Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 53

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 53

நிலவு 53

 

அஸ்வின் மொபைல் அலற அதைப் பார்த்து அழைப்பை ஏற்றான். எதிர் முனையில் கூறிய செய்தியைக் கேட்டு அஸ்வினின் முகம்  சந்தோஷத்தில் மின்னியது.  

 

“மேம் நான் ஒரு ஐந்து நிமிஷத்தில் கூப்பிடுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

“மீருமா இந்தியாவில் பிரசித்தமான பரதநாட்டிய டான்சர் சுந்தராம்பாள் நீ ரியசல் பார்த்ப்போ எடுத்த வீடியோவை உன் மாஸ்டரோட மொபைலில் பார்த்து இருக்காங்க. உன்னோட பாவனை, நயனம் எல்லாமே அவங்களுக்கு திருப்தியா மட்டுமில்லாமல் பிடிச்சு போச்சாம். உன் அரங்கேற்றத்தின் நேரம் அவங்களும் உன் கூட ஆடனும்னு சொன்னாங்களாம்” என்று கூற

 

மீரா துள்ளிக் குதித்து எழுந்தாள். 

 

“அச்சு எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்லை. அவளோ சந்தோஷமா இருக்கேன், ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

 

“உன்னால் முடியுமா டி? இந்தக் காலை வச்சிட்டு?” என்று கேட்க,

 

“எப்போ அவங்க டேட் கொடுத்து இருக்காங்க?” என்று கேட்க,

 

“இன்னும் ஐந்து நாளில்” என்று கூற 

 

“அச்சு அதற்குள்ள நான் சரியாகிருவேன்” என்று கூற 

 

“சரி டி, நான் உன் மாஸ்டரிடமும், ஹோல் ஒன்றும் புக் பன்னிறேன்” என்று மாஸ்டரிடம் அழைத்துச்  சொல்லி, பெரிய ஹோலொன்றையும் புக் செய்தான்.

 

பின் அறையின் வாயிலில் நின்று அனைவரையும் கத்தி அழைக்க அனைவரும் பதறிக் கொண்டு ஓடி வந்தனர்.

 

“யேன்டா அறிவுகெட்ட நாயே நானே கஷ்டபட்டு என் பொன்டாட்டியை ஓரளவு சமாதானப்படுத்தி இருந்தேன்,கடைசியில் கெடுத்துட்டியே டா” என்று பொரிந்து தள்ளினான் கவின்.

 

“என்னாச்சு என்னாச்சு” என்று வினோ படிகளில் ஓடி வர கால் இடறி விழ அவன் பின்னே ஓடி வந்த ஹபீசும் சேர்ந்து விழ இருவரும் கட்டிப்பிடித்து உருள ஷ்ரவன் அவர்களின் பின்னால் வந்தால் அவனும் அவர்களுடன் சேர்ந்து உருண்டான்.

 

இவர்கள் இட்ட சத்தத்திற்கு அறையில் இருந்து வெளியே இவர்கள் மூவரும் இருந்தக் கோலத்தைப் பார்த்து சிரித்து விழுந்தனர்.

 

“எருமை ஷ்ரவன் எந்திரிடா, என்னமோ உன் ஆளு மேலே படுத்து இருக்கிறது போல படுத்து இருக்கிற” என்று வினோ கத்த

 

“இல்லை வினோ அவன் உங்களை கீது நினைச்சிட்டான்” என்று இரகசிய குரலில் ஹபீஸ் கூற

 

“கீதா” என்று வினோ கத்த ஷ்ரவன் அடித்துப் பிடித்து எழுந்தான். அதன் பின் ஹபீசும், வினோவும் எழுந்தனர்.

 

“அஸ்வின் உனக்கு அறிவே இல்லையா டா, நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆக இல்லை” என்று திட்டினான் வினோ.

 

“எதுக்கு டா காட்டு கத்து கத்துன?” என்று இந்து கேட்க,

 

‘ஈஈஈ’ என்று இழுத்து வைத்தவன், மீராவின் மாஸ்டர் கூறிய அனைத்தையும் கூற அனைவருமே சந்தோஷத்தில் மிதந்தனர்.

 

“அப்போவே ஆரவ் சொன்னான், இதிலும் ஏதாவது நல்லது இருக்கலாம். அதே போல இவளோ பெரிய வாய்ப்பு கிடைச்சு இருக்கு” என்று கிறு கூற

 

“உன் புருஷன் புராணம் பாட போறியா?” என்று மாதேஷ் சலிக்க,

 

“சே சே, அந்த வேலை எல்லாம் நமளுக்கு செட் ஆகாது” என்று கூற ஆரவ் அவளை முறைக்க அங்கிருந்து அறைக்கு ஓடினாள் கிறு.

 

பின் அனைவரும் உடனடியாக மும்பை கிளம்ப தயாராகினார்கள்.

 

அடுத்த நாள் மும்பையை அடைந்தனர். மீராவும் தனது பயிற்சிகளை ஆரம்பித்தாள். இவ்வாறு மூன்று நாட்கள் செல்ல அரங்கேற்றத்திற்கு முன்னைய தினம் சுந்தராம்பாளும், மீராவும் ஒன்றாக ஆடி ஒத்திகை பார்க்க அனைவருமே பிரம்மித்து நின்றனர். இருவரிலுமே யாரைப் பார்ப்பது என்று எண்ணி.

 

அடுத்த நாள் அரங்கேற்றம் நடக்க அனைவரும் தயாராகினர். மீரா முழுமையாக தயாராகி வர தேவதையைப் போல் இருந்தாள். பின் அரங்கேற்றம் இனிதே நிறைவடைய மீராவிற்கான வாழ்த்துக்களும் குவிந்தது. அஸ்வின் தன்னவளின் கனவு நனவாகியது அவள் எதிர்பாராத மிகப்பெரிய வாய்ப்புடன் என்ற நிம்மதியில் இருந்தான்.

 

அன்றைய தினம் அனைவருமே சந்தோஷத்தில் திளைத்து இருந்தது.  பின் மும்பையில் இருந்து அனைவரும் தத்தமது ஊரிற்கு கிளம்பினர். கிறுவிற்கு சென்னையில் பயிற்சி இருப்பதால் அவள் நண்பிகளுடன் சென்னையை நோக்கிப் புறப்பட ஆரவும் சென்னையில் வேலை இருப்பதால் கிறுவுடன் சென்றான்.

 

இவ்வாறு நாட்கள் செல்ல நண்பிகள் நால்வரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இடையிடையில் ஆரவ் டெல்லிக்கு சென்று தன் வேலைகளை முடித்தான். ஹபீசிற்கும், ஜெசீராவிற்கும் இன்னும் இரண்டு தினங்களில் நிகாஹ் என்று முடிவு செய்யப்பட நிலையில் அனைவரும் ஜெசியின் வீட்டிற்குச் சென்றனர். பெரியவர்கள் நிகாஹ் தினமன்று வருவதாகக் கூறிவிட்டனர்.

 

நிகாஹ் தினமன்று…

 

“மச்சான் உன் லவ் சக்சஸ் ஆச்சு, நீ எல்லாம் இராசிகாரன்டா, உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு டா” என்றான் ஷ்ரவன்.

 

“ஆமா வினோ உன் லவ்வில் என்ன நடக்குது?” என்று ஹபீஸ் கேட்க,

 

“அந்த சோக கதையை எதுக்குடா கேட்குறிங்க? அவளை ஒரு முறை பார்க்கும் போது லவ்வை சொன்னால், அடுத்த முறை அப்படி ஒன்னு நடக்கவே இல்லை அப்படிங்குறது போல பேசி குழப்பினேன் டா, குழம்பினை குட்டையில தான் மீன் பிடிக்க முடியும், ஆனால் அவ குழம்பினாளா இல்லையான்னு தெரியாமல் நான் குழம்புறேன்” என்று கூற மற்ற இருவரும் சிரித்தனர்.

 

“என்ன டா சிரிக்கிறிங்க?” என்று கேட்டுக் கொண்டே அஸ்வின், ஆரவ், கவின், மாதேஷ் உள்ளே நுழைந்தனர். 

 

“நீ மாப்பிள்ளை ஹபீஸ், இப்படி சிரிக்கிற?” என்று கவின் கேட்க,

 

“யேன் மாப்பிள்ளை சிரிக்கக் கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?” என்று ஹபீஸ் கேட்க,

 

“சட்டம் இல்லை. பொண்ணு உன் சிரிப்பிற்கு பயந்து கல்யாணம் வேணான்னு சொல்லிட்டால், நீ ஒன்டி கட்டையா இருக்கனும் அதான்” என்றான் அஸ்வின்.

 

“என் கல்யாண நாளில் ஏதாவது ஒரு நல்ல வார்த்தை எவனாவது பேசுறிங்களா” என்று ஹபீஸ் திட்ட

 

“சரி மச்சான் விடு பையன் ரொம்ப பாவம், இன்றைக்கு கல்யாண நாள் கொஞ்சம் விடலாம்” என்று ஆரவ் கூற 

 

“உனக்காக மச்சான்” என்றான் மாதேஷ்.

 

இவ்வாறு ஜெசி,ஹபீசின் திருமணம் இந்தச் சிறிய கலாட்டாக்களுடன் இனிதே நடந்தேறியது. 

 

சிறியவர்கள் ஹபீசின் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பெண்களுக்கு காலையில் இருந்து செய்த வேலைகளின் களைப்பால் தத்தமது துணைகளின் தோளில் சாய்ந்து இருந்தனர். வினோவின் தோளில் சாய்ந்து சௌமி அதிக களைப்பின் காரணமாக உறங்கினாள்.

 

கவினின் தோளில் சாயந்துக் கொண்டு இருந்த ஜீவி அப்படியே மயங்கி அவன் மடியில் விழுந்தாள். 

 

“ஜீவி” என அனைவரும் பதற 

 

அவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டனர். அங்கிருந்த ஒரு முதியவர் அவள் கையை எடுத்து நாடித்துடிப்பைப் பார்த்து புன்னகைத்தார்.

 

“இந்த பொண்ணு அம்மாவாக போறா” என்று கூற அங்கே இரட்டைச் சந்தோஷம் மின்னியது.

 

“மச்சான் ஜூனியர்ஸ் எல்லாருமே வர ஆரம்பிச்சிட்டாங்க டா” என்று மாதேஷ் கூற

 

“நம்ம ஜூனியர்சையும் நம்மளை போல திக் பிரன்சா தான் வளர்க்கனும்” என்றான் அஸ்வின்.

 

“கண்டிப்பா மச்சான், நம்மளை விட நல்ல நண்பர்களா, நல்ல குணம் இருக்கிறவங்களா வளர்க்கனும்” என்றான் கிறுவைப் பார்த்து. கிறு நாணத்தில் சிவந்து தலையைக் குனிந்துக் கொண்டாள்.

 

அடுத்த நாள் அனைவரும் சென்னையை நோக்கி பயணித்தனர்.  அங்கு வருகைத் தந்த அடுத்த நாள்

 

“கண்ணா நீ கண்டிப்பா போய் ஆகனுமா? நான் வேணுன்னா உன் கூடவே டெல்லிக்கு வரேனே” என்று கெஞ்ச

 

அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன்

 

“இங்க பாரு டி, உன்னை ஒரு இன்டர்நெஷனல் நெட்போல் பிளேயராக பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை டி, உனக்கு நெட்போலில் இருந்த லவ் எங்கே?” என்று கேட்க,

 

“கண்ணா நான் அதைவிட என் புருஷனை அதிகமா காதலிக்கிறேன், சரி உன் கனவை நான் நிறைவேற்றி வைக்கிறேன், பட் நான் ஒன்னு கேட்டால் அதை மறுக்காமல் செய்யனும்” என்றாள்.

 

” புரொமிஸ். பட் நீ ஏதோ பொடி வைத்து பேசுற, பார்த்துக்கலாம்” என்று கூற கிறு புன்னகைத்து அவனுக்கு விடைகொடுத்தாள்.

 

கிறு கேட்கப் போவதை தெரிந்து இருந்தால் நிச்சயமாக வாக்கை கொடுத்து இருக்கமாட்டான்.

 

கிறுவின் பயிற்சிகளும் நன்றாகவே சென்றது. நெஷனல் லெவல் மெர்ச்சும் அவர்களை நெருங்கிக் கொண்டு இருக்க, வினோவும் சௌமியாவும் மனதளவில் ஓரளவு நெருங்கிக் கொண்டு இருந்தனர்.

 

இதற்கிடையில் மீரா, அஸ்வினின் நிச்சய தினமும் வந்தது. அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் தொழில் அதிபர்கள், சமூகத்தின் பல முக்கிய புள்ளிகள், நண்பர்கள் குடும்பத்தினர் அவர்களின் நிச்சயத்திற்கு வருகை தந்து இருந்தனர்.

 

மீரா சிகப்பு, வெள்ளை நிற லெகஹங்காவில் இருக்க அஸ்வின் சிகப்பு, வெள்ளை நிறத்தில் கோரட் சூட் அணிந்து இருந்தான். சௌமியா ஒரு ஓரமாக நின்று இருக்க,

 

“பூஸ் குட்டி, இந்த புளூ லெங்காவில் சூப்பரா இருக்கடி” என்று கூற அவள் நாணத்தில் தலைக் குனிய அவன் அவள் முகத்தை அவசரமாக நிமிர்த்தி செல்பி எடுத்தான். 

 

இவனின் தீடீர் செயலில் அதிர்ந்தவள் அவனின் தோள்களில் அவனுக்கு வலிக்காமல் அடித்தாள்.

 

“யாராவது பார்க்க போறாங்க பூஸ் குட்டி” என்று அவன் கூற

 

“யாரு பார்த்தால் எனக்கு என்ன?” என்று சௌமி கேட்க,

 

“நமளை லவர்ஸ்னு நினைப்பாங்க, அப்போ உனக்கு பரவால்லியா?” என்று கூற அவன் முகத்தைப் பார்த்தாள்.

 

அவன் புருவத்தை உயர்த்தி கேட்க,

சௌமி புன்னகைத்தாள். இதை தாத்தா பார்த்தார். 

 

கிறு தண்ணீர் குடிக்கச் செல்ல ஒரு சுவரின் பின்னிருந்து ஒரு கை அவளை இழுத்துக் கொண்டது. 

 

“கண்ணா நிறைய பேர் இருக்காங்க” என்று அவள் கூற

 

“நீ என்னை பார்க்கவே மாட்டேங்குற, நேத்து ராத்திரியே உன்னை பார்க்க ஆசையா வந்தால் நீ தூங்கிட்ட, சரி காலையில் பேசிக்கலாம்னு பார்த்தால் கண்டுக்கவே மாட்டேங்குற, அவளோ வேலையையும் நீ மட்டும் இழுத்து செய்கிறாய்” என்று ஆரவ் சிறு குழந்தை போல் முறையிட

 

“கண்ணா, நம்ம கல்யாணத்தை நான் முழுசா என்ஜோய் பன்னவே இல்லை. அதுமட்டும் இல்லை இது என் அண்ணன், மீருவோட நிச்சயதார்த்தம், கிரேன்டா இருக்கனும்” என்று கூற

 

“சரி நான் நைட்டுக்கு இதை பற்றி பேசலாம்” என்று அவள் கைபிடித்து அழைத்து வந்த சிறிது நேரத்துல நிச்சயதார்த்தம் ஆரம்பமானது.

 

நிச்சயதார்த்த பத்திரிகை வாசிக்கப்பட்டு நிச்சயத்தட்டும் மாற்றப்பட்டது. பின் இருவரின் கைகளிலும் மோதிரங்கள் வழங்கப்பட்டு மாற்றப்பட்டன.

 

பின் சொந்தங்கள், தெரிந்தவர்களுடன் பேச ஆரம்பித்தனர். கிறு தன் தந்தையின் நண்பன் ஒருவரின் குடும்பத்தினருடன் பேசிய பிறகு மீராவை நோக்கிச் செல்ல,

 

“என்ன கிறுஸ்திகா அரவிந்நாதன், என்னை மறந்திட்டிங்க போல” என்ற அவள் பின்னிருந்த ஒரு குரல் கேட்க,

 

அந்தக் குரல் காதுவழியாக மூளைக்குச் சென்று அக்குரலுக்கு சொந்தமானவரை படம்பிடித்து காட்ட அவள் உதடுகள் ” அதர்வா” என்று உச்சரித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 23யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 23

வீடு வரை மயங்கிய கிறுவை அஸ்வின் கையில் ஏந்தி வந்தான். வீட்டில் உள்ளவர்கள் கிறுவின் நிலையைக் கண்டு பதறினர். அஸ்வின் அவள் சாதாரண மயக்கத்தில் இருப்பதாகக் கூறவே மற்றவர்கள் நிம்மதியடைந்தனர். அஸ்வின் கிறுவை அவளது அறையில் விட்டான். மீரா அவளுடன் இருக்க,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1

அறிமுகம்   அவரை நோக்கி, அந்த சித்தர் கூறினார்.    “உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது. அவளுக்காக இவன் இரவாக மாறி அவளை

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 70 (final)யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 70 (final)

நிலவு 70   பதின் மூன்று வருடங்களுக்குப் பிறகு…..   டெல்லியில்…..   கிறு சமைத்த உணவுகளை மேசையின் மேல் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.    ஆரவ், “கண்ணம்மா, ஏதாவது உதவி பன்னட்டுமா?” என்று பின்னிருந்து அணைக்க,   கிறு”