Tamil Madhura சிறுகதைகள் விசுவின் ‘ஒரு தோட்டா மருந்தானது! ‘

விசுவின் ‘ஒரு தோட்டா மருந்தானது! ‘

 ஒரு தோட்டா மருந்தானது! 

“கெவின் … கெவின்…”

அலறியது அந்த மருத்துவமனையின் அவசர ஒலி பெருக்கி.

ஆம். .. கெவின் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக சேர்ந்த மருத்துவர். சேர்ந்து சில நாட்கள் துணை  சிகிச்சை நிபுணராக பணியாற்றிய இவர் அன்று தான் துணை பதவியில் இருந்து முதன்மை சிகிச்சை நிபுணராக பணியேற்று இருந்தார். பணியேற்றிய சில மணி நேரங்களில் தான் அந்த ஒலி பெருக்கி ..

கெவின் கெவின் என்று அலறியது..

மருத்துவமனையின் சிற்றுண்டி சாலையில் இருந்த கெவின் குடித்து கொண்டு இருந்த தேநீரை ஒரே முடக்காக குடித்து விட்டு அறுவை சிகிச்சை அறையை நோக்கி ஓடினான்..

அந்த அறையை அடைந்து அதற்காக மேலாடைகளையம் முகமூடிகளையம் அவசரமாக அணிந்து கொண்டு இருக்கும் போது  அவன் எதிரில் அவனுக்கு மிகவும் பரிச்சயமான மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் திருமதி. டார்தி சேத், அவனுக்கு எதிரில் வந்தார்கள்.

“ஹை கெவின்..!!”

“ஹை..”

“உன்னால் இந்த சிகிச்சை செய்ய முடியுமா!!!?”

டார்தியின் வார்த்தைகளில் ஒரு பயம் கலந்த உணர்வு தான் வெளிப்பட்டது.

“கண்டிப்பாக டார்தி..  ஜஸ்ட் செய் எ பிரேயர் பார் மீ அண்ட் தி பேஷண்ட்,  பாஸ்ட் !”

டார்தி கெவினின் இரு கைகளையும் பற்றி கொண்டு …

“எல்லாம் வல்ல இறைவனே.. நீ இன்றி ஒரு அணுவும் அசையாது. கெவின் இந்த அறுவை சிகிச்சை செய்யும் போது நீ அவனுள் இருந்து இதை செய்யவேண்டும், ஆமென்..”

Dr. Kevin Morton

என்று சொல்லி கெவினை கட்டிப்பிடித்து அனுப்பினாள். கெவின் அடுத்த அறைக்கு சென்றான்.

டார்தி மனதிலோ…

அய்யகோ… ஒரு வேளை  இந்த சிகிச்சையை நானே செய்து இருக்கலாமோ… அவன் கையை பிடித்து ஜெபிக்கும் போது … அவன் கைகள் இரண்டும் நடுங்கியதே..

அவனை கட்டிப்பிடித்து அனுப்பும் போது அவன் இதயம்… அப்படி வேகமாக  துடித்ததே… நாம் ஒரு வேளை அவசரப்பட்டு கெவினை முதன்மை சிகிச்சை நிபுணராகி விட்டோமா? இன்னும் சில காலம் பொறுத்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டு … தன் அறையின் இருக்கையில் அமர்ந்தாள்.

நேற்று மாலை 4 மணிக்கு வேலைக்கு வந்தவள்… இப்போது காலை 8 மணி..வயதும் அறுபதை  தாண்டி விட்டது.. தன்னை அறியாமலே உறங்கினாள்..

சில நொடிகளில்…

“டாக்டர் டாரத்தி.. டாக்டர் டாரத்தி..” ஒலி பெருக்கி அலறியது! … அடித்து பிடித்து ஓடினாள் டாரத்தி. அறுவை சிகிச்சை அறை சென்றவள்…

“என்ன கேஸ்!!!?”

“அஸ் யூஷுவல் … துப்பாக்கி சூடு!!”

“பேஷண்ட் என்ன வயது..?”

“பாவம்.. சின்ன பையன்.. 20 தான் இருக்கும்.”

“என்ன ஆச்சி? ஏதாவது போதை பொருள் ..!!!?”

“இல்ல.. நல்ல பையன் தான். பகல் முழுக்க கல்லூரி போயிட்டு இரவில் மட்டும் இங்கே இருக்க ஒரு ஹோட்டலில் மானேஜராக இருக்கான்.  பாவம்.. வேலை முடிந்து வெளியே வந்து காரில் ஏறினான். பின்னாலே வந்த ஒரு ஆள் இவனை வயிற்றில் சுட்டுட்டு இவனிடம் உள்ளதெல்லாம் திருடிட்டு போய்ட்டான்.”

“ஓ மை  காட்.. யாரு இங்கே கூட்டினு வந்தா..!!!?”

“போலீஸ் தான்”

10% Chance of Survival

“வாட் இஸ் தி நேம் ஆப் தி பேஷண்ட்? ஏஜ் அண்ட் எத்தினிசிட்டி!!?”

“கெவின் மார்ட்டன், 20, ஆப்பிரிக்கன் அமெரிக்கன் !”

அறையில் சென்று படுக்கையில் கண்களை மூடி மரண நித்திரையில் இருந்த கெவினை பார்த்த டார்தி..  தன்னை அறியாமலே அழுதாள்.

20 வயது.. பார்க்க ஹாலிவ்யூட் பட கதாநாயகன் போல் தோற்றம். கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் வேளையில் மாலையில் வேலை செய்யும் அளவிற்கு பொறுப்பு.

ஆண்டவா.. இது என்ன சோதனை.. இவனுக்கு ஏன் இது? நீ தான் காப்பாற்ற வேண்டும்.. என்று சிகிச்சை ஆரம்பித்தாள். அடுத்த சில மணிநேரங்களில் சிகிச்சை முடிந்தது.

டார்தி வெளியே வந்தாள். அங்கே உறவினர்கள் அறையில் கெவினின் குடும்பம்.. அப்பா- அம்மா மற்றும் அவனுக்கே உயிரான இரண்டு குட்டி தங்கைகள்..

“டாக்டர்… என் பையன்…?”

“ஆப்பரேசன் நல்ல படியா முடிஞ்சது. நீங்க தைரியமா வீட்டுக்கு போங்க.. காட் இஸ் குட்.”

என்று டார்த்தி சொல்லிய பொய் கெவினின் தாய்க்கு புரிந்தது.

டார்த்தி சொன்ன எதையும் நம்பாமல் இரு பெண் குழந்தைகளையும் அவள் கட்டி கொண்டு மூவரும் அழ, டார்த்தியோ அந்த தகப்பனை …

“நீங்கள் ஒரு நிமிடம் என் அறைக்கு வர முடியுமா?”

அறையில்..

“சொல்லுங்க டாக்டர்..!!”

“ஐ அம் வெரி சாரி.. உங்க பையனுக்கு நடந்த இந்த துப்பாக்கி சூடு அவன் கல்லீரலில் பாதியை சிதற வைத்துவிட்டது.”

“டாக்டர்..என் பையன் பிழைப்பானா?”

“எங்கனால முடிஞ்சது நாங்க செஞ்சிட்டோம். இனிமேல் … 10% Chance of Survival! மேலே இருந்து ஒரு அதிசயம் வந்தா தான்…”

“வி பிலிவ்  இன் மிரக்கிள்ஸ் டாக்டர்”.. கண்டிப்பாக என் பையன் பிழைப்பான்.. தேங்க்ஸ். யு ஆல்சோ கீப் அஸ் இன் யுவர் ப்ரேயர்ஸ்.”

“ஐ வில் ! கண்டிப்பாக..”

தகப்பன் அங்கு இருந்து கிளம்ப ..

ஒரு வாரம் ஓடியது..

அந்த ஒரு வாரத்தில் டாரத்தி கெவினுக்கு எந்த சிகிச்சை அளிக்காவிட்டாலும், காலையில் வேலைக்கு வந்தவுடன் அவன் அறைக்கு  சென்று உறங்கி கொண்டு இருக்கும் அவனை பார்த்து அவன் கையை பிடித்து ஒரு ஜெபம் செய்து விட்டு  தான் தன் நாளை ஆரம்பிப்பாள்.

ஒவ்வொரு நாள் அவனை பார்க்கும் போதும்.. இன்றைக்காவது விழிப்பானா .. இன்றைக்காவது விழிப்பானா என்ற ஒரு நப்பாசை.

வெளி உலகத்திற்கு தானே அவன் விழிக்கவில்லை. கண்கள் மூடி கொண்டு இருந்தாலும்.. அவன்  நினைவிலோ…

பணி புரிவது ஒரு ஹோட்டலில் அல்லவா. வேலை முடிந்ததும்.. தன் தங்கச்சிகளுக்கு பிடித்த உணவினை வாங்கி கொண்டு  வாகனத்தில் ஏறிய கெவின்.. வாகனத்தின் அருகில் ஒரு நிழல் வருவதை  கவனித்தான். அவன் சுதாரிப்பதற்கு முன் “டுமீல்” என்ற சத்தம்.

அவனிடம் இருந்ததை எடுத்து கொண்டு வந்தவன் ஓட

.. கெவினின் இருக்கை முழுக்க இரத்தம்.

நொடிக்கு நொடி வலி அதிகரிக்க .. நினைவையும் இழக்க ஆரம்பித்தவன்.. அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு  சென்று விட்டால் அங்கே நம்மை மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள் என்று வண்டியை ஓட விட்டு.. ஆனால்பாதி வழியிலே நினைவை இழக்க போவதை அறிந்து அவசர விளக்கை போட்டு விட்டு …

எழுந்து பார்க்கும் போது.. சிகிச்சை அறையில். இவனுக்கு சற்று நினைவு இருந்தாலும்.. அது அவனுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு தெரியவில்லை.

இவன் மனதில் தோன்றியதெல்லாம்..

என் தங்கைகள்.. நான் உயிர் வாழ வேண்டும். என் தங்கைகளுக்காக.. நான் சாக கூடாது.. சாக மாட்டேன்.. சாகவே மாட்டேன். என் தங்கைகளுக்கு நான் தேவை.

கடந்த ஒரு வாரத்தில் அவன் மனதில் தோன்றிய ஒரே எண்ணம் ” அவனின் தங்கைகள் ” தான்.

வாரம் மாதமாகியது. கெவினின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற…

“டாகடர் டார்தி.. டாக்டர் டார்தி…”

ஒலி பெருக்கி அலறியது.

என்ன இது? இப்போது தானே ஓர் அறுவை சிகிச்சை முடித்தோம். அதற்குள் எப்படி அடுத்து ? என்று நினைத்து கொண்டே ஓடியவளின் எதிரில் …

கெவினின் தங்கைகள் இருவரும் ஓடி வந்தனர்..

“டாக்டர்.. கெவின் இஸ் அவெக். ஹி இஸ் டாக்கிங். ஹி இஸ் ஆஸ்கிங் பார் யு.”

மூவரும் ஓடினார்கள்.. அங்கே அறையில் கெவினின் தாயும் ..

“தேங்க்யு சோ மச்”!

என்று அவர்கள் அழ..டார்தி கெவினின் கையை பிடித்தாள். வழக்கத்திற்கும் மேல் சூடாக இருந்தது.

கெவின்..

கண்ணாலே தான் பேசினான்.

“எவெரிதிங் வில் பி ஆல்ரைட்.!”

அவனுக்கு வாயில் எதோ ஒரு கருவி போட்டு இருந்ததால்.. எதையோ எழுத வேண்டும் என்று கை  அசைத்து  காட்ட.. ஒரு காகிதமும் பென்சிலும் தரப்பட்டது.

Thank You so Much Dr. Darthi. Thanks for not letting me Die.

படித்த டார்தி அதை மடித்து பையில் வைத்து கொள்ள அனைவரும் ஆனந்த கண்ணீர் விட..

அடுத்த  ஆறுமாதத்தில்…

கெவின் வீட்டில் … டாரத்தி…

“கெவின்.. சும்மா என்ன கம்ப்யூட்டரில் … என்ன பண்ற?”

“டார்தி.. ஐ அம் ரெடி பார் காலேஜ் … அப்பளை பண்றேன்.”

“நீ படிச்சியே அதே கல்லூரியா?”

“நோ.. அது பிசினஸ் காலேஜ். ஐ டோன்ட் வாண்ட் டு டூ பிசினஸ் எனிமோர் ..”

“பின்ன வேற என்ன படிக்க போற?”

“ஐ வாண்ட் டு பி லைக் யு.. ஐ வாண்ட் டு பி எ டாக்டர்.”

டாரத்தி மீண்டும் அவன் கையை பிடித்து …

“அப் கோர்ஸ்.. யு வாண்ட் டு பி எ டாக்டர்.. அண்ட் கெஸ் வாட் ? வி வில் மேக் சுவர் தட் யு பி கம் எ டாக்டர்.”

அடுத்த ஏழு வருடங்கள்.. படிப்பு. சிகிச்சை.. சிறிய சிறிய வேலை..

கல்லூரியில்

டார்தி…

அலை பேசி அலறியது.

“டெல் மி  கெவின்…”

“அடுத்த மாதம் எனக்கு பட்டமளிப்பு விழா. ஐ வாண்ட் யு டு பி தேர் வித் மை டாட்.. மாம் அண்ட் சிஸ்டர்ஸ்.”

பட்டமளிப்பு விழா சீராக நடக்க.. அன்று இரவு.. நிகழ்ச்சியில் அனைவரும் கெவினை பாராட்டி அவனுக்கு பரிசளித்து கொண்டு இருந்தனர்.

டார்தியின் முறை வந்தது. இரு சிறிய தாளை அவன் கையில் வைத்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்தாள்.

பட்டமளிப்பு விழா

அந்த தாளை பார்த்த கெவினின் கண்கள் அவனை அறியாமலே ஈரமானது.  அதில் அவன் கைப்பட எழுதிய…

Thank You so Much Dr. Darthi. Thanks for not letting me Die.

என்று எழுத்தோடு.. கூடவே.. டார்தியின் கைபட எழுதிய..

Now it is your turn Kevin. You go and take care of them. Dont let them Die.

Love

Darthi

என்று எழுதி  இருந்தது.

மேடையில் இறங்கி வந்த கெவின் டார்தியின் தோளில் மேல் கையை வைத்தான்.

“ஹாய் டார்தி?”

“கெவின்? ”

“ஆபரேஷன் எப்படி போனது…?”

Happy Times.

One Young Kid, Daarthi.. so young.. Shot in his Chest. Some random shooting. He was so lucky that they brought him right on time.

He was not lucky, Kevin. Theres a reason for everything.

“I dont know Daarthi.. I just could not let that kid die. I had to keep him alive…”

“Is that so? May I ask you why?”

“Darthi.. you should have seen his little Sisters… I wouldnt let this kid die… just  for their sake!”

“Is that so? May I ask you why?”

“Daarth.. Every Girl needs her Brother.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தாயும் கன்றும் – கி.வா. ஜகன்னாதன்தாயும் கன்றும் – கி.வா. ஜகன்னாதன்

கன்றுக்குட்டிவர வர நோஞ்சலாகிக்கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித் தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன் அருமையாக வளர்த்த மாட்டின் கன்று அது. அவன் அருமையாக வளர்த்தது மாட்டைத்தான்; அதன் கன்றை அல்ல. கன்று மாடு சுரப்பு

சிலிகான் மனதுசிலிகான் மனது

தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி . பலவண்ண பூக்களிடமிருந்து எல்லா  திக்கும் பரவிய நறுமணம் என்று காண்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும்

அப்புவின் கதை : ரண்டி சோமராஜுஅப்புவின் கதை : ரண்டி சோமராஜு

அப்புவின் கதை : ரண்டி சோமராஜு (தெலுங்கு கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக