Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 47

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 47

நிலவு 47

 

மீரா, அஸ்வின் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பணியாள்,

 

“மேம் உங்களை அங்கே வர சொன்னாங்க” என்று கூற

 

“அச்சு அவளுங்க தான் என்னை கூப்பிடுறாங்க  நான் போய் என்ன என்று பார்த்துட்டு வரேன்” என்று அங்கிருந்து நகர்ந்தாள். 

 

அவள் பார்ட்டி ஹோலிற்குச் செல்லும் வரண்டாவில் நடக்கும் போது அங்கு எண்ணெய் கீழே கொட்டிக் கிடப்பதை கவனிக்காமல் நடந்த மீரா அதில் கால்வைத்து கீழே விழும் போது

 

“அம்மா” என்ற வழியின் அலறலுடன் கீழே விழுந்தாள். 

 

அதே நேரம் மற்றவர்களும் அங்கே வர மீரா எழ முடியாமல் இருப்பதைக் கண்ட அஸ்வின் அருகில் சொல்லும் போது, எண்ணையை கவனித்தவன் அவளைப்  பூப்போல் கையில் ஏந்திக் கொண்டான்.

 

“அச்சு, என்னால் காலை அசைக்க முடியல்லை டா, வலிக்குது டா” என்று அவன் சர்ட் கொலரைப் பற்றி அழுதாள்.

 

“இல்லை டி ஒன்னும் இல்லை, ஒன்னும் ஆகாது” என்று அவளை ஹொஸ்பிடலிற்கு அழைத்துச் செல்ல அவர்களுடன் அருண், தேவி சென்றனர்.

 

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த தீப்தியின் முகம் அவள் அழுததில் பிரகாசித்தது.

 

“மேனேஜர்” என்று கிறு கத்திய கத்தலில் அக்கட்டிடமே அதிரந்தது. அனைவரின் முன்னிலையிலும் காளியாய் நின்று இருந்தாள் கிறு.

 

அவர் பயத்தில் ஓடி வர, 

“மேம் ” என்று பயந்துக் கொண்டு கூற

 

“இங்க எப்படி எண்ணெய் வந்தது?” பெண் சிங்கமாய் உறும

 

“தெரியல்லை மேம்” என்று கூறும் போதே,

 

“உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறாங்க? உன்னை எல்லாம் எதுக்கு வேலைக்கு வச்சிருக்காங்க?” என்று கத்த

 

“ஏதோ தெரியாமல் நடந்துருச்சி மேம்” என்று கூறும் போது

 

அவர்கன்னத்தில் கிறு அரைந்ததில் இரண்டடி பின்னே சென்று நின்றார்.

 

“பொய்யா சொல்லுற? நடு ஹோலில் எண்ணெய் கொட்டி இருக்கிறது எப்படின்னு உனக்கு தெரியாது. உண்மையை சொல்ல இல்லை இங்க நடக்குறது வேற?” என்று கர்ஜிக்க

 

“உண்மையாகவே தெரியாது மேம்” என்று கூற

 

“கார்ட்ஸ்” என்று கத்த அவர்களின் கார்ட்ஸ் நின்று அவனை பிடித்துக் கொண்டனர்.

 

“கொஞ்ச பேர் சிசிடிவியை பாருங்க யாரு இதை பன்னான்னு?” என்று கூற

 

அவர்கள் சென்று பார்க்க “மேம் இந்த ஒரு மணி நேரமாக சிசிடிவி புடேஜ் டெலீட் ஆகி இருக்கு” என்று கூற

 

மேனேஜரை முறைக்க அவர் நடுங்கி நின்றார்.

 

“இங்கே இருந்து ஒருத்தரும் வெளியே போக கூடாது பார்த்துக்கங்க” என்று கூற கார்ட்ஸ் சென்று மெய்ன் கேட்டை இழுத்து மூடினர்.

 

“இப்போ எல்லாருக்கும் ஒரு சான்ஸ் கொடுக்குறேன், நீங்க யாரு இதை பன்னிங்கன்னு சொன்னிங்கன்னா உங்களுக்கு நல்லது. நானா கண்டுபிடிச்சிட்டன்னா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” என்று அனைவரின் முன்னிலையிலும் எச்சரித்து இறுதியாய் அவள் பார்வை தீப்தியிடம் நின்றது.

 

அவள் கிறுவைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைக்க, 

 

“எவிடன்ஸ் இல்லைன்னு தப்பிக்கலாம்னு மட்டும் நினைக்காதிங்க, நான் நினைச்சால் என்ன வேணுன்னாலும் பன்ன முடியும் பைவ் மினிட்ஸ் டைம் தரேன், அதற்குள்ள நீங்களா சொன்னால் நல்லா இருக்கும்” என்று அருகில் இருந்த கதிரையில் காளி தேவியாய் அமர்ந்தாள்.

 

ஐந்து நிமிடங்களாகியும் அனைவரும் அமைதி காக்க, 

 

“அப்போ யாரு பன்னன்னு சொல்ல போறது இல்லை? சரி இப்போ என் முறை” என்றாள்

 

“ஷ்ரவன்” என்று கத்த அதில் தன்னிலை அடைந்தவன் “ஏ.கே” என்றான் 

 

“எனக்கு ஹபீஸோட நம்பர் இப்போ வேணும்” என்று கூற அவன் ஆரவைப் பார்த்தான்.

 

“என்ன உங்க எம்.டி சொன்னால் தான் கொடுப்பிங்களா? அவன் மும்பைல தான் இருக்கான்னு எனக்கு தெரியும், என் டைமை வேஸ்ட் பன்னாமல் கொடுக்க முடியுமா? முடியாதா?” என்று கத்த

 

ஆரவ் கண்களைக் காட்ட நம்பரைக் கூறினான். அதை டயல் செய்தவள்,

 

“எங்க இருக்க நீ?” என்று கேட்க,

 

“யாரு நீங்க?” என்று ஹபீஸ் கேட்க,

 

“அப்போ நான் பேசுறது யாருன்னு உனக்கு தெரியாது?” என்று கேட்க,

 

“ஏய் மின்னல், எத்தனை வருஷத்துக்கு அப்பொறமா பேசுற?….” என்று அவன் பேசிக் கொண்டே செல்ல,

 

“நிறுத்து ஹபீஸ் இப்போ பழையதை பேச நேரம் இல்லை. உனக்கு இன்னும் இரண்டு நாளில் அகோர்மா குரூப்ஸ  என்ட் கம்பனியில் வேலை ரெடியா இருக்கும். அதற்கு முன்னாடி நீ எனக்காக ஒரு வேலை பன்னனும், முதலில் நீ *** பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

 

‘என்னடா இது அமைதியா பேசுற இவ என்னமோ இராணி போல ஓடர் பன்றா, பரவால்லை ரொம்ப நாளைக்கு அப்பொறமா பார்க்க போறோம், சீக்கிரமா போலாம்’ என்று தயாராகி வந்தவன், பைவ் ஸ்டார் ஹோட்டலிற்கு பைக்கைக் கிளப்பினான்.

 

“என்ன மேனேஜர் சேர் அவனுக்கு வேலை கிடைச்சிரும் இல்லையா?” என்று கேட்க, அவர் அரவிந்தைப் பார்க்க,

 

“எங்க அங்கே பார்க்குறிங்க? நானும் அந்த கம்பனியோட ஷெயார் ஹோல்டர் தான். கிடைக்குமா கிடைக்காதா?” என்று கேட்க,

 

அரவிந் நாதன் ஆம் என்க, அவரும் ஆம் என்றார்.

 

“இன்னொரு விஷயம் ரெகமன்டேஷன்ல வந்தான்னு  அவன் கிட்ட வாலாட்டலாம்னு  நினைக்காதிங்க, இது அவனுக்கு பதினொராவது கம்பனி, தேவைப்பட்டால் உங்களை கீழ தள்ளிவிட்டு மேலே போயிட்டே இருப்பான். மற்றைய கம்பனிகளுக்கு அவனோட அருமை தெரியல்லை. எங்க கம்பனிக்கு அவனோட திறமையை பயன்படுத்திக்கங்க” என்று எச்சரித்தாள்.

 

அஸ்வினிற்கு அழைத்து அனைவரையும் இங்கே அழைத்து வருமாறு கூறிய பிறகு மேலும் சில நபர்களுக்கு அழைத்து ஏதோ கூற பத்து நிமிடத்தில் ஒரு வருகை தந்து அவள் கையில் ஏதோ வழங்கிவிட்டுச் சென்றார். அதே நேரம் ஹபீசும் வந்து சேர ஷ்ரவனும், ஹபீசும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு, கிறு இருக்கும் இடத்திற்கு வந்தனர். கிறுவைப் பார்த்தவன் சிலையாய் நின்றான். சிறு பிள்ளையாய் இருந்தவள் இன்று தேவதையாய் முன் நின்றாலும் கோபமே உருவாய் இருக்க அவன் மனம் கவலைக் கொண்டது.

 

அவன் நன்றாக அறிந்தது, கிறு சிறு சிறு விடயங்களுக்கு கோபப்படுபவள் அல்ல என்று.

 

“ஏ.கே” என்று பேச அவனைப் பார்த்வள் கண்கலங்கி நின்றாள். அவன் கண்களைச் சிமிட்ட புன்னகைத்தவள்,

 

“ஹபீ, இங்க இருக்கிற கெமராவோட ஒன் அவரா புடேஜ் டெலீட் ஆகி இருக்கு. எனக்கு அது வேணும், உனக்கு எவளோ டைம் வேணும்?” என்று கேட்க,

 

“ஜஸ்ட் டுவென்டி மினிட்ஸ் மின்னல்” என்றான்  கண்சிமிட்டி.

 

பின் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். சில கருவிகளை எடுத்தவன், தனது லெப்பைக் கொண்டு சிஸ்டத்தை ஹெக் செய்து இருபது நிமிடத்திற்கு முன்னே டெலீட் ஆனதைப் பெற்றுக் கொண்டான்.

 

அதை புரொஜெக்டர் மூலம் அனைவரும் பார்க்கும்படிச் செய்தான். 

 

அதில் தீப்தி மேனேஜருடன் பேசுவது போலவும், பின் ஒரு பணியாளிடம் ஏதோ கூறுவது போலவும் இருந்தது. பின் மேனேஜர் ஏதோ ஒன்றை தீப்தியின் கையில் வழங்க அவள் மீரா வரன்டாவிற்கு வரும் முன் அதை கொட்டுவது போலவும் இருந்தது. 

 

“என்ன தீப்தி? எதுக்கு இப்படி முழிக்கிறிங்க?” என்று கேட்கும் போதே மீரா, அஸ்வினை கை தாங்கலாக வைத்துக் கொண்டு நடக்க கிறுவின் கண்கள் கண்ணீரைச் சுரந்தன. 

 

“இதற்கு மேலே ஏதாவது ஆதாரம் வேணுமா?” என்று அவளை நெருங்கினாள்.

 

“ஆமா, நான் தான் பன்னேன், யேன்னா நான் அவளை அடியோடு வெறுக்குறேன், என் அஸ்வினை என் கிட்ட இருந்து அவ தான் பிரிச்சா, அதனால தான் இப்படி பன்னேன்” என்று கூறும் போது

 

கிறுவின் கைகள் அவள் கன்னத்தை பதம் பார்க்க, அதன் வீரியம் தாங்காமல் சுருண்டு விழுந்தாள் தீப்தி. கார்ட்சைப் பார்க்க அதைப் புரிந்துக் கொண்டவர்கள் அவளைப் பிடித்துக் கொண்டனர். பின் மேனஜரிடம் வந்தாள்.

 

“இப்போ உண்மையை சொல்றிங்களா? இல்லை” என்று கை ஓங்கும் போது, அதில் பயந்தவர்

 

“இல்லை மெடம் நான் சொல்லிடுறேன்” என்று கூறினார்.

 

“அவங்க என் கிட்ட எண்ணெய் கேட்டாங்க, நான் முடியாதுன்னு சொன்னேன், அப்பொறமா எனக்கு ஐம்பதாயிரம் கொடுத்தாங்க. நானும் பணத்துக்கு ஆசைபட்டு எண்ணெய் கொண்டு வந்து கொடுத்தேன் அவளோ தான் எனக்கு தெரியும்” என்று கூற

 

தீப்தியைப் பார்க்க அவளாகவே கூற ஆரம்பித்தாள்.

 

“இவளோட கனவே அரேங்கேற்றம் நல்லபடியா நடக்கனும்னு தான். அதை நான் களைக்கனும்னு நினைச்சேன் அதான் எண்ணெயை கொட்டி அவளை விழ வச்சேன், ஒரு வெயிடர் கிட்ட மீராவை ஹோலிற்கு ஒரு பொண்ணு கூப்பிடறான்னு கூப்பிட சொன்னேன். அதே போல அவனும் பன்னான்” என்று கூறி முடிக்க

 

“அப்போ நீ இவளோ தான் பன்ன?” என்று கிறு கேட்க,

 

“ஆமா வேறு எதுவும் பன்ன இல்லை” என்றாள்.

 

“எங்க கம்பனிக்கு வந்து எங்க கம்பனியோட டீடெய்ல்சை திருட வர இல்லையா?” என்று கேட்க,

 

இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 

 

“என்ன பார்க்குற? ஹபீஸ் வர முன்னாடி ஒருத்தர் வந்தாரே அவரு ஒரு டிடெக்டிவ். உன்னை இங்கே பார்க்க முன்னாடி முதல் முறையாக நான் வீடியோ கோலில் தான் பார்த்தேன், பார்க்குறப்பவே எனக்கு உன் மேலே சந்தேகமா இருந்தது. அதான் உன்னை உனக்கு தெரியாமல் போடோ எடுத்து அனுப்பிட்டேன், உன்னை பற்றிய டீடெய்ல்சை எனக்கு கொண்டு வந்து கொடுத்துட்டு போறாரு” என்று கிறு கூறும் போது தீப்தியின் முகத்தில் ஈஈஈ ஆடவில்லை.

 

அங்கே கிறு அழைத்திருந்த பொலிசாரால் அவள் தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்யபட்டாள். இந்த ஹோட்டல்  உரிமையாளர் மூலம் அந்த மேனெஜர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 

பின் மீராவிடம் அருகில் வந்தவள் 

 

“ரொம்ப வலிக்குதாடி?” என்று கேட்க,

 

“கொஞ்சமா” என்றாள்.

 

“உன் அரங்கேற்றம்” என்று கிறு கவலையாய் கேட்க

 

“இப்போ இல்லைன்னா என்ன டி? கால் சரியானதுக்கு அப்பொறமா பன்னலாம்” என்று கண்ணடிக்க அவளை அணைத்துக் கொண்டாள்.

 

ஹபீசிடம் வந்தவள்” என்ன டா அப்படி பார்க்குற?” என்று கேட்க,

 

“நீ இந்த அளவிற்கு கோபப்பட மாட்டியே? அது மட்டும் இல்லாமல் நீ அரவிந் சேரோட பொண்ணுன்னு எதற்கு மறைச்ச?” என்று ஹபீஸ் கேட்க,

 

“இதுவரைக்கு நீங்க எல்லாருமே பார்த்தது கிறுஸ்திகாவை தான். இன்றைக்கு தான் கிறுஸ்திகா அரவிந்நாதனை பார்த்து இருக்கிங்க” என்றாள்.

 

மாதேஷ் “சூப்பர் வுமன் டீ நீ, நீ இவளோ ஸ்மார்டா மூவ் பன்னுவன்னு எதிர்பார்க்கவே இல்லை. அந்த ஆம்பளையே நீ அடிச்ச அடியில் பெலென்ஸ் தவறிட்டான்னா பார்த்துக்கயேன்” என்று கூற

 

கவின்,” நீ மட்டும் இன்னும் நெட்போல் விளையாடி இருந்தால் உன் முன்னாடி யாருமே பிசிகலா மோத முடியாமல் போயிருக்கும்” என்றான்.

 

கிறு,”எனக்கு இப்படி இருக்கிறதே ஒகே தான். நான் இன்னும் பிசிகலா ஸ்ட்ரோங்கா இருக்கனும்னு ஆசை இல்லை. அதாவது எனக்கு நெட் போல் விளையாட ஆசையும் இல்லை விளையாடவும் மாட்டேன்” என்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 35யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 35

நிலவு 35   “நிறுத்துங்க” என்ற கர்ஜிக்கும் குரல் கேட்டது.   ஆரவ் அனைவரின் முன்னிலையில் ருத்ரமூர்த்தியாக நின்று இருந்தான்.    ” என்னை பார்த்தால் இப்போவும் ஏமாளி போல இருக்கா? உங்க நடிப்பு எல்லாம் என் கிட்ட காட்டாதிங்க” என்றான்.

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24

நிலவு 24   மகா பூஜைக்கு முன்னைய நாள் வீட்டில் அனைவரும்  கோயிலை நோக்கிச் சென்றனர். அனைவரும் சாமி கும்பிட்டு வெளியேறும் போது சித்தர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். அதில் ஒவ்வொருவராக சென்று ஆசிர்வாதம் பெறச் சென்றனர்.    அவர் அருகில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 22யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 22

வீடு வரை மயங்கிய கிறுவை அஸ்வின் கையில் ஏந்தி வந்தான். வீட்டில் உள்ளவர்கள் கிறுவின் நிலையைக் கண்டு பதறினர். அஸ்வின் அவள் சாதாரண மயக்கத்தில் இருப்பதாகக் கூறவே மற்றவர்கள் நிம்மதியடைந்தனர். அஸ்வின் கிறுவை அவளது அறையில் விட்டான். மீரா அவளுடன் இருக்க,