Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 33

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 33

நிலவு 33

 

ஏ.வி குரூப்ஸ் என்ட் கம்பனி என்று சில்வர் நிறத்தில் அந்தப் பெயர் மிகப் பெரிய பிரம்மாண்டமான கட்டத்தில் பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு மின்னியது. அந்த கட்டடத்தின் முன்னே சென்று நின்றது ஆரவின் கறுப்பு நிற கார். அதிலிருந்து இறங்கியவன் மின்னல் வேகத்தில் நடந்து தனது அறைக்குச் சென்றான். 

அவனது பி.ஏ ஷ்ரவனிடம் பியூன், 

 

“சேர், உங்களை எம்.டி சேர் உள்ள வர சொன்னாரு” என்று அங்கிருந்து நகர்ந்தார்.

 

‘ ஷ்ரவன், நீ இன்றைக்கு காலி டா, நீ தான் அஸ்வின் சேர் கிட்ட சொன்னன்னு தெரிஞ்சு இருக்கும். உன்னை துவைச்சு எடுக்க போறாரு. நீ வேறு வேலை தேடுறதுக்கு தயாராயிரு டா’ என்று மனதில் நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

 

“எக்ஸ்கியூஸ் மீ சேர்” என்று அவன் உள் நுழைந்து, ஆரவ் திட்டுவதைக் கேட்க தன் மனதைத் தயார்படுத்திக் கொண்டு இருந்தான்.

 

“ஷ்ரவன், நான் சொன்ன வேலை எல்லாம் முடிஞ்சுதா?” என்று ஆரவ் கேட்க, 

 

ஒரு நிமிடம் திகைத்து, அவனை விழித்துப் பார்த்தான்.

 

“ஷ்ரவன் வேலை முடிஞ்சதான்னு கேட்டேன்” என்றான் சற்று கண்டிப்பான குரலில்.

 

“ஆமா சேர், எல்லாம் முடிஞ்சது, நம்ம கம்பனிக்கே அவங்க வராங்க. ரிடென் டிகெட் இன்றைக்கு ஆறு மணிக்கு சேர்” என்ற மேலதிக தகவலையும் சேர்த்துக் கூறினான்.

 

“ஒகே, ஷ்ரவன் நான் எல்லாவற்றையும் ஒரு முறை பார்க்க வேண்டும்” எனக் கூற, 

 

ஷ்ரவுனும் அனைத்தையும் அவனுக்கு காட்ட, அதில் திருப்தி அடைந்து தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு கண்களை மூடினான்.

 

“சேர், ஒன்று சொன்னால் தப்பா நினைக்க மாட்டிங்களே” என்று அவன் தயங்கித் தயங்கி கூற,

 

“சொல்லுங்க ஷ்ரவன்” என்றான்.

 

“இத்தனை நாளா உங்க முகத்துல இருந்த இறுக்கம், கடுமை எதுவுமே இப்போ இல்லை சேர், சந்தோஷம், நிம்மதி, சிரிப்பு தான் சேர் இருக்கு கடைசி வரைக்கும் நீங்க இப்படி சந்தோஷமாக இருக்கனும்” என்றான் உண்மையான அன்புடன்.

 

“நீ சொல்கிறது உண்மை தான், எனக்கே என் மாற்றம் புரியிது” என்றதோடு 

 

“எனக்கு என் வாழ்க்கையில் நான் எதிர்பார்க்காத ஒரு வரத்தை எனக்கு அந்த கடவுள்  கொடுத்து இருக்காரு. அது எனக்கு கிடைச்ச பொக்கிஷம் ஷரவன்” என்று கண்கள் மின்னக் கூறியவனை ஷ்ரவன் பார்த்தான்.

 

“சேர் உள்ள வரலாமா?” என்று ஒருவள் அனுமதி கேட்க,

 

“வாங்க ரோசி” என்றான்.

 

“சேர், இது ஜி.கே கம்பனியோட பைல், ஒரு தடவை செக் பன்னி பார்த்துட்டு சைன் பன்னிங்கன்னா, பைலை அவங்களுக்கு சென்ட் பன்னலாம்” என்றாள்.

 

அதைப் பார்த்தவன் சில தவறுகளைக் கூறி, திருத்துவதற்காக அதை ஷ்ரவனிடம் வழங்கி, வேறு முக்கிய பைலொன்றை வழங்கி அதைப் பார்க்குமாறு ரோசியை அனுப்பிவைத்தான். 

 

ஷ்ரவனுடைய இடம் அதே அறையில் இருந்ததால் அந்த பைலைப் பார்க்கும் போது, அஸ்வின் ஷ்ரவனுக்கு அழைத்தான்.

 

“சேர் சொல்லுங்க” என்றான்.

 

“ஆரவ் இருக்கானா?” என்று கேட்க,

 

“ஆமா சேர் இருக்காரு, இருங்க கொடுக்குறேன்” என்று ஆரவின் டேபளிற்கு சென்றான்.

 

“சேர், அஸ்வின் சேர் பேசுறாரு” என்று மொபைலை வழங்க, 

 

“உனக்கு ஸ்பீகர் ஒன்னில் பேசினால், வேலை செய்ய கஷ்டமா ஷ்ரவன்” என்று ஆரவ் கேட்க,

 

“இல்லை சேர்” என்றான்.

 

அதை டேபளில் வைத்து, லெப்பைப் பார்த்து பேச ஆரம்பித்தான் ஆரவ்.

 

“சொல்லு மச்சான்” என்று கூற,

 

“எங்க டா உன் மொபைல்? ஸ்விச் ஓப்ன்னு வருது?” என்று கேட்க,

 

“மொபைலில் சார்ஜ் இல்லை டா அதான், சார்ஜூக்கு போட்டு இருக்கேன்” என்றான்.

 

“தயாரா இருக்கியாடா?” என்று அஸ்வின் கேட்க,

 

“ஆமா டா” என்றான் பூரிப்புடன்.

 

சிறிது நேரம் அதைப் பற்றிப் பேச, திடீரென்று அஸ்வின் புறத்தில் இருந்து கத்தும் சத்தம் கேட்க, 

 

“என்னாச்சு டா?” என்று ஆரவ் பதற

 

“எல்லாரும் உட்கார்ந்து பப்ஜி விளையாடுறாங்க டா, அதில் கவின் அவுட் ஆகிட்டான் அதான்” என்றான் அஸ்வின்.

 

“அதானே பார்த்தேன், இவனுங்க தேவையானதுக்கு எப்போ ஒழுங்கா ரியெக்ட் பன்னி இருக்காங்க” என்றான் ஆரவ்.

 

கிறு சண்டையிடும் சத்தம் ஆரவிற்கு கேட்க,

 

“இவ எதுக்குடா கத்துறா?” என்று ஆரவ் கேட்க,

 

“உன் பொன்டாட்டி மாதேஷ் ஒழுங்காக விளையாட இல்லைன்னு திட்றா” என்றான் அஸ்வின் சிரித்து 

 

ஆரவ் சிரித்து, “அவ இன்னும் சின்ன குழந்தை போலவே இருக்காடா” என்றான்.

 

“உன் பொன்டாட்டியை நீ தான் சரி பன்னி எடுக்கனும்” என்றான் அஸ்வின்.

 

“மச்சான் உன் பெயருக்கு அர்சணை பன்ன அம்மா, பெரியம்மா எல்லாரும் போயிருக்காங்க, மீடிங்கை சக்ஸஸ் பன்னுடா, இரு உன் பொன்டாட்டி கிட்ட கொடுக்குறேன்” என்றான் அஸ்வின்.

 

“ஒகேடா,” என்று கிறு பேசும் வரையில் அமைதி காத்து லெப்பில் வேலைப் பார்த்தான்.

 

“பனைமரம் ஆல் த பெஸ்ட் நீ சொன்னது போல நான் யார் கிட்டவும் வம்பு இழுக்க இல்லை. டைமுக்கு சாப்பிடு. இப்போ நான் பிசியா இருக்கேன், உன் மீடிங் முடிஞ்சதுக்கு அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

 

இதைக் கேட்ட ஷ்ரவன், அக்குரல் தனக்கு பரீட்சயமானது போல் தோன்ற அதை ஒதுக்கி வைத்தவன், ஆரைவை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

 

“என்னாச்சு ஷ்ரவன்? எதுக்கு அப்படி பார்க்குறிங்க?” என்று கேட்க,

 

“சேர் உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா?” என்று கேட்க,

 

“ஆமா, நேற்று காலையில் தான், நாளைக்கு ரிசப்ஷன்” என்றான் கூலாக.

 

“சேர் அதான் வர முடியாதுன்னு சொன்னிங்களா?” என்று கேட்க, 

 

“ஆமா, என் வைப் தான் என் கூட சண்டை போட்டு அனுப்பி வைச்சா” என்றான் சிரித்துக் கொண்டே.

 

கிறுவிடம் கூறியதால் டைமிற்கு பகல் உணவை உண்டு, மூன்று மணி மீடிங்கிற்கு தயாராகினான்.

 

மூன்று மணியளவில் மீடிங் ஆரம்பமாகி, மீடிங்கையும் வெற்றிகரமாக முடித்தான். அதில் அவன் நாளைக்கு தனக்கு நடைபெற இருக்கும் ரிசப்ஷனிற்காக அவர்களை அழைக்க அவர்களும் கண்டிப்பாக அதில் கலந்துக் கொள்வதாகவும் கூறினர். ரிசப்ஷன் நாளை நடைபெற இருப்பதால், ரிசெப்ஷன் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு புரொஜெக்டை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் அவனுக்கு எதிர்ப்பாரா சலுகையாக வழங்கப்பட்டது.

 

அவர்கள் சென்ற பின் ஸ்டாபிடம், மீடிங் சக்ஸஸ் பற்றி கூறி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறி தனது அலுவலக அறைக்குள் நுழைந்துக் கொண்டான். அவனது staffs அனைவருக்கும் அதிர்ச்சியே. இத்தனை நாட்கள் இறுகிய முகத்துடன் வலம் வந்தவன் இன்று வந்ததில் இருந்து சிரித்தமுகமாக இருப்பது. இன்று முதல் அவனுக்கு இருந்து பெண் இரசிகைகள் அவனது அலுவலகத்தில் அதிகரித்ததை அவன் அறியவில்லை.

 

அஸ்வின், “மச்சான் சக்சஸ்” என்று மீடிங்கில் நடந்து முடிந்த அனைத்தையும் கூறி இன்னும் சற்று நேரத்தில் அவன் கிளம்பிவிடுவதாகக் கூற,

 

“ஆரவ் உன் பொன்டாட்டி, மூன்று மணிக்கு சாமி அறைக்குள்ள போனவ, இன்னும் வரவில்லை. உனக்காக வேண்டிட்டு இருக்கா” என்றான் அஸ்வின்.

 

தன்னவளை நினைத்து ஆரவிற்கு பெருமிதமாக இருந்தது. அனைவரிடமும் பேசி விட்டு மொபைலை வைத்தான். 

 

“ஷ்ரவன் office ல யாருக்கும் எனக்கு திருமணம் முடிந்தததைப் பற்றி, இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம். என் வைபை இங்கே கூட்டிட்டு வருவேன், அப்போ சின்னதா ஒரு விருந்து வைத்து சொல்லலாம்” என்றான். 

 

அவனும் “சரி” என்று ஒப்புக் கொண்டான்.

 

மாலை ஆறு மணி பிளைட்டிற்கு சென்றவன் அவர்களது ஊரிற்கு வந்து சேரும் போது, இரவு இரண்டு மணியாகியது.

 

அவன் வந்தவுடன் சாவியும், அரவிந் நாதனுமே கதவைத் திறந்து வாழ்த்தை தெரிவித்தனர். அவர்களிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு அறைக்கு வந்தான். விளக்கை எரிய வைக்க கட்டிலில் கிறு இருக்கவில்லை. அவளைத் தேடி பல்கனிக்கு வந்தவன் கிறு குளிரில் நடுங்கி சுவரில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவளை கையிலேந்தி கட்டிலில் கிடத்தி போர்வையால் போர்த்தி விட்டு பிரஷப்பாக சென்றான்.

 

அவன் விளக்கை அணைத்து உறங்கும் போது கிறு பயத்தில் எழுந்து “கண்ணா” என்று பதற, அவளருகில் சென்றவன்,

 

“கிறுஸ்தி நான் இங்க தான் இருக்கேன்” என்றான்.

 

“கண்ணா என்னை தனியா விட்டுட்டு போயிடாத, எனக்கு பயமா இருக்கு டா, என்னை ஏதாவது அவன் பன்னிருவான்” என்று அவள் பிதற்றினாள்.

 

அவளது அணைப்பு இறுகிக் கொண்டு செல்ல, அவள் பயத்தை உணர்ந்தவன் “கிறுஸ்தி நான் எங்கேயும் போக இல்லை, உன் கூட தான் இருக்கேன், உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்று அவள் கூந்தலை வருடிக் கொடுத்தான். 

 

அவளை கட்டிலில் உறங்க வைத்தவன், அவளை அணைத்துக் கொண்டு உறங்க, கிறு அவன் நெஞ்சில் தலைவைத்துக் கொண்டாள். ஆரவின் டீசர்ட் ஈரமாவதை உணர்ந்தவன், அவள் அழுகிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டான்.

 

“கிறுஸ்தி என்னடி ஆச்சு? எதுக்கு அழற?” என்று எழப்போக, 

 

அவனை எழவிடமால் அவனை அணைத்துக் கொண்டவள், “please கண்ணா என் கிட்ட எதுவும் கேட்காத, நான் இப்போ சொல்கிற நிலமையில் இல்லை டா” என்றாள் அழுதுக் கொண்டே.

 

“கண்ணா, உண்மையாவே என்னை தனியா விட்டுட்டு எங்கேயும் போக மாட்ட இல்லை?” என்று பயந்தவாறே கேட்க,

 

“நிச்சயமா போக மாட்டேன் கிறுஸ்தி. உன்னைவிட்டா எனக்கு யாரு இருக்கா?” என்று அவள் நெற்றியில் தனது முதல் இதழ் ஒற்றலைப் பதித்தான்.

 

அவன் அன்பில் கரைந்தவள், அப்படியே உறங்க, ஆரவ் ‘தைரியமா இருக்கும் பெண் இவள்,எதற்காக அழுகிறாள்? அவன் யார்? அவனுக்காக ஏன் பயப்படுகிறாள்?’ என்று யோசித்தவாறே களைப்பின் காரணமாக அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 21யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 21

“மீரா என்னடி பேசாம இருக்க?” என்று அவளை உசுப்பேற்றி விட, மொபைலை அவனிடம் வீசி விட்டு அழுதுக் கொண்டே தனது அறைக்கு ஓடினாள் மீரா.   கவின், “எதுக்கு கிறு இப்படி பன்ன?” என்று கேட்க,   “நான் என்ன பன்னேன்?”

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52   “வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான்.    “ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,   “வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.   அத்தை,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1

அறிமுகம்   அவரை நோக்கி, அந்த சித்தர் கூறினார்.    “உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது. அவளுக்காக இவன் இரவாக மாறி அவளை