Tamil Madhura குழந்தைகள் கதைகள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – குழந்தைகள் கதை

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் விருதூர் எனும் ஊரில் ஒரு ஏழைத் தாய் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வாழ்க்கை மூன்று வேளை உணவு கூட உண்ண முடியாத அளவுக்கு மிகவும் சிரமம் வாய்ந்ததாகவே இருந்தது. அந்த மகனின் பெயர் வெற்றிவேலன். அவன் மிகவும் புத்திக் கூர்மை உள்ளவனாக இருந்தான். வெற்றி வாலிப வயதை அடைந்ததும் அவனது தாய் அவனை அழைத்து

“வெற்றி நாம் இப்போது வறுமையின் பிடியில் இருந்தாலும் நீ ஒரு செல்வந்தனின் மகன். உன் தந்தை மிகப் பெரிய வணிகர். அவர் மறைவிற்குப் பின்னரே இப்படி துன்பப் பாடுகிறோம். உன் தந்தையின் நண்பர் நெல்லையில் வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் சென்று உதவி கேள்” என்று அவனிடம் சொல்லி அனுப்பினார்.

வெற்றிக்கு அடுத்தவர்களிடம் உதவி கேட்பது அறவே பிடிக்காது. இருந்தும் தாயின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நெல்லைக்கு சென்றான்.

நெல்லையில் தனதத்தர் என்ற வணிகரின் வீட்டிற்கு உதவி பெறச்  சென்றபோது அவனது கெட்ட நேரமோ என்னவோ வணிகர் கடனைத் திருப்பித் தராமல் தொழில் நஷ்டம் என்று சாக்கு கூறிய ஒருவரைக் கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வானத்தில் பருந்து ஒன்று பறக்க, அதன் வாயில் கவ்விக் கொண்டிருந்த செத்த எலி ஒன்று அவர்களுக்கு அருகே விழுந்தது.

அந்த எலியை சுட்டிக் காட்டிய தனதத்தர் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருப்பவர்கள் இந்த செத்த எலியைக் கொண்டு கூட சம்பாதித்து நல்ல நிலையை அடைவார்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றார்.

அவர் பேசியதைக் கேட்ட வெற்றிவேலின் மனதில் உத்வேகம் பிறந்தது. ஒரு சிறிய காகிதத்தில் “உங்களிடம் உதவி பெற வந்தேன். ஆனால் உங்களது வார்த்தையை வேதமாக எடுத்துக் கொள்கிறேன். உங்கள் வீட்டின் முன் இருந்த செத்த எலியை மூலதனமாகக் கொண்டு எனது வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன். விரைவில் உங்களது கடனைத் திரும்ப செலுத்துவேன்” என்று எழுதிக் கொடுத்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தான்.

அந்த எலியை பூனை வைத்திருந்தவர்கள் ஒருத்தர் வீட்டில் தர, அவர்கள் பதிலுக்கு இரண்டு கைப்பிடி வறுத்த நிலக்கடலையைத் தந்தார்கள். அந்தக் நிலக்கடலையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று எண்ணியவாறே அவன் ஊருக்கு செல்லும் பாதையில் ஒரு மண்டபத்தில் அமர்ந்திருந்தான். அது ஒரு காட்டுப் பகுதி. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை ஒரு கடையோ, உணவோ கிடைக்காது.

அந்த மண்டபதிற்குத் தலையில் விறகினை சுமந்தபடி இரண்டு விறகு விற்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு மிகுந்த பசி. வெற்றி கையில் வைத்திருந்த வறுத்த நிலக்கடலையின் மணம் அவர்களின் பசியை ரெட்டிப்பாக்கியது.

“கடலை விற்பனைக்கா” என்று ஒருவன் கேட்க இன்னொருவனோ

“எங்களிடம் பணம் இல்லை அதற்கு பதில் நாங்கள் ஆளுக்கு ஒரு விறகு தருகிறோம்” என்றனர்.

அவர்களிடம் நிலக் கடலையைத் தந்து அதற்கு ஈடாக விறக்கினைப் பெற்ற வெற்றி அவற்றை விற்று மேலும் கடலையை வாங்கினான்.

தினமும் கடலை விற்பனையைத் தொழிலாக வைத்துக் கொண்டவன் அதற்கு ஈடாக விறக்கினைப் பெற்றுக் கொண்டான். விரைவில் அவனது செல்வம் பெருகி அவர்கள் விறகு அனைத்தையும் தானே வாங்கிக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தான். அந்த விறகுகளைக் கிடங்கில் சேமித்தான்.

கார்க்காலம் வந்தது. மழை பெய்து எரிக்க விறக்கில்லாமல் மக்கள் வாடினர். அந்த சமயத்தில் வெற்றி விறகுகளை விற்றான். அதில் நிறைய பணம் கிடைத்தது. அதை வைத்து ஒரு கடை ஒன்றினை ஆரம்பித்தான். அதில் கிடைத்த லாபத்தை மற்ற தொழில்களில் முதலீடு செய்தான். அவனது புத்திக் கூர்மையால் சில வருடங்களில் அந்த ஊரில் சிறந்த வணிகனாகிவிட்டான்.

வெற்றிவேலனுக்கு தனதத்தரின் நினைவு தோன்றியது. உடனே தங்கத்தால் ஒரு எலி ஒன்றினை செய்து எடுத்துக் கொண்டவன் அவரை  நெல்லை சென்று அவரை சந்தித்து நடந்ததைக் கூறினான். தனதத்தருக்கு வெற்றிவேலனை நினைவே இல்லை. இருந்தாலும் அவன் எழுதித் தந்த கடிதத்தை பத்திரமாக வைத்திருந்தார். வெற்றியின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ந்த அவர் அவன் தனது நண்பனின் மகன் என்பதை அறிந்து பேரானந்தம் கொண்டார்.

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சூரப்புலி – 2சூரப்புலி – 2

இந்தச் சம்பவத்தால் சூரப்புலி மனமுடைந்துவிட்டது. அந்த மாளிகையில் இனிமேல் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தது. ஒன்பது மாதமே ஆன குட்டியாகிய தன்னால் ஒரு பெரிய கோழியைப் பிடித்து முழுவதையும் தின்ன முடியாது என்பதைக் கூட யாரும் அறிந்துகொள்ளவில்லையே என்று நினைத்து, அது மிகவும்

உமாவும் உப்புமாவும் – சிறுவர் கதைஉமாவும் உப்புமாவும் – சிறுவர் கதை

[dflip id=”7971″ ][/dflip] Download Premium WordPress Themes FreeFree Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload Best WordPress Themes Free DownloadZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=download samsung firmwareDownload WordPress Themesudemy paid course free download

சூரப்புலி – 4சூரப்புலி – 4

மரக்கூட்டத்தைவிட்டு ஆண் இரலை முன்னால் வந்தது. பெண் இரலை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு பின்னால் அடியெடுத்து வைத்தது. அது மரங்களைத் தாண்டிக் குட்டையிலிருக்கும் வெட்ட வெளிக்கு வந்துவிடவில்லை. திடீரென்று ஒரு மலைப்பாம்பு மரத்தின் கிளைகளிலிருந்து அதன் மேல் தாவி, மின்னல்