Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16

“பாருடா மத்தவங்க தூங்குறாங்களே, டிஸ்டபனஸ் இல்லாமல்  இருக்கனுமே, அந்த எண்ணம் கொஞ்சமாவது அவளுங்களுக்கு இருக்கா?” என்று பொரிந்தான் கவின்.

 

“வாடா போய் பாக்கலாம் எதுக்கு சிரிக்கிறாளுங்க?” என்று அனைவரும் அடுத்த அறையை நோக்கிச் சென்றனர் நால்வரும்.

 

அறைக்கதவை திறந்த கவின், “என்னங்குடி இருட்டில் பன்றிங்க?” என்று லைட்டை போட்டான்.

 

“ஏய்..” என்று நால்வரும் கத்த,

 

“ஜீவி உன் புருஷனோட போக்கே சரியில்லை, பார்த்துக்க” என்றாள் மீரா.

 

பெண்கள் இருக்கும் கோலத்தைக் கண்டு நால்வரும் சிரித்தனர்.

 

“இப்போ எதுக்குடா சிரிக்கிறிங்க?” என்று எகிறினாள் தர்ஷூ.

 

“எல்லோரும் எப்படி இருக்கிங்கன்னு பாருங்கடி” என்றான் அஸ்வின்.

 

அப்போதே அவர்களும் தங்களை பார்த்துக் கொண்டனர். மீரா சோபாவில் விழுந்தவாறும், தர்ஷூவும், ஜீவியும் ஒருவரை ஒருவர் அணைத்தவாரும், கிறு பெல்கனியின் வாயிலில் நின்று இருந்தாள்.

 

“போதும் டா இதில் சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்றாள் ஜீவிதா கடுப்பாக.

 

“இல்லை நீங்க எல்லாரும் சிரிச்சிங்க அதான் சும்மா நாங்களும் சிரிச்சோம்” என்று அஸ்வின் கூற

 

பெண்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து “தூத்து……” என்றனர் ஒரு சேர.

 

“பலத்த அவமானம்” என்றான் மாதேஷ்.

 

“தேவையாடா உங்களுக்கு?” என்று ஆரவ் கேட்டான்.

 

“விடு மச்சான் நமக்கு இது புதிசு இல்லையே” என்று மாதேஷ் அசால்டாக கூற, ஒரு கேவலமான் பார்வையை பெண்கள் அவன் மீது செலுத்தினர்.

 

“சரி இப்போ எதுக்குடி நீங்க சிரிச்சிங்க?” என்றான் அஸ்வின்.

 

மீண்டும் அவர்கள் நால்வரும் வயிற்றைப் பிடித்து சிரிக்க, கடுப்பான மற்ற நால்வரும்,

 

“பதிலை சொல்லிட்டு சிரிங்க டி” என்றான் கவின் கடுப்பாக. கிறு கடினப்பட்டு சிரிப்பை அடக்கி, ஜீவியின் அருகில் இருந்த லெப்டொப்பை அவர்கள் புறம் திருப்பினாள். அவர்கள் நால்வரின் முகத்திலும் கோபம் கொப்பளித்தது.

 

“என்ன இதெல்லாம்?” என்று ஆரவ் கேட்க,

 

“நீ கிறு கையால அடிவாங்கினப்போ உன்னோட ரியெக்ஷ்ன், உன் காட்டுவாசி பிரன்ட்ஸோட ரியெக்ஷன்ஸ்” என்றாள் ஜீவி.

 

“எப்படி டி போடோ எடுத்திங்க? அந்த ரண கலத்துலேயும், இவளுங்க குதூகலமா இருந்து இருக்காளுங்களே” என்று அஸ்வின் கூற,

 

“நான் எதுக்கு டா இருக்கேன்” என்று கேட்டாள் தர்ஷூ.

 

“சும்மா சொல்ல கூடாது, இந்த மாதிரி முகப் பாவனைகளை நான் எங்கேயும் பார்த்ததே இல்லை டா” என்றாள் கிறு சிரித்துக் கொண்டே.

 

“அஸ்வினை பாரு கன்னத்துல கை வச்சி கண்ணை விரிச்சு பாக்குறான். கவின், கன்னத்துல கைவச்சது மட்டும் இல்லாமல் வாயை கூட திறந்துட்டு இருக்கான். மாதேஷ் கைய உயர்த்தி அதே போஸ்ல நிக்கிறான். ஆரவ் கன்னதுல கை வச்சி ஏதோ பேய பாக்குற மாதிரி பாக்குறான்” என்று கூறி சிரித்தாள் மீரா.

 

“என்னடி சைட் கெப்பில் என்னை பேய்னு சொல்றியா?” என்று கிறு சண்டைக்குப் போக,

 

“அது சரி புரிஞ்சுதே” என்று மீரா கூற அவர்கள் வாய்ச்சண்டை அதிகரிக்க,

 

“நிறுத்துங்கடி ஆ உ ன்னா சின்ன குழந்தைகளைப் போல் சண்டை பிடிக்கிறது” என்று அலுத்துக் கொண்டான் கவின்.

 

“ஹலோ நீ எதுக்கு எங்களுக்கு இடையில வர?” என்று மீரா கேட்க,

 

“உனக்கு இது தேவைதான்டா” என்றவாறு அவனைப் பார்த்தனர் மற்ற மூவரும்.

 

“ஆனாலும் இந்த மாதிரி கள்ள போடோஸ் எடுக்குறது போங்கு டி” என்றான் மாதேஷ்.

 

அவர்கள் சிரித்து அமைதியானார்கள்.

 

“கடவுளுக்கு ஏதாவது வேண்டுதல் வச்சிருக்கிங்களா டா?” என்று ஜீவி கேட்க,

 

“யேன்?” என்றான் கவின்.

 

“வந்ததில் இருந்து நின்னுட்டே இருக்கிங்க அதான் கேட்டேன்” என்றாள் ஜீவி.

 

பின் ஆரவைத் தவிற மற்றவர்கள் தத்தமது துணைக்கு அருகில் நெருங்கி அமர்ந்தனர். அஸ்வின் மீராவின் அருகில் அவள் கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருப்பதைப் பார்த்த கவின்,

 

“அஸ்வினை நீ மன்னிச்சிட்டியா மீரா?” எனறான்.

 

“ஆமான்டா” என்று அஸ்வின் அவசரமாகக் கூற,

 

மீரா, “டேய் நான் எப்போடா உன்னை மன்னிச்சேன்?” என்று கேட்க,

 

“அஸ்வின் நீ தானே செல்லம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன?” என்றான்.

 

“நான் உனக்கு திரும்ப ஒரு வாய்ப்பை தான் தரேன்னு சொன்னேன், முதலில் தள்ளி உட்காரு”  என்றாள் மீரா.

 

அஸ்வினோ கவினை முறைத்தான். மற்றவர்கள் சிரிக்க கிறுவும், ஆரவும் இன்னும் நின்று இருப்பதை பாரத்தவர்கள் கட்டிலின் ஒரு பகுதியில் இருவரும் அருகில் அமர இடமளித்தனர். அவர்களும் மறுக்க முடியாமல் அமர்ந்தனர்.

 

“கிறு அடி வாங்கினவனே சும்மா இருக்கான், நீ எதுக்கு டென்ஷன் ஆகுற?” என்று மாதேஷ் கேட்க,

 

‘நான் மறந்தாலும் இவனுங்க மறக்க மாட்டாங்க போல இருக்கே’ என்று ஆரவ் அவனை மனதில் பொரிந்து தள்ளினான். கிறுவோ அவனை முறைத்தாள்.

 

“சரி இப்போ என்ன பன்னலாம்?” என்று அடுத்த யுத்தம் ஆரம்பிக்க முன் ஜீவி கதையை மாற்றினாள்.

 

“லெப்டொப்ல சோங்சை போட்டு கபிள் டான்ஸ் ஆடலாம்” என்றாள் தர்ஷூ.

 

அனைவரும் அதை ஏற்றனர்.

 

“அர்த்த ராத்திரியில் இப்படி டான்ஸ் ஆட்றது நாங்களா தான்டா இருப்போம்” என்றான் மாதேஷ்.

 

“இது பேய் வோகிங் போற டைம்டா, இந்த நேரத்துல் கபிள் டான்ஸ் வாவ்” என்றான் கவின்.

 

“அப்போ நீ ஜீவியை பேய்னு சொல்றியா?” என்று அஸ்வின் அவன் காலைவார ஜீவியோ அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

 

“யேன்டா?” என்று அவன் கேட்க,

 

“என் ஆளையும் என்னையும் பிரிச்சு வச்சல்ல அதான்” என்றான் அஸ்வின்.

 

“என் கல்யாணத்துக்கு முன்னாடி உன் தங்கச்சி நாரதர் வேலை பாத்தா, இப்போ நீ பார்க்குற குட் பெமிலி” என்றான் கவின்.

 

மற்றவர்கள் இதனைக் கண்டு சிரித்தனர்.

 

முதலில் தர்ஷூவும் மாதேஷூம் நடனமாடினர்.

 

நீ பார்த்த விழிகள்

நீ பார்த்த நொடிகள்

ஹம்ம்ம் கேட்டாலும் வருமா

கேட்காத வரமா

 

என்று அப்பாடலிற்கு தன்னிலை மறந்து நடனமாடினார்கள் ஒரு தனி உலகத்திற்கு சென்று. டேய் மாங்காய் என்ற அஸ்வினின் கத்தலிற்கு பின்னரே இருவரும் தன்னிலை அடைந்தனர். அவர்கள் அசடு வழிந்துக் கொண்டே தம்மிடம் வந்து அமர்ந்தனர்.

 

அடுத்ததாக தன் துணையை கெஞ்சி, சமாதானப்படுத்தி நடனமாட அழைத்து வந்தான் கவின்.

 

யான்ஜி யான்ஜி

என் நென்ஜில் வந்து வந்து நிக்கிற

யேன் யேன் யேன்

 

என்ற பாடலுக்கு வரிகளுக்கு ஏற்றாற் போல் ஆடினர் கவின், ஜீவி ஜோடி. அவர்களும் புதிய உலகினில் தம்மைத் தொலைத்து நடனமாடினர் இருவரும். கிறு எழுந்து அவன் முதுகில் அடைத்த பின்னரே, தன்னிலை உணர்ந்தான்.

 

“டேய் பாட்டு முடிந்தே ஐந்து நிமிஷம் ஆகுது” என்றான் அஸ்வின்.

 

“ஈஈஈ” என்று அவன் இழிக்க,

 

“சீ போ” என்றாள் மீரா.

 

அடுத்ததாக மீரா அஸ்வின் ஆடினர்.

உன் விழிகளில் விழுந்த நாட்களில்

நான் தொலைந்தது அதுவே போதுமே

வேறு எதுவும் வேண்டாமே பெண்ணே…

 

என்ற பாடல் மூலமாக தன்னுடைய இத்தனை வருட காதலையும் அவன் அவளுக்கு புலப்படுத்தினான். இருவருமே மெய் மறந்து ஆட மற்றவர்களின் கைத்தட்டலிற்கு தன்னிலை அடைந்து அவர்களிடத்தில் அமர்ந்தனர். ஆரவும், கிறுவும் அமைதியாக இருக்க

 

‘அவர்களை வற்புறுத்த வேண்டாம்’ என தர்ஷூ கண்களாலேயே கூற மற்றவர்களும் அவர்களை நடனமாட அழைக்கவில்லை.

 

இவ்வாறு நீண்ட நாட்களுக்குப் பின் அனைவரும் கூத்தடித்து விட்டு உறங்கினர் அங்கேயே. மீரா, அஸ்வினின் தோள் சாய்ந்து சோபாவில் உறங்கினர். கட்டிலின் ஒருபகுதியில் தர்ஷு, மாதேஷ் உறங்க, அருகில் இருந்த மேசையில் சாய்ந்து ஜீவி, கவின் உறங்கினர். உறக்கம் வராமல் பெல்கனியில் சென்று கிறு, ஆரவ் நின்றனர். இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

 

ஆரவ் “நீ இப்படி இருக்கிறது உனக்கு செட் ஆகுதில்லை கிறு” என்றான்.

 

அவள் சிரித்து பழைய கிறுவாக மாறி அவனுடன் பேசியவாறே பெல்கனியின் கீழே அருகருகே அமர்ந்தனர் இருவரும். ஒரு நிலையில் கிறு அவளறியாமல் ஆரவின் கையில் சாய்ந்து உறங்க, அதைப் பார்த்த ஆரவின் இதழ்கள் விரிந்தன. அவள் உயரித்திற்கு ஏற்றவாறு அவன் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் கிறுவின் கண்ணா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48

நிலவு 48   ஆரவின் அருகில் சென்ற கிறு அவன் தோளில் இடித்தாள். அவன் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டான்.   “என்ன அமைதியா இருக்க? ஹீரோ எங்க என்று கேட்குங்குறாபா?” என்று கண்ணடிக்க   அவள் இடையில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 43யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 43

நிலவு 43   இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்த கிறு தான் முதலில் வீட்டில் இருப்பதைக் கண்டு திகைத்தவள், பின் நடந்தது நினைவுர கண்ணீர் வடிந்தது. ஆரவ் அவளைப் பார்ப்பதற்கு வந்தவன்,   “இப்போ எதுக்கு அழற?” என்று கேட்க,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59

நிலவு 59   ஆரவ் செய்வதறியாது நிற்க, யோசித்தவன்   “வினோ உங்க மேனஜர் கிட்ட சொல்லி மிளகாய் ஒன் கே.ஜி வாங்கி வர சொல்லு, சீக்கிரம்” என்று அவன் அவசரபடுத்த   “சரி அண்ணா” என்று அவனும் மேனஜருக்கு அழைப்பை