Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19

காலை 6 மணிக்கு ஹொஸ்டலின் முன் கார் வந்து நின்றது. வார்டன் அறைக் கதவைத் தட்ட, ஒருவரும் விழிக்காமல் தூங்கினர்.

 

“மீரா” என்று பலமாகத் தட்ட அதில் விழித்த கிறு, அறைக் கதவை திறக்க வார்டன் கார் வந்திருப்பதாகக் கூறி விட்டு சில பல அர்ச்சணைகளை வழங்கிச் சென்றார்.

 

அவள் கடினப்பட்டு மீராவையும் எழுப்பி தயாராகி கொடிகாமத்தை நோக்கிச் சென்றார்கள் தோழிகள் இருவரும் தம் வாழ்வே அங்கு மாறப் போகின்றது என்று அறியாமல்.

 

பதினொரு மணி போல் கொடிகாமத்தை அடைந்தார்கள். வீட்டில் அனைவரும் வாசலில் அவர்களை வரவேற்க நிற்க, காரில் இருந்து ஒருவரும் இறங்கவில்லை. அதில் கடுப்பான வினோ கதவைத் திறக்க கிறுவும், மீராவும் சீட்டில் சாய்ந்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அங்கு ஆரவ், மாதேஷ் இருக்கவில்லை. வினோ தோட்டத்திற்குச் சென்று அங்கு உள்ள வாளியை எடுத்து அதில் நீர் நிரப்பி அவர்களுக்கு வீசினான். பதறியடித்து எழுந்த கிறுவும், மீராவும் அவனை முறைத்தனர்.

 

வினோ அவர்களுக்கு பயத்தில் வீட்டினுள் ஓடினான்.

 

கிறு “எருமை இருடா, மரியாதையா நில்லு நாங்களா உன்னை பிடிச்சோம் நீ சட்னி தான்” என்று கத்த,

 

மீரா “அடேய் பன்னிப் பயலே உன்னை சாம்பாராக்காம நான் விட மாட்டேன் டா” என்று கத்தினாள். ஓரிடத்தில் இருவரிடமும் மாட்டிக் கொண்டவன், அவர்களிடம் இருந்து பல அடி உதைகளை பரிசாய் பெற்றான்.

 

“விடுங்கடி என் புள்ளையை” என்று தேவி கூற,

 

“ஓட்டவாயா! அத்தை சொன்ன ஒரு காரணத்துக்காக உன்னை விடுறோம், இல்லை நீ காலி டா” என்றாள் கிறு.

 

“ஆரவ் நான் சொன்னேன் கிறுஸ்திகா, அவ தான் ஷோர்ட் கேர்ள்” என்று கூற,

 

ஆரவ் அவளைப் பாரத்தான். குறைவான உயரம் ஒல்லியான தேகம், முதுகுவரை இருந்த கூந்தலை தூக்கி பொனிடேல் போட்டு இருந்தாள்.

 

அவள் நின்று இருந்த தோரணையைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது. வினோ நிலத்தில் கிடக்க அவன் வயிற்றில் ஒரு காலும், மற்றைய காலை அருகில் இருந்த கதிரையில் வைத்து இருந்தாள். மீராவையும் அவனுக்கு காண்பித்தான். அவளும் கிறுவைப் போலவே இருந்தாள். ஆனால் அவளை விட சற்று உயரமாக இருந்தாள்.

 

கிறு “அம்மா நான் ரூமிற்கு போறேன்” என்று கூற

 

“அங்கே அஸ்வினோட பிரன்டு ஆரவ் இருக்கான்” என்றார்.

 

“அது யாரு எனக்கு தெரியாமல்? யாரந்த ஆரவ்?” என்று ரௌடியைப் போல் கேட்க, ஆரவால் அவள் செய்கையை இரசிக்காமல் இருக்க முடியவில்லை.

 

“நீ எதுக்கு அவனை பற்றி விசாரிக்கிற?” என்று அஸ்வின் கேட்க,

 

“அவனை கல்யாணம் பன்னிக்கிறதுக்கு” என்று கூற ஆரவ் அதிரந்து விட்டான்.

 

“பின்ன என்னடா அவன் எந்த தைரியத்துல என் ரூம்ல ஸ்டே பன்னி இருப்பான்?” என்றாள் கிறு.

 

சாவி, “உன்னை மாதிரி ஒரு ராட்சசியை அந்த நல்ல பையனுக்கு கல்யாணம் பன்னி வச்சா அவனோட வாழ்க்கையே நாசம் ஆகிறும், என்னால் அந்த தப்பை பன்ன முடியாது” என்றார்.

 

“நீ என் அம்மாவா? இல்லை அவன் அம்மாவா? அவனுக்கு சபோரட் பன்ற, ஓஓஓ அவன் அந்த அளவுக்கு உன் மனசுல இடம் பிடிச்சிருக்கானா?” என்றாள் கிறு பொறாமையுடன்.

 

மீரா “அதானே எங்க லெவலும் கம்மியான மாதிரி இருக்குடி” என்றாள்.

 

“என் மனசுல மட்டும் இல்லை இங்க இருக்கிற எல்லோரோட மனசுலையும் இடம் பிடிச்சிட்டான்” என்றார் தேவி.

 

கிறு, “தாத்தா உங்களுக்கும் அவனை தான் புடிக்குமா? என்னை புடிக்காதா?” என்று கேட்க,

 

“யாரு சொன்னா? எனக்கு எப்பவுமே என்னோட பேத்திங்க தான் பர்ஸ்ட்” என்றார் இருவரையும் அணைத்தவாறே.

 

“மிஸ்டர் ஆரவ் கீழே வாங்க” என்று கத்தினாள் மீரா.

 

அவனும், மாதேஷூம் கீழே வர மீரா அவனைக் கண்டு சிலையாக நின்றாள். அவர்கள் இருவரும் அவனை சாதாரணமானவன் என்றே நினைத்தனர். நெடுமரம் போல் வளர்ந்து கம்பீரமான தோற்றத்துடன் வந்தவனைப் பார்த்து அவளால் வேறு என்ன செய்ய முடியும்?

 

கிறு தன் தாத்தாவைக் கட்டிப் பிடித்தவாறே அவனுக்கு திட்டியதால் ஆரவ் வந்ததை அவள் கவனிக்கவில்லை.

 

மீரா மெதுவாக “போதும் டி” எனக் கூற கிறுவோ எதையும் கவனிக்காமல் திட்டினாள்.

 

அவள் திரும்பிப் பார்க்க, ஆரவைப் பார்த்து அமைதியானாள். அனைவருக்கும் இவள் அமைதியாகியது அதிசயமே. தன் கெத்தை விட்டுக் கொடுக்க நினைக்காத கிறு,

 

“மிஸ்டர் உங்களோட முழு பெயர் என்ன?” என்று கேட்க,

 

அவன் சற்றும் சளைக்காமல் “ஆரவ் கண்ணா” என்றான்.

 

“டேய் பனைமரம் என்ன தைரியம் இருந்தால் என் ரூமில் நீ தங்கி இருப்ப?” என்று அவள் எகிற,

 

“என்னது டா வா?,பனை மரமா?” என்று அனைவரும் அதிர,

 

சாவி, “என்னடி பழக்கம் இது? வயசுல மூத்தவங்களை இப்படி தான் பேசுவியா?” என்று கேட்க,

 

அவரை ஒரு விசித்திர பிறவியாக பார்த்தாள் கிறு.

 

“இங்கே இருக்கிற எல்லோருமே என்னை விட வயசுல பெரியவங்க, நான் யாருக்காவது மரியாதை கொடுத்து இருக்கேன், டேய் தடியன்களா வாயைத் திறந்து பேசுங்களேன் டா, வாயில் கொலு கொட்டையா வச்சி இருக்கிங்க” என்று அஸ்வின், மாதேஷ், கவின், வினோவைப் பாரத்து கிறு கேட்க,

 

“இல்லவே இல்லையே” என்றனர்.

 

தற்போது ஆரவ் அவர்களை விசித்திரமாகப் பார்த்தான்.

 

ஆரவ் அவளை முறைக்க,  அதில் தடுமாறியவள் அதைக் காட்டாமல் “ok மிஸ்டர் ஆரவ் அம்மா சொன்னதுக்காக உங்களை மரியாதையா கூப்பிட டிரை பன்றேன்” என்று அங்கிருந்து சென்றாள் மீராவை இழுத்துக் கொண்டே.

 

அவள் அவ்வாறு பேசியது மீண்டும் அனைவருக்கும் அதிர்ச்சியை தான் தந்தது. அறைக்கு வந்தவள் அறை சுத்தமாக இருப்பதைக் கண்டு ஆரவ் இங்கிருந்து வேறு அறைக்குச் சென்று விட்டாள் என்பதைப் புரிந்துக் கொண்டாள். மீரா அவளது அறைக்குச் சென்று குளித்து கீழே வந்தாள். கிறுவும் குளியலைப் போட்டு தாமதமாக கீழே வந்தாள்.

 

அவள் அறையில் இருந்து யோசித்தது ‘ஏன் அந்த பனை மரத்தை பார்த்த பிறகு  தனக்கு பேச்சு வர தடுமாறுகின்றது?’ என்பதைத் தான்.

 

கீழே மெதுமெதுவாக வந்தவளைப் பார்த்து,

 

கவின் “மெல்ல மெல்ல தரைக்கு வலிச்சிற போகுது” என்று வடிவேலு ஸ்டைலில் கூற,

 

“அதையெல்லாம் ஒரு தடிமாடு சொல்லுதே” என்று சோபாவில் அமர்ந்தாள் கிறுஸ்தி.

 

“என்னடி ஒரு மாதிரி இருக்க?” என்று மாதேஷ் கேட்க,

 

“நேத்து நைட் பூரா தூங்க இல்லை” என்று கூறி கிறு அருகில் அமர்ந்தாள் மீரா.

 

கிறு முறைப்பதைக் கண்டே தான் உலறிவிட்டதை அறிந்துக் கொண்டாள் மீரா.

 

“நைட் தூங்காம என்ன பன்னிங்க?” என்று அஸ்வின் கேட்க,

 

கிறு அங்கிருந்து எழ, மீரா “என்னடி என்னை தனியா விட்டுட்டு போற?” என்றாள்.

 

கிறு “நீ தானே உழறின? நீயே சமாளி” என்றாள்.

 

வினோ “குரூப் ஸ்டடி பன்னிங்க இல்லையா?” என்று பொயின்ட் எடுத்துக் கொடுத்தான் வினோ.

 

அவர்கள் மாட்டினால் அவனும் மாட்ட வேண்டும் அல்லவா.

 

அவர்களும் “ஆம்” என்றனர்.

 

“இதை நாங்க நம்ப” என்று நால்வரும் மற்ற மூவரைப் பாரத்தனர்.

 

“என்னடா இன்றைக்கு தான் வீட்டுக்கு வந்து இருக்கோம் நீ சிபிஐ போல கேள்வி கேட்குற? பாருங்க இந்து மா” என்று அஸ்வினை மாட்டி விட்டு அங்கிருந்து மீராவுடன் எஸ் ஆகினாள் கிறுஸ்தி.

 

இந்துவிடம் அஸ்வின் திட்டு வாங்குவதைக் கண்டு ஆரவ் சிரித்தான்.

 

“பார்த்த இல்லை, எப்படி தப்பிச்சான்னு?” என்று மாதேஷ் ஆரவிடம் கூற,

 

“இவ ஏதோ திருட்டு வேலை பன்னி இருக்காடா அது கன்போர்ம்” என்றான் கவின்.

 

இவ்வாறே சிறியவர்களின் கலாட்டாக்களுடன் அன்றைய நாள் அழகாக நிறைவுற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61

நிலவு 61   ‘வணக்கம் தமிழ்நாட்டு எம்.பி ஜெகனாதனின் ஒரே மகனான அதர்வா சற்று முன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், இந்திய வலைப்பாந்தாட்ட சம்மேளத்தில் ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி’ என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5

நிலவு 5   கீழே உருண்டு விழுந்த அஸ்வின் ‘யார் அவன் கையணைப்பில் உள்ளார்’ எனப் பார்த்த போது மீரா கண்கள் சிவக்க அவன் கீழ் விழுந்து இருந்தாள். அவனோ தன்னவள் நெருக்கத்தில் அவளை இரசித்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44

நிலவு 44   “என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை காதலிச்சிட்டே இருப்பேன், என்னோட உயிருக்கும் அதிகமா உன்னை நேசிப்பேன், ஐ லவ் யூ கண்ணம்மா” என்று அவள் ரோஜா இதழ்களை மென்மையாக சிறைபிடித்தான்.   அவளும் கண்மூடி