Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 29

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 29

நிலவு 29

 

அறைக்குள் அவளை இழுத்துச் சென்றான் ஆரவ்.

 

“என்ன பேச இருக்கு ஆரவ்?” என்று அவள் கேட்க,

 

“எதற்கு கல்யாணம் வேணாங்குற?” என்று ஆரவ் கேட்க,

 

“அதான் சொன்னேனே ஆரவ், காதல் இல்லாத ஒரு வாழ்க்கை நரகம் தான்” என்றாள்.

 

“சரி, எப்போ நமக்கு இடையில் காதல் வரும்னு நினைக்குற?” என்று அவன் கேட்க, இவள் அமைதியாக இருந்தாள்.

 

“சொல்லு கிறுஸ்தி எப்போ?” என்று கேட்க அவளிடம் பதில் இருக்கவில்லை.

 

“இப்போ என்ன பன்னலாம்னு சொல்லு” என்று கேட்க,

 

“ஆரவ் உன்னை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என்னை பற்றியும் உனக்கு தெரியாமல் எப்படிடா கல்யாணம் பன்னி வாழ முடியும்? அதற்கு முதலலில் நாம பிரன்ஸா இருக்கனும். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கனும்” என்று கூற 

 

“சரி கிறுஸ்தி நீ சொல்கிறதை போலவே வச்சிக்கலாம். நான் டெல்லிக்கு போயிருவேன். நீ இங்க இருப்ப அப்போ எப்படி இரண்டு பேருமே புரிஞ்சிக்கிறது? மொபைல்னு மட்டும் சொல்லாத. யேன்னா, நான் அங்க போனா மொபைலையே தொட மாட்டேன். நீ இங்க இருந்தா மொபைல் பக்கமே எட்டி பார்க்க மாட்ட” என்றான்.

 

“நீ என்ன சொல்ல வர ஆரவ்?” என்று கேட்க,

 

“நான் என்னை கல்யாணம் பன்ன உடனே உன்னை என் கூட குடும்பம் நடத்துன்னு சொல்ல இல்லை. நாம வேறவேறையா பிரிஞ்சி இருந்து புரிஞ்சிக்கிறதை விட கல்யாணம் பன்னிட்டும் அதே போல நல்ல பிரன்சா இருக்கலாமே, உனக்கும் டைம் கிடைச்சது போல இருக்கும் எனக்கும் டைம் கிடைக்குறதை போல இருக்கும். அன்ட் நான் இந்த ஒன்பது நாளும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். பல உறவுகளோட வாழ்ந்துட்டேன். திரும்ப டெல்லிக்கு போய் என்னால தனியா வாழ முடியாது டி” என்றான்.

 

“அதுக்கு நீ எங்க குடும்பம் மொத்த ஆளுங்களையும் தான் கூட்டிகிட்டு போகனும்” என்று கூற

 

“அவங்க மொத்த பேருக்கு நீ ஒத்த ஆள் சமன்” என்றான்.

 

“சைக்கிள் கெப்ல கலாய்க்குற, பரவால்ல உன் கிட்ட கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு” என்றாள்.

 

“இப்போ நீயே உன் முடிவை அவங்க கிட்ட சொல்லு” என்று அறையை விட்டு வெளியே சென்று சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.

 

தாத்தா அவனைப் பார்க்க, அவன் கண்களாலேயே ஆறுதல் கூறினான். 

 

மற்றவர்களோ ‘என்ன நடந்து இருக்கும்?’ என்று யோசிக்க, சில பல நிமிடங்களுக்குப் பிறகு கிறு வெளியே வந்தாள்.

 

அனைவரும் அவளைப் பார்க்க, “என்ன எல்லாரும் என்னை குறுகுறுன்னு பார்க்குறிங்க? இப்போ டைமைப் பாருங்க பதினொரு மணி, இதற்கு அப்பொறமா எத்தனை மணிக்கு மருதாணி வச்சி, நலங்குக்கு ஏற்பாடு பன்ன போறிங்க?” என்று கேட்க, அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மின்னியது.

 

அனைவரும் தற்போது திருமண வேலைகளை பார்க்கச் சென்றனர். கிறு அமர்ந்து ஏதோ தீவிரமாக யோசிக்க, அவள் அருகில் அமர்ந்தான் ஆரவ்.

 

“இப்போ என்ன யோசிக்கிற?” என்று கேட்க, 

 

“ஒன்னும் இல்லை” என்றாள் கிறு.

 

இருவரையும் பெரியவர்கள் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு ஆடை அணிகலன்களை அணிய வைத்து வீட்டில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிப்பட்டது. அவை பிளடினமால் ஆனதாக இருந்தது.

 

சிறிது நேரத்தில் மணமக்களுக்கு சாவியே பகல் உணவை ஊட்டி விட்டார். அவரின் அன்பில் ஆரவின் கண்கள் கலங்கிவிட்டன. இதைப் பார்த்தவர்களுக்கு ஆரவ் அன்பிற்காக எவ்வளவு ஏங்கி உள்ளான் என்பது புரிந்து அமைதியாக இருந்தனர். இதைப் பார்த்த கிறு, நிலமையை சரி செய்ய

 

“என்ன ஆரவ் சாப்பாடு எல்லாம் உன் கண்ணு வேருக்கிற அளவுக்கு காரமா இருக்கா?” என்று நக்கலாக கேட்க,

 

“அவன் உன் புருஷன் அவனை கிண்டல் பன்ற, மரியாதை இல்லாம பேசுற?” என்று தலையில் குட்டினார் சாவி.

 

ஆரவ் அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில், “தேவையா உனக்கு? இனிமேல் எனக்கு ஏதாவது சொன்னா அத்தை கையால் இந்த மாதிரி டிரீட்மன்ட் தான் வாங்கி கொடுப்பேன்” என்று கண்ணடித்தான்.

 

தலையைத் தேய்த்துக் கொண்டே அவனை முறைத்தவள், “எனக்கு சாப்பாடும் வேனாம் ஒன்னும் வேனாம்” என்று எழப்போக, 

 

மாதேஷ் “யேன்டி நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டு இப்போ வேனான்னு சொல்ற? இது எந்த ஊர் ஞாயம்?” என்று சிரிக்க அவனுடன் சேர்ந்து மற்றவர்களும் சிரித்தனர்.

 

“நல்ல வேளை மச்சான் அவ போதும்னு சொன்னா, இல்லை நாம எல்லாரும் இன்றைக்கு பட்டினி தான்” என்றான் கவின்.

 

“போடா… பனைமரம் இவனுங்க எல்லாரும் என்னை கலாய்க்குறதுக்கு நீ தான் டா காரணம், அதுக்கு உனக்கு இருக்குடா” என்று சத்தமாகக் கூறிவிட்டு, கிச்சனிற்குள் நுழைந்தாள்.

 

“இப்போ தானே டி சொன்னேன் மாப்பிள்ளைய மரியாதையா கூப்பிடுன்னு நீ அடங்கவே மாட்டியா?” என்று அவள் தலையில் குட்டப் போக,

 

கிறு சோபாவில் ஏறி நின்றுக் கொண்டாள். “அம்மா சொன்னா கேளு, நீ என்னை குட்டி குட்டி தான் நான் இவளோ குள்ளமா இருக்கேன். இன்னும் குட்டின எனக்கு ஆரவ் பக்கத்துல நிற்க முடியாமல்  போயிரும். சும்மாவே அவன் பனைமரம் போல வளர்ந்து இருக்கான், நான் அவன் பக்கத்தில் நின்றால் அவனோட பொண்ணா நான் என்று கேட்டு அவனை கலாய்ப்பாங்க. அது உன் மாப்பிள்ளைக்கு தான் அசிங்கம்” என்றாள். 

 

ஆரவின் கண்களோ அவன் அனுமதியின்றி அவளை ரசித்தது.

 

“அப்போ மரியாதையா பேசு” என்று கூற,

 

“அம்மா மரியாதையா பேசனும் நம்மக்கு உரிமை இல்லாதவங்க மேல தான். ஆரவ் என் புருஷன், எனக்கு எப்படி கூப்பிடனும்னு தோனுதோ அப்படி தான் நான் கூப்பிடுவேன்” என்றாள் பிடிவாதமாக.

 

“அத்தை விடுங்க, அவ மரியாதையா பேசினா நல்லா இருக்காது. அவளுக்கு எப்படி இருக்கனும்னு தோனுதோ அவ அப்படியே இருக்கட்டும். அவ எனக்காக மாறனும்னு எந்த அவசியமும் இல்லை” என்றான்.

 

“பார்த்தியா மாப்பிள்ளையோட நல்ல குணத்தை, நீ யாருக்கு செஞ்ச புண்ணியமோ தெரியாது, உனக்கு இப்படி ஒருத்தன் புருஷனா கிடைச்சது” என்று கூற

 

“அம்மா நீ அவனை ரொம்ப புகழ்ற, அந்த அளவுக்கு அவன் ஒன்னும் வர்த்தே இல்லை, அவன் உங்க கிட்ட நல்ல பேர் எடுக்குறதுக்காக நடிக்கிறான். அதை புரிஞ்சிக்காமல் நீங்களும் அவனை புகழ்ந்து தள்ளுறிங்க” என்று உத்டைச் சுழித்தாள்.

 

“நீ அடங்க மாட்ட டி. உன்னை” என்று அவர் அடிக்க நெருங்க அவள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள். ஆரவே எழுந்து அவளைப் பிடித்துக் கொண்டான். 

 

“ஆரவ் அண்ணா, இன்றைக்கு நீங்க பன்ன உறுப்படியான வேலை என்னன்னு கேட்டா, நான் இதைத் தான் சொல்லுவேன்” என்றான் வினோ.

 

“துரோகி” என்று வினோவைத் திட்ட, சாவி அவளை அடிக்க கை ஓங்க அவள் தன் கண்களை மூடிக் கொண்டாள். 

 

‘என்ன ரொம்ப நேரமாச்சு இன்னும் அம்மா அடிக்க இல்லை. ஒரு வேளை 24 போல எல்லாரும் பிரீஸ் ஆகிட்டாங்களா? ஆனால் என் கையில் எந்த வொச்சும் இல்லையே’ என்றெல்லாம் தன்னுள் பேசிக் கொண்டே மெல்ல கண்களைத் திறந்தாள்.

 

சாவி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தார். 

 

“அம்மா “என்று அவள் கூறிய உடனேயே அவளை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார் சாவி.

 

“அம்மா, கண்ணீரை கொஞ்சம் ஸ்டொக் வச்சிக்க, நான் கல்யாணம் பன்னிட்டு போகும் போதும் அழனும் இல்லையா?” என்று கண்ணடித்தாள் அவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

 

“அம்மா நீ இப்படி அழு மூஞ்சா இருக்கும் போது நல்லா இல்லை. இப்படி அழும் போது, அப்பா முன்னாடி போயிறாத, அப்பா பயந்துருவாரு” என்று கூற,

 

“உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி டி” என்று சாவி கூற,

 

“இல்லை குட்டிம்மா, உன் அம்மா அழும் போது தான் ரொம்ப அழகா இருப்பா. கன்னம் ரெண்டும், மூக்கு எல்லாம் சிவந்து  செரி போல இருப்பா” என்று அரவிந் இரசித்துக் கூற அதில் சாவித்ரியின் முகம் வெட்கத்தால் சிவந்தது. 

 

சிறியவர்கள் “ஓஓஓ” என்று கத்திச் சிரித்தனர்.

 

“இதெல்லாம் நல்லாவே இல்லை. கல்யாணப் பொண்ணு நான் தான், உண்மைய சொன்னா நான் தான் வெட்கப்படனும், இப்போ பாருங்க என் அம்மா வெட்கப்படுறாங்க” என்றாள் கிறு.

 

“உனக்கு வெட்கம் வராதுன்னு தெரியுமே டி, நாங்க எதுக்குடி அப்போ  கஷ்டப்படனும்?’ என்றாள் தர்ஷூ.

 

“அது என்னமோ உண்மை தான், நான் பேசிப் பேசி ரொம்ப டயர்ட் ஆகிட்டேன், மீரா போய் தண்ணீர் கொண்டு வா” என்றாள் சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டப்படி.

 

“நான் உன் வேலைக்காரியா? போடி போய் எடுத்துக்க” என்று கூற,

 

“ஹலோ மெடம் உங்க ஆரவ் அண்ணாவோட பொன்டாட்டி நான், நான் உன் அண்ணி எனக்கு மரியாதை தந்து தான் ஆகனும்” என்று கூற,

 

மீரா, “மெடம் நான் உன் அண்ணன் அஸ்வினை கல்யாணம் பன்னிக்க போறவ, நானும் உனக்கு அண்ணி தான், சொ  நீயும் என் பேச்சுக்கு மரியாதை கொடுத்து தான் ஆகனும்.” என்றாள்.

 

“நான் கல்யாணப் பொண்ணு டி,” என்று கூற

 

“நானும் கல்யாணப் பொண்ணு ஆக போறவ டி”  என்று மீரா கூற

 

“நிறுத்துங்க டி, நானே போய் தண்ணீரை கொண்டுவரேன்” என்று அங்கிருந்து நகர்ந்தான் கவின்

 

‘ஹப்பா பிளேன் ஸக்சஸ்’ என்று ஹைபை அடித்துக் கொண்டனர் இருவரும். 

 

“என்ன பிளேன்” என்று அஸ்வின் கேட்க,

 

“இவளுங்களுக்கு தண்ணீரை எடுத்துட்டு வர சோம்பறிச்சாளுங்க. எங்க கிட்ட சொன்னா நாங்க எப்படியும் பன்ன மாட்டோம். இவங்க இரண்டு பேரும் சண்டை போட்டால் யாராவது ஒரு ஆள் கண்டிப்பா தாங்க முடியாமல் தண்ணீரை கொண்டு வருவிங்கன்னு இவளுங்களுக்கு தெரியும். அதான்” என்றாள் ஜீவி சிரித்துக் கொண்டே.

 

கவின் தண்ணீரை வழங்க, அவனிடம் விடயத்தைக் கூறிய மாதேஷ், “மச்சான் இவளுங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்” என்றான்.

 

அனைவரும் சாப்பிட்டு விட்டு, மாலை யில் நடைபெற இருக்கும் மருதாணி வைக்கும் விழாவிற்குத் தயாராகினர்………

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54

நிலவு 54   “என்ன கிறுஸ்திகா அரவிந்நாதன், என்னை மறந்திட்டிங்க போல” என்ற அவள் பின்னிருந்த ஒரு குரல் கேட்க,   அந்தக் குரல் காதுவழியாக மூளைக்குச் சென்று அக்குரலுக்கு சொந்தமானவரை படம்பிடித்து காட்ட அவள் உதடுகள் ” அதர்வா” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41

நிலவு 41   “கண்ணா உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியாது. நாம எல்லோருமே இந்த வாட்டி வீட்டிற்கு போன நேரம் நான் தோட்டத்தில் வெளியே உட்கார்ந்து இருந்தப்போ நீ என் கூட பேசின அப்ப கூட நான் வெளிச்சம் இருக்கிற

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56

நிலவு 56   கிறு, மற்றும் தெலுங்கானா சென்டர் பிளேயர் எழுந்து நிற்க இருவருக்கும் மீண்டும் டொஸ்அப் செய்பட்டு பந்து தெலுங்கான அணிக்குச் சென்றது. அதில் பந்து வேகமாக மாற்றபட்டு தெலுங்கான அணிக்கு இன்னுமொரு புள்ளி கிடைத்தது. அத்தோடு முதலாம் இடைவேளையும்