின்றவன் குமார் “என்னடா ஆச்சு.. ”

“இல்லடா..பீஸ் லேட்டாகும்ன்னு சொல்லிட்டேன். சம்திங் ஏதாவது லெட்டர் கேப்பாங்களானு தெரில..இவளோ தூரம் வந்தாச்சே..பக்கத்துல தானே ஆபீஸ் ரூம். சார் வந்ததும் கேட்டுட்டு போய்டலாம்..” என

குமார் “சூப்பர்டா..நீ அப்டியே இந்த வேலைய முடிச்சிட்டு வெயிட் பண்ணு.. நான் இங்க இருந்து என்ன பிரச்சனைனு கண்டுபுடிச்சிட்டு வரேன்.” என எட்டிப்பார்க்க மித்ரன் சிரிப்புடன் திரும்பி நின்றுகொண்டு நோட்டீஸ்போர்டு பார்த்துக்கொண்டிருந்தான்.

மித்ரா அந்த நேரம் உள்ளே சென்றுவிட்டாள்.

வாசுகியிடம் “குட் மோர்னிங் மேம். ஐ ம் மித்ராந்தியா..” என புன்னகையுடன் கூற அவளை ஒரு நிமிடம் மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் “குட் மோர்னிங்.. ம்ம்.. இவங்க யாருனு தெரியுதா?”

மித்ரா “ம்ம்.. சிவில் டிபார்ட்மென்ட் சீனியர்ஸ்..”

“வந்து ஒரு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள சீனியர்ஸ போலீஸ்ல பிடிச்சு குடுப்பேன்னு சொல்லிருக்கே.. ”

மித்து “அப்போ நான் செகண்ட் இயர் போய்ட்டு போலீஸ்ல சொன்னா ப்ரோப்லேம் இல்லையா மேம்..” என மெதுவாக முணுமுணுக்க இருப்பினும் அனைவர்க்கும் காதில் விழுந்தது..கனகவேல் சிரிக்க வாசுகி முறைத்ததும் அமைதியாக

குணா “பாத்திங்களா மேம்..உங்க முன்னாடியே எப்படி பேசுறானு கொழுப்பு..” என மித்ரா “பாத்திங்களா மேம்.. இங்கேயே இப்டி கத்துறாங்களே..தனியா இருக்கும் போது எப்படி பேசிருப்பாங்க…?” என அவளும் சரிக்கு சரியாக நிற்க

வாசுகி “ஓகே..போதும்..அதுக்கு நாளைக்கு காலைல நியூஸ்ல வரும்னு திமிரா வேற சொல்லிருக்க.. அப்டி ஆச்சுன்னா காலேஜ் நேம். இவளோ பேரோட படிப்பு.. உங்க கரீர் என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா… இப்படி ஆளாளுக்கு உங்க சவுரியத்துக்கு பண்ணா என்ன அர்த்தம்?..ப்ரோப்லேம்னா எங்ககிட்ட சொல்லலாம்ல.. நாங்க ஸ்டெப் எடுக்கலேனா நீங்க உங்க இஷ்டப்படி பண்ணுங்க. ” என மிரட்ட

மித்ரா “ஓகே மேம்…நான் பேப்பர்ல போட்றுவேன்னு சொன்னது தப்புனா என் போட்டோவை நோட்டீஸ் போர்ட்ல காலேஜ்ல எல்லா பக்கமும் தப்பா ஒட்டி வெச்சு என்னை இன்சல்ட் பண்ணுவேன்னு இவங்க சொன்னது மட்டும் சரியா?” என பவ்யமாக கேட்க

ராஜீவ் “போட்டுகுடுத்திட்டா..” என பின்னால் நகர

வாசுகி சிவாவை நம்பாத பார்வை பார்க்க மகேஷ் “இல்ல மேம்..நேத்து பஸ்ட் டே சும்மா ஃப்பன்னியா ரேக் பண்ணலாமேன்னு தான்..அப்டி எல்லாம் பண்ணிடுவோமா மேம்..என்ன இருந்தாலும் எங்க ஜூனியர்…அதுக்காக போலீஸ் கேஸ் குடுக்கறதா? அதுவும் இன்னைக்கு காலேஜ்ல வந்து அர்ரெஸ்ட் பண்ணுவாங்கனு சொல்லிருக்கா.. நாங்க சும்மா, விளையாட்டுக்கு தான்மேம் அப்டி பேசுனோம்..அதுக்கு இப்டி உடனே போலீஸ்கிட்ட போவான்னு நினைக்கல..”

 

மித்ரா “நானும் சும்மா தான் மேம் சொன்னேன்..இவங்க கொஞ்சம் மிரட்டுனதும் பயமா இருந்தது. அப்போதைக்கு தப்பிக்கணுமேன்னு நான் விளையாட்டுக்கு தான் அப்டி பயமுறுத்த சொன்னேன்..ஆனா அப்டி எல்லாம் கம்பளைண்ட் பண்ணல மேம்.. என்ன இருந்தாலும் நம்ம காலேஜ் ஸ்டுடென்ட்..சீனியர்ஸ் வேற… ஆனா இவங்க பயந்து போயி உங்ககிட்ட வருவாங்கனு நினைக்கல மேம்..” என அப்பாவி போல வைத்துக்கொள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க

 

வாசுகி “சும்மாவா.. உங்க எல்லாரையுமே சஸ்பெண்ட் பண்ணனும்.. காலைல எனக்கு வேலை இல்லேனு நினைச்சீங்களா? கெட் லாஸ்ட் ஆள் ஆப் யூ.” என கத்த

 

சாரி மேம்..என அனைவரும் வரிசையாக விட்டால் போதுமென வெளியேற சிவா, குணா, மகேஷ், ராஜீவ் அனைவரும் அவளை முறைத்துக்கொண்டு நிற்க அவளும் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு பெருமூச்சுடன் திரும்ப இவர்களை பார்த்து முதலில் விழித்தவள் சட்டென “குட் மோர்னிங்ங் சீனியர்ஸ்” என சாதாரணமாக கூற

ராஜீவ் “எதுவுமே நடக்காத மாதிரி ரியாக்ட் பண்ணாத..”

“வேற அதே பிரச்சனைய புடிச்சுட்டு தொங்க முடியுமா?”

மகேஷ் “எதுக்கு போலீஸ் நியூஸ் அப்டி இப்டினு பொய் சொல்லி மிரட்டுன??”

“நீங்க மட்டும் எதுக்கு போட்டோ மாஸ்க் பண்ணுவேன்னு இன்சல்ட் பண்ணுவேன்னு மிரட்டுனிங்க?”

“அது சும்மா..நேத்து மோர்னிங் நீ எங்களை கலாய்ச்சிட்டு போனமாதிரி இருந்தது.. அதான் கொஞ்சம்..”

“இதுவும் சும்மா தான்..நீங்க எல்லாரையும் கலாய்ச்சிங்க..ஈவ்னிங் என்னையும் மிரட்டுனிங்கல? அதான்… ”

குணா “ஏய்..என்ன பயமில்லாம போட்ச்சா.. பொய் சொன்னா பண்ணமாட்டோம்னு அர்த்தமா? இப்போவே நாங்க சொன்னதை செய்வோம்..பாக்கறியா?”

மித்ராவும் “ஆல்ரெடி வீட்டுல லெட்டர் எழுதி வெச்சிட்டு தான் வந்திருக்கேன்… எனக்கு ஏதாவது ஆச்சு பத்திரமா வீட்டுக்கு போகலேன்னா உண்மையாவே போலீஸ் வரும்.. என்குயரி எல்லாம் கிடையாது..நேரா அர்ரெஸ்ட் ஜெயில் தான் ஓகே வா?” என

 

குணா இன்ஜி தின்றவன் போல விழிக்க மகேஷ், ராஜீவ் அவளின் விளையாட்டை கண்டு சிரிக்க சிவா “ம்ம்.. அப்போ எந்த பிரச்னைவந்தாலும் பாத்துக்கலாம்னு ரெடியா தான் வந்திருக்கியா?”

“அப்டி முழுசா சொல்லமுடியாது.. ஆனா உங்கனால பிரச்சனை வராது..அந்த நம்பிக்கை இருக்கு..உள்ள சொன்னிங்கல…என்ன இருந்தாலும் எங்க ஜூனியர் விட்ருவோமான்னு.. அதுதான் உண்மை … வெளில என்னதான் அடிச்சுக்கிட்டாலும் ஸ்கூல் காலேஜ்ல ஸ்டுடென்ட்ஸ் 99% வெளியாளுங்க மூலமா பிரச்னை வரத அல்லோவ் பண்ணமாட்டாங்க.. கூட இருந்து ஈகோல விட்டுகுடுக்காம சண்டை போட பாப்பாங்களே தவிர அழிச்சு சந்தோசப்படமாட்டாங்கனு அப்பா சொல்லிருக்காரு.. ” என கூற

அவர்கள் அமைதியாக இருக்க மித்ரா தொடர்ந்து “அதான் கொஞ்சம் விளையாடலாம்னு..சாரி சீனியர்ஸ் என அவள் காதை பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்க சும்மா பிராங்க் பண்ணத்தான் அப்டி பண்ணேன்.. கோவிச்சுக்கலேல? பிரண்ட்ஸா இருக்கலாமா சீனியர்ஸ்?”

சிவா புன்னகைக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். “சீனியர்ஸ் எல்லாம் வேண்டாம் பேர் சொல்லியே கூப்பிடு.. ஜஸ்ட் பி பிரண்ட்ஸ்..” அவளும் மகிழ்ச்சியாக தலையசைத்தான்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’

34 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   இவை அனைத்தையும் கவனித்த மித்ரன் அவர் வருந்துவதையும் எண்ணி கவலைகொண்டான்..முன்னொரு நாள் தியாவிடம் பேசியது நினைவுக்கு வந்தது..”அப்போவும் அவரு அம்மாவுக்காக தானே பாக்க வந்தாரு..என்னை அப்டி ஒரு வார்த்தை சொல்லிட்டு போனாரு..எப்படி

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 10’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 10’

10 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அடுத்து வந்த காலங்களில் எப்போதும் போல படிப்பு காலேஜ் அவ்வப்போது சில பேச்சுகள் பிரச்சனைகள் என சாதாரணமாக சென்றுகொண்டிருக்க அடுத்த ஒரு வருடம் கண்ணிமைப்பதற்குள் ஓடிவிட இறுதி செம் வந்தது. ஆனால்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

27 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “ஓகே ஓகே சொல்றேன்..சிவா, நம்ம பிரண்ட்ஸ், அம்மா அப்பா எல்லாரும் மேரேஜ்க்கு சொல்லிட்டே இருந்தாங்க..நானும் மேரேஜ் ஓகே சொன்னேன்..அன்னைக்கு ராத்திரி நான் மாடில தனியா நின்னுட்டு இருந்தேன்..அம்மா வந்து என்கிட்ட பேசுனாங்க..”