Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 31

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 31

நிலவு 31

 

சிறிது நேரத்தில் ஐயர் தாலியை வழங்க அதை அவளுடைய சங்குக் கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு சாஸ்திர சம்பிரதாயப்படி முழுமையாக அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் ஆரவ் கண்ணா. பின் இருவரும் விரல் பிடித்து அக்னியை வலம் வந்தனர். பெரியவர்கள் அனைவரிடமும் இருவரும் காலில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டனர்.

 

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அவளுடைய தாமரைப் பாதங்களைப் பிடித்து மெட்டிகளை இருகால்களிற்கும் அணிவித்தான். பின்னர், அடுத்து நடக்கவிருக்கும் மகா பூஜைக்கு ஏற்பாடுகள் நடக்க, மணமக்கள் கோயிலின் ஒரு புறம் அமர்ந்து இருந்தார்கள். இருவருமே எதையும் பேசிக் கொள்ளவில்லை. ஏனோ இருவரின் மனதும் நிம்மதியாக இருந்ததை இருவருமே உணர்ந்தனர்.

 

“மச்சான் இவங்க பேசிப்பாங்கன்னு தான், நாங்க இங்க இருக்கோம்” என்றான் கவின்.

 

“பாரு இரண்டு பேரும் முகத்தை சரி பாக்குறாங்க இல்லை”என்றாள் தர்ஷூ.

 

“விடுங்க டா, இப்போ கல்யாணம் ஆகிறிச்சி, யாரு முதல்ல பேசுறதுன்னு தயக்கம் கூட இருக்கலாம்” என்றாள் மீரா.

 

” ஆமா, எனக்கு என்னமோ இவ சொல்றது தான் உண்மைனு தோனுது” என்றான் மாதேஷ்.

 

“பரவால்லியே மீரா, உனக்கும் கொஞ்சம் மூளை இருக்கே” என்றான் கவின்.

 

“மிஸ்டர் கவின், ஐ ஏம் அ சைகொலொஜிஸ்ட்” என்று மீரா கூற,

 

“உண்மையா நீ சைக்கொலொஜிஸ்டா?”  என்று கவின் கேட்க,

 

“ஆமான்டா” என்றாள் மீரா.

 

“எதுக்குடி எங்க கிட்ட மறைச்ச?” என்று ஜீவி கேட்க,

 

“நான் எப்போ மறைச்சேன், நீங்க யாருமே கேட்கவே இல்லையே, அதை பற்றி பேசுற நிலமையில் கூட யாரும் இருக்க இல்லையே” என்றாள்.

 

“ஆமா, கிறு என்ன படிச்சிருக்கா?” ஜீவி என்று கேட்க,

 

“எம்.பி.ஏ அவளோட கோலேஜில் அவ தான் கோல்ட் மெடலிஸ்ட்” என்றான் அஸ்வின்.

 

“மச்சான், உண்மையாகவா சொல்ற?” என மாதேஷ் கேட்க,

 

அவன் “ஆம்”என்றான்.

 

“அவ நெட் போல் பிளேயராச்சே இப்போவும் விளையாடுறாளா?” என்று கவின் கேட்க,

 

“இல்லை டா, நெட்போல் விளையாடுறதால் ஒழுங்கா படிக்க முடியல்லன்னு, விட்டுட்டா” என்றான் அஸ்வின்.

 

“அவளுக்கு ஸ்போர்ட்சில் இருந்த வெறிக்கு, இன்டர்நெஷனல் நெட்போல் டீமிற்கு சிலெக்ட் ஆகுவான்னு நினைச்சேன். ஆனால் நெட்போலை விட்டது எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு” என்றான் வினோ.

 

“ஆமா, அவ நெட்போலை ரொம்ப லவ் பன்னா, ஆனால் அதை விட்டுட்டான்னு சொல்கிறதை என்னால் நம்ப முடியல்லை” என்றாள் தர்ஷூ.

 

“அதை விடுங்க, முதலில் இவங்களை பேச வைக்குற வழிய பாருங்க” என்றாள் மீரா.

 

அதே நேரம் ஐயர் அழைக்க, மகா பூஜை ஆரம்பமானது. பரிவட்டம் கட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. பின் சுமங்கலிக்கான பூஜை நடைபெற, அதில் அனைத்து ஜோடிகளும்  கலந்துக் கொணடனர். கிறுவின் நெற்றி வகுட்டில் பவள மலைக் குங்குமத்தை வைக்க, அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆரவ் கைகளால் அதைத் துடைத்து விட்டான். அஸ்வின் மீராவின் நெற்றியில் குங்குமம் வைத்தான்.

 

அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு அனைவரும் வீடு நோக்கி வந்தனர். திருமணம், பூஜைகள் சம்ரதாய நிகழ்வுகள் அனைத்தும் எந்தப் பிரச்சனையும் இன்றி இனிதே நடைப் பெற்ற நிம்மதியில் அனைவரும் இருந்தனர். வீட்டிற்கு வந்த மணமக்களும் மேலும் சில சம்ரதாய நிகழ்வுகள் நடந்தது. பின்னர் இருவருமே ஓய்வு எடுக்க அனுப்பப்பட்டனர்.

 

ஆரவிற்கு அவனது P.A அழைத்து பேசினான். சிறிது நேர உரையாடலின் பின் ஆரவ் கோபமாக மொபைலை வைத்து குளியளறைக்குள் புகுந்துக் கொண்டான். அதே நேரம் உள்ளே அஸ்வின் நுழையும் போது, ஆரவின் மொபைல் மீண்டும் ஒலிற அதைப் பார்த்தவன், மொபைலைப் பார்க்க திரையில் Shravan P.A என்று இருந்தது. அஸ்வின் அழைப்பை ஏற்கவில்லை. 

 

மீண்டும் மீண்டும் அவன் அழைத்ததால் ஏதோ அவசரம் என்று உணர்ந்து அஸ்வின் அழைப்பை ஏற்றான். 

 

“நான் அஸ்வின் பேசுறேன், ஆரவ் washroomல இருக்கான், ஏதாவது முக்கியமான விஷயம்னா சொல்லுங்க நானே சொல்றேன்” என்று கூற

 

எதிர்ப்புறம் கூறியதைக் கேட்ட அஸ்வினிற்கு ஆரவின் மேல் கோபம் தலைக்கேறியது.

 

“நான் பாத்துக்குறேன் ஷ்ரவன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்து கீழே சென்றான் அஸ்வின்.

 

ஆரவும் பிரஷப் ஆகி கீழே சென்றான். அஸ்வின் முகம் கோபத்தில் இருப்பதைக் கண்டு எவருமே அவனிடம் பேசுவதற்கு முனையவில்லை. ஆரவ் கீழே சென்று அவன் அருகில் சென்று அமர்ந்தான்.

 

“அஸ்வின், என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று ஆரவ் கேட்க,

 

“நீ யேன்டா இப்படி இருக்க? உனக்கு அறிவே இல்லையா மிஸ்டர் AV?” என்று அஸ்வின் அந்த வீடே அதிரும் படி கத்தினான்.

 

அவனது கத்தலில் வீட்டிலில் உள்ள அனைவருமே அங்கு வந்தனர். கிறு, மீரா இருவருமே அடித்துப் பிடித்து ஓடி வந்தனர். 

 

கிறு, “அஸ்வின் என்னாச்சு? எதுக்கு இவளோ கோபப்படுகிறாய்?” என்று கேட்க,

 

“இவன் பன்ன வேலைக்கு நான் அடிக்காமல் இருக்கேன் அது பெரிய விஷயம்” என்றான் கோபத்துடன்.

 

“மாப்பிள்ளை என்னடா பன்னாரு?” என்று அரவிந் கேட்க,

 

“பெரியப்பா, ஆரவோட கனவே Z groups of company project எடுத்து பன்றது தான். உங்களுக்கே தெரியும் அவங்க உலகத்துல இருக்கிற No 1 கம்பனி, அவங்க வருஷத்துக்கு ஒரு முறை தான் இந்தியாவில் இருக்கிற ஏதாவது ஒரு கம்பனியை சிலெக்ட் பன்னி project கொடுப்பாங்க. அதற்கு முன்னாடி அவங்களோட சின்ன Basic project அ பன்னனும். அதுல அவர்களுக்கு திருப்தி இருந்தால் அந்த வருஷத்துக்குரிய, இந்தியாவுக்குரிய அத்தனை projects  யும் அந்த கம்பனி கிட்டவே கொடுப்பாங்க. அந்த Basic project ஐ கிட்டதட்ட ஐந்து கம்பனியை சிலெக்ட் பன்னி கொடுப்பாங்க. இந்த வாட்டி அந்த ஐந்து கம்பனியில ஒரு கம்பனியா ஆரவோட கம்பனி சிலெக்ட் ஆகி இருக்கு” என்றான்.

 

“அது நல்ல விஷயம் தானே, எல்லாரும் கொண்டாட வேண்டிய விஷயம் தானே? அதற்கு ஏன் கோபப்படுற?”என்று ராம் கேட்க,

 

” நாளைக்கு டெல்லியில evening 3 க்கு மீடிங் இருக்கு. ஆனால் உங்க மாப்பிள்ளை அந்த மீடிங்கை கென்சல் பன்ன சொல்றான்” என்றான் அஸ்வின்.

 

“ஏன்?” என்று மாதேஷ் கேட்க,

 

“அதை அவன் கிட்டையே கேளு” என்றான்.

 

“ஏன் டா? உன்னோட உழைப்புக்கு ஒரு அர்த்தம் கிடைச்சி இருக்கு எதுக்கு வேணான்னு சொல்ற?” என்று கவின் கேட்க,

 

“இல்லை டா, போனவாட்டியும் கிறுவை தனியா விட்டுட்டு போயிட்டேன். இந்த வாட்டியும் கல்யாணம் முடிஞ்ச உடனே அவளை தனியா விட்டுட்டு போய் என்னால இன்னொரு தப்பை பன்ன முடியாது. அது மட்டும் இல்லை நாளை மறுநாள் ரிசப்ஷன் டா அதான்” என்றான் தலைக்குனிந்தபடி.

 

‘தன்னவன் தன்னுடைய கனவை அடையும் வாய்ப்பைப் பெற்றும் தனக்காக அதை இழக்கத் தயாராக இருக்கின்றானே என்று சந்தோஷமடைந்தாலும், அவன் கனவிற்கு தான் எப்போதும் தடையாக இருக்கக் கூடாது’ என்று நினைத்தவள்,

 

“அஸ்வின், நாளைக்கு கண்ணா அந்த மீடிங்கை எடென்ட் பன்னுவான், அப்பா ரிசப்ஷனை இன்னும் ஒரு வாரத்துல வச்சுக்கலாம்” என்று கூற,,

 

பெரியவர்கள், ஆரவ் கிறுவைப் பார்த்து ஒருவருக்காக ஒருவர் துணை நிற்பதைக் கண்டு அவர்களின் உள்ளம் குளிர்ந்தது.

 

அரவிந் “சரிமா” என்றார்.

 

“இல்லை மாமா ரிசப்ஷன் அதே நாள் நடக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றான் ஆரவ் உறுதியாக.

 

“கண்ணா எனக்கு கோபத்தை வர வைக்காத, கொஞ்சம் அமைதியா இரு. இது உன் கனவு, எனக்காக உன் கனவு அழியிறதை என்னால் பார்த்துட்டு இருக்க முடியாது” என்றாள்.

 

“அதை தான் நானும் சொல்றேன் கிறுஸ்தி, இந்த வாய்ப்பு போனால் இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும்” என்றான்.

 

“லூசு மாதிரி பேசாத, காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்லுவாங்க, உனக்கு கிடைத்த வாய்ப்பை நான் வீண்போக விடமாட்டேன். நீ நாளைக்கு மீடிங் அடென்ட் பன்னியே ஆகனும்” என்றாள்.

 

“சரி நான் நாளைக்கு மீடிங் அடென்ட் பன்றேன். ரிசெப்ஷனை கென்சல் பன்ன தேவையில்லை. நான் நாளைக்கு காலையிலேயே இங்கு இருந்து கிளம்புறேன். மீடிங்கை முடிச்சிட்டு அடுத்த பிளைட்ளையே நான் இங்க வரேன்” என்றான்.

 

“ஆரவ் உனக்கு டயர்டா இருக்கும் டா, ரிசெப்ஷனை தள்ளி வச்சிக்கலாம்” என்று அஸ்வின் கூற

 

“இல்லை மச்சான் நான் இதை விட டயர்டாகி இருக்கேன்” என்றான்.

 

இவையனைத்தையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டு இருந்த தாத்தா, இனி இவர்களின் வாழ்க்கையைப் பற்றி துளியும் கவலைப்படத்  தேவை இல்லை என்று நிம்மதி அடைந்தார். 

 

கிறு ஆரவின் கைகளைப் பிடித்து அவனது அறைக்கு அழைத்து வந்தாள். அறைக்குள் நுழைந்தவள் நேராக சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

 

“இப்போ எதுக்கு இங்க என்னை கூட்டிட்டு வந்த?” என்று கேட்க, 

 

“நீ நாளைக்கு கிளம்பனும், சொ டிரஸ் எடுத்து வைக்கனும் அதான்” என்றாள்.

 

“அப்போ நீ எதுக்கு வந்த? நானே பார்த்து இருப்பேனே” என்றான்

 

“மிஸ்டர் ஆரவ் கண்ணா இப்போ எனக்கு கல்யாணம் ஆயிருச்சு, உனக்கு நான் இதை எல்லாம் பன்னும்னு சொல்லி என் அம்மா என்னை திட்டுவாங்க, நம்மளால இன்றைக்கு திட்டுவாங்கவோ, இல்லை பதிலடி கொடுக்கவோ உடம்புல சக்தி இல்லை அதான்” என்றாள்.

 

ஆரவ் சிரித்துக் கொண்டே தனக்கு தேவையானவற்றை எடுத்தான். அவளோ தன் முகத்தை தன் கையிலேந்தி அவன் செய்பவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

 

“மீரா, இப்போ நீ நிற்க இல்லை, இனிமேல் உன் கூட பேசவே மாட்டேன்” என்று அவள் பின்னே சென்றான் அஸ்வின் அவள் அறைக்கு.

 

“அச்சு, இது சின்ன குழந்தைகள் பேசுறது போல இருக்குடா” என்று அறைக்குள் நுழைய அஸ்வின் அவனும் நுழைந்தவுடன் கதவை அடைத்து தாழ்ப்பாள் இட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48

நிலவு 48   ஆரவின் அருகில் சென்ற கிறு அவன் தோளில் இடித்தாள். அவன் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டான்.   “என்ன அமைதியா இருக்க? ஹீரோ எங்க என்று கேட்குங்குறாபா?” என்று கண்ணடிக்க   அவள் இடையில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1

அறிமுகம்   அவரை நோக்கி, அந்த சித்தர் கூறினார்.    “உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது. அவளுக்காக இவன் இரவாக மாறி அவளை

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 50யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 50

நிலவு 50   ஏழு வீராங்கனைகளும் மைதானத்திற்கு இறங்கினர். அதில் நான்கு நண்பர்கள் மட்டும் கவினின் அருகில் பெயரை வழங்கச் சென்றனர்.    “என்ன இங்க இருக்கிங்க?” என்று கவின் கேட்க,   “எங்க பெயர்கள்” என்று கிறு கூற