Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 14

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 14

ஆரவ் கன்னத்தில் கை வைத்துப் பார்க்க, அவன் முன் காளியாய் நின்று இருந்தாள் கிறு.

 

“இதற்கு அப்பொறம் உன்னை தாழ்த்தி ஒரு வார்த்தை பேசினாய் என்றால் கொன்னுடவேன்” என்றாள் கண்கள் சிவக்க.

 

இன்று அனைவரும் பார்ப்பது புதிய கிறுவை. கவினும், அஸ்வினும் அவர்களுக்கு அடித்தது போல அவர்கள் கன்னத்தில் கை வைத்து இருந்தனர்.

 

“நீ உன்னை ஏத்துக்காத வரைக்கும் உன்னால் மத்தவங்களையும் ஏத்துக்க முடியாது. உன்னை நீயே தாழ்த்தினாய் என்றால், மற்றவர்களும் உன்னை தாழ்த்த ஆரம்பிப்பாங்க, பிறகு உன்னால் முன்னாடி போகவே முடியாமல் போயிரும்” என்றாள் கிறு.

 

அவன் எதுவும் பேசாமல் அமைதியாய் அவள் கூறுவதைக் கேட்டான். மற்றவர்கள் இருவரும் தம் கன்னங்களில் இருந்து கையை எடுக்காமல் இருக்க,

 

கிறு “என்னங்குடா கன்னத்தில கையை வச்சிட்டு இருக்கிங்க?”  என்று கேட்க, இருவரும் பயத்திலேயே கையை எடுத்தனர்.

 

ஆரவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். இன்று ஆரவிற்கு கிறு முழுமையான ஒரு தாயாகவே மாறி இருந்தாள்.  அவனை வீட்டின் உள்ளே அழைத்து வந்தவள் அவனை சோபாவில் அமர வைத்தாள். கிச்சனிற்கு சென்று பாதாம் போட்டு பாலை தயாரித்து குடிக்கக் கொடுத்தாள். அவனும் ஏதும் பேசாமல் குடித்தான். கிறுவும் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

 

வீட்டினுள் வந்தவர்களுக்கு ஆச்சரியமே கிச்சன் புறமே தலை வைக்காதவள் ஆரவிற்கு பாலைக் குடிக்க வழங்கி இருக்கிறாள் என்று. நண்பர்கள், பால் குடிக்காதவன் இன்று அவள் வழங்கியதும் கையில் வாங்கி மடமடவென குடித்தான் என்று ஆச்சரியம் அடைந்தனர்.

 

அவன் கையில் இருந்த வெற்று கிளாசை வாங்கி கிச்சனில் வைத்தவள் அவனை அறைக்கு அழைத்துச் சென்றாள். அவன் முகத்தை அவளே கழுவி விட்டாள். அவள் அடித்தில் ஐந்து விரல்களுமே கன்னத்தில் பதிந்து இருந்தது. தண்ணீர் பட்டதும் எரிவு ஏற்பட “ஸ்ஸ் ஆஆஆ” என்றான். கிறுவிற்கு கண்கள் கலங்கின.

 

அவனை கட்டிலில் உறங்க வைத்து போர்வையை போரத்தி விட்டாள். அவன் தூங்கும் வரை அருகில் உள்ள சோபாவில் அமரந்தாள். அஸ்வின் தாத்தவின் அறைக்குச் சென்றான்.

 

“தாத்தா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான்.

 

“சொல்லுடா பேரான்டி” என்றார் அவர்.

 

“தாத்தா ஆரவை இதற்கு அப்பொறமா தனியா விடுகிறது சரியில்லை, இப்போ நடந்ததை வச்சி பாரத்தா கிறுவுக்கு ஆரவ் மனசுல ஒரு இடம் இருக்கு, அவன் கிறுஸ்திய காதலிக்கிறான், பட் அவனால் அதை ஏத்துக்க முடியல்லை. கிறுஸ்தி அவன் பக்கத்துலேயே இருந்தா என்றால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு வரும் என்று நினைக்கிறேன், நீங்க யோசிச்சு பார்த்து ஒரு முடிவு எடுங்க” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தான்.

 

அவன் உறங்கிவிட்டான் என்பதை உறுதி செய்தவள், கீழே ஹாலிற்கு வந்தாள் சாவியின் அருகே வினோ அமர்ந்திருக்க வினோவைப் பார்த்தவள்,

 

“வினோ எந்திரி” என்றாள்.

 

உடனேயே அங்கிருந்து எழுந்து விட்டான். இதுவே கிறுவை காளி அவதாரத்தில் பார்த்திராவிட்டால் நிலமை வேறு மாதிரி இருந்திருக்கும். அவளோடு சண்டை பிடித்து இருப்பான், இப்போது சண்டை பிடித்தால் தனக்கு தான் அடுத்த அறை என்று அமைதியாய் இருந்தான். இவற்றை பாரத்த கிறு உள்ளுக்குள்ளேயே சிரித்தாள்.

 

அவள் தாயின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அவர் அவள் தலையை வருடிக் கொண்டிருக்க, கிறு, “அம்மா நான் தப்பா வளர்ந்திருக்கேனா?” என்று கேட்க,

 

சாவி ‘அவள் என்ன கூற விழைகிறாள்’ என்று புரியாமல் விழித்தார்.

 

“யேன்டா அப்படி கேக்குற?” என்று அரவிந் கேட்க,

 

“என்ன இருந்தாலும் ஆரவ் என்னை விட வயசுல பெரியவன், நான் கை நீட்டி அடிச்சிருக்க கூடாதில்லையா?” என்றாள்.

 

மாதேஷ், “கிறு நீ அவனை அடிச்சிருக்காவிட்டால் கண்டிப்பா நான் அடிச்சிருப்பேன் அவன் பேசின பேச்சுக்கு” என்றான் அதே கோபத்துடன்.

 

“அஸ்வின் அவன் லைப்ல என்ன தான் நடந்திச்சு?” என்று அவள் கேட்க, ஆரவின் வாழ்க்கையைப் பற்றி கூற ஆரம்பித்தான்…….

 

ஆரவோட வீட்ல அப்பா, அம்மா, அண்ணா, தங்கை இவன் தான் இருந்தாங்க. இவன் பிறந்ததுல இருந்தே அவன் அப்பா இவன் மேல கொஞ்சம் சரி பாசம் காட்டினது கிடையாது. மற்ற இரண்டு பேரோடையும் அவரு அன்பா நடந்துப்பாரு. இவன் கிளாஸ்ல first வந்தா, பாராட்டினது கூட கிடையாது. இவன் அம்மா அப்பா அளவுக்கு இல்லைனாலும் ஒரளவுக்கு பாசமா இருந்தாங்க. ஆனால் பணம் சம்பந்தமா என்னை விஷயம்னாலும் இவன் கையால தான் ஆரம்பிப்பாங்க, அதற்கு மட்டும் தான் இவன் தேவைப்பட்டான்.

 

அண்ணனும் சரி, தங்கையும் சரி தேவையை மீறி ஒரு வார்த்தை இவன் கூட பேசமாட்டாங்க,  அந்த வீட்டில் இவனுக்கு உண்மையாக பாசம் காட்டினது அந்த வீட்ல வேலை செய்த பாட்டியும் அவங்க பேத்தியும் தான். அவங்க இவனை ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. பண்டிகைன்னா இவன் தனியா தான் இருப்பான். சில நேரம் அந்த பாட்டி வீட்டுக்கு போயிடுவான். அவன் வீட்டில் தங்காமல் வெளியூரில் தங்கி படிச்சான். அதுவும் ஹொஸ்டலில் தங்கி படிச்சான். படிப்பு தான் முழு மூச்சா மாறிச்சு.

 

இப்படியே, இவன் பதினைந்து வயசா இருக்கும் போது தான் பாட்டி இறந்துட்டாங்க. அதற்கு ஆரவ் தான் காரணம்னு சொன்னாரு. இவன் இருக்கிற இடம் யாருக்கும் நிம்மதியும், சந்தோஷமும் இருக்காதுன்னு ஊர் ஆளுங்க முன்னாடி சொன்னாரு. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா அவனோட ஊர்ல இருக்கிற நண்பர்கள் விலக ஆரம்பிச்சாங்க. அப்படியே போக, அந்த வருஷம் தான் ஒவ்வொரு ஸ்கூலும் பாடிசிபேட் பன்ற மீயுசிக் கம்படிஷன் நடந்தது. அதில் தான் நாங்க நாலு பேருமே மீட் பன்னி நல்ல பிரன்ஸ் ஆனோம். நல்லா குளோஸ் ஆனோம்.

 

சின்ன வயசுல இருந்து தன்னோட பீலிங்சை மறைச்சு  வாழ்ந்தவன் அழுகையையும், கவலையையும் மறைச்சிட்டு, எங்க கிட்ட இயல்பா பழக ஆரம்பிச்சான். பத்தாம் கிளாசுலையும், பன்னிரெண்டாம் கிளாஸ் பைனலிலும் நல்ல மார்க் எடுத்தான். அந்த சந்தோஷத்தை கூட எங்க கிட்ட தான் சேர் பன்னான். ஒரே கோலேஜ்ல தான் நாங்க நாலு பேருமே படிச்சோம். அப்போ படிக்கும்   போது தான் பாட்டியோட பேத்திக்கு கல்யாணம் சரி வந்தது. சந்தோஷமா அவன் லீவுக்கு போனான். அங்க இவனையும், அந்த பொண்ணையும் வச்சு தப்பா பேசி அந்த கல்யாணத்தை நிறுத்திட்டாங்க.

 

அதை தாங்க முடியாமல் அந்த பொண்ணு சூசைட் பன்னிக்கிட்டா. அந்த பழியையும் அவங்க அப்பா அவன் மேல போட்டாங்க. அவனோட அத்தை பொண்ணுக்கு இவன் மேல ஒரு கிரஷ், அவ புரபோஸ் பன்னப்ப இவ முடியாதுன்னு சொன்னதால் அவன் மேல கோபத்துல இருந்தா. அப்போ தான் அந்த பொண்ணுக்கும் இவன் அண்ணனுக்கும் கல்யாணம் பன்னாலாம்னு முடிவு பன்னாங்க. இது எல்லாமே ஒரே நேரத்துல நடக்க, ஆரவைப் பழிவாங்குறதுக்காக இவன் அத்தை பொண்ணு, எல்லோர் முன்னாடியும் ஆரவ் தன்னை காதலிக்கிறதா சொல்லி ஏமாற்றிட்டான்னு அழுதாள்.

 

அதை நம்பி வீட்ல உள்ளவங்க அவனை வெளியில் விரட்டிட்டாங்க. ஆரவோட இராசி, பணத்துக்கு  எப்பவும் பஞ்சம் இல்லாத இராசி, அந்த நேரம் தான் ஏதோ ஒரு பெரிய கம்பனி அவங்களுக்கு பெரிய புரொஜெக்ட் கொடுத்ததால் இவங்களுக்கு அளவுக்கு அதிகமா இலாபம் வந்தது. அதனால் தான் அவங்க யாருக்கும் ஆரவை தேவைப்படவில்லை. இவனை துரத்தும் போது இவன் கெஞ்சினான். அவன் தப்பு பன்னல்லன்னு, யாருமே அவனை நம்ப இல்லை. இவன் அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்.

 

அம்மா கிட்ட கெஞ்சிருக்கான், அப்போ தான் அவங்க சொன்னாங்க அவன் வளர்த்த பிள்ளை, யாரோ அவனை தூக்கி போட்டு தான் இவங்க எடுத்து வளர்த்தாங்கன்னு, அவங்க அம்மா கடைசியா சொன்ன வாரத்தை, “உன்னை பணத்துக்காக மட்டும் தான் வளர்த்தோம்னு” அப்போ தான் அவன் அம்மாவோட சுயரூபம் அவனுக்கு புரிஞ்சுது. மனசு ஒடஞ்சி போயிட்டான். உறவுகளை வெறுக்க ஆரம்பிச்சி தனிமையை தன்னோட சேர்த்துகிட்டான். பெயர் தெரியாத தன்னை பெற்ற அம்மா அப்பா மேல கோவத்தையும், வெறுப்பையும் வளர்த்துட்டு இருக்கான்.

 

இதனால தான் அவன் ஒதுங்கி வாழுறான். அன்னக்கி ஹொஸ்டலுக்கு ரோட்ல போகிற யாரோ ஒருத்தர் தான் பஸ்ஸுக்கு பணம் கொடுத்து உதவி செய்தாரு. இப்போ அவருக்கு மாசம் மாசம் அவன் பணம் அனுப்புவான். அவன் ஹொஸ்டல் வந்தாலும் யாரோடையும் பேசாம ஒதுங்கி இருக்க ஆரம்பிச்சபோ நாங்க தான் வற்புறுத்தி கேட்டோம். அவன் நடந்தை சொல்லி அழ ஆரம்பிச்சான். அன்று தான் அவன் கடைசியா அழுததை நாங்க பார்த்தோம். நம்ம அப்பா தான் அவனை sponsor பன்னி படிக்க வச்சாரு.

 

அவன் படிச்சு முடிந்த அப்பொறமா சொந்தமா பிஸினஸ் பன்னனும் நினைச்சான். அவனோட திறமைய பாத்து தாத்தா அவனுக்கு கடனுக்கு பணம் கொடுத்தாரு. அதை நல்ல படியா பயன்படுத்தி இப்போ இவளோ வளந்து இருக்கான்.  இலாபம் கிடைச்ச உடனே தாத்தா கிட்ட வட்டியும் முதலுமா பணத்தை கொடுத்துட்டான்.டெல்லியில் தான் அவன் பிஸ்னஸ ஸ்டார்ட் பன்னான். தாத்தா வற்புறித்தினதால தான் ஐந்து வருஷத்துக்கு முன்னாடி இங்கே வந்தான். இதற்கு முன்னாடி நாங்க மூனு பேரும் மட்டும் இங்க வரும் போது எத்தனையோ தடவை கூப்பிட்டும் முடியாதுன்னு தான் சொன்னான்”

 

இதான் இவன் வாழ்க்கையில நடந்தது என கூறி முடியும் போது அனைவரின் கண்ணில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. கிறுவிற்கு உணர முடியாத ஒரு வலியாய் இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19

காலை 6 மணிக்கு ஹொஸ்டலின் முன் கார் வந்து நின்றது. வார்டன் அறைக் கதவைத் தட்ட, ஒருவரும் விழிக்காமல் தூங்கினர்.   “மீரா” என்று பலமாகத் தட்ட அதில் விழித்த கிறு, அறைக் கதவை திறக்க வார்டன் கார் வந்திருப்பதாகக் கூறி

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 8யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 8

நிலவு 8   கிறுஸ்தியின் அருகில் கதிரையில்  அமர்ந்து கட்டிலின் ஓரத்தில் ஆரவ் தலைவைத்து உறங்கினான். இவனைப் பாரக்க வந்த நண்பர்கள் விழித்தனர் இதைப் பார்த்து,    மாதேஷ், “இவனை யோசிச்சு ஒரு முடிவு எடுன்னா தூங்கிட்டு இருக்கான்டா” என்றான்.   

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 25யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 25

நிலவு 25   கோயிலை வந்தடைந்தவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்தனர். சிறியவர்கள் பெரியவர்களுக்கு உதவிகளை செய்துக் கொண்டு இருந்தனர்.   சாவி, ” பொங்கலுக்கான பானை காரில் இருக்கு கிறு நீ போய் அதை எடுத்துட்டு வா மா”