Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 34

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 34

நிலவு 34

 

அடுத்த நாள் காலையில் கிறு விழிக்க, குழந்தை போல் தூங்கும் தன் கணவனையே கண்டாள். அவனை சிறிது நேரம் இரசித்தவள் எழப்போக அவளை அணைத்து இருந்த அவனது பிடி இறுகியது.

 

“கண்ணா, டைம் ஆச்சு. என்னை விடு நான் எந்திரிச்சு போகனும்” என்றாள் உட்சென்ற குரலில்.

 

“பிளீஸ் டி, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று கூறி மீண்டும் அவளை அணைத்து உறங்கினான்.

 

“கண்ணா, நீ தூங்கு, என்னை விடு டா” என்றாள்.

 

“ரொம்ப நாளைக்கு அப்பொறமா நிம்மதியா தூங்கினேன், எனக்கு சொந்தமானவளை கட்டிபிடிச்சிட்டு, உனக்கு அதற்கும் பொறமை” என்றான்.

 

“கண்ணா please” என்று அவள் கெஞ்ச அவன் பிடியைத் தளர்த்த அங்கிருந்து குளியலறைக்குள் ஓடினாள்.

 

குளித்து, பிங்க் நிற சுடி அணிந்து புத்தம் புதுமலராய் கீழே சென்றாள்.

 

“ஆரவ் எத்தனை மணிக்கு வந்தான்?” என்று அஸ்வின் கேட்க, 

 

“இரண்டு மணி இருக்கும்” என்றாள் கிறு காபியைப் பருகிக் கொண்டே.

 

அரவிந், சாவி இருவரும் அவளைப் பார்க்க, 

 

“என்ன அப்படி பார்க்குறிங்க?” என்று அவள் கேட்க, 

 

“நீ தூங்கிட்டியே, உனக்கு எப்படி தெரியும்”? என்றார் சாவி.

 

“அவன் வந்ததும் எந்திரிச்சிட்டேன்” என்றாள். 

 

நேற்று இரவு நடந்தது அனைத்தும் நினைவர அங்கிருந்து எழுந்து கார்டினிற்குச் சென்றாள்.

 

“என்ன டி டல்லா இருக்க?” என்று வினோ கேட்க, 

 

அப்போதே அவள் கார்டனைப் பார்க்க அஸ்வினைத் தவிற அனைவருமே அங்கு ஆஜராகி இருந்தனர்.

 

“சொல்லுடி” என்றாள் ஜீவி.

 

“இல்லை நீங்க எல்லாரும் பன்ன வேலையை நினைச்சா தான் பயமா இருக்கு. இன்றைக்கு ஆரவ் என்ன பன்ன போறான்னு நினைத்தால் ஒரு பக்கம் பயமா இருக்கு. இன்னொரு பக்கம் ரிசப்ஷன்ல எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு நினைக்குறேன்” என்றாள்.

 

“எந்த பிரச்சனையும் வராது. நாங்கள் தான் இருக்கோமே” என்றான் கவின்.

 

“ஆரவ் யாருன்னு காட்ட வேணாம்?” என்றான் மாதேஷ் கோபமாக.

 

“கிறு, நீ பயப்படாத, எதுவும் தப்பா நடக்காது. இன்றைக்கு ஆரவோட எல்லா பிரச்சனைக்கும் முடிவு கிடைச்சிரும்” என்று கூறி அங்கே வந்தான் அஸ்வின்.

 

“எல்லாருமே சேர்ந்து என் வாழ்க்கையில கும்மி அடிக்கிறிங்க, தப்பா ஏதாவது நடந்தது, ஒருத்தனையும் விடமாட்டேன்” என்றாள் கிறு.

 

“யேன்டி அபசகுணமா பேசுற? எல்லாமே நல்லதாவே நடக்கும்னு நினைச்சுகோ” என்றாள் மீரா.

 

“ஆமான்டி யேன் பேசமாட்டிங்௧? இதுவும் பேசுவிங்க இன்னமும் பேசுவிங்க, என் இடத்துல இருந்து யாராவது யோசிச்சிங்களா?” என்றாள் கிறு.

 

“உன் நிலமை புரியிது கிறு. இன்றைக்கு ஆரவிற்கு நாம எல்லாருமே இருக்கோம்னு புரூவ் பன்னி ஆகனும்” என்றாள் தர்ஷூ.

 

“பிரச்சனை ஓயிரப்போ ஆரவ் அண்ணாக்கு நீ தான் பக்கபலமா இருக்கனும். அவருக்கு அப்போ உன் தேவைதான் அதிகம்” என்றான் வினோ.

 

“அதை நினைச்சா தான் பயமா இருக்கு. அன்றைக்கு அவனை அடிச்சதுக்கு இது தான் சான்ஸ்னு பழிவாங்காம இருந்தால் சரி டா” என்றாள்.

 

மற்றவர்கள் இவளின் பதிலைக் கேட்டு சிரிக்க, வேலைக்காரர் ஒருவர் அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

அவர்களும் உள்ளே சாப்பிட அமர ஆரவும் வந்து சேர்ந்தான். அனைவரும் மகிழ்ச்சியாக உணவை  உண்டு முடித்தனர்.

 

அனைவரும் ஹாலில் அமர்ந்து மகிழ்ச்சியாக  பேசும் போது, 

 

மீரா, “எதுக்கு கிறு நீ நெட்போல் விளையாடுறதை விட்ட?” என்று கேட்க,

 

கிறுவின் கண்களின் முன்னால் சில காட்சிகள் படமாக ஓடின

‘ ஆறுபேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, அதில் நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள், அவர்கள் ஆறுபேரும் சேர்ந்து அரட்டை அடிப்பது, நான்கு பெண்களும் சேர்ந்து netball விளையாடுவது. அவர்கள் நால்வரும் பயிற்சி செய்வது. மற்ற இரு ஆண்களும் அவர்களது பயிற்சியை முடித்து இவர்களுக்காக அமர்ந்து இருப்பது, ஒரு மொபைல் அலறுவது, வேறு ஒருவன் இவர்கள் நால்வரைப் பார்த்து ஏளனமாக புன்னகைப்பது, நால்வரில் ஒருவர் உயரமான ஒரு கட்டத்தில் மேல் இருந்து குதிப்பது, மற்ற மூன்று பெண்களும் ஒரு தாளை வைத்து கதறுவது, மற்ற ஐவரும் hospital ல் அழுவது, ஐவரும் பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்வது   

என்பவை படமாக ஓடியது.

 

கண்ணீர் சுரப்பதைப் பார்த்தவள் வேகமாக அதைத் துடைத்து, தன் முகபாவனைகளை  சாதாரண நிலைக்கு மாற்றிக் கொண்டாள். இவை அனைத்தையும் ஆரவ் கவனித்தான்.

 

“ஸ்டடீசில் கன்சன்ட்ரேட் பன்ன முடியல்லை அதான் விட்டுட்டேன்” என்றாள்.

 

அதன் பிறகு இன்று மாலை நடக்க இருக்கும் ரிசப்ஷனிற்காக அனைவரும் தயாராகினர். மாலை ஏழு மணியளவில் ரிசப்ஷன் ஆரம்பமாகியது.

 

அந்த பைவ் ஸ்டார் ஹொட்டல் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பல வகையான பூக்கள், மற்று செடிகள் மூலம் அதன் பிரம்மாண்டமும், அழகும் கூடி இருந்தது. அந்த வீதி, கட்டடம் முழவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அங்கே உருவாக்கப்பட்டு இருந்த ஸ்டேஜ் அனைவருமே வியந்து பார்வையை நகர்த்த முடியாத அளவிற்கு முழுவதும் பல வண்ணங்கள் நிறைந்த  இயற்கைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 

அப்போதே மணமக்கள் இருவரும் வெவ்வேறு கார்களில் வந்து இறங்கினர். முதலில் ஆரவ் சிகப்பு, தங்க நிற ஷர்வாணியில் ஆண்மைக்கே உரித்தான அழகுடன் வந்திறங்க, அடுத்த காரில் இருந்து கிறு நீலம், சிகப்பு, தங்க நிற லெகங்காவில் இறங்கினாள். அங்கிருந்த ஒருவராளும் கிறுவை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. 

 

கிறுவைப் பார்ப்பதா, இல்லை ஆரவைப் பார்ப்பதா என்று அனைவருமே குழம்பினர். இருவரும் ஒருவருக்கொருவர் அழகில் குறைவு இல்லை என்ற ரீதியிலேயே இருந்தனர். ஆரவோ சிறு ஒப்பனையிலேயே கிறுவிடம் தடுமாறுபவன் இன்று அவளது மொத்த அழகையும் சேர்த்து இருந்ததால் அவன் நிலை திண்டாட்டமாக இருந்தது. கிறுவும் ஆரவை ஒருவரும் அறியா வண்ணம் இரசிக்க ஆரம்பித்தாள்.

 

மணமக்கள் இருவரும் ஸ்டேஜிற்கு சென்று சோபாவில் அமர, அனைவருமே அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் முக்கிய விருந்தினர்கள் அனைவரும் வர ஆரம்பிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வர அவர்களை வரவேற்பதில் பங்கெடுத்தனர். மணமக்களுக்கு துணையாக அஸ்வின், மீரா ஜோடி இருந்தது.

 

ஆரவ், அஸ்வின்,மாதேஷ், கவினின் கோலேஜ் நண்பர்கள், பாடசாலை நண்பர்கள், தொழின்முறை நண்பர்கள், கிறுவின் பாடசாலை, கோலேஜ் நண்பர்கள் தூரத்து உறவினர்கள் அனைவருமே வந்து இருந்தனர்.  சிறிது நேரத்தில் அரவிந்நாதனின் தொழின்முறை நண்பர்கள், பிரபல தொழில் அதிபர்கள், சில அரசியல்வாதிகள், இந்தியாவின் முக்கிய பணக்காரர்கள், Z groups and company சார்பாகவும் வருகைத் தந்து இருந்தனர். சி.எம் உம் வருகை தர அங்கிருந்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட, நெரிசலும் அதிகமாகியது.

 

இதைப் பார்த்த கிறு ஆரவின் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டாள். அவனும் ஆதரவாக அவள் கைப்பற்ற, அஸ்வின் அனைவர் முன்னிலையிலும் பேச ஆரம்பித்தான். 

 

“ஹெலோ பிரன்ஸ், இன்றைக்கு எங்க வீட்டு இளவரசியோட ரிசப்ஷன், இது வரைக்கும் என் தங்கச்சியை எங்க குடும்பத்தை தவிற வேறு யாருமே பார்த்தது இல்லை. இன்றைக்கு உங்க எல்லாருக்கும், அவளையும் எங்க வீட்டு மாப்பிள்ளையையும் அறிமுகப்படுத்துறதில் சந்தோஷப்படுகிறேன்” என்றான்.

 

“இவ எங்களோட செல்ல தங்கை, அதாவது மாதேஷ், கவின் , அஸ்வினோட தங்கை கிறுஸ்திகா. இவ அரவிந்நாதன், சாவியோட பெற்ற மகளா இருந்தாலும், எங்க மூன்று பேரோட அம்மாக்களும் பெறாத மகள்” என்று கூற அவர்களின் கண்கள் கலங்கின. 

 

“மாப்பிள்ளை ஆரவ் கண்ணா, இவனை ஆரவ்னு சொன்னால் இங்க இருக்கிற நிறைய பேருக்கு தெரியாது. ஏ.வி ன்னு சொன்னால் தெரியும். ஏ.வி குரூப்ஸ் என்ட் கம்பனியோட எம்.டி” என்றான் அஸ்வின். 

 

“இவன் எங்களோட பெஸ்ட் பிரன்டு, இப்போ எங்க வீட்டு மாப்பிள்ளை, எங்களுக்கு மச்சான்” என்றான் கவின். 

 

இதைக் கேட்ட நால்வரின் முகம் அதிர்ச்சி அடைந்தது. 

 

“இவனை போல ஒருத்தன் என் தங்கைக்கு மாப்பிள்ளையா கிடைச்சது எங்களுக்கு கிடைச்ச வரம்” என்று ஆரவைக் கட்டிக் கொள்ள மற்ற இருவரும் இவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர். 

 

அப்போதே நால்வரின் நட்பின் ஆழத்தை அங்கு இருந்தோர் அனைவரும் புரிந்துக் கொண்டனர்.

 

இதைப்பார்த்த அவர்களது துணைகள் கிறுவின் அருகில் சென்று நின்று கண்கலங்கினர்.

 

கவின்”நாங்கள் நான்கு பேர் மட்டும் இல்லை, எங்களோட மனைவிகளும் பெஸ்ட் பிரன்ஸ் தான்” என்றான். 

 

அங்கையே மீரா, அஸ்வின் திருமணம் பற்றி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. 

 

ஒவ்வொருவராக மணமக்களுக்கு பரிசுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அப்போது அங்கே வந்த நான்கு நபர்களைப் பார்த்த ஆரவ் முதலில் அதிர்ச்சி அடைந்தவன், பின்னர் சுதாகரித்து அவர்களது பரிசையும்,வாழ்தையும் பெற்றான். பின் கிறுவின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். அவனது முகத்தைப் பார்த்தவளுக்கு கோபம், இயலாமை போன்ற உணர்வுகள் தென்பட்டன. அதன் பின் அவளது பிடியும் இறுக, அது நான் உனக்கு இருக்கிறேன் என்றது.

 

மற்றவர்கள் உணவருந்தச் செல்ல மணமக்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆரவ் உண்ணாமல் அங்கே இருந்த கார்டன் பகுதிக்குச் சென்றான். சிறிது நேரம் தனிமையில் இருக்க, 

 

“ஆரவ்” என்ற குரல் அவன் தனிமையைக் கலைக்க, அக்குரல் வந்த திசையை பார்த்தான்.

 

அங்கே அவனை வளர்த்த தாய், தந்தை, அண்ணன், அவன் மனைவி இருந்தனர். 

 

“ஆரவ் எங்களை மன்னிச்சிருப்பா, நாங்க தப்பு பன்னிட்டோம். தயவு செஞ்சு எங்களை ஏத்துக்கோபா, உன் குடும்பம் ஒருத்தரும் இல்லாமல் நீ அநாதையா நிக்கிறப்போ எனக்கு ரொம்ப வலிச்சது” என்றார் அவனது தாயார்.

 

அதே நேரம் அங்கு நண்பர்கள்  அனைவரும் வர அவர் அநாதை என்று கூறியதில் கோபமடைந்த மாதேஷ் பேச முன் கிறு பேசினாள்.

 

“யார் நீங்க? யாரு அநாதை? தொட்டு தாலி கட்டின பொன்டாட்டி குத்துக்கல் ஆட்டம் உங்க முன்னாடி இருக்கும் போது, நீங்க எப்படி சொல்லுவிங்க என் புருஷன் அநாதைன்னு?” என்றாள்.

 

“வாமா மருமகளே, நீயாவது உன் புருஷன் கிட்ட சொல்லுமா எங்களை மன்னிக்க சொல்லி, அவன் போனதுக்கு அப்பொறம் தான் அவன் அருமையை உணர்ந்தோம்” என்று நீலிக் கண்ணீர் வடிக்க,

 

“நிறுத்துங்க” என்று என்று கர்ஜிக்கும் குரல் கேட்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10

நிலவு 10   “ஆரவ் இன்னும் நீ என்னை உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையா?” என்று கிறுஸ்திகா கேட்க,    அவன் அமைதியாக கண்கள் கலங்க அவளையே பார்த்தான்.    அவன் அமைதியைப் பார்த்தவளுக்கு ‘இதயத்தில் எவரோ ஈட்டியைப் பாய்ச்சியது போல’

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 67யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 67

நிலவு 67   நான்கு நண்பிகளும் அவர்களின் கணவன்களோடு தங்கள் கனவிற்காக அவுஸ்திரேலியாவை நோக்கி குடும்பத்தை விட்டு பயணமானார்கள். அங்கு சென்றவர்கள் முதலில் ஓய்வு எடுத்தனர். அடுத்த இரண்டு நாட்களில் மெச் நடைபெற இருந்தது. கோர்ச் இரண்டு நாட்களும் இவர்களுக்கு தமது

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 32யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 32

  நிலவு 32   “மீரா, இப்போ நீ நிற்க இல்லை, இனிமேல் உன் கூட பேசவே மாட்டேன்” என்று அவள் பின்னே சென்றான் அஸ்வின் அவள் அறைக்கு.   “அச்சு, இது சின்ன குழந்தைகள் பேசுறது போல இருக்குடா” என்று