Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 38

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 38

நிலவு 38

 

அன்றிரவு ஆரவிற்கு கிறுவே ஊட்டி விட்டாள். இருவரும் சிரித்து பேசி உண்டார்கள். கிறு அனைத்து வேலைகளையும் முடித்து உறங்க அறைக்கு வரும் போது, ஆரவ் லெப்டொப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்தான். இரவு உடைக்கு மாறி வரும் போதும், அவன் அதே போல் இருக்க கட்டிலில் அமர்ந்து அவனையே முறைத்தாள். ஆரவ் அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் முறைப்பதைப் பார்த்து,

 

‘இப்போ எதுக்கு இவ நமளை முறைக்குறா?’ என்று மனதில் நினைக்க

 

“எதுக்கு கிறுஸ்தி அப்படி பார்க்குற?” என்று ஆரவ் கேட்க,

 

“இப்போ டைம் என்ன?” என்று கேட்க,

 

கடிகாரத்தைப் பார்த்தவன் “பத்து முப்பது” என்றான்.

 

“நீ என் கிட்ட என்ன சொன்ன? லேட் நைட் வேர்க் பன்ன மாட்டேன்னு, இப்போ என்ன பன்ற?” என்று கோபமாகக் கேட்க,

 

“இல்லை கிறுஸ்தி, நீ தூங்கும் வரைக்கும் தான் வேர்க் பன்ன இருந்தேன், நம்புமா” என்று கூற

 

‘இதை நான் நம்பனும்’ என்ற பார்வையைப் பார்க்க 

 

உடனே எழுந்து விளக்கை அணைக்க கிறு பயப்படுவாள் என்று அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான். அவளை அணைத்துக் கொண்டு உறங்கியவாறே,

 

“உனக்கு இருட்டுன்னா பயமா?” என்று கேட்க,

 

“சின்ன வயசில பயம் இல்லை. பெங்களூர்ல இருக்கும் போது தான் பயம் வந்தது” என்று கூறி அமைதியாகினாள். அதற்கு மேல் அவனும் எதுவும் கேட்கவில். சிறிது நேரத்தில் நித்ராதேவி இருவரையும் ஆட்கொண்டாள்.

 

அடுத்த நாள் காலையில், அஸ்வின் தயாராகி மீராவை ஹொஸ்பிடலில் விட்டுச்  சென்றான். மீராவிற்கு ஏனோ தீப்தியைப் பார்த்ததில் இருந்து மனது நிம்மதியாக இருக்கவில்லை. தனது சிந்தையை ஒதுக்கியவள் வேலையில் கவனிக்க ஆரம்பித்தாள். 

 

கிறுவை ஆரவே அவனது அவனது காரில் அழைத்து வந்தான். இதை சிலர் வித்தியாசமாகவே பார்த்தனர். அதை எதையுமே கண்டு கொள்ளாது இருவரும் ஆபிஸிற்குள் நுழைந்து தத்தமது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். ஷ்ரவனும் வந்து அவனது வேலைகளைப் பார்த்தான்.

 

பல முறை கிறுவோடு பேச முயற்சித்தாலும் அவள் அதைக் கண்டுக் கொள்ளாது தனது வேலைகளிலேயே மூழ்கினாள். இதை ஆரவ் பார்த்து, நண்பர்கள் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டான். 

 

ரோசியிடம் இருந்து ஒரு பைலை எடுக்க வந்த கிறு, பைலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

 

” ஏ.கே ஒரு நிமிஷம்” என்றான் ஷ்ரவன்.

 

“என்ன?” என்று வெடுக்காக கேட்க

 

“இப்போ உன் பிரச்சனை தான் என்ன?” என்று அவன் கேட்க,

 

“இங்க பாரு ஷ்ரவன் செம்ம காண்டுல இருக்கேன், எதாவது சொல்லிற போறேன். பேசாமல் போயிரு” என்றாள்.

 

“பிளீஸ் டி நான் நேற்று அப்படி சொல்லி இருக்கக் கூடாது தான் சொரி” என்று கூற

 

அவள் எதுவும் கூறிமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

“நான் வேணுன்னா இங்கேயே இப்போவே தோப்புகரணம் போடுறேன்” என்று அவன் ஆரம்பிக்க

 

அதை தடுத்து நிறுத்தியவள்,”நீ இன்னும் இந்த பழக்கத்தை விடவே இல்லையா?” என்று சிரித்தாள்.

 

அவள் சிரிக்க நிம்மதியடைந்தவன், “உன் பிரன்டை மன்னிப்பியா?” என்று கேட்க,

 

“நீ என் பிரன்டு டா, உன் மேல எப்படி கோபப்பட முடியும். எல்லாமே  ஒரு பைவ் மினிட்ஸ் தான் இருந்து இருக்கும்” என்றாள்.

 

“அப்போ நான் தான் தேவையில்லாம பர்போர்யன்ஸ் பன்னேனா?” என்று பாவமாய் கேட்டவனை பார்த்து 

 

“ஆம்” என்று கூறி சிரித்தாள்.

 

அதன் பிறகு இருவரும் சிரித்துப் பேசியவாறே ஆரவின் கெபினிற்குள் நுழைந்தனர். இதைப் பார்த்த ஆரவிற்கு நிம்மதி, இன்னொரு ஆளானா பிரியாவிற்கு காதில் புகை வராத குறை தான். அவள் ஷ்ரவனை ஒரு தலையாக காதலிப்பவள். அவள் கிறு, ஷ்ரவன் இருவருமே நண்பர்கள் என்பதை அறியாமல் ஒரு நாள் நச்சுப் பேச்சுக்களை கிறுவிற்கு வழங்கும் போது, பல உண்மைகளை அறியப் போகிறாள் என்பதை அறியவில்லை.

 

அன்று இடைவேளையின் போது, ஆரவிடம் கூறி ஷ்ரவனுடன் அங்கிருந்த கென்டீனிற்குள் சென்று உணவை உண்டனர்.  

 

“நான் சௌமியை பார்த்தேன்” என்று கிறு கூற,

 

“என்ன?” என்று அவன் கிறுவையே பார்த்தான்.

 

“சென்னையில் என் மாமாவோட ஷொபிங் மோலுக்கு வந்திருந்தாள்” என்றாள்.

 

“ஏ.கே நாம யாருமே திருப்பி ஒரு தடவை சந்திக்கவே கூடாதுன்னு நினைச்சோம் ஆனால் திரும்ப ஒவ்வொருத்தரும் திரும்ப மீட் பன்றோம்னா, ஏதாவது காரணம் இருக்கும்” என்றான் ஷ்ரவன்.

 

“எல்லாரும் என்றால்” என்று கிறு கேட்க,

 

“நான் மும்பையில்  ஹபீசை பார்த்தேன்”  என்றான்.

 

அவள் அதிர்ந்து அவனைப் பார்த்தாள். 

 

“என்ன நடக்குதோ நடக்கட்டும் டி, நாங்கள் எல்லாருமே உனக்கு சபோர்டா இருக்கோம்” என்று அவளை தைரியப்படுத்தினான்.

 

அன்று மாலை, மீரா நடன பயிற்சிகளை முடித்துவிட்டு ஆரவின் ஆபிசிற்குச் சென்றாள். இதைப் பார்த்த தீப்திக்கு கோபம் வந்தது.

 

அஸ்வின் மீடிங்கில் இருப்பதாகக் கூறி, கெஸ்ட் அறையில் அமர வைத்தாள். அஸ்வின் நேரம் தாமதமானதால் மீராவிற்கு அழைக்க அவள் கெஸ்ட் ரூமில் இருப்பதாகக் கூற அங்கே விரைந்தான் அஸ்வின்.

 

“இங்க என்ன பன்ற? உன்னை என் கெபினுக்கு தானே வர சொல்லி இருக்கேன்” என்றான்.

 

அதே நேரத்தில் தீப்தியும் அங்கே வந்தாள். அஸ்வின் இங்கேயே அவளை அழைத்துச் செல்ல வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதுவும் தான் மீராவை அஸ்வினுடன் நேரம் செலவளிக்காமல் இருப்பதற்காகவே பொய் உரைத்தாள். இப்போது மாட்டிக் கொண்டோம் என்று அவள் முகம் பயத்தில் வெளிறியது.

 

மீரா தீப்தியைப் பார்த்துவட்டு, “இல்லை நீ மீடிங்கில் இருப்பன்னு நினைச்சேன்” என்றாள்.

 

“அதை இவங்க கிட்ட கேட்க வேண்டியது தானே” என்று தீப்தியைக் காட்டினான்.

 

“சேர் இதற்கப்பொறமா அவங்க இங்கே வந்தால், உங்க கெபினுக்கு இவங்களை அழைச்சுட்டு வர வேண்டியது என் பொறுப்பு” என்றாள் நல்லவள் போல்.

 

அவளது நடிப்பைப் பார்த்த மீராவிற்கு அவளது சந்தேகம் உறுதியானது. அவளிடம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இவளே அஸ்வினின் கைபிடித்து அவனது கெபினிற்குச் சென்றாள். தீப்திக்கு மீராவின் மீதுள்ள கோபம் இப்போது வெறுப்பாக மாறி, அவளை பழிவாங்கத் தூண்டியது. மீரா தன்னை மாட்டிவிடாமல் அவனிடம் இருந்து காப்பாற்றிய நல்ல உள்ளம் கொண்டவள் என்பதை மறந்து போனாள்.

 

ஆரவும், கிறுவும் அதே மாலை நேரம் ஷொபிங் சென்றார்கள். அவளுக்கு தேவையான மற்றைய பொருட்களைப் வாங்கிய பிறகு, கிறுவிற்கு ஆடை வாங்குவதற்குச் மாளிகைக் கடையொன்றிற்குச் சென்றார்கள். ஆரவ் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து அவள் ஆடை தெரிவு செய்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் சுடியே அதிகமாக எடுக்க அதைப் பார்த்தவன் கடுப்பாகி,

 

“என்ன எல்லாமே சுடி எடுக்குற?” என்று ஆரவ் கேட்க,

 

“கண்ணா, இப்போ எனக்கு கல்யாணம் ஆச்சு அதான்” என்றாள்.

 

“டொப், டெனிம் நீ வியர் பன்னுவ தானே?” என்று கேட்க,

 

“ஆமா, ஆனால் இப்போ என்னால முடியாது” என்று கூற

 

“யேன்” என்றான்.

 

“அது, எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.

 

“இப்போ, நான் சொல்றேன், அதை போல டிரஸ் எடுக்கனும் வா” என்று அவளை அழைத்துச் சென்று அவனே ஆடைகளை அவளுக்கு தெரிவு செய்தான்.

 

அவன் தெரிவு செய்த அனைத்து ஆடைகளும் அவளுக்கு கச்சிதமாகப் பொருந்தியதோடு, அவள் அனைத்திற்கு துப்பட்டா வேண்டும் என்று கன்டிஷன் இட்டதால் அதையும் அவனே தெரிவு செய்தான்.

 

அவன் தெரிவு செய்வதைப் பார்க்கும் போது தான் இன்னும் சில பெண்கள் ஆரவை சைட் அடிப்பதைக் கண்டாள். அதைக் கண்டவள் அவர்களின் மேல் கோபம் பொங்கி எழ, அதை வெளிக்காட்டாது ஆரவின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள். அப்போதே அப்பெண்கள் கிறுவின் கழுத்தில் ஆடைக்கு வெளியே தெரிந்த தாலியைப் பார்த்து முகத்தை தொங்கவிட்டு நகர்ந்தார்கள். அதைப் பார்த்த கிறுவிற்கு ஏகபோக குஷி.

 

“என்ன கிறுஸ்தி, நீ தான் என் பொன்டாட்டின்னு சொல்லாமல் சொல்லிட்டியா?” என்று அவன் ஆடைகளை பிரட்டிக் கொண்டே கேட்க,

 

கிறு அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

 

‘இவன் டிரஸ் தானே சிலெக்ட் பன்னிட்டு இருந்தான். இதை எப்படி பார்த்தான்? , ஒரு வேளை இவனுக்கு முதுகுலையும் கண் இருக்குமோ?’ என்று தன்னுள் பேச,.

 

“சேசே எனக்கு முன்னாடி மட்டும் தான் கண் இருக்கு” என்றான்.

 

‘ஐயோ நம்ம மைன்ட் வொய்சை கரெக்டா கெச் பன்றானே’ என்று மைன்ட் வொயிசில் பேச,

 

ஆரவ் சிரித்து, “கிறுஸ்தி நீ தான் இந்தியாவோட் முதல் பணக்காரரோட பொண்ணுன்னு சொன்னால் யாருமே நம்பமாட்டாங்க, அதனால் உன்னை சுற்றி கார்ட்ஸ் தேவையில்லை” என்றான்.

 

“யேன்?” கோபமாகக் கேட்க,

 

“அது அப்படி தான்” என்றான்.

 

இவ்வாறு ஆரவிற்கு சில டீசர்ட், சேர்ட் என்பவற்றை கிறுவே தெரிவு செய்து ஷொபிங்கை முடித்து வீட்டிற்குச் சென்றார்கள். இவ்வாறே இரண்டு ஜோடிகளுக்கும் நாட்கள் அழகாக சென்றது.

 

ஆரவ் கிறுவின் நண்பர்களை தேடுவதிலும், அவளுக்கு என்ன நடந்தது என்பதையும் தீவிரமாக கிறு அறியாமல் விசாரித்துக் கொண்டு இருந்தான். 

 

ஷ்ரவனிடம் கேட்ட போது, “கிறு உங்களிடம் கூறும் வரையில் கூறமாட்டேன்” என்று சொல்லிவிட்டான். 

 

ஆனால் ஆரவோ அவளின் கனவை நனவாக்க நடந்த அனைத்தையும் தேட ஆரம்பித்தான். கிறுவும், ஷ்ரவனும் அவனுக்கு தொழிலில் நன்றாகவே உதவினர்.

 

கிறுவின் திறமையைக் கண்டு ஆரவ் வியந்து தான் போனான். எதுவாக இருந்தாலும் பிசினசில் ஊறிய குடும்பத்தின் வாரிசு அல்லவா அவள்? ஷ்ரவன், கிறுவின் உறவு மற்றும் ஆரவ் கிறுவின் உறவு யாது என்பதை தெரியாமல் ஸ்டாப்ஸ் தான் குழம்பினர்.

 

இவர்களின் நிலை இங்கு இவ்வாறு இருக்க அங்கு மீரா, அஸ்வினின் காதலும் அழகாக மலர்ந்துக் கொண்டு இருந்தது. தீப்தி அவர்களின் நெருக்கத்தைப் பார்த்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாள். ஆனால் மீராவின் மீது ஏற்பட்ட வெறுப்பால் அவளை மனதளவில் உடைய அழவை வைக்க வேண்டும் என்று மட்டும் உறுதியாய் இருந்தாள். அதற்கான நாளும் மலர காத்துக் கொண்டு இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1

அறிமுகம்   அவரை நோக்கி, அந்த சித்தர் கூறினார்.    “உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது. அவளுக்காக இவன் இரவாக மாறி அவளை

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15

ஆரவின் கதையைக் கேட்டவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கிறு கூறமுடியா ஒரு வலியை உணர்ந்தாள்.   ராம், “அவன் அப்பா பேர் என்ன?” என்க,   “தேவராஜ்” என்றான் அஸ்வின்.   “அவங்க கம்பனியோட பெயர்” என்று அரவிந் கேட்க  

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5

நிலவு 5   கீழே உருண்டு விழுந்த அஸ்வின் ‘யார் அவன் கையணைப்பில் உள்ளார்’ எனப் பார்த்த போது மீரா கண்கள் சிவக்க அவன் கீழ் விழுந்து இருந்தாள். அவனோ தன்னவள் நெருக்கத்தில் அவளை இரசித்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்