Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 18

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 18

ஐந்து வருடங்களுக்கு முன்பு….

 

சென்னையில்,

 

“என்னங்க, நாங்க எல்லாரும் ரெடி ஆகிட்டோம். வினோவும் college விட்டு வந்துட்டான். மீராவும், கிறுவும் தான் ஹொஸ்டலில் இருந்து போன் பன்னவே இல்லை” என்றார் தேவி.

 

( ஆமாங்க, இரண்டு பேரும் சென்னைல தான் படிக்கிறாங்க, வீட்ல இருந்தா ஒழுங்கா படிக்க முடியல்ல, ஹொஸ்டல்ல இருந்தா group study பன்னுவோம்னு அங்க தங்கி படிக்கிறாங்க. இதை நீங்க நம்புறிங்க?)

 

அருணாச்சலத்திற்கு ஹொஸ்டல் வார்டன் அழைத்து இருந்தார்.

 

“சொல்லுங்க மெடம்?” என்றார்.

 

“ஐயோ மாமா நீங்க எனக்கு ரொம்ப மரியாதை தர வேண்டாம். நான் எப்போவும் உங்க மருமகள் தான்” என்றாள் கிறு.

 

“வாயாடி நீயா? நான் வார்டன்னு நினைச்சேன், நாங்க ஊருக்கு கிளம்ப போறோம் நீங்க இன்னும் வரவில்லையே” என்று அவர் கேட்க,

 

“மாமா எங்களுக்கு ஸ்டடி லீவ் தந்து இருக்காங்க. பிரன்ஸ் எல்லோரையும் ஒரு மாசம் மிஸ் பன்னுவோம். அதனால் நாங்க இரண்டு பேரும் நாளைக்கு ஊருக்கு வரோம், please” என்று கெஞ்ச,

 

“சரி டா செல்ல குட்டி” என்றார் அருணாச்சலம்.

 

“முதலில் என் கிட்ட போனை கொடுங்க” என்று அவர் கையில் இருந்து போனை பிடுங்கி கிறுவுடன் பேசினார் தேவி.

 

“ஏதோ பிளேன் பன்னிட்டிங்க புரியிது. நைட்டுக்கு ரொம்ப நேரம் முழிச்சி இருக்காமல் போய் தூங்குங்க, நாளைக்கு காலையில் 6 மணிக்கு வண்டி வந்திரும். ரெடியாகி இருங்க” என்றார்.

 

“சரி அத்தை வினோ எங்கே?” என்றாள் கிறு.

 

வினோ, “டேய் எங்க டா இருக்க? பொண்ணுங்க சரி ரெடியாக இவளோ நேரம் எடுக்க மாட்டாங்கடா, சீக்கிரம் வெளியில வாடா” என்று அறைக் கதவைத் தட்டினார் தேவி.

 

“நிம்மதியா டிரஸ் பன்ன விடுறியா?” என்றவாறே கதவைத் திறந்தான் வினோ.

 

“என்ன அம்மா?” என்க,

 

“கிறு லைன்ல இருக்கா பேசு” என்று மொபைலை அவன் கையில் திணித்துச் சென்றார் தேவி.

 

“என்ன டி அதிசயமா என் கூட பேசனும்னு சொல்லி இருக்க?” என்றான்.

 

“நான் இல்லை டா  உன் பாசமலர் தங்கச்சி தான் பேசு” என்றாள்.

 

மீரா “அண்ணா” என்று அவள் அழைக்க,

 

‘பாசமா பேசுறாளே இது நல்லதில்லையே’ என்று மனதில் நினைத்தவன்,

 

“சொல்லுமா” என்றான் இவனும் பாசமாக..

 

“அண்ணா,உனக்கு ஏதாவது கிப்ட் வாங்கி தரலாம்னு நினைக்குறேன். நீ அதை பற்றி என்ன நினைக்குற?” என்று கேட்க,

 

“ஒன்னும் இல்லையே” என்றான் அவன்.

 

“கிறு உனக்கு நம்ம ௧ன்டீனில் இருக்கிற ஸ்நெக்ஸ் இரண்டு பெகட் வாங்கலாம்னு சொன்னா, நீ பெரிய இன்ரஸ்ட் காட்றது போல தோனல்ல, அதனால் நான் வேணான்னு சொல்றேன்” என்று கூற,

 

“ஐயோ வேணாம் தங்கச்சிமா எனக்கு அந்த ஸ்நெக்ஸ்னா ரொம்ப புடிக்கும் டி, கருமத்துக்கு அது வேறு எங்கவும் வாங்க முடியாது. நீ வாங்கிட்டு வாடா இந்த அண்ணாவிற்கு” என்றான் வினோ.

 

“நாங்க வாங்கனும் என்றால் அதற்கு லஞ்சம் தரனும்” என்றாள் மீரா.

 

“அதானே பார்த்தேன், என்னடா இன்னும் ஒன்னும் சொல்ல இல்லையே பாசமா வேற பேசுறா அது தப்பாச்சேன்னு” என்று கூற,

 

“இப்போ உனக்கு வேண்டுமா? வேண்டாமா?” என்று கேட்க,

 

“ரொம்ப பெரிய ஆளுங்கடி நீங்க எது எதிலெல்லாம் மிரட்டுறிங்க? சரி என்ன லஞ்சம் வேனும்னு சொல்லு” என்றான் வினோ.

 

எதிர் புறத்தில் மீராவும், கிறுவும் ஹைபை அடித்தனர்.

 

“வீட்டில் இருக்கிற இட் செப்டர் ஒன் மூவி சிடியை எடுத்து எங்க ஹொஸ்டலுக்கு வா” என்றாள்.

 

“என்ன விளையாடுறியா? அம்மா, அப்பாவிற்கு தெரிஞ்சது என் கதை கந்தல்” என்றான் வினோ.

 

“வினோ அதை எடுத்துட்டு hostel க்கு பின்புறம் இருக்கிற கேட் கிட்ட வா.  வந்தால் உனக்கு ஸ்நெகஸ் கிடைக்கும் இல்லை வாழ்க்கை பூரா கிடைக்காது” என்று மிரட்ட,

 

“எல்லாம் என் நேரம் டி, வரேன்” என்று கிளம்பினான்.

 

“அம்மா எனக்கு கொஞ்ச வேலை இருக்கு. நான் வெளியில் போயிட்டு இருபது நிமிஷத்துல வந்திருவேன்” என்று சிடியை எடுத்துக் கொண்டு பைக்கில் பறந்தான் வினோ.

 

தேவி கத்தும் சத்தம் எதுவுமே அவன் காதை எட்டவில்லை. பின்புறம் வந்து சேர்ந்தவன், கிறுவிடம் கொடுத்தான்.

 

“கிறு, நீ மட்டும் எனக்கு வாங்கிட்டு வரவில்லை, உன்னை என்ன  பன்றேன்னு பாரு” என்று மீண்டும் பைக்கில் தன் வீட்டை நோக்கிப் பறந்தான் வினோ.

 

கிறு புன்னகைத்துக் கொண்டு ஹொஸ்டலிற்க்குள் சென்றாள்.

 

வினோ வீடு வந்து சேரந்தவுடன் கொடிகாமத்தை நோக்கி பயணித்தார்கள் அனைவரும்.

 

கொடிகாமம்…

 

அந்த மாளிகையின் முன்னே இரண்டு கார்கள் வந்து நின்றது. அதில் இருந்து நான்கு ஆணழகன்கள் வந்து இறங்கினர். வாசலில் இருந்த அனைவரையும் அஸ்வின் கட்டித் தழுவ மாதேஷூம், கவினும் அவ்வாறே செய்தார்கள். ஒருவன் மட்டும் வேடிக்கை பார்க்க,

 

“தாத்தா இவன் தான் ஆரவ்” என்று அனைவருக்கும் அவனை அறிமுகப்படுத்தினான் அஸ்வின்.

 

“என்னப்பா போனில் மட்டும் தான் பேசுவியா? நேரில் கூப்பிட்டா வர மாட்ட, ஏதோ இந்த வாட்டி அதட்டி பேசுனதால் வந்து இருக்க. இதறகு அப்பொறம் நான் கூப்பிட மாட்டேன் நீ தான் வரனும்” என்றார் தாத்தா.

 

“சரி தாத்தா கண்டிப்பா இனி எந்த முறையும் வருவேன்” என்றான் ஆரவ்.

 

நால்வரையும் நிற்க வைத்து இந்து ஆரத்தி எடுத்தார். உள்ளே சாவித்திரி அனைவரையும் அழைத்துச் சென்றார். சோபாவில் அமர்ந்து ஆரவிற்கு தன் குடும்பத்தை அறிமுகப்படுத்த ஆரம்பித்தான் அஸ்வின்.

 

அரவிந்நாதனைக் காண்பித்து, “இவரு தான் எங்க வீட்டு மூத்த பையன். என்னோட பெரியப்பா என்னோட பேவரிட்”

 

“இவங்க சாவிமா, அரவிந் பாவோட மனைவி என்னோட இன்னொரு அம்மா” என்றான்.

 

இந்துவைக் காண்பித்து “இவங்க என்னோட பெற்ற அம்மா” ராமைக் காண்பித்து

 

“இவரு என்னோட அப்பா மை ஹீரோ” என்றான்.

 

“நான் என்னோட சாவிமா செல்லம் தான்” என்று கூற,

 

கவின் “இந்து மா அந்த சொரணாக்காவும், வாயாடியும் இன்னும் வரவில்லையா?” என்று கேட்க,

 

“இல்லை பா நாளைக்கு வருவாங்க, பிரன்சை மிஸ் பன்னுவாங்களாம். அதான் ஒரு நாள் என்ஜோய் பன்னிட்டு வாராங்களாம்” என்று இந்து கூற,

 

“அம்மா நிச்சயமா இது சொரணாக்காவோட ஐடியா தான்” என்று கவின் கூறினான்.

 

“அதில் எந்த சந்தேகமும் வேணான்டா” என்றான் மாதேஷ். ஆரவ் விழிக்க,

 

மாதேஷ் சிரித்து, “வாயாடின்னு சொன்னது மீராவை, அவ அஸ்வினோட அத்தை பொண்ணு” என்றான்.

 

ஆரவ் அஸ்வினைப் பாரத்து மர்மமாக புன்னகைத்தான்.

 

“சொர்ணாக்கான்னு சொன்னது, அரவிந் அப்பா, சாவி அம்மாவோட தவப்புதல்வி கிறுஸ்திகா. அஸ்வினோட தங்கை, உனக்கு அவளை பற்றி சொல்லி இருக்கோமே டா” என்று கூற,

 

“ஆமா” என்றான் ஆரவ்.

 

“நாளைக்கு வரைக்கும் நீ நிம்மதியா இருக்கலாம். அவளுங்க இரண்டு பேரும் வந்தாளுங்க, இந்த வீடே இரண்டாகிடும்” என்று சிரித்தான் கவின்.

 

“என் பொண்ணு கிட்ட இதை சொன்னா, அவ உன்னை உயிரோட விடுவாளான்னு டவுட்” என்று இந்து கூற,

 

“ஐயோ அம்மா தெரியாமல் சொல்லிட்டேன், சொரணாக்கா கிட்ட மாட்டி விட்றாதிங்க” என்றான் கவின்.

 

“இந்து அம்மாவுக்கு கிறுஸ்தி தான் செல்லம்” என்றான் அஸ்வின்.

 

“அம்மா மாமா, அத்தை, வினோ வந்துட்டாங்களா?” என்று அஸ்வின் கேட்க,

 

“ஆமா பா சென்னையில் இருந்து வெளியாகிட்டாங்க” என்றார் இந்து.

 

அனைவரும் பிரஷ் ஆகச் செல்ல, “அஸ்வின் நீயும் கவினும் உன் ரூம்லயும், ஆரவும் மாதேஷூம் கிறுஸ்தி ரூம்லயும் தங்கிக்கொங்க. மற்றைய ரூம் மாமாக்கும், அத்தைக்கும், நாளைக்கு எல்லா ரூமையும் ரெடி பன்ன சொல்றேன்” என்று கூறிச் சென்றார் அரவிந்.

 

அன்றிரவே தேவி, அருணாச்சலம், வினோ வந்து சேர்ந்தனர். அவர்களையும் ஆரவிற்கு அறிமுகப்படுத்தி, ஆரவையும் இவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.

 

இவர்களுக்கும் அவனை பிடித்துப் போக அவனுடன் ஐக்கியமானார்கள். அன்றிரவு அனைவருக்கும் ரம்யமாக சென்றது. சென்னையில் hostel ல் பேய் படம் பார்த்து, பயந்து சமன் ஆகி உறங்கும் போது விடியற்காலை நான்கு மணியாகியது. காலை ஆறு மணிக்கு  hostel ன் முன் மீராவையும், கிறுஸ்தியையும் அழைத்துச் செல்ல கார் வந்து நின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48

நிலவு 48   ஆரவின் அருகில் சென்ற கிறு அவன் தோளில் இடித்தாள். அவன் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டான்.   “என்ன அமைதியா இருக்க? ஹீரோ எங்க என்று கேட்குங்குறாபா?” என்று கண்ணடிக்க   அவள் இடையில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 66யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 66

நிலவு 66   “கேர்ள்ஸ் நீங்க ஒரு நாளை சரி வேஸ்ட் பன்ன கூடாது” என்று ஆரவ் கூற   “நீங்க சொன்னதுக்காக திடீர்னு ஒரு ஆளை எங்க கோர்ச்சா ஏத்துக்க முடியாது” என்றாள் ஒருவள்.   “இங்க பாருங்க இப்போ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28

நிலவு 28   அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அது கோயிலின் மகா பூஜைக்கு முன்னைய தினமாகும். அனைவரும் காலை உணவை உண்ட பிறகு, சோபாவில் அமர்ந்து இருக்க,   சாவி, “இன்றைக்கு கோயிலுக்கு போகனும், சீக்கிரமா ரெடியாகுங்க” என்று