Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 37

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 37

நிலவு 37

 

ஆரவ் ஷ்ரவனையும், கிறுவையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்த இருவரும் மற்றவரைப் பார்த்து அதிர்ந்ததோடு இருவருக்கும் கண்கள் கலங்கிவிட்டன. அதைப் பார்த்த ஆரவ் மென்புன்னகையை வீசினான். 

 

“ஏ.கே நீ இங்கே எப்படி?” என்று கேட்க,

 

“அதை நான் கேட்கனும் ஷ்ரவன் நீ எப்படி டெல்லியில்?” என்று கிறு கேட்க,

 

“நான் இங்கே இரண்டு வருஷமா வேலை பாக்குறேன்” என்றான்.

 

“சேர் ஐம் ரியலி சொரி சேர்,  நான் இன்றைக்கு என்னோட வேலையை ரிசைன் பன்றேன்” என்றான்.

 

“லூசாடா நீ, எதுக்கு நீ இப்போ வேலையை ரிசைன் பன்ற?” என்று கிறு கேட்க,

 

“ஏ.கே உனக்கு தான் தெரியுமே டி, நாம எல்லாரும் ஒன்னா இருக்க முடியாது டி. எந்த பிரன்சுக்கும் வர கூடாத நிலமை” என்றான்

 

“போதும் டா என்னால முடியல்லை. எல்லோரும் எனக்காக தான் பிரிஞ்சி போனிங்கன்னு நினைச்சேன். ஆனால் இப்போ தான் புரியிது என்னை வெறுக்க ஆரம்பிச்சிட்டிங்கன்னு” என்று அழுதாள்.

 

“அறைஞ்சிருவேன். எப்படி டி உன்னை நாங்க வெறுப்போம்? நீ எங்க செல்ல பிரன்டு டி” என்றான் அவனும் கண்ணீர் வடித்துக் கொண்டு.

 

“இல்லை ஷ்ரவன் ஒருத்தி சூசைட் பன்ன டிரைபன்னி இருக்கா. அவ உயிரோட இருக்காளா? இல்லையான்னு கூட தெரியாது. என்னால் இதற்கு மேலே எந்த பிரச்சனையும் வேணாம். நீ இங்கேயே வேலை பாரு” என்றவள், 

 

ஆரவைப் பார்த்து, “கண்ணா என்னால் இங்க இதற்கு மேலே வேலை பார்க்க முடியாது டா. நான் வீட்டிலேயே இருக்கேன். இத்தனை வருஷம் கழிச்சி நம்ம பெஸ்ட் பிரன்ட் ஒருத்தனை பார்த்து கூட அவன் கூட பழைய மாதிரி பேச கூட முடியல்லை” என்றவள் அழ ஆரவ் அவள் அருகில் வந்தவன் அணைத்துக் கொள்ள அவன் நெஞ்சில் முகம் புதைத்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

 

“சேர் ஏ.கே உங்க..” என்று கேட்க,

 

“என் வைப், இதை யார்கிட்டவும் சொல்லாத. கொஞ்ச நாளைக்கு அப்பொறமா சொல்லலாம்” என்று கூற

 

ஷ்ரவனும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “சரி” என்றான்.

 

“இங்க பாருங்க இரண்டு பேருக்கும் சொல்றேன். இரண்டு பேரும் வேலைக்கு வரனும். யாரும் ரிசைன் பன்ன தேவையில்லை. புரியுதா?” என்று கேட்க,

 

ஷ்ரவன் வேகமாக தலை ஆட்டினான். கிறுவோ இன்னும் அழுது கொண்டு இருக்க, அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன், அவளைப் பார்த்து 

 

“புரியுதா?” என்று கேட்க,

 

அவள் அமைதியாக தலையை ஆட்டினாள்.

 

“ஷ்ரவன் நீ ஒபிசை பார்த்துக்க, நான் இவளை வீட்டிற்கு கூட்டிகிட்டு போறேன்” என்று கிறுவை அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.

 

சிறிது நேரம் பயணத்திற்குப் பிறகு அவன் காரை நிறுத்தினான். வெளியே பார்த்தவள்,

 

“வீட்டிற்கு போறன்னு தானே சொன்ன? இது யமுனை ஆறு தானே, இங்க எதற்கு அழைச்சிட்டு வந்து இருக்க?” என்று கிறு கேட்க,

 

“நீ அந்த வீட்டோட ராணி, இப்போ மூட் அவுட்ல தான் இருக்க. இப்படியே என்வீட்ல நீ காலடி வைத்தால் நல்லா இருக்காது, அதான் உன் மைன்டை கொஞ்சம் மாற்றலாம்னு” என்று அவள் கைபிடித்து அழைத்துச் சென்றான்.

 

“கிறுஸ்தி உன் பிரன்சுக்குள்ள என்ன நடந்ததுன்னு நான் கேட்கவும் மாட்டேன். உனக்கு எப்போ சொல்லனும்னு தோனுதோ அப்போ சொல்லு” என்றான்.

 

அவனைப் பார்த்தவள் புன்னகைத்து “கண்டிப்பா உன் கிட்ட சொல்லுவேன் கண்ணா, அதற்கு என் மனசு ஒரு நிலையில் இருக்கனும். ஆனால் இப்போ நான் அப்படி இல்லை” என்றாள்.

 

“கால் நனைச்சுட்டு வரலாமா?” என்று கிறு கேட்க

 

“வா”என்று அழைத்துச் சென்று கால்களை நனைத்துக் கொண்டான்.

 

“யேன் கிறுஸ்தி பீச்ல போய் விளையாடுற பழக்கம் எல்லாம் இருக்கா?” என்று கேட்க,

 

“அந்த அளவுக்கு interest எல்லாம் இல்லை, பட் எனக்கு கால் நனைக்க பிடிக்கும், கடலை இரசிக்க பிடிக்கும்” என்றாள்.

 

“வித்தியாசமான பொண்ணா இருக்க” என்றான்.

 

“வீட்டிற்கு கிளம்பலாமா?” என்று கிறு கேட்க,

 

“போலாம்” என்று எழுந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றான். 

 

அவனது கார் நேராக சென்றது ஒரு பெரியவீட்டின் முன் சென்றது. அவன் வீட்டிலும் கார்டன் இருந்தது. வீடு அனைவரும் பார்க்கும் வகையில் அழகாக இருந்தது. அனைத்துமே நவீனமயப்படுத்தப்பட்டு இருந்தது. வீட்டினுள் செல்லும் போது, வீட்டில் வேலை செய்யும் பெண்மனி இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டினுள் வரவேற்றார்.

 

வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தவள் வீட்டைச் சுற்றி பார்வையை சுழல விட்டாள். ஆங்காங்கே பணத்தின் செலுமை தென்பட்டது.

 

இருவருக்கும் அப்பெண்மனியே காபியை வழங்கினார்.

 

“லக்ஷமி அம்மா இவ என் வைப் கிறுஸ்திகா” என்று அறிமுகப்படுத்த

 

அவரை இவங்க “எங்க வீட்டு அம்மா கிறுஸ்தி” என்று கூறி இருவரையும் பேசுமாறு தனது அறைக்குச் சென்றான்.

 

அவர் தயங்கி நிற்பதைப் பார்த்த கிறு, “அம்மா நானும் உங்க பொண்ணு தான். தயக்கமே இல்லாமல் பேசுங்க. பாவம் மா நீங்க, நான் பன்ற சேட்டையெல்லாம் பொறுத்து ஆகனும். எங்க அம்மா மாதிரி குட்டாதிங்க. அவ குட்டி தான் இந்த அளவு குள்ளமா இருக்கேன், நீங்களும் குட்டினிங்கன்னா நான் இன்னும் குள்ளமாகுவேன்” என்று கூற,

 

“வந்த உடனே பேச ஆரம்பிச்சிட்டியா மேல ரூமிற்கு வா” என்றான் ஆரவ்.

 

அவர் எஜமானி அம்மாவின் பேச்சில் சிரிக்க, “உங்க ஐயா எப்பவுமே இப்படியா? இல்லைன்னா புதுசா இப்படி கத்துறானா?” என்று கேட்க,

 

அவர் புன்னகையை பதிலாகத் தந்தார்.

 

ஆரவின் அறைக்கு செல்ல அவள் மேலே வந்தாள். அதே நேரம் வேலைக்காரர் ஒருவர் கிறுவின் லெகேஜை அறைக்கு வெளியே கொண்டு வைத்துச் சென்றார். 

 

“உள்ள வரலாமா மிஸ்டர் ஆரவ் கண்ணா?” என்று கேட்க,

 

“வலது காலை வச்சு உள்ள வா”

என்றான்.

 

உள்ளே நுழைந்தவள் அறையைச் சுற்றிப் பார்த்தாள். அறை விசாலமானதாக இருந்தது. குளியலறை, டிரஸிங் ரூம் என்ற வேறு இரண்டு அறைகளும் இருந்தன. அங்கிருந்து பெல்கனிக்கு செல்ல அங்கே ஊஞ்சல் ஒன்று இருந்தது. வெளியே பார்க்க அத்தனையும் பல நிற ரோஜாக்கள் நடப்பட்டு இருந்தன.

 

“ஆரவ் வீடு சூப்பரா இருக்கு ஸ்பெஷலி இந்ந ஊஞ்சல் தான்” என்று அதில் அமர்ந்தாள். 

 

அவள் செய்கைகளை இரசித்துக் கொண்டு இருந்தான்.

 

“நாளைக்கு உனக்கு தேவையான திங்சை வாங்கிட்டு வரலாம். இப்போ ரிபிரெஷ் ஆகி டிரஸ்ஸை அந்த கபோர்ட்ல அடுக்கு” என்று அடுத்த அறையில் இருந்த குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். 

 

குளித்து டிரஸ் மாற்றி வந்தவன் கீழே சோபாவில் அமர்ந்து கிறுவைப் பற்றி யோசிக்கலானான்.

 

‘அவளோட ஐந்து பிரன்சும் எதுக்கு பிரிஞ்சாங்க? கீது எதுக்கு சூசைட் பன்ன டிரை பன்னா? கிறுஸ்தி எதுக்கு அவளால தான்னு சொன்னா? அப்போ சௌமி, ஜெஸி, ஹபீஸ் எங்க? ஷ்ரவன் என் கம்பனிக்கு வரும் போதே அவன் கிறுவோட பிரன்டுன்னு தெரியும். அன்றைக்கு நைட் யாருக்காக பயந்தா? எந்த ரீசனுக்கு இந்த நாலு பொண்ணுங்களும் நெட்போல் விளையாடுறதை விட்டாங்க? எல்லா கேள்விகளுக்கும் பதில் தேடனும், என்ன நடந்து இருந்தாலும் சரி அவளை இன்டர்நெஷனல் நெட்போல் பிளேயரா மாற்றியே ஆகனும்’ என்று தன்னுள் முடிவு எடுத்துக் கொண்டான்.

 

“எக்கியூஸ் மீ, உங்க எம்டியை  பார்க்க முடியுமா?” என்று மீரா கேட்க,

 

“நீங்க அபொய்ன்மன்ட் வாங்கி இருக்கிங்களா மெடம்?” என்று ரிசப்ஷனிஸ்ட் கேட்க,

 

அதே நேரம் மீராவிற்கு அஸ்வினே அழைப்பை ஏற்படுத்தி இருந்தான். 

 

“எக்ஸ்கியூஸ் மீ என்று ரிசப்ஷனிஸ்ட் இடம் கூறி அழைப்பை ஏற்றாள்.

 

“எங்க இருக்க மீரு?” என்று கேட்க,

 

“உன் ஒபிசில் தான் கீழே வா” என்றாள்.

 

“இரு இரண்டு நிமிஷத்தில் வரேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

உடனே கீழிறங்கி வர ரிசப்ஷனிஸ்ட் இடம் 

 

“மீராவை என்னை சந்திப்பதற்கு எந்த அபோய்மன்டும் தேவையில்லை  உடனே அனுப்புமாறு” கூறி அவளை கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

 

முழு ஆபிசும் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தது. அங்கு இருந்த அனைவருக்கும் அஸ்வின் ஊரிற்கு சென்று வந்த பின் இருந்த மாற்றங்கள் நன்றாகவே தென்பட்டன. அவளை நேரடியாக அவனுடைய கேபினுற்குள்ளேயே அழைத்துச் சென்றான்.

 

தீப்தியை அழைத்து, இருவருக்கும் ஜூஸ் கொண்டுவருமாறு கூறினான்.

 

தீப்திக்கோ அஸ்வின் மீராவுடன் சிரித்துப் பேசுவதும் கைபிடித்து இருப்பதால் அவள் பொறாமைத் தீ அதிகமாகவே பரவி எரிந்தது. 

 

‘ஆனால் மீரா அவனுக்கு யார்?’ என்பது அவள் அறியவில்லை. 

 

கிறுவிற்கு மீரா வீடியோ கோல் எடுக்க நால்வரும் சேர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். அஸ்வினிடம் சைன் ஒன்றைப் பெற வந்த தீப்தி, அனுமதி கேட்க,

 

“உள்ள வாங்க மிஸ். தீப்தி என்ன விஷயம்?” என்று கேட்க,

 

“சேர் இந்த பைல்லில் ஒரு சைன் வேணும்” என்றாள்.

 

“கொடுங்க” என்று சைன் இட தீப்தி மீராவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

அங்கே கிறு அஸ்வினைப் பார்க்க வேண்டும் கூற மொபைலை அஸ்வின் புறம் திருப்பும் போதே தீப்தி அவளையே பார்ப்பதைக் கண்டாள். 

 

மீரா அவளைப் பார்த்து சிநேகமாக புன்னைகத்து மொபைலை அஸ்வினிடம் வழங்கினாள்.

 

“உன் புருஷன் வீடு எப்படி இருக்கு கிறு?” என்று அஸ்வின் கேட்க,

 

ஆரவைப் பார்த்து”நொட் பேட்” என்று உதட்டைச் சுழித்தாள்.

 

“மச்சான் இவ நடிக்கிறாடா, இவளோ நேரமும் வீட்டை புகழ்ந்துட்டு இப்போ இப்படி பேசுறா, இவளைப் பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா?” என்று ஆரவ் கேட்க,

 

கிறு, ஆரவின் சண்டை ஆரம்பமானது. இதைப் பார்த்து மற்ற இருவரும் சிரித்தனர். தீப்தி வெளியே போகும் போது மீராவை ஒரு முறை பார்த்து விட்டு வெளியே சென்றாள்.

 

தீப்தி, அஸ்வினை எப்பாடுபட்டாவது திருமணம் செய்வேன் எனவும், மீராவை அஸ்வினடமிருந்து பிரிப்பேன் எனவும் தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 47யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 47

நிலவு 47   மீரா, அஸ்வின் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பணியாள்,   “மேம் உங்களை அங்கே வர சொன்னாங்க” என்று கூற   “அச்சு அவளுங்க தான் என்னை கூப்பிடுறாங்க  நான் போய் என்ன என்று பார்த்துட்டு வரேன்”

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 8யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 8

நிலவு 8   கிறுஸ்தியின் அருகில் கதிரையில்  அமர்ந்து கட்டிலின் ஓரத்தில் ஆரவ் தலைவைத்து உறங்கினான். இவனைப் பாரக்க வந்த நண்பர்கள் விழித்தனர் இதைப் பார்த்து,    மாதேஷ், “இவனை யோசிச்சு ஒரு முடிவு எடுன்னா தூங்கிட்டு இருக்கான்டா” என்றான்.   

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59

நிலவு 59   ஆரவ் செய்வதறியாது நிற்க, யோசித்தவன்   “வினோ உங்க மேனஜர் கிட்ட சொல்லி மிளகாய் ஒன் கே.ஜி வாங்கி வர சொல்லு, சீக்கிரம்” என்று அவன் அவசரபடுத்த   “சரி அண்ணா” என்று அவனும் மேனஜருக்கு அழைப்பை