Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12

அஸ்வினும், கிறுவும் வீட்டிற்கு வந்தனர்.

 

இந்து “அண்ணனும் , தங்கச்சியும் எங்க போனிங்க இவளோ நேரமா?” என்று கேட்க,

 

இந்துவின் அருகில் அமர்ந்தவள் அவர் கன்னத்தைக் கிள்ளி

 

“இந்துமா, அஸ்வின் என்னை சில்ரன்ஸ் பார்க்கிற்க்கு கூட்டிட்டு போனான்” என்றாள்.

 

மீரா,”என்னது சில்ரன்ஸ் பார்க்கிறக்கா?” என்று கேட்டாள்.

 

ஜீவி, “நீ என்ன சின்ன குழந்தையா?” என்றாள்.

 

“ஐயோ விடு ஜீவி அவ அங்கே தான் போகனும், அவளுக்கு கரெக்டான இடம் தான்” என்று கவின் கூற,

 

“மச்சான் சரியா சொன்னடா இவ இன்னும் வளரவே இல்லை” என்றான் மாதேஷ்.

 

“என்ன டி இந்த நேரம் நீ சொர்ணாக்கா அவதாரம் எடுத்து இருக்கனும், அமைதியா இருக்க?” என்று வினோ கூற,

 

‘இவ இப்படி இருக்கிறது சரியில்லையே’ என்று அனைவரும் கிறுவைப் பார்க்க,

 

“நான் எவளோ சொல்லிட்டேன் என் ஹய்ட்ட பத்தி மட்டும் பேசதன்னு, நீங்க கேக்குற மாதிரி தோனல்ல, அப்போ தான் ஒரு விஷயம் தோனுச்சி” என்றாள்.

 

“என்ன?” என்று அனைவரும் கோரசாக கேட்க,

 

“எருமை மாட்டிற்கு மேலே மழை பெய்தால் அதுங்களுக்கு தெரியாதாம்” என்றாள்.

 

அனைவரும் புரியாமல் அவளை பார்க்க,

 

“அந்த முதுமொழி உங்க எல்லாருக்கும் நல்லா பொருந்துது” என்றாள்.

 

கவின், “ஏய் அப்போ எங்களை எருமை மாடுன்னு சொல்றியா?” என்று எகிற,

 

“அட டியுப் லைட்டுங்களா இப்போ தான் அதே புரிஞ்சுதா? “என்றாள் கிறு.

 

“டேய் அது கூட அவகிட்ட நாம அடிக்கடி கேட்குற பெயர் தான் டா, நமக்கு சொரணை இல்லன்னு சொல்றாடா” என்றான் மாதேஷ்.

 

“பரவால்லையே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கு” என்று கிறு கூற

 

“உன்னை…” என்று வினோவும் அவர்களுடன் சேர்ந்து அவளை அடிக்க வர, அவளோ கூலாக ஓரிடத்தில் அமர்ந்தாள்.

 

“என்னாச்சு இவளுக்கு?” என்று மூவரும் பார்த்தனர்.

 

“ஏதாவது பெருசா பிளேன் பன்றாளோ? என்ன இருந்தாலும் நமக்கு தான் ஆபத்தில் முடியும்” என மூவரும் இரகசியம் பேச,

 

ராம் “என்ன மூனு பேரும் கிசுகிசுன்னு கதைக்கிறிங்க?” என்றார்.

 

“ஒன்னும் இல்லையே போனா போகுதுன்னு மன்னிச்சு விட்றலாம்னு தான்” என்று தமது கெத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினான் வினோ.

 

மற்றவர்கள் அதற்கு “ஆமா” போட்டனர்.

 

இதைக் கண்டு முழுக் குடும்பமுமே சிரித்தது. அஸ்வினும், ஆரவும் மட்டுமே அறிவர் அவளுக்கு தப்பிக்க வழியில்லாமல் தான் அவள் அமைதியாக இருக்கிறாள் என்று. இருவரும் மர்மச் சிரிப்பு சிரித்தனர்.

 

இவ்வாறே அன்றைய தினம் சின்னச் சின்ன கலாட்டாக்களுடனும், சீண்டல்களுடனும் சென்றது. டினரை சாப்பிட்ட பின், அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசினர். பழைய கதைகளை பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

 

கிறு,”மீரா நீ முறையா பரத நாட்டியம் கத்துகிட்ட இல்லையா? இப்போ முடிச்சிட்டியா? என்று கேட்டாள்.

 

அவள் சிரித்து, “நான் அதை எப்பவோ நிறுத்திட்டேன்” என்றாள் அசால்டாக.

 

“லூசா டி நீ, எவளோ அழகா ஆடினாய்” என்று தர்ஷூவும், ஜீவியும் அவளுக்கு திட்டினர்.

 

கிறு “மாமா எனக்கு பரதநாட்டியம் முறையா கத்து  கொடுக்குற ஒருத்தரை தெரியும். அவரு எங்கே இருக்காருன்னு கேட்டு பார்த்து, அவளை மறுபடியும் அனுப்புவோமா?” என்றாள்.

 

அருண்,”எனக்கும் அவ கிளாஸை விட்டது கவலை தான். திரும்பவும் அவ முறையா பரத நாட்டியம் கத்துக்கிறதுல எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றார்

 

மற்றவர்கள் சந்தோஷப்படனர்.

 

கிறு, “என்ன மெடம் உனக்கு ok வா?” என்று கேட்க,

 

அவள் புன்னகைத்து “சரி” என்று பதில் கூறினாள்.

 

அஸ்வினும் கிறுவும் யாருமறியாமல் கண்களாலேயே ஹய்பை போட்டனர்.

 

மாதேஷ், “கிறு நீ நல்லா பாடுவ ஒரு பாட்டு பாடேன்” என்றான்

 

“இப்போவா? என்று அவள் கேட்க,

 

“ஆமா” என்றனர் அனைவரும்.

 

“பாடிட்டா போச்சு” என்று பாட ஆரம்பித்தாள்.

 

“நீ தான் நீ தான் நீ தான் டி எனக்குள்ள”  என்று அவள் பாட ஆரம்பிக்கும் போது,

 

“ஏய் நிறுத்து” என்றாள் தர்ஷூ.

 

“என்னடி?” என்று கவின் எரிச்சல் அடைந்து கேட்க,

 

“முகேன் பாடினா டி போட்டு பாடலாம் இப்போ நீ பொண்ணு அதனால, ஒரு பொண்ணு எப்படி பாடுவாளோ அப்படி பாடு” என்றாள்.

 

“ஒகே என் தர்ஷூ சொன்னா மறு பேச்சு ஏது?” என்று அவள் பாட ஆரம்பித்தாள்.

 

நீதான் நீதான் நீ தான்டா எனக்குள்ள

நான் தான் நான் தான் நான் தான் டா உன் புள்ள

 

சத்தியமா நான் சொல்லுறேன் டா

உன் பார்வை ஆள தூக்குதடா

பைத்தியமா உன்னை பாத்துக்குறேன்

உனக்காக வாழ்க்கை வாழும் படி

கிறுக்கி, உன் கிறுக்கல் எழுத்துல தான்

கிறுக்கா என்னை நீயும் மாத்திபுட்ட

மனசில் இறுக்கிற ஆசையதான்

கிறுக்கா உன் மேல காட்டி புட்டேன்

 

ஒஒஒ இரு மீனகள் ஒரு ஓடையில் தண்ணீரில் தன்னை இழக்க

உன் காதல் என் காவியம்

உன்னோடு கைகோர்க்க

 

என்னை மறந்த நீ என்னை மறந்த சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

என்னை மறந்த நீ என்னை மறந்த சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

 

குழி தான் உன் கன்னத்துல விழுகுதடா

நீ சிரிக்கையில

வலி தான் என் நெஞ்சுக்குள்ள கதறுதடா

நீ அழுகையில

 

நீதான் நீதான் நீ தான்டா எனக்குள்ள

நான் தான் நான் தான் நான் தான் டா உன் புள்ள

 

சத்தியமா நான் சொல்லுறேன் டா

உன் பார்வை ஆள தூக்குதடா

பைத்தியமா உன்னை பாத்துக்குறேன்

உனக்காக வாழ்க்கை வாழும் படி

கிறுக்கி, உன் கிறுக்கல் எழுத்துல தான்

கிறுக்கா என்னை நீயும் மாத்திபுட்ட

மனசில் இறுக்கிற ஆசையதான்

கிறுக்கா உன் மேல காட்டி புட்டேன்

 

அழகே நீ பொறந்தது அதிசயமா

உலகம் உன் பாசத்தில் தெரியுதடா

நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா

கலரா என் வாழ்க்கை மாறுதடா

 

ஒஒஒ இரு மீனகள் ஒரு ஓடையில் தண்ணீரில் தன்னை இழக்க

உன் காதல் என் காவியம்

உன்னோடு கைகோர்க்க

 

என்னை மறந்த நீ என்னை மறந்த சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

என்னை மறந்த நீ என்னை மறந்த சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்.

 

ஒவ்வொரு வரியையும் கிறு மனதால் உணரந்தே படித்தாள். இடையிடையே அவள் யாருமறியாமல் ஆரவைப் பார்க்கவும் தவறவில்லை. பாட்டைக் கேட்டு அனைவரும் அவள் குரலில் மயங்கி, விதவிதமான உணர்ச்சிப் பிடியில் சிக்கி இருந்தனர். மீரா அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளே ஓடினாள். அவள் பின்னே அஸ்வினும் சென்றான்.

 

மீரா ஓரிடத்தில் நின்று அழ அவளை அணைத்தான். அவள் திமிறத்திமிற அவளை அணைத்தவன், ஒரு நிலையில் அவனிடமே ஒன்றி அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.

 

“ஏன்டா என்னை விட்டுட்டு போன? நான் உண்மையா உன்னை காதலிக்க இல்லையா? இல்லை அது அந்த வயசுல வார வெறும் ஈர்ப்புன்னு நினைச்சியா?” என்று தேம்பித் தேம்பி அழ அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் இதழில் தன் ஒற்றை விரலை வைத்தான்.

 

“போதும் டி போதும். நீ நிறையவே அழுதுட்ட, இதற்கு மேலையும் அழ கூடாது, அழ விடவும் மாட்டேன். Please மீரு உன் கிட்ட சொரி கேக்குற எந்த தகுதியும் எனக்கு இல்லை. ஆனாலும் எனக்கு ஒரு வாய்ப்பைத் தா டி. யாரு சொன்னா இது வெறும் ஈர்ப்புன்னு? நீ பிறந்ததுல இருந்து நீ தான் என் மனைவின்னு வாழ்ந்தவன் டி  நான். உன்னோட உண்மையான தூய்மையான காதலை நான் உன் கண்ணுல பாத்து இருக்கேன், உணர்ந்திருக்கேன்டி. நான் எந்த அளவுக்கு  உன்னை காதலிக்குறேன்னு உனக்கு தெரியாது”

 

“உன் கூடவே கடைசி வரைக்கும் வாழனும் டி, இத்தனை வருஷத்தில் அணு அளவு கூட உன் மேல இருக்கிற காதல் குறையவே இல்லை. நான் தனியா அங்கே இருக்கும் போது உன் போடோவைப் பார்த்து பேசுவேன்டி, நான் அங்கே இருந்தாலும் என்னோட உயிரும், இதயமும் உன் கிட்ட தான் டி இருந்தது. உன் கூட இருந்த ஒவ்வோரு நிமிஷத்தையும் நான் பொக்கிஷமா சேர்த்து வச்சிருந்தேன். அதை தான் எப்பவுமே என்னோட ஞாபகத்துல கொண்டு வருவேன்”

 

“உன்னோட ஒரு சிரிப்பு எனக்கு மருந்தா இருக்கும் டி, உனக்காக நான் இந்த ஐந்து வருஷத்தில் பண்டிகைக்கு தேவையானது எல்லாமே வாங்கி வச்சி இருக்கேன் டி. ஒவ்வோரு பண்டிகை நேரமும் அந்த டிரஸ்ஸ வச்சு தான் நீ என் கூட இருக்கிறதா நான் நினைச்சிப்பேன்” என்றான்.

 

அவன் தன் பொகட்டில்  இருந்து, தனது பர்சை எடுத்து, அதில் இருந்து ஒரு தங்க மெல்லிய மாலையை எடுத்தான்.

 

“இது நான் உனக்காக முதன்முதலா௧ நான் சம்பாதிச்சு வாங்கினது” என்றான்.

 

“இதை நான் உன் கழுத்தில் போடட்டுமா?” என்று ஆசையாக கேட்டான்.

 

அவள் அதிரச்சி அடைந்திருந்தாள்.

 

“எனக்கு திரும்ப ஒரு சான்ஸ் கொடுப்பியா?” என்று ஏக்கமாக அவன் கேட்க,

 

அவனிடம் அவள் “ஆம்” என்று தலையை ஆட்டினாள்.

 

“ஐ லவ் யூ மீரு மா” என்று அதை அவள் கழுத்தில் அணிவித்தான்.

 

அவள் பதில் கூறாமல் இருக்க, அவள் நிலையைப் புரிந்தவன்,

 

“உனக்கு எப்போ ரிப்லை பன்ன தோனுதோ அப்போ பன்னு. அது வரைக்கும் நான் வெயிட் பன்றேன். பட் என்னால் இனி ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டுட்டு இருக்க முடியாது. நீ என் கூட மும்பை வாரதுக்கான எல்லா ஏற்பாடும் இப்போ நடந்துட்டு இருக்கு” என்று அவளை அணைத்தான்.

 

அதற்கும் அவள் அமைதியாக இருக்க,

 

“மீரு உனக்கு என் கூட வருகிறது உனக்கு பிடிக்க இல்லையா?” என்று அவன் கவலையாக கேட்க,

 

“என்ன ஏற்பாடு?” என்றாள் அவள்.

 

“இப்போ சொன்னால் அதில் ஒரு கிக் இல்லை, உனக்கு தெரியவரும் போது பாரு” என்று கண்ணடித்தான்.

 

அதில் சிவந்தவள் தலைக் கவிழ, அதில் தொலைந்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் நெற்றியில் இதழ்பதித்தான். இன்னும் கீழே குனிந்து அவள் இதழைச் சிறைச் செய்தான். பின் அவளை விடுவிக்க, அவள் முகம் முழுவதும் சிவந்து, வெட்கம் பரவி இருக்க அதை இரசித்தவன் மீண்டும் அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளை அணைத்தான்.

 

“நிறுத்து ஆரவ்” என்ற கிறுஸ்தியின் கத்தும் சத்தத்தில் தன்னிலை அடைந்தவர்கள் தோட்டத்தை நோக்கி ஓடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40

நிலவு 40   “நீ விருப்பம் இல்லாமல் தான் நெட்போலை விட்டு இருக்க. அன்றைக்கு டிரஸ் எடுக்க போகும் போது நீ ஸ்போர்ட்ஸ் டீ சர்டை பார்த்து கண்கலங்கின. அன்றைக்கு மீரா உன் கிட்ட பேசினப்ப கூட கண் கலங்கியது. அப்போ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 50யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 50

நிலவு 50   ஏழு வீராங்கனைகளும் மைதானத்திற்கு இறங்கினர். அதில் நான்கு நண்பர்கள் மட்டும் கவினின் அருகில் பெயரை வழங்கச் சென்றனர்.    “என்ன இங்க இருக்கிங்க?” என்று கவின் கேட்க,   “எங்க பெயர்கள்” என்று கிறு கூற  

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9

நிலவு 9   இரவு உணவை அனைவரும் சிரித்துப் பேசி உண்டு முடித்து உறங்கச் சென்றனர்.    தனது அறைக்கு வந்த கிறுஸ்தி முகம் கழுவி, லோங் ஸ்லீவ் டீசர்ட், பொடம் அணிந்து, தனது கூந்தலை பின்னிக் கொண்டு இருந்தாள்.