Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 35

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 35

நிலவு 35

 

“நிறுத்துங்க” என்ற கர்ஜிக்கும் குரல் கேட்டது.

 

ஆரவ் அனைவரின் முன்னிலையில் ருத்ரமூர்த்தியாக நின்று இருந்தான். 

 

” என்னை பார்த்தால் இப்போவும் ஏமாளி போல இருக்கா? உங்க நடிப்பு எல்லாம் என் கிட்ட காட்டாதிங்க” என்றான்.

 

“இல்லை பா உண்மையா..” என்று அவர் பேசும் போது நிறுத்தியவன்,

 

“போதும், என்னால் இதற்கு மேல உங்கிட்ட ஏமாற முடியாது. இப்போ கூட என் கிட்ட இருக்கிற பணத்துக்காக தான் வந்து இருக்கிங்கன்னு எனக்கு தெரியும்” என்றான்.

 

“இவன் அநாதை இல்லை. இவனுக்கு அவன் குடும்பமே இருக்கு அங்க பாருங்க” என்று கிறு கூற அவர்களுடைய மொத்தக் குடும்பமும் அங்கு வந்தது.

 

“சேர் இவன் இராசி கெட்ட பையன், உங்க பொண்ணு சாகாமல் பார்த்துக்கொங்க” என்று அவன் வளர்ப்புத் தந்தை கூற 

 

“வாயை மூடுங்க, யாரு இராசி கெட்டவன் என் பிரன்டா? இவன் யாரு தெரியுமா? இந்தியாவோட டொப் டென் கம்பனியில ஒன்னான ஏ.வி குரூப்ஸ் என்ட் கம்பனியோட எம.டி அந்த கம்பனி இவன் உழைப்பால் மட்டுமே உருவானது. இவன் பவருக்கும், அந்தஸ்துக்கும் முன்னாடி நீங்க எல்லாருமே ஒன்னுமே இல்லை”என்றான் மாதேஷ் அடக்கப்பட்ட கோபத்துடன்.

 

“அவனுக்கு ஒன்னுன்னா துடிக்கிறதுக்கு இத்தனை பேர் இருக்கோம், இவன் முன்னாடி ஏ்வி மட்டும் தான் இப்போ இந்தியாவோட முதல் பணக்காரரோட பொண்ணை கல்யாணம் பன்னி இருக்கான், உங்களால இனிமேல் இவனை அசிங்கபடுத்த முடியாது” என்றான் கவின்.

 

“இப்போ இல்லை, இவனால நீங்க எல்லாருமே ஒரு நாள் அசிங்கபடுவிங்க” என்று மீண்டும் அவர் கூற

 

“இவரு அடங்க மாட்டாரு, எல்லாம் உன்னால தான் கிறுஸ்தி, அன்றைக்கே சொன்னோம் இவருக்கு நம்ம ஸ்டைலில் தான் டிரீட்மன்ட் கொடுக்கனும்னு , நீ தான் கேட்க இல்லை” என்றான் அஸ்வின் சலித்துக் கொண்டே.

 

“என்ன அப்படி பார்க்குறிங்க, அஸ்வின் என்ன சொல்றான்னா?” என்று மீரா கேட்க, அவர்கள் தொடர்ந்து அவளையே பார்த்தனர்.

 

“உங்களோட கம்பனி டீல்ஸ் எல்லாம் கென்சல் பன்னி, உங்களுக்கு கிடைக்கிற எல்லா ஒர்டர்ஸையும் புளோக் பன்னி, எல்லாதையும் இழக்க வைக்கலாம்னு தான்” என்றாள் ஜீவி.

 

நால்வரும் அதிர்ச்சியாக அவர்களைப் பார்த்தனர். 

 

“மோதுற இடத்தை பார்த்து மோதனும்” என்றான் வினோ நக்கலாக.

 

“அவனே ஒரு பொம்பளை பொறுக்கி, உங்க மகளை மயக்கி தான் கல்யாணம் பன்னி இருப்பான், அதுவும் உங்க பணத்துக்காகவும், அவ அழகுக்காகவும் தான்” என அண்ணி கூறி முடியும் முன்னரே அவரது கன்னத்தை பதம் பார்த்தது கிறுவின் கரம்.

 

“யாரை பார்த்து பொம்பளை பொறுக்கின்னு சொல்லுற? அவன் என் புருஷன், அவனை பற்றி தப்பா ஒரு வார்த்தை பேசின கொன்னுடுவேன்”

 

“கண்ணகி தன்னோட புருஷனான கோவலனுக்காக மதுரைய எரிச்சா, என் புருஷனுக்காக உங்களை எரிக்கவும் நான் தயங்கமாட்டேன். உங்களை எல்லாம் உரு தெரியாமல் அழிக்க எனக்கு பத்து நிமிஷம் போதும். ஆனால் நான் உங்களை விட்டு வச்சிறிக்கிறதுக்கு காரணம் அவன் எனக்கு கிடைக்க ஏதோ ஒரு வகையில் நீங்களும் காரணம். அதற்காக மட்டும் தான்”

 

“ஆரவிற்கு என் சொத்து மேல எந்த அபிப்ராயமும் இல்லை. அவன் என் கழுத்துல தாலி கட்டினதில் இருந்து  இந்த நிமிஷம் வரைக்கும் நான் போட்டு இருந்த இருக்கிற டிரஸ், நகை எல்லாமே அவன் சம்பாத்தியத்துல தான் வாங்கியது”

 

“அன்ட் மிசிஸ் சசிகலா உங்களை பற்றிய உண்மைகளை நான் இப்போ வெளிவிட்டேன்னா, உங்க புருஷன் இப்போவே உங்களை டிவோர்ஸ் பன்னிட்டு போயிருவாரு” என்றாள்.

 

அவளுடைய பெயரைக் கூறியதில் அதிர்ச்சியாகப் பார்க்க,

 

” என் புருஷனை கஷ்டபடுத்தின அத்தனை பேரோட ஜாதகமும் என் கையில், உங்களை எல்லார் பற்றியும் நான் டிடெக்டிவ் மூலமா டீடெய்ல்ஸ் கலெக்ட் பன்னிட்டேன், ஆரவ் உன்னை காதலிச்சு ஏமாத்துனாரா? இல்லையான்னு இங்க இருக்கிற எல்லார் முன்னாடியும் நீ சொல்ல இல்லை, உன்னோட டீடெய்ல்ஸ் புள்ளா நாளைக்கு நியூஸ்ல வரும். எது வசதி?” என கிறு வினவ,

 

அவள் பயந்து,” ஆரவ் என்னை காதலிக்க இல்லை. நான் தான் காதலிச்சேன், அவன் ஒத்துக்க இல்லை. அதான் அவனை பழிவாங்க அப்படி சொன்னேன்” என்றாள்.

 

மற்றவர் மூவரும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தனர்.

 

“இதற்கு அப்பொறமா உங்களை எங்க லைய்ப்ல பார்த்தேன், தொலச்சிடுவேன்” என்று கூறி அவர்களை இங்கிருந்து விரட்டினாள் கிறு.

 

“அப்பா நீங்க எல்லாரும் உள்ள போங்க, நான் கண்ணாவை கூட்டிகிட்டு வரேன்” என்றாள்.

 

அனைவரும் அங்கிருந்து செல்ல, ஆரவும் அவளும் மட்டுமே இருந்தனர்.

ஆரவ் ‘சசிகலா கூறியது போல பணம், அழகிற்கு திருமணம் செய்தேன்’ என்று கிறு தன்னை தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று பயந்து இருந்தான். மறுபுறம் அவன் அனுபவித்த வலி அவனை பாடாய்படுத்தியது. தன்னவள் தன்னை இன்று தூய்மையானவன் என்று நிரூபித்துவிட்டாளே என்று பெருமிதமாகவும் இருந்தது.

 

ஆரவின் அருகில் செல்ல அவளை அவன் அணைத்துக் கொண்டான். அவன் பேசத்துவங்க, அவன் இதழில் விரலை வைத்து

 

“இப்போ எதுவும் பேசாத, நாம ரூமுக்கு போய் பேசலாம்” என்றாள்.

 

அவனை அழைத்துக் கொண்டு மீண்டும் ஸ்டேஜிற்கு வந்தாள். அவன் கையை மட்டும் விடாமல் இறுகப் பற்றி இருந்தாள்.

 

இரவு பன்னிரெண்டு மணியைப் போல், வருகை தந்த நபர்கள் குறைய குடும்ப அங்கத்தவர்கள், நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்..

 

கிறு ஓய்வெடுக்க ஹோட்டலில் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரூமிற்கு சென்றாள். அவள் சென்று முதலில் செய்தது அவள் அணிந்திருந்த நகைகளை கழற்றியது தான். பின் ஆடையை மாற்றி ரிபிரஷ்ஆக சென்று நைட்டிரஸ் அணிந்து வர, அதே நேரம் ஆரவ் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவன் ஏதும் கூறாமல் குளியறையினுள் புகுந்துக் கொண்டான். 

 

அஸ்வினிற்கு அழைப்பை ஏற்படுத்தி, இருவருக்கும் உணவை அனுப்புமாறு 

கூற, ஆரவ் குளித்து வர முன் இருவருக்குமான உணவும் வந்து சேர்ந்தது. ஆரவ் தண்ணீரில் தன் கண்ணீரை வடித்தான். வெளியே அவன் சாதரணமாக வர,

 

“கண்ணா ஒரு நிமிஷம்” என்றாள்.

 

“என்ன?” என்றான் அவளைப் பாராமல்.

 

அவனருகில் வந்தவள் தன்புறம் திருப்பி,

 

” நான் உன் பொன்டாட்டி தானே, எதுக்கு என் கிட்ட உன் பீலிங்சை மறைக்க பாக்குற?” என்று கேட்க,

 

“அப்படி எதுவும் இல்லை கிறுஸ்தி” என்றான் வேறு பக்கம் பார்த்து.

 

“அதை என்னை பார்த்து பேசு” என்றாள் 

 

அவளைப் பார்க்க அவன் அனுமதியின்றி கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது. அவளை கட்டிலில் அமரவைத்தவள்,

 

“இன்றைக்கு உன் மனசுல இருக்கிறதெல்லாம் சொல்லிரு” என்றாள் அவன் முகத்தைக் கையில் ஏந்தி.

 

அவள் இடையோடு அணைத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து சிறிது நேரம் அழுதான். அவளை அமர வைத்து அவள் மடியில் படுத்துக் கொண்டவன் மீண்டும் அவள் இடையோடு கட்டிக்கொண்டான்.

 

” என்னால முடியல்லை டி, எப்பவுமே அப்பா ஒரு வார்த்தை அன்பா பேசமாட்டாரான்னு ஏங்கி இருக்கேன், அம்மா கொஞ்சம் நல்லா பேசும் போது சந்தோஷமா இருந்தது. அந்த நாள் யாருமே என்னை நம்ப இல்லை டி, எனக்கு எவளோ கஷ்டமா இருந்தது தெரியுமா? என்னை விட்டு ஊர்ல இருக்கிறவங்க ஒதுங்கும் போது ரொம்ப வலிச்சுது டி. அந்த நாள் அம்மா கூட என்னை நம்ப இல்லைங்குறபோ என்னால தாங்க முடியல்லை. அவங்க கடைசியா சொன்ன வார்த்தையில நான் செத்துட்டேன் டி, இப்போவும் பணத்துக்காக மட்டும் என்னை தேடி வந்து இருக்காங்க டி, உலகத்துல எந்த பிள்ளைக்கும் வராத ஒரு கஷ்டத்தை அந்த கடவுள் எனக்கு கொடுத்து இருக்காரு” என்று அழுதான்.

 

“எனக்கு என்னை வளர்த்தவங்களுக்கு தண்டனை கொடுக்க முன்னாடி, என்னை பெற்றவர்களுக்கு தான் தண்டனை கொடுக்கனும். அவங்களை தான் இவங்களை விட அதிகமா வெறுக்குறேன், அவங்க என்னை ஒழுங்கா பார்த்துக்குட்டு இருந்திருந்தால், நான் இவளோ கஷ்டபட்டு இருக்கமாட்டேன்” என்றான் விரக்தியாக.

 

“நீ என்னை தப்பா நினைச்சியா? நான் உன் பணத்துக்காகவோ, உன் அழகுக்காகவோ உன்னை கல்யாணம் பன்ன இல்லை டி நம்பு” என்று கெஞ்ச

 

“லூசாடா நீ? அந்த எருமை எதோ சொன்னேன்னு என் கிட்ட இப்படி கேட்குற? எனக்கு உன்னை பற்றி தெரியாதா? இவங்க எல்லாரும் பேசினதை இதோட விட்ரு, அவங்க அவங்களோட லய்பை பார்க்கட்டும், நாம நம்ம லைய்பை பார்க்கலாம்” என்றாள்.

 

“நீ சாப்பிட இல்லை தானே? எந்திரி சாப்பிட்டுட்டு தூங்கு” என்று தன் மடியில் இருந்து எழ வைத்து கைகழுவி அவனுக்கு உணவை ஊட்டிவிட்டாள்.

 

“ஆரவ் உனக்கு அம்மா என்னென்ன பன்னனும்னு நினைத்தாய்?” என்று அவனுக்கு ஊட்டிக் கொண்டே கேட்க,

 

“அம்மா மடியில தூங்கனும், நான் வீட்டில் இருக்கிற நேரம் அவங்க தான் எனக்கு ஊட்டிவிடனும், அவங்க கிட்ட எல்லாவற்றையும் சேயார் பன்னும், அவங்கிட்ட சின்ன சின்ன தப்பு பன்னி திட்டு வாங்கனும், வெளியில் போகும் போது கன்னத்துல முத்தம் கொடுக்கனும்.  இப்படி நிறைய ஆசை இருக்கு” என்றான் ஏக்கமாக.

 

கிறுவும் அவன் தாய் அன்பிற்காக எந்த அளவிற்கு அவன் ஏங்கி உள்ளான் என்பதைப் புரிந்துக் கொண்டாள்.

 

“அப்பா?” என்று அவள் கேட்க,

 

“நான் தப்பு பன்னும் போது சொல்லிக் கொடுக்கனும், என்னோட ஒவ்வொரு படியிலையும் என் கைய பிடிச்சி முன்னாடி கூட்டிக்கிட்டு போகனும், நான் துவண்டு போற நேரம் எனக்கு தைரியம் வழங்கனும் இதை மாதிரி தான்” என்றான்.

 

“அண்ணா?” என்று கேட்க,

 

” அண்ணா, அக்கா, தம்பி, தங்கை எல்லாருமே ஒரே மாதிரி தான் கிறுஸ்தி, என் கூட செல்லச் சண்டை போடனும், என் கூட எல்லாவற்றையும் சேயார் பன்னும், எனக்கு சபோர்ட் பன்னனும், என்னை ஒரு நல்ல பெஸ்ட் பிரன்டா பார்க்கனும், என்னை விட்டுக் கொடுக்கக் கூடாது. சுருக்கமா சொன்னால் உங்க வீட்ல இருக்கிறது போல தான்” என்றான்.

 

” அது என்னடா உங்க வீடு?” என்று கோபமாக கேட்க,

 

“சொரி நம்ம வீடு” என்று புன்னகைத்தான்.

 

அவளும் உண்டு கைகழுவி வந்தவள், 

 

“கண்ணா நிச்சயமா நான் உன் ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்ற எல்லா முயற்சியும் எடுப்பேன், ஒரு அம்மாவா,அப்பாவா, பிரன்டா, உன் கூட பிறந்தவங்களா, உன் மனைவியா எப்போ தேவைப்பட்டாலும் அவங்களா மாறி என் அன்பை எப்பவும் உனக்கு கொடுப்பேன், என் கடைசி மூச்சுவரைக்கும் உன் கூட தான் இருப்பேன்” என்று கூறி அவன் நெற்றியில் முதன் முதலாக தன் இதழைப் பதித்தாள்.

 

ஆரவ் அவளை அணைத்துக் கொண்டு கண்கலங்கினான். அவளை கட்டிலில் கிடத்தி அவளை அணைத்து உறங்க, அவளும் அவனை அணைத்து உறங்கினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 65யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 65

நிலவு 65   நாட்கள் நகர ஷ்ரவன், கீதுவின் நிச்சய நாளும் வந்தது. அன்று அனைவரும் மீண்டுமொரு முறை ஒன்று சேர்ந்ததால் மகிழ்ச்சியாக இருந்தனர்.    “மச்சான் உனக்கு இந்த ஹெயார் ஸ்டைல் செட் ஆகல்ல டா” என்று வினோ கலைக்க,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19

காலை 6 மணிக்கு ஹொஸ்டலின் முன் கார் வந்து நின்றது. வார்டன் அறைக் கதவைத் தட்ட, ஒருவரும் விழிக்காமல் தூங்கினர்.   “மீரா” என்று பலமாகத் தட்ட அதில் விழித்த கிறு, அறைக் கதவை திறக்க வார்டன் கார் வந்திருப்பதாகக் கூறி

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52   “வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான்.    “ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,   “வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.   அத்தை,