Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10

நிலவு 10

 

“ஆரவ் இன்னும் நீ என்னை உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையா?” என்று கிறுஸ்திகா கேட்க, 

 

அவன் அமைதியாக கண்கள் கலங்க அவளையே பார்த்தான். 

 

அவன் அமைதியைப் பார்த்தவளுக்கு ‘இதயத்தில் எவரோ ஈட்டியைப் பாய்ச்சியது போல’ இருந்தது. 

 

“அன்றும் இதே போல அமைதியா இருந்து, என்னை விட்டுட்டு சென்றாய், இன்றைக்கும் அதே மாதிரி அமைதியா இருக்க. ஆரவ் அன்று நான் ரொம்ப உடைந்து போயிருந்தேன் என்பக்கத்துல நீ இருக்க வேண்டிய நேரம் எதிலுமே நீ இருக்க இல்லை டா” என்று அழுதாள்.

 

அவள் அழுகை இவனுள் ஏதோ செய்ய, அவளை தன்புறம் திருப்பினான். 

 

அவள் முகத்தை கையில் ஏந்தி “நீ என்னை பார்க்குறதுக்கு முன்னாடி ஒரு சொட்டு கண்ணீர் வடிச்சி இருப்பியா? இப்போ பாரு தினம் தினம் அழற, என்னால் தான்” என்றான் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே. 

 

“ஏன் ஆரவ் உனக்கு என்னோ பிடிக்கவே இல்லையா?” என்று கேட்க, 

 

“யாருடி சொன்னா  உன்னை எனக்கு பிடிக்காதுன்னு?” என்றான். 

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது நினைவு வர அவளை விட்டு விலகி நின்றான். 

 

“கிறுஸ்தி டைம் ஆச்சு போய் தூங்கு” என்றான் மறுபுறம் திரும்பி. 

 

“ஆரவ் நல்லா கேட்டுக்கோ, நீ போறதுக்கு முன்னாடி நானா உன் கிட்ட இதைப் பற்றி பேசினால் என்னை உன் காலில் இருக்கிற செருப்பால் அடி” என்று கூறி அறைக்குச் சென்றாள். 

 

அறையில் மீராவும் அழுக, கிறுஸ்தியும் அழுதுக் கொண்டே வர இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து அழுதனர். கிறு மீராவின் மடியில் படுக்க, அவள் மேலே மீரா உறங்கினாள். 

 

அங்கு அஸ்வின் அறையில் உறங்காமல் இருக்க, ஆரவ் தோட்டத்தில் உறங்காமல் இருந்தான், அவர்களே அறியாமல் இருவரும் அவ்விடத்திலேயே உறங்கி இருந்தனர்.

 

காலையில் எழுந்த தாத்தா ஆரவ் தோட்டத்தில் உறங்குவதைக் கண்டு அவனருகில் வந்தார். 

 

“ஆரவ்” என்று அவனை தட்டி எழுப்பி 

 

“என்னப்பா இங்க தூங்குற? என்று கேட்டார். 

 

“தூக்கம் வர இல்லை அதான் வெளிய போகலாம்னு இங்க வந்து உட்கார்ந்தேன் அப்படியே தூங்கிட்டேன்” என்றான். 

 

“சரி ரூமிற்கு போய் தூங்கு” என்று அனுப்பினார். 

 

அவன் ஏதோ மறைப்பதை அவர் உணர்ந்தார். அறையில் அஸ்வினிற்கு அருகில் சென்று உறங்கினான். எட்டு மணியளவில் அனைவரும் எழுந்து குளித்து வந்தனர். அனைவரும் ஏதோ கதைகள் பேசி காபியை குடித்து முடித்தனர்.

 

“அம்மா நீங்க இரண்டு பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு சமைக்க தேவையில்லை. இன்றைக்கு செப் சமைப்பாரு என்ன சமைக்கனும்னு கொடுங்க” என்றான் அஸ்வின். 

 

இந்துவும், சாவியும் ஒத்துக் கொண்டு செப் இடம் அனைத்தையும் கூறி பூஜை வேலைகளை பார்க்கத் தொடங்கினர். 

 

மற்றவர்கள் அமர்ந்து மாதேஷ், தர்ஷூ வின் திருமண போட்டோக்களை பார்த்து கமென்ட் அடித்தனர். அதில் அஸ்வினும், ஆரவும் கலந்துக் கொண்டனர். அனைவருக்கும் அவர்கள் திருமணத்தில் பங்குபெறாதது கவலையே. அஸ்வினும், மீராவும் பேசவில்லை. கிறுவும், ஆரவும் வழமைப் போலவே இருந்தனர். 

 

“அத்தை வினோ எங்கே?” என்று கிறு தேவியிடம் கேட்க, 

 

“வெளி தோட்டத்தில், பிஸ்னஸ் விஷயமா ஏதோ பன்னிட்டு இருக்கான் மா” என்றார் தேவி. 

 

ஆரவ் இதை கேட்டும் கேட்காதது போல இருந்தான். அவள் மீண்டும் போட்டோக்களைப் பார்த்தாள். 

 

வினோ ஓடி வந்து “கிறு இங்கே வாயேன்” என்று கூற, 

 

“எதுக்குடா இப்போ அறக்க பறக்க  ஓடி வர?” என்றாள். 

 

“முதலில் நீ வா” என்று அவள் கையை பிடித்து வெளியே இழுத்துச் செல்ல, 

 

“டேய் அவளை விடேன் டா போடோ பாத்துட்டு இருக்கா டா” என்றார் தேவி. 

 

“அம்மா அவளை நான் ஒன்னும் கடிச்சி சாப்பிட்டுட மாட்டேன் “என்று அவளை இழுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றான்.

 

ஆரவ் கோபத்தில் அறைக்குச் சென்றான். இதைப் பார்த்த பெரியவர்கள் தம்முள் சிரித்தனர். 

 

“டேய் அவனுக்கு வார பொசிசிஸவ்னசைப் பாரு” என்று கவின் கூற, 

 

அஸ்வின் “ரொம்ப தான்” என்றான். மற்றவர்களும் சிரித்து விட்டு மீண்டும் தமது வேலையைத் தொடர்ந்தனர். 

 

‘ஆரவ் நீ எதுக்கு கோபப்படுகிறாய்? அவ அவளோட முறை பையன் கூட போகிறா, உனக்கு என்ன?’ என்று அவன் மனசாட்சி கேட்க, 

 

‘அவ அப்படி போக கூடாது’ என்றான் அவன். 

 

‘அதான் ஏன்?’ என்க, 

 

ஏன்னா அவ என்னோட மனைவி’ என்க, 

 

‘அது எப்போலிருந்து? நீ தான் அவளை ஏத்துக்கவே இல்லையே’ என்று கூற, 

 

அவன் அமைதியாக இருந்தான்.

 

‘ஆரவ் நீ அவளோட வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்க பாக்குற, ஒன்னு நீ அவளை ஏத்துக்க இல்லை அவளை விட்டு தூரமா போ’ என்றதுமே அவன் மனதில் வலி ஏற்பட்டது. 

 

‘அப்போ வினோவிற்க்கு அவளை விட்டுக் கொடுத்துடு’ என்க, 

 

‘நான் வினோவிற்க்கு அவளை விட்டுகொடுக்குறேன். என்ன இருந்தாலும் அவன் தானே அவளை கல்யாணம் பன்ன இருந்தான். நான் தான் எல்லாதையும் குழப்பிவிட்டேன்’ என்றான். 

 

அப்போது வெளியில் வினோவும், கிறுவும் சிரிக்கும் சத்தம் கேட்க, அவனுக்கு கவலையாக இருந்தது. அவனுக்கு பொறுக்க முடியாமல் வெளியே பார்த்தான். 

 

அங்கே வினோ, கிறுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவனுக்கு கோபம் வந்தாலும் தனக்கு கோபப்பட உரிமை இல்லை என்று அவன் மனம் கூறியதும் அமைதியாக கீழே சென்று நண்பர்களுடன் ஒன்றினான் ஆரவ். வெளியே சென்ற கிறுவிடம் வினோ தனது லெப்டொப்பில் ஒரு புகைபடத்தைக் காட்டினான். 

 

அது ஒரு விடியோவில் இருந்து கட் செய்து எடுக்கப்பட்டு இருந்தது. 

 

“கிறு இவளை பாரேன்” என்று அந்த போடாவைக் காட்ட, 

 

“இது என்னோட பிரன்ட் தான், என் சீனியர் சொளமியா” என்றாள். 

 

அவனுக்கோ அது இன்ப அதிர்ச்சி.

 

“அப்போ என் வேலை ஈசியா முடிந்து விடும்” என்று கூற 

 

“என்ன வேலை?” என்றாள் கிறு.

 

“இவளை நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஷொபிங் மோலில் வைத்து தான் பார்த்தேன், இந்த இரண்டு வருஷமா என்ன ரொம்ப டிஸ்டர்ப் பன்றாடி, அவ தான் எப்பவுமே எனக்கு ஞாபகத்துக்கு வரா டீ. நான் அவளை தேடாத இடம் இல்லை, இன்றைக்கு நம்ம ஷொபிங் மோலுக்கு வந்திருக்கா, நான் சி.சி.டி.வியைச்  செக் பன்னும் போது பார்த்தேன். இப்போ நீயே அவளை தெரியும்னு சொல்ற, எப்படியாவது அவளோட டீடைல்சை கலெக்ட் பன்னி கொடுடி” என்று கெஞ்சும் போதே ஆரவ் அறையிலிருந்து பார்த்தான்.

 

“என்ன வினோ விளையாடுறியா? அவங்களை நான் என்னோட பைனல் நெட்போல் மெச் நடக்கும் போது தான் பார்த்தேன். அவ வேற ஸ்கூல், நான் வேற ஸ்கூல், ஸ்டேட் லெவல் விளையாடும் போது தான் ஒன்னா விளையாடினோம், இப்போ தேடு என்றால் நான் எங்கே போய் தேடுறது?” என்றாள். 

 

“பிளீஸ் டி” என கெஞ்ச 

 

“நீயே ஒரு டிடெக்டிவ்வை வச்சி தேடேன்” என்றாள், 

 

“இல்லை டி அதை அப்பா கண்டு பிடிச்சிருவாரு. சொ நீயே இந்த வேலைய பாரு டி, எனக்காக” என்று கூற அவளும் ஒத்துக்கொண்டு மூன்று நாள் டைம் கேட்டாள். 

 

“எத்தனை நாள் வேண்டும் என்றாலும் எடுத்துக்கோ” என்றான் குஷியில்.

 

கிறு, “எனக்கு என்ன தருவாய்? டீடைல்ஸ்ஸைக் கொடுத்தால்” என்று கிறுஸ்திகா கேட்டாள்.

 

“என்ன வேனுன்னு கேளு?” என்றான், 

 

“தேவைபடும் போது கேட்குறேன்” என்று வீட்டிற்குள்ளே சென்றாள். 

 

“என்னடி அவளோ சீக்ரட்?” என்று மீரா கேட்க, 

 

“அதை உன் ஙொண்ணன் கிட்டவே கேளு” என்று அவனை மாட்டிவிட்டு போடோவை பார்த்தாள்.

 

மற்றவர்களும் “என்னவென்று” கேட்க, 

 

‘ராட்சசி மாட்டி விட்டுட்டா’ என்று, 

 

“இப்போ இல்லை நான் நேரம் வரும் போது எல்லோரிடமும் சொல்கிறேன்” என்றான் வினோ. 

 

அஸ்வின் மீராவை தனியாக சந்திக்கும் நேரத்திற்கு எதிர்பாரத்து இருந்தான். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40

நிலவு 40   “நீ விருப்பம் இல்லாமல் தான் நெட்போலை விட்டு இருக்க. அன்றைக்கு டிரஸ் எடுக்க போகும் போது நீ ஸ்போர்ட்ஸ் டீ சர்டை பார்த்து கண்கலங்கின. அன்றைக்கு மீரா உன் கிட்ட பேசினப்ப கூட கண் கலங்கியது. அப்போ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6

நிலவு 6   ‘கிறுஸ்தி துரத்தி வருகிறாள்’ என்று ஓடியவர்கள், பின்னால் திரும்பிப் பார்க்க, அவர்களின் நெற்றியை பதம் பார்த்தது இரண்டு அப்பிள்கள்.    அதனால் “ஆஆஆ” என்று கத்தினர்.    “அப்பிள் ரொம்ப நல்லா இருக்குடா வேன்னா டேஸ்ட் பன்னி

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 18யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 18

ஐந்து வருடங்களுக்கு முன்பு….   சென்னையில்,   “என்னங்க, நாங்க எல்லாரும் ரெடி ஆகிட்டோம். வினோவும் college விட்டு வந்துட்டான். மீராவும், கிறுவும் தான் ஹொஸ்டலில் இருந்து போன் பன்னவே இல்லை” என்றார் தேவி.   ( ஆமாங்க, இரண்டு பேரும்