Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 46

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 46

நிலவு 46

 

அன்று மாலை வேளையில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிஸ்னஸ் பார்ட்டி ஆரம்பமானது. அதில் இந்தியாவின் முதல் இருபது இடத்தில் உள்ள அனைத்து கம்பனிகளின் எம்.டி, சி.இ.ஓ  மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். இது வழமையாக நடக்கும் பார்ட்டி என்றாலும் இந்த முறை இதை அகோமா குரூப்ஸ் என்ட் கம்பனி முன்னின்று ஏற்பாடு செய்தது.

 

கெஸ்ட் ஹவுஸில், 

 

“டேய் நாங்க பொண்ணுங்களே ரெடியாகி வந்துட்டோம் டா, நீங்க என்னடா புடிங்கிட்டு இருக்கிங்க?” என்று கிறு கத்த

 

“ஏய் நாங்க உன்னை விட வயசுல பெரியவங்க டி, கொஞ்சமாவது மரியாதை கொடு, சரி மரியாதை வேணாம், நல்ல வார்த்தையாவது பேசு மா” என்றான் கவின்.

 

கிறு” இதை எத்தனையோ முறை என் கிட்ட சொல்லி இருக்கடா, கேட்குற எனக்கே  இந்த டயலோக் சலிச்சுரிச்சு, சொல்கிற உனக்கு சலிக்க இல்லையாடா?” என்று கேட்க,

 

“மச்சி, அவனுக்கு சலிக்கிறது இல்லை டி பிரச்சனை, அதை தவிற அவனுக்கு வேறு டயலோக் தெரியாது. அதான் உண்மை” என்றாள் மீரா.

 

இதைக் கேட்டவர்கள் சிரிக்க, கவின்  அவளைப் பாவமாக பார்த்து “யேன்டி உன்னை ஏதாவது சொன்னேனா?, என் இமேஜை ரொம்ப டேமேஜ் பன்றடி” என்று கூற

 

“உனக்கு இமேஜ் இருக்காடா?” என்று தர்ஷு கேட்க,

 

“நான் தான் பேர்ஸ்ட் தயாராகி கீழே வந்தேன் அதற்காக என்னை வச்சு நல்லா ஓட்டுறிங்கடி, நான் போறேன்” என்று மீண்டும் அறைக்குள் செல்ல

 

“ஜீவி உனக்கு அவோர்ட் கொடுத்தே ஆகனும் இவன்  கூட வாழுறதற்கு” என்று கிறு சிரிக்க மற்றவர்களும் சிரித்தனர்.

 

அதோடு ஆண்கள் ஐவரும் அறையில் இருந்து வெளிவர பெண்கள் அதிரந்து பார்த்தனர். ஏனென்றால் அவர்கள் அணிந்து இருந்த புரொக் சல்வார்களின் அதே நிறத்தில் அவர்கள் சேர்ட் அணிந்து பிளேஸர் அணிந்து இருந்தனர்.

 

“அடேய் அஸ்வின் நீ எனக்கு தூரோகம் பன்னிட்ட, நீ என் சேர்ட்டை கேட்கும் போதே உஷாராகி இருக்கனும். இப்போ தான் புரியிது மற்றவர்கள் அவங்க பொன்டாட்டி கலர்ல டிரஸ் பன்றாங்கன்னு நீ மீரு கலரோட சேர்ட் என் கிட்ட இருக்குன்னு என்னை ஏமாற்றி வாங்கி இருக்க, போங்கடா” என்று முகத்தைத் தூக்கி வைக்க

 

“உன் ஆள் வந்ததுக்கு அப்பொறமா, நீ அவ கலர்லயே டிரஸ் பன்னிக்க, அது வரைக்கும் பொறுத்து தான் ஆகனும்” என்று ஆரவ் கூற

 

“வினோ பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றான் அஸ்வின்.

 

வினோ அவனை முறைக்க, அதில் சிரிப்பு வர கடினப்பட்டு அதை அடக்கிக் கொண்டு அனைவரும் ஒரு வழியாய் ஹோட்டலிற்கு சின்னச் சின்ன செல்லச் சண்டைகளுடன் கிளம்பிச் சென்றனர். கிறுவோ ஆரவுடன் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. இதை மற்றவர்கள் கவனித்தாலும் கணவன், மனைவி இருவருமே அதை பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டனர்.

 

உள்ளே நுழைவதோடு இன்னும் பலர் அவர்களுடன் தத்தமது குடும்பங்களுடன் வருகை தந்தனர். அங்கு கிறு, ஆரவ், அஸ்வின், மற்றும் அனைத்து கம்பனி எம்.டி களின் பி.ஏ வும் வருகை தந்தனர்.

 

தீப்தி அஸ்வினை இரசணையாய் பார்ப்பதை கிறு கவனித்துவிட்டாள். அஸ்வினை தீப்தியை அறிமுகப்படுத்தும் போது தன் பார்வையை மாற்றிக் கொண்டாள். மற்றவர்களை அறிமுகப்படுத்தி பின் வினோவை அறிமுகப்படுத்தினான்.

 

“இது என் மாமா பையன், மீராவோட அண்ணா” என்று கூற

 

“சேர் அப்போ மீரா உங்க முறை பொண்ணா?” என்று உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க

 

“ஆமா, நான் கல்யாணம் பன்னிக்க போற பொண்ணு, என் பியேன்சி” என்றான்.

 

“வாழ்த்துக்கள் மீரா” என்று கூற

 

” நன்றி தீப்தி” என்றாள் மீரா. 

 

பின் அஸ்வின் அவள் கைபிடித்து மற்றவர்களுடன் பேசுவதற்கு அழைத்துச் சென்றான்.

 

தீப்தியோ குரோதத்துடன் அவளை முறைத்துக் கொண்டு இருக்க, ஆரவின் அருகில் நின்று இருந்த கிறு அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருந்தாள். ஏனோ தீப்தியை அவளுக்கு பிடிக்கவில்லை. அவளின் பார்வை, நடவடிக்கை, நொடிக்கு ஒரு முறை மாறும் அவள் முகபாவனை அனைத்துமே அவளிடம் ஏதோ ஒரு தவறு இருப்பதாகவே கிறுவிற்கு உணர்த்தியது. 

 

“மீரா நாளைக்கு அரங்கேற்றம் இருக்கு, நீ இன்றைக்கு டயர்டாகுற மா,நாம வேண்டும் என்றால் போகலாமா?” என்று அஸ்வின் கேட்க,

 

“இல்லை டா எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, கொஞ்சம் ரிலேக்ஸ் பன்றது போல இருக்குடா” என்றாள்.

 

இதைக் கேட்டுக் கொண்டு இருந்த தீப்தி,

 

‘உன் கனவு இல்லையா? உன் கனவு எப்படி நனவாகுதுன்னு நானும் பார்க்குறேன். என் கிட்ட இருந்து என் அஸ்வினை பிரிச்சுட்ட, உன்னை அழ வைக்காமல் இருக்க மாட்டேன் டி’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டாள்.

 

ஜீவி, தர்ஷூ, மீரா, கிறு நால்வரும் பேசிக் கொண்டிருக்கும் போது, தர்ஷூவின் கண்கள் சொருக பிடிமானத்திற்காக அருகில் இருந்த கதிரையை இறுகப் பற்றிக் கொண்டாள். அதே நேரம் அனைவரின் முன்னிலையிலும் எழுந்து அரவிந் பேச ஆரம்பித்தார்.

 

“ஹாய் பிரன்ஸ், இந்த பார்ட்டி எல்லா வருஷமும் நடக்குறது தான். இந்த வருஷம் எங்க கம்பனி முன் நின்று நடத்துகின்றது. உங்க எல்லோரையும் மனதாற வரவேற்குறேன். இதில் பிஸ்னஸ் அஷோஷியேஷன் தலைவரா முக்கியமான ஒரு முடிவு எடுத்து இருக்கேன். அதற்கு நம்ம போர்ட் மெம்பர்ஸ் எல்லாருமே அதை ஏத்துகிட்டாங்க அதை உங்க கிட்ட எங்க அசோஷியேஷன் ஓட செயளாளர் சொல்லுவாரு” என்று கூறி அமர்ந்தார்.

 

செயளாளரும் கூற ஆரம்பித்தார், 

 

“இந்த வாட்டி நாம ஒரு கேம் வைக்கலாம்னு இருக்கோம். பொதுவா நாம பொக்ஸிங், கராதே இதை போல இருக்கிற விளையாட்டுகளை தான் பொதுவா நாம நம்ம கம்பனி சார்பா ஸ்பொன்சர் பன்னுவோம். அது இன்விஜூவல் கேம்ஸ் தான் அதிகம். ஆனால் இந்த முறை பெண்களுக்கு மத்தியில் பிரச்சித்தி பெற்ற வலைப்பந்தாட்டம் அதாவது நெட்போல் தான் கேமா சிலெக்ட் பன்னி இருக்கோம். நம்ம டொப் டுவென்டி கம்பனிஸ் எல்லாமே இதுல பங்கு கொள்ளும். ஒவ்வொரு கம்பனி சார்பா ஒவ்வொரு டீம் விளையாடுவாங்க. டீமை நாங்க தான் சிலெக்ட் பன்னி கொடுப்போம். அவங்களுக்கான கோர்ச்சை தெரிவு செய்றது தொடக்கம் மெச்சில் விளையாடுறது வரைக்கும் நீங்க தான் அவங்களை பொறுப்பு எடுக்கனும். நாங்க இந்த இவென்டிற்க்காக ஒரு கமிடி இருக்கு. அவங்களை இப்போ அனௌன்ஸ் பன்றோம்” என்றார்.

 

மிஸ்டர் மாதேஷ் இந்த கமிடியோட தலைவர், மிஸ்டர் வினோத் செயளாளர், மிஸ்டர் கவின், மிஸ்டர் அஸ்வின்  டீம௲ஸோட ஹெட், இன்னும் பலரை அவர்களது பொறுப்புகள் பற்றி அறிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவருமே தத்தம் பொறுப்புகளை ஏற்றனர். ஆரவிற்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆரவ், மாதேஷ், வினோ, கவின், அஸ்வின், அரவிந் ஒருவரை ஒருவர் பார்த்த பிறகு மர்மமாக புன்னகைத்தனர்.

 

கிறுவோ இதைக் கேட்டு உற்சாகமானாள். தன் தந்தையின் முடிவை நினைத்து ஏனோ அவளிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவளுக்காக தான் இந்த விளையாட்டு நடத்தப்படுகின்றது என்பதை அவள் அறியவில்லை. தர்ஷூவிற்கு இதை நினைத்து சந்தோஷபட நினைத்தாலும் அவள் தலைச் சுற்று, அவளை விடவில்லை. அவள் மாதேஷை அழைக்க எழ தலைச்சுற்றலின் காரணமாக மயங்கிச் சரிய அவளவன் சரியாக பிடித்துக் கொண்டான்.

 

“தர்ஷூ மா எந்திரி டா, என்னாச்சு?” என்று மாதேஷ் பதற,

 

அங்கு இருந்த ஒரு டாக்டர் அவளை பரிசோதிக்க, அவர் சிரித்த முகத்துடன்,

 

“மிஸ்டர் மாதேஷ் வாழ்த்துக்கள், நீங்க அப்பாவாக போறிங்க” என்று கூற 

 

மாதேஷ் வானில் பறக்காத குறை தான், மற்றவர்கள் அவனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க தர்ஷூவும் விழித்துக் கொண்டாள். அவளுக்கும் அனைவரும் வாழ்த்தை தெரிவித்தனர். மீரா, ஜீவி இருவரும் அவளை கட்டியணைத்து வாழ்த்தை தெரிவித்தனர். மாதேஷிற்கும் அணைத்து வாழ்த்தை தெரிவித்தனர். 

 

கிறுவிற்கோ ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தன் வாழ்த்தை தெரிவித்தாள். ஆரவ் அவளை ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

‘எனக்கு முத்தம் கொடுக்குறதுக்கு மெடமுக்கு ஸ்டொக் இருக்காது இவளுக்கு மட்டும் கொடுக்கலாம்’ என்று அவளை பார்த்தான்.

 

“மச்சான் எனக்கு உன் மைன்ட் வொய்ஸ் புரியிது டா, எல்லா பொன்டாட்டிங்களுமே இப்படி தான்” என்றான் கவின்.

 

“சேருக்கு ரொம்ப அனுபவம் போல” என்று ஆரவ் நக்கலாக கேட்க,

 

“ஆமா மச்சான்” என்றான் கவின் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

 

“விடு டா, ஆம்பளைகள் இப்படி தான் இருக்கனும்னு கடவுள் விதிச்சு இருக்காரு” என்றான் ஆரவ் பெரு மூச்சு விட்டப்படி.

 

மாதேஷிற்கும் கட்டியணைத்து வாழ்த்தை தெரிவித்து,

 

“என்னக்கு அத்தையா புரொமோஷன் கொடுத்து இருக்க, மரியாதையா டிரீட் தா” என்று கூற

 

மற்றவர்களும் டிரீட் கேட்க, அவனும் வழங்குவதாகக் கூற அந்தத் தம்பதியினருக்கு தனிமையை வழங்கினர்.

 

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு டி, லவ் யூ தர்ஷூ” என்று நெற்றியில் இதழ் பதிக்க,

 

“லவ் யூ டூ மாது” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

 

அஸ்வின், மீரா இருவரும் தனியாக நின்று இருக்க,

 

“எனக்கு ஒரு பையன் வேணும் டி, சீக்கிரம் பெத்து குடு” என்று கூற

 

“நம்ம முதலில் கல்யாணம் பன்னலாம், அப்பொறமா குழந்தை பற்றி யோசிக்கலாம். ஆமா எது என்னடா பையன்? பொதுவா ஆம்பளைங்க பொண்ணு தானே கேட்பாங்க?” என்று கேட்க,

 

“எனக்கு உன்னை போலவே ஒரு பையன் வேணும்” என்று கூற மீரா அவனை அணைத்துக் கொண்டாள்.

 

கவின்” நாமளும் பாப்பா பெத்துக்கலாமா? ஆசையா இருக்குடி” என்று ஏக்கமாகக் கேட்க,

 

“கண்டிப்பாடா, எனக்கும் என் குழந்தையை தூக்கி கொஞ்சனும், நீ அவளை கொஞ்சும் போது இரண்டு பேரையும் இரசிக்கனும்னு கூட ஆசை இருக்குடா” என்று ஜீவி கூற கவின் அவளை அணைத்துக் கொண்டான்.

 

கிறுவை சமாதானப்படுத்த ஆரவ் அவள் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தான்.

 

“கண்ணம்மா சொரிடி, நம்பு டி இதற்கு அப்பொறமா கண்டிப்பா டைமிற்கு சாப்பிடுவேன்,இந்த ஒரு முறை மட்டும்” என்று கெஞ்ச,

 

அவனை பார்த்து சிரிக்க, அவளை இடை பற்றி இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன்,

 

“நான் கெஞ்சிட்டு இருக்கேன், நீ சிரிக்கிற?” என்று கேட்க,

 

“ஆரவ் பிளீஸ் தள்ளி நில்லுடா யாராவது பார்க்க போறாங்க” என்றாள் அவன் பிடியிலிருந்து விலக முயன்று,

 

“முடியாது” என்றான் உறுதியாக, அவன் கன்னத்தில் எக்கி முத்தமிட அவன் அதிரவ்தான். அதில் அவன் பிடி தளர அதை பயன்படுத்தியவள், அங்கிருந்து ஓட, மீராவின் “அம்மா” என்ற வலியின் அலறல் எங்கும் சத்தமாக எதிரொலிக்க, அவ்விடத்தை நோக்கி அனைவரும் விரைவாக சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 31யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 31

நிலவு 31   சிறிது நேரத்தில் ஐயர் தாலியை வழங்க அதை அவளுடைய சங்குக் கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு சாஸ்திர சம்பிரதாயப்படி முழுமையாக அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் ஆரவ் கண்ணா. பின் இருவரும் விரல் பிடித்து அக்னியை வலம் வந்தனர். பெரியவர்கள்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3

நிலவு 3   வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம்.    ‘என் மகன் வளர்ந்து விட்டானா? எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா? நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறுக்காக இருக்கிறேனா? ஒரு வேளை வினோ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 25யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 25

நிலவு 25   கோயிலை வந்தடைந்தவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்தனர். சிறியவர்கள் பெரியவர்களுக்கு உதவிகளை செய்துக் கொண்டு இருந்தனர்.   சாவி, ” பொங்கலுக்கான பானை காரில் இருக்கு கிறு நீ போய் அதை எடுத்துட்டு வா மா”