Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 21

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 21

“மீரா என்னடி பேசாம இருக்க?” என்று அவளை உசுப்பேற்றி விட, மொபைலை அவனிடம் வீசி விட்டு அழுதுக் கொண்டே தனது அறைக்கு ஓடினாள் மீரா.

 

கவின், “எதுக்கு கிறு இப்படி பன்ன?” என்று கேட்க,

 

“நான் என்ன பன்னேன்?” என்றாள் கூலாக.

 

அஸ்வின், “பாரு நீ அந்த போடோவை காட்டினதால் அவ அழுதுட்டு போறா” என்றான் குற்றம் சாட்டும் தொனியில்.

 

“நீ அவ அழுததை பார்த்தியா?” என்று கேட்க,

 

“எல்லோரும் தான் பார்த்தோம்” என்றான் வினோ.

 

“நல்லா யோசிச்சு பாருங்க” என்று கிறு கூற, அனைவரும் யோசித்தனர்.

 

மாதேஷ், “ஆமான் டி அவ கண்ணை கசக்கி கிட்டு மேலே ஓடினா” என்றான்.

 

“அவ கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்ததைப் பார்த்தியா?” என்று கேட்க,

 

“இல்லை” என்றனர் அனைவரும்.

 

“அவ வரும் போது முட்டைகோஸ் வாங்கிட்டு வந்தா, அவளுக்கு அதை சேர் பன்னிக்க பிடிக்க இல்லை, எப்போடா தனியா சாப்பிடுவோம்னு எதிர்பார்த்தா, அதற்கான வழியும் இப்போ கிடைச்சிருச்சு” என்றாள் கிறு.

 

“சும்மா சொல்ல கூடாது டி நீங்க இரண்டு பேருமே வேற லெவல்” என்றான் கவின்.

 

“ரொம்ப புகழாத, எனக்கு புகழ்ச்சி பிடிக்காது” என்று சிடியைப் போட்டு படத்தை பார்க்க ஆரம்பித்தாள். அனைவரும் படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, மீரா அவர்களுடன் இணைந்துக் கொண்டாள். படம் முடிந்தவுடன் மீரா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க,

 

ஆரவ் “என்ன ஆச்சு மீரா?” என்க,

 

“நான் அழுதேன் யாருமே சமாதானப்படுத்த வரவே இல்லை” என்றாள்.

 

அஸ்வின் அவள் காதைப் பிடித்துத் திருகி “முட்டகோஸ் சாப்பிட்றதுக்கு எங்களை கழற்றி விட்டு போன, அதற்கு நாங்க சமாதானப்படுத்த வேண்டுமா?” என்றான்.

 

“சொரி டா, விடு டா காது வலிக்குது” என்று கூற, அவள் முகம் சுழிப்பதை பொறுக்க முடியாமல் விட்டு விட்டான் மீராவின் அஸ்வின்.

 

அவள் காதைத் தேய்க்க மற்றவர்கள் சிரித்தனர். அந்த நாளும் அனைவருக்கும் அழகிய நாளாகவே சென்றது. அடுத்த நாள் அனைவரும் தோப்பிற்குச் செல்ல தயாராகினர்.

 

அஸ்வின் “மச்சான் உன்னோட கெமரா எங்க டா?” என்று ஆரவைப் பார்த்துக் கேட்க,

 

“அதோ மேசைக்கு மேல இருக்கு நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று ஆரவ் சென்றான்.

 

அனைவரும் தோட்டத்திற்குச் சென்று பலவகையான பழங்களை சுவைத்து, இயற்கைக் காட்சிகளையும் இரசித்தனர். ஆரவ் அனைத்தையும் படம் எடுத்துக் கொண்டான்.

 

ஆற்றங்கரையோரம் அனைவரும் வந்து சிறிது நேரம் விளையாடி விட்டுச் செல்ல,

 

கிறு “பிளீஸ் காய்ஸ் நீங்க எல்லாருமே போங்க, ரொம்ப நாளைக்கு அப்பொறமா நான் என்னோட பேவரிட் பிளேசுக்கு வந்து இருக்கேன், கொஞ்ச நேரம் கழிச்சு நான் வீட்டுக்கு வரேன். நீங்க எல்லாரும் போங்க” என்றாள்.

 

“சரி பாத்து பத்துரமா வா” என்று அனைவரும் வீடு நோக்கிச் செல்ல, வயலில் வேலை செய்வதைப் பார்த்து சில போட்டோக்களை எடுத்து விட்டு வருவதாக மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பினான் ஆரவ்.

 

வீட்டிற்கு வரும் போது இவர்கள் கோயிலுக்குச் சென்றனர். கவின், மாதேஷிற்கு ஜீவி, தர்ஷூ போனில் அழைத்ததால் கோயிலை விட்டு வெளியே வந்து கடலைப் போட ஆரம்பித்தனர் இருவரும். மீரா தேங்காய் சாப்பிட ,

 

அஸ்வின் “ரொம்ப வலிச்சுதா மீரு” என்று அவன் கேட்க,

 

அவள் முகம் சுருக்கி “கொஞ்சமா” என்றாள்.

 

அதில் தன்னை தொலைத்து நின்றான் அவன். தன்னை இரசிப்பதை உணர்ந்த மீரா என்ன செய்வது என்று தெரியாமல் வேறு புறம் திரும்பி தனது கன்னச் சிவப்பை மறைத்துக் கொண்டாள்.

 

அவள் நிலையைப் புரிந்துக் கொண்ட அஸ்வின் வேறு புறம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

 

பின் அஸ்வின் மீராவிடம் “அந்த பொண்ணு யாருன்னு நீ கேட்கவே இல்லையே” என்றான். மீரா, “நான் எதுக்கு கேட்கனும்? எனக்கு உன்னை பற்றி நல்லா தெரியும் டா, என்னை தவிற வேறு யாருக்கும் உன் மனசுல இடம் இல்லன்னு, அதை விட நான் உன்னை அதிகமா௧ நம்புறேன்” என்றாள் காதல் பொங்க.

 

அஸ்வின் இந்த சிறு வயதிலே தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவளை ஒரு போதும் இழக்கக் கூடாது என்று முடிவெடுத்தான்.

 

இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு, மாதேஷ், கவினுடன் சேர்ந்து வீட்டை அடைந்தனர். கிறுவையும், ஆரவையும் பற்றி கேட்க, அவர்கள் கூறிய பதிலை கேட்ட பின்னரே அமைதி அடைந்தனர். ஆரவ் அனைத்து போட்டோக்களையும் எடுத்து விட்டு வரும் போது, தூரத்தில் காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கற்களாளான பகுதி அழகாக இருப்பதாக மக்கள் கூற, அவ்விடத்தை நோக்கிச் சென்றான் ஆரவ். அவனும் அங்கு பார்க்கும் போது அந்த இடமே அழகாக இருந்தது. அவனும் இரசித்துக் கொண்டே சென்றான்.

 

தூரத்தில் உள்ள ஒரு கல்லில் எவரோ அமர்ந்து இருப்பது போல் இருக்க, அந்த இடத்தை நோக்கி நெருங்கும் போதே புரிந்தது, அமர்ந்து இருப்பது ஒரு பெண் என்று. அவள் அருகில் நெருங்கியவன் அவள் தோள் தொட்டு, “கிறுஸ்தி” என்று கூற,

 

பின்னால் திரும்பியவள் “ஆரவ்” என்று அவனை அணைத்து அழ ஆரம்பித்தாள்.

 

அவனும் பயத்தில் “என்னடி ஆச்சு? வெயில் ஸ்ட்ரேட்டா படுகிற இடத்தில் உட்கார்ந்திருக்க? எதுக்கு அழற?” என்று பதற, அவள் அமைதியாகவே அழுதாள் ஏதும் பதிலளிக்காமல்.

 

“கிறுஸ்தி பயம் கூட்டாமல் என்ன என்று சொல்லுடி” என்று கூற,

 

“அது….” என்று தடுமாற,

 

“வாயைத் திறந்து பேசுடி” என்றான்.

 

“நான் ஆற்றங்கரையில் கொஞ்ச நேரம் இருந்து, இங்க வந்து உட்கார்ந்து இரசிச்சேன். வீட்டிற்கு போகலாம் என்று நினைச்சு எழும்போது..” என்று தடுமாற,

 

“என்ன டி?” என்றான்.

 

“டிரஸ்சில் கறை பட்டிருச்சு” என்றாள்.

 

“அதற்கு என்னடி?” என்று ஆரவ் கேட்க,

 

“புரிஞ்சிக்கோ ஆரவ் இது வேற கறை” என்றாள் தலை குனிந்துக் கொண்டே.

 

“என்னால் எப்படி இந்த டிரஸ்ஸோட வீட்டிற்கு நடந்து போகலாம், என்னால் எந்திரிக்கவே முடியல்லை” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

 

அதைப் புரிந்துக் கொண்ட ஆரவ், “இப்போ என்ன பன்ன போற?” என்று கேட்டான்.

 

“இன்னொரு டிரஸ் இருந்தால் மாற்றி விட்டு வீட்டுக்கு போகலாம்” என்றாள்.

 

உடனே தன்னுடைய மொபைலில் இருந்து அஸ்வினிற்கு அழைத்து மொபைலை மீராவிடம் வழங்குமாறு கூறினான்.

 

மீரா, “சொல்லுங்க அண்ணா” என்க,

 

“உன் கிட்ட கிறுஸ்தி ஏதோ பேசனுமாம்” என்று கிறுவிடம் மொபைலை வழங்கி விட்டு அவளை விட்டு தள்ளி நின்றான்.

 

“மீரா எனக்கு தேவையான திங்கஸ் கொஞ்சம் சொல்றேன் எடுத்துட்டு பெரிய கல்லுக்கு வா” என்று தனக்கு தேவையானதைக் கூறினாள் கிறு.

 

மீராவும் சிறிது நேரத்தில் அங்கு வருவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

 

“ஆரவ்” என்று கிறு அழைக்க அவள் அருகில் வந்து மொபைலை வாங்கினான்.

 

“கிறுஸ்தி, நீ ரொம்ப தைரியமான பொண்ணு, எல்லா சிடிவேஷனையும்  உன்னால் ஹென்டில் பன்ன முடியும். சின்ன குழந்தைகளை போல அழாத” என்றாள்.

 

அவளும் “சரி” என்று தலையை ஆட்டினாள்.

 

அஸ்வின் வரும் இவள் எழ வேண்டும் அதற்காக அவளை மறைக்க, ஏதாவது புடவை இருக்குமா என்று தேடிப்பார்த்தான். மரத்தின் மேலே கட்டப்பட்ட ஒரு குடிசையில் புடவையைக் கண்டான்.

 

அதை எடுத்து வர எழ அவனது டீசர்டின் கொலரைப் பற்றிக் கொண்டு,

 

“ஆரவ் எங்க போற?” என்று பயந்தவாறே கேட்க,

 

“உனக்கு புடவை ஒன்னு தேவைபடும் அது அங்க இருக்கு நான் போய் எடுத்துட்டு வரேன்” என்றான்.

 

“பிளீஸ் ஆரவ் எனக்கு பயமா இருக்கு, எங்கேயும் தனியா விட்டுட்டு போயிறாத” என்றாள்.

 

“கிறுஸ்தி நான் போய் இரண்டு நிமிஷத்துல வந்திருவேன், அது வரைக்கு கண்ணை மூடிட்டு 120-1 வரைக்கும் ரிவரசில் எண்ணு” என்றான்.

 

அவளும் அரை மனதுடன் “சரி” என்றாள்.

 

அவன் அதை எடுத்துக் கொண்டு 10 எனும் போதே அவளருகில் வந்து விட்டான்.

 

“கிறுஸ்தி” என்று கூற,

 

தாயைக் கண்ட சேய் போல அவனைத்துக் கொண்டாள். இதில் காதலோ, காமமோ இல்லாத ஒரு அன்பே இருந்தது. தூரத்தில் அஸ்வின், மீரா வருவதைக் கண்டு இருவரும் விலகி நின்றனர். அஸ்வினும், ஆரவும் நாகரிகம் கருதி அவ்விடத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி நின்றனர்.

 

மீரா கிறுவிடம் பேகை வழங்கி, அருகில் இருந்த ஓடைக்கு அழைத்துச் சென்றாள். மீரா சற்று நகர்ந்து நின்றவுடன் கிறு ஆடையை மாற்றி, முகம் கை அலும்பி வந்தாள்.

 

அவர்கள் இருவரும் அஸ்வின், ஆரவ் இருந்த இடத்திற்கு அருகில் வந்தவுடன், நால்வரும் சேர்ந்து வீட்டிற்கு நடந்தார்கள். கிறுஸ்தி தவறியேனும் ஆரவைப் பார்க்கவில்லை. வீதியில் வரும் போது மீரா, கிறு முன்னேயும், ஆரவ் அஸ்வின் பின்னேயும் நடந்தார்கள். கிறு வெயிலில் ஏற்கனவே இருந்ததாலும், இப்போதும் வெயிலில் நடந்து வருவதாலும் தலைச் சுற்றி மயங்கி விழ ஆரவ் அவளைப் பிடித்தான். பின் அஸ்வினிடம் கிறுவை வீட்டிற்கு கையில் ஏந்திச் செல்லுமாறு கூறி விலகி நின்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 66யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 66

நிலவு 66   “கேர்ள்ஸ் நீங்க ஒரு நாளை சரி வேஸ்ட் பன்ன கூடாது” என்று ஆரவ் கூற   “நீங்க சொன்னதுக்காக திடீர்னு ஒரு ஆளை எங்க கோர்ச்சா ஏத்துக்க முடியாது” என்றாள் ஒருவள்.   “இங்க பாருங்க இப்போ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 47யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 47

நிலவு 47   மீரா, அஸ்வின் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பணியாள்,   “மேம் உங்களை அங்கே வர சொன்னாங்க” என்று கூற   “அச்சு அவளுங்க தான் என்னை கூப்பிடுறாங்க  நான் போய் என்ன என்று பார்த்துட்டு வரேன்”

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16

“பாருடா மத்தவங்க தூங்குறாங்களே, டிஸ்டபனஸ் இல்லாமல்  இருக்கனுமே, அந்த எண்ணம் கொஞ்சமாவது அவளுங்களுக்கு இருக்கா?” என்று பொரிந்தான் கவின்.   “வாடா போய் பாக்கலாம் எதுக்கு சிரிக்கிறாளுங்க?” என்று அனைவரும் அடுத்த அறையை நோக்கிச் சென்றனர் நால்வரும்.   அறைக்கதவை திறந்த