Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40

நிலவு 40

 

“நீ விருப்பம் இல்லாமல் தான் நெட்போலை விட்டு இருக்க. அன்றைக்கு டிரஸ் எடுக்க போகும் போது நீ ஸ்போர்ட்ஸ் டீ சர்டை பார்த்து கண்கலங்கின. அன்றைக்கு மீரா உன் கிட்ட பேசினப்ப கூட கண் கலங்கியது. அப்போ பாவனையை மாற்றிட்டாய். இப்போ நீ உண்மையை சொல்லி தான் ஆகனும்” என்று கத்தினான் ஆரவ். 

 

“ஆமா நான் விருப்பத்தோட விட இல்லை. என்னை காப்பாத்திக்கிறதுக்கு வேறு வழி இல்லாம விட்டேன். நான் மட்டும் இல்லை ஜெசி, சௌமி, கீது அவங்களும் எனக்காக தான் நெட்போலை விட்டாங்க, இவளோ யேன் கீது என்னால தான் சூசைட் பன்ன டிரை பன்னா, இப்போ அவ உயிரோட இருக்காளான்னு கூட தெரியாது” என்று கேவி அழ

 

ஆரவ் அவளை அணைத்துக் கொண்டான். 

 

“கண்ணம்மா நீ உண்மையை சொன்னால் தான் என்னால அவங்களை தேடி கண்டுபிடிக்க முடியும்” என அவளைத் தேற்ற,

 

கிறு நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.

 

“நான் ஐந்து வருஷத்துக்கு முன்னாடி  ஊருக்கு வர முன்னவே என்னை டிஸ்ரிக்ட் லெவல் விளையாட சிலெக்ட் பன்னாங்க அங்க விளையாட போனப்போ தான் நான் என் பிரன்சை மீட் பன்னேன். முதல்ல நான் எங்க ஸ்கூல் சார்பா நெட் போல் விளையாட போறதுக்கு முன்னாடி பிரக்டிசுக்கு போனேன். அப்போ என் பேகை கழற்றி வச்சிட்டு நடக்கும் போது பாஸ்கட்போல் பிளேயர்ஸ்சும் அங்க தான் இருந்தாங்க. யேன்னா இரண்டு கோர்ட்சும் பக்கத்துல தான் இருந்தது. 

 

அப்போ ஷ்ரவன் ஒரு பாஸ்கட்போல் பிளேயர். அவன் என் ஹைட்டை பார்த்துட்டு பிரன்சு கூட சேர்ந்து கிண்டல் பன்னான். அப்போ எனக்கு நல்லா கோபம் வந்தது அவனை திட்ட கிட்ட போயிட்டு அவனை ஒரு முறை பார்த்துட்டு என் கோர்டுக்கு போயிட்டேன். அங்க பிரெக்டிஸ் நடந்தது. நான் பிரக்டிசப்போ ஒழுங்கா விளையாட இல்லை. யேன்னா அடுத்த நாள் பைனல் மெச். சொ நான் எப்பவும் பைனல் மெச்சுக்கு முந்தின நாள் நடக்குற பிரெக்டிசுல ஒழுங்கா விளையாட மாட்டேன். 

 

அடுத்த நாள் வெறித்தனமா விளையாடனும். சொ என்ர்ஜியை வேஸ்ட் பன்ன மாட்டேன். என் கோர்ச்சுக்கு அது நல்லாவே தெரியும். ஷ்ரவன் நான் ஒழுங்கா விளையாடதாதை பார்த்து திரும்ப கிண்டல் பன்னவும் எதுவும் சொல்லாம ஹொஸ்டல் போயிட்டேன். அடுத்த நாள் மெச் நடக்க ஆரம்பிச்சது. அப்போ செகன்ட் மெச் தான் எங்களுக்கு கிடைச்சது. நான் தான் சென்டர் பிளேயர். நானும் விளையாடினேன். முதல் பதினைந்து நிமிஷம் ஸ்கோர் எங்களுக்கு 3 மற்ற டீமூக்கும் 3.

 

அப்போ பத்து நிமிஷ பிரேக். அந்த பிரேகுக்கு அப்பொறமா தான் நான் என் ஸ்டைலில் விளையாட ஆரம்பிச்சு ஸ்கோர் 8:4 இருந்தது. திரும்பவும் 10 நிமிஷ பிரேகுக்கு அப்பொறமா திரும்ப விளையாடும் போது ஸ்கோர் 11:5 எடுத்து நாங்க வின் பன்னோம். இதை போல பைனல் மெச்ல நாங்க வின் பன்னோம். அப்போ தான் ஷ்ரவன் வாயை பிளந்து என்னை பார்த்துட்டு இருக்கிறதை பார்த்துட்டு அவன் கிட்ட போனேன் அப்போ அவன் டக்குன்னு மன்னிப்பு கேட்டுட்டு கடுகு சிறிதானாலும் காரம் பெரிதுக்கு அர்த்ததை புரிஞ்சிக்கிட்டேன்னு அவன் சொல்லவும் நான் சிரிச்சிட்டேன்.

 

அவனோட பெஸ்ட் பிரன்ட் தான் ஹபீஸ் அவனும் என் கூட பேச நாங்க மூன்று பேரூம் பிரன்சானோம். அப்போ தான் ஸ்டேட் லெவல் யாரு விளையாட போறாங்கன்னு நேம் எனௌன்ஸ் பன்னாங்க அதில், நான் கீதா, சௌமியா, ஜெசீரா, இன்னும் கொஞ்சம் பேர் மொத்தமா 10 பேர் எங்க ஸ்டேட்ல சிலெக்ட் ஆனோம். அதே போல பாஸ்கட்போலில் ஷ்ரவன், ஹபீஸ் இன்னும் கொஞ்சம் பேர் சிலெக்ட் ஆனாங்க. எங்களோட மெச் பெங்களூர்ல நடக்குறதா இருந்தது. நான் ஏற்கனவே பெங்களூர்ல இருந்ததால் எனக்கு ஈசியா இருந்தது.

 

அங்க பிரெக்டிஸ் நடக்கும் போது நான், கீது, சௌமி, ஜெசி, ஹபீஸ், ஷ்ரவன் எல்லோருமே நல்ல பிரன்ஸ் ஆகி குளோசும் ஆனோம். எப்பவுமே எங்க எல்லாருக்கும் ஒரே நேரத்துல தான் பிரெக்ட்டிஸ் நடக்கும். ஷ்ரவன், ஹபீஸ் அவங்களுக்கு பிரெக்டிஸ் முடிஞ்சதுக்கு அப்பொறமா நாங்க வரும் வரைக்கும் எங்க கோர்ட் பக்கத்துல உட்காந்து இருப்பாங்க. நான் C post லயும், கீது GA post, சௌமி WA ஜெசி GS post ல தான் விளையாடுவோம். மற்றவர்கள் ஓய்வு எடுத்தாலும் நாங்க நான்கு பேரும் மட்டும் தொடர்ந்து விளையாடுவோம்.

 

எப்போவும் 3 passes ல எங்க GS கிட்ட போல் போயிரும். அந்த அளவுக்கு வேகம், விவேகத்தோட விளையாடுவோம். அப்போ எங்களுக்கு கோர்ச்சா அறிமுகமானவரு தான் விமல் சேர். அவருக்கு எங்களை விட கொஞ்சம் வயசு தான் அதிகம். அவரு எங்களுக்கு சில டிரிக்சையும் சொல்லி கொடுத்தாரு. அவரோட பிரன்டு தான் அதர்வா. அவன் எம்.பி பையன். அவன் ஒரு நாள் விமல் சேரை கூட்டிட்டு போறதுக்கு வந்த போது தான் பிரச்சனையே ஆரம்பிச்சது.

 

அவன் வந்தும் நாங்க நான்கு பேர் தான் விளையாடிட்டு இருந்தோம். அவன் எங்களை பார்த்த பார்வையை சரி இல்லைன்னு எனக்கு தெரியும். அப்பொறமா தொடர்ந்து வர ஆரம்பிச்சான். ஏதோ சரியில்லைன்னு புரிஞ்சது. அப்போ ஒரு நாள் சௌமி கால் வலிக்குதுன்னு, ஷ்ரவன் ஹபீஸ் கூட உட்கார்ந்துட்டு இருக்கும் போது அந்த அதர்வா நாங்க விளையாடும் போது போடோ எடுக்குறதை பார்த்துட்டு ஷொக் ஆகி எங்க மூன்று  பேருகிட்டவும் சொன்னா.

 

சௌமி சொன்னதுல இருந்து அவன் முன்னாடி நாங்க யாருமே விளையாட மாட்டோம். எல்லோருக்குமே எத்தனை போடோஸ் அவன் கிட்ட இருக்குமோன்னு பயந்துட்டு இருந்தோம். அவன் எப்ப இங்க வந்தாலும் மொபைலை விமல் சேரோட பேக்ல வச்சிட்டு கொஞ்ச நேரம் பாஸ்கட் போல் விளையாடுவான். ஒரு நாள் அவன்விளையாடும் போது கீது எங்க கிட்ட கூட சொல்லாம அவன் போனை போய் பார்த்து இருக்கா. அவன் எந்த பாஸ்வர்டும் இருக்க இல்லை.

 

அவ பார்க்கும் போது தான் மத்த மூன்று பேரோட கொஞ்சம் போடாசோம். என்னை வீடீயோ எடுத்து இருக்கான்” என்று கூறும் போது அவளது உடல் நடுங்கியது. ஆரவ் அதை புரிந்துக் கொண்டு அவன் அணைப்பை இறுக்கினான். அவன் இருக்கும் தைரியத்தில் தொடர்ந்து கூற ஆரம்பித்தாள். 

 

“அவ அதை பார்த்துட்டு போடசை டெலீட் பன்னிட்டு வீடியோவை டெலீட் பன்னும் போது அவன் பார்த்துட்டான். அவ அதர்வா கூட சண்டை போட்டு இருக்கா அப்போ தான் அவனுக்கு அவன் ஆசையை தீர்த்துக்க ஒரு நாளைக்கு சரி நான் வேனுன்னு சொல்லி இருக்கான். மத்தவங்களை பார்த்தா மட்டும் போதும் என்று சொல்லவும் கீது அவனை அறைஞ்சிருக்கா. அவனுக்கு ஒரு மிடிள் கிளாஸ் பொண்ணு தன்னை அறைஞ்சிட்டான்னு கோபத்துல…”

 

அதற்கு மேல் பேச முடியாமல் கதறி அழுதவளை சமாதானப்படுத்தினான் ஆரவ்.

 

“அவளை அவ ஹொஸ்டலுக்கு போற வழியில அவளை கடத்தி ஒட்டுத்துணி இல்லாம அவனை வீடியோ எடுத்து இருக்கான். அவளோட மயக்கம் தெரிஞ்சப்போ என்னை அவன் கூட அனுப்பி வைச்சா இந்த வீடியோ வெளியில் விடமாட்டேன்னு மிரட்டி இருக்கான். இது அவனுக்கு ஒரு கல்லுல இரண்டு மாங்காய் போல, கீதுவை அவமானப்படுத்தியாச்சு, என்னையும் அடைந்தது போல இருக்கும் என்று நினைச்சுருக்கான். கீது பரன் என்று ஒரு பையனை காதலிச்சு இருக்கா. இவன் தன்னை முழுமையா பார்த்தது அவனுக்கு செய்த துரோகம், என்னையும் காப்பத்துறத்துக்காக எல்லாத்தையும் லெடர்ல எழுதி வச்சிட்டு அவ தங்கி இருந்த பில்டிங்ல இருந்து குதிச்சிட்டா.

 

எங்களுக்கு குதிச்ச உடனே சொன்னாங்க, நாங்களும் அவளை ஹொஸ்பிடல் அழைச்சிட்டு போனோம். அப்போ ஷ்ரவன் அவ பேரன்சிற்கு க்கு இன்போர்ம் பன்ன அவங்க நம்பர் எடுக்க ரூமுக்கு வந்தப்போ தான் இந்த லெடர் கிடைச்சது. எங்களால கத்தி அழுகுறதை தவிற வேற ஒன்னுமே பன்ன முடியல்லை. என்னை அடைஞ்சே தீருவேன்னு அதர்வா கங்கணம் கட்டிட்டு இருக்கான் என்னை பத்திரமா பாத்துக்க சொல்லி இருந்தா. எங்களுக்கு என்னை பன்றதுன்னே தெரியல்லை.

 

அப்போ தான் நாங்க எல்லாரும் யாரும் தேடி கூட பார்க்கா தூரத்துக்கு பிரிஞ்சி போலாம். நாங்களே தேடினால் கூட எங்களை கண்டு பிடிக்க முடியாதது போல இருக்கனும்னு முடிவுபன்னோம். எங்க நான்கு பேருக்கும் நெட்போல் உயிருன்னு அதர்வாக்கு நல்லா தெரியும். அதான் நாங்க நெட்போல் விளையாடுறதை விட்டோம். ஷ்ரவன் கதறி அழுதப்போ தான் அவன் கீதுவை காதலிக்கிறான்னு எங்களுக்கு தெரிஞ்சது. ஷ்ரவன் வேறு யாரும் இல்லை GK company md ஓட பையன் தான். அவனை வச்சி தான் எங்களை பற்றி இருக்கிற அவளோ டீடெய்ல்சையும் எடுத்துட்டோம். அதனால் தான் எங்களை கண்டுபிடிக்க முடியல்லை. அது மட்டும் காரணம் இல்லை. என்னை எல்லாருக்கும் ஏ.கே ஆதான் தெரியும். கிறுஸ்திகாவா யாருக்கும் தெரியாது.

 

அதற்கு அப்பொறமா யாரு எங்க இருக்காங்கன்னு கூட தெரியாது. நான் வீட்டை விட்டு வெளியே போறதை கூட குறைச்சிகிட்டேன். சமையலுக்கு வருகிற அம்மாவை கூட நிறுத்திட்டேன். ஒரு வேளை அவங்க அதர்வா ஆளா இருந்தால் அப்படிங்குற பயத்துல. நானே சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சேன். நெட்போல் பிரெக்டிஸ் டைம் யூஸ் பன்ன டிரஸ்ஸை தான் வீட்டுல அணிவேன். வேற டிரெஸ் வாங்க போறதுக்கு கூட பயம். ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து தான் வாழ்ந்தேன். பிடிச்சதை பன்ன முடியாமல் நரக வேதனையா இருக்கும். இருட்டுல இருக்கும் போது அதர்வாவோட பார்வை அவன் சொன்ன விஷயங்கள் தான் ஞாபகத்துக்கு வரும். அதனால் வெளிச்சத்துலேயே இருந்து பழகினேன்.

 

அம்மா சில டிரஸ் வாங்கி அனுப்புவாங்க. அதை தான் கோலேஜூக்கு டிரஸ் பன்னுவேன். என்னோட பெயரை கிறுஸ்திகான்னு தான் சொல்லி எல்லோருக்கும் தெரியபடுத்தினேன். எனக்கு நெட்போலை விட்டு கொஞ்ச நாளிலேயே எனக்கு பேயின் வர ஆரம்பிச்சிருச்சு. அப்போ தண்ணீர், காபி, மெகி இப்படியேதாவது தான் சாப்பிட்டேன். வேறு சமைக்க தெம்பு இல்லை. இதெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் ரொம்ப கஷ்டபட்டேன். என்னோட அடையாளத்தை மறைச்சு தான் வாழ்ந்தேன். எப்போ நான் ஊருக்கு வந்தேனோ அப்போ தான் நான் இயல்பு நிலைக்கே திரும்பி இருந்தேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24

நிலவு 24   மகா பூஜைக்கு முன்னைய நாள் வீட்டில் அனைவரும்  கோயிலை நோக்கிச் சென்றனர். அனைவரும் சாமி கும்பிட்டு வெளியேறும் போது சித்தர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். அதில் ஒவ்வொருவராக சென்று ஆசிர்வாதம் பெறச் சென்றனர்.    அவர் அருகில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54

நிலவு 54   “என்ன கிறுஸ்திகா அரவிந்நாதன், என்னை மறந்திட்டிங்க போல” என்ற அவள் பின்னிருந்த ஒரு குரல் கேட்க,   அந்தக் குரல் காதுவழியாக மூளைக்குச் சென்று அக்குரலுக்கு சொந்தமானவரை படம்பிடித்து காட்ட அவள் உதடுகள் ” அதர்வா” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 58யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 58

நிலவு 58   அன்று ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக் கொண்டே குளித்தனர்.    “டேய் முட்டை நாற்றம் அடிக்குது டா, முடியல்லை” என்று கிறு கூறி குளியலறையின் வாயிலில் நிற்க,   “இங்க பாரு என் தலையில் முட்டையை உடைச்சாய்.