Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9

நிலவு 9

 

இரவு உணவை அனைவரும் சிரித்துப் பேசி உண்டு முடித்து உறங்கச் சென்றனர். 

 

தனது அறைக்கு வந்த கிறுஸ்தி முகம் கழுவி, லோங் ஸ்லீவ் டீசர்ட், பொடம் அணிந்து, தனது கூந்தலை பின்னிக் கொண்டு இருந்தாள். 

 

மீரா அறைக்கு வந்து தனது நைட்சூட்டிற்கு மாறினாள். 

 

“என்ன கிருத்தி நீ பசங்க மாதிரி பொடம் உடுத்தி இருக்க?” என்று கேட்க 

 

“அது நெட்போல் பிரக்டிஸ் நேரம் டிரஸ் பன்னது, எனக்கு கம்பொர்டபலா இருந்தது, அதான் வீட்ல டிரஸ் பன்ன வாங்கினேன், இங்க நைட்டுக்கு டிரஸ் பன்ன யூஸ் ஆகுது” என்றாள் தனது கூந்தலை பின்னிக் கொண்டே. 

 

“பாருடி எவளோ பெரிய விளக்கம்” என்றவாறே உள்ளே நுழைந்தனர் ஜீவி, தர்ஷூ. 

 

ஜீவி, “அது என்னடி புதுசா பின்னல் போடுற” என்று கேட்க, 

 

“காலையில் எந்திரிக்கும் போது பின்னல் போடாவிட்டால் பார்க்க பேய் மாதிரி இருப்பேன் அதான்” என்றாள். 

 

“சும்மாவே அப்படி தானே டி இருக்க” என்று தர்ஷூ கூற, 

 

“கிண்டலா?” என்று  கிறுஸ்தி முறைக்க, 

 

மீரா, “சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் கிறு, அதை ஏத்துக்க பழகனும்” என்றாள். 

 

“நீங்க எல்லாரும் என்னை கலாய்க்க டிரை பன்றிங்க, அது புரியிது பட் யாருக்கும் சரியா வர இல்லை” என்று கட்டிலில் தலையணைகளை அடுக்கினாள்.

 

“ஆமா, உங்க புருஷங்க சும்மா விட்டானுங்களா டி, இந்த நேரம் உங்க பின்னாடி முந்தானைய புடிச்சிட்டு திரியிவானுங்க, இப்போ காணோம்” என்று கிறு கூற, 

 

“உன்னை விட வயசுல நாங்க பெரியவங்க, எங்க கிட்ட பேசுற பேச்சா இது?” என்று இருவரும் கேட்க, 

 

“அவ கேட்டதில் தப்பு இல்லையே மனைவிகளே” என்றாள் மீரா.

 

“அவனுங்க ரொம்ப நல்லவனுங்க டீசன்டா மெயின்டேன் பன்னுவாங்க” என்று இருவரும் கூறும் போதே அறையினுள் நுழைந்தனர் கவின் மற்றும் மாதேஷ். .

 

இதைப் பார்த்து மீராவும், கிறுவும் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

 

“இப்போ தான் டா அவளுங்க கிட்ட உங்களை பற்றி புகழ்ந்தோம், அதுக்குள்ள மானத்தை வாங்குருங்களேன்டா “என்று கடிந்து கொண்டனர். 

 

“பேபி எனக்கு தூக்கம் வருது” என்று மாதேஷ் கூற, 

 

“உன்னை பேபின்னு சொல்லாதன்னு சொல்லிருக்கேன் இல்லைடா? எதுக்கு சொன்ன?” என்று அவள் கேட்க, 

 

“பப்ளிக்ல சொல்லவே இல்லையே பேபி” என்று மாதேஷ் கூற, 

 

“டேய் நிறுத்துங்க” என்றாள் கிறு, 

 

மீரா, “தூக்கம் வருதுன்னா போய் தூங்குங்க, இங்க எதுக்கு வந்திங்க?” என்க,

 

இருவரும் தத்தமது துணைகளை பாவமாக பார்த்தனர்.

 

கிறுவும், மீராவும் சிரித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்தனர். 

 

இருவரும் கட்டிலில் உறங்க வருவேனா என்றது தூக்கம், சிறிது நேரம் இருவரும் பேசினர். பின் புரண்டு படுத்தாலும் உறக்கம் வரவில்லை. 

 

மீரா, “கிருத்தி எனக்கு தூக்கம் வரவில்லை, நான் கொஞ்ச நேரம் மொட்ட மாடிக்கு போய் இருக்கேன்” என்று மாடிக்குச் சென்றாள் மீரா. 

 

கிறுஸ்திக்கும் உறக்கம் வராமல் இருக்க வெளியே உள்ள  garden ற்குச் சென்றாள் கிறுஸ்தி. 

 

தண்ணீர் குடிக்க வெளியே வந்த அஸ்வின், மீரா மாடிக்குச் செல்வதைப் பார்த்து, அவளுடன் பேச இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று மாடிக்குச் சென்றான்.

 

மீரா தனியாக நின்று வானத்தை வெறித்துப் பார்க்க, அவளருகில் வந்து நின்றான் அஸ்வின். முதலில் திகைத்தாலும் அமைதியாக வானை இரசித்தாள். 

 

அஸ்வின், “மீரு இப்போ எதுக்கு என்கிட்ட பேச மாட்டேன்ற?” என்று கேட்க, 

 

“நான் பேசாவிட்டால் உனக்கு என்னடா கஷ்டம்?” என்றாள். 

 

“எதுக்கு டி கோபப்படுற?” என்க, 

 

“நான் யாரு உன் மேல கோபப்பட” என்று அவனை வெட்டிப் பேச, 

 

“யேன்னா நீ” என்று அவன் அவள் கண்களைப் பார்க்க, 

 

“சொல்லு நான் யாரு?” என்றாள். 

 

“எப்படி அஸ்வின் சொல்லுவ உன்னால் சொல்ல முடியாது, நான் உன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆள் கிடையாது” என்றாள். 

 

“பிளீஸ் டி இப்படியெல்லாம் பேசாதடி, என்னால தாங்க முடியல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று மறுபுறம் திரும்பினான். 

 

அவனைத் திருப்பி அவன் டீசர்டின் கொலரை கெத்தாக பற்றியவள், 

 

“இதை விட அன்று நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் டா, அப்பா ஒட்டும் இல்ல உறவும் இல்லன்னு எங்களை கூட்டிட்டு போகும் போது நீ ஒரு வார்த்தை என்னை தடுக்க மாட்டியான்னு ஏங்கினேன் டா, நீ ஒரு வார்த்தை என் மீராவை விட்டுட்டு போங்க மாமா, அவளுக்கு நான் இருக்கேன்னு சொல்லி இருந்தால், எல்லாரையும் தூக்கி வீசிட்டு உன் பின்னாடியே வந்து இருப்பேன். இங்கே எல்லோர் கூடவும் இருந்து இருப்பேன். கிருத்தி கூடவும் இருந்திருப்பேன். கடைசி நிமிஷம் வரைக்கும் எதிர்பாத்தேன் டா நீ போகதன்னு சொல்லவன்னு, நீ சொல்லவே இல்லை, அப்போ தான் நான் புரிஞ்சிக்கிட்டேன் நான் தான் உன்னை பைத்தியக்காரி மாதிரி காதலிச்சு இருக்கேன். நீ என்னை லவ் பன்னவே இல்லன்னு, அப்போ எனக்கு இங்க வலிச்சது டா” என்றாள் தன் நெஞ்சைக் காட்டி. 

 

“நீயும், ஆரவும் ஒரே மாதிரி தான் டா இருக்கிங்க, எங்க இரண்டு பேரையுமே விட்டுட்டு போய்டிங்க, என்ன கிறுஸ்தி கூட பக்கத்துல இருக்க வேண்டிய நேரத்துல, அவன் விட்டுட்டு போனான். நீ என்னை போக சொன்ன, இவளோ தான் நீங்க இரண்டு பேரும் செஞ்சிங்க” என்று அழுதாள்.

 

“இப்போ எந்த முகத்தை வச்சிகிட்டு என் கிட்ட பேச வந்த? என் மனசில் இருக்கிற காயம் அவளோ சீக்கிரமா ஆறாது டா அது மட்டும் இல்லை அன்று நீ அப்படி சொல்லி இருந்தால் நாம யாரும் ஐந்து வருஷமா பிரிந்து இருக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது. யோசிச்சு பாரு” என்று கூறி அங்கிருந்து அறையை நோக்கிச் சென்றாள் மீரா. 

 

அவள் சென்ற பிறகு யோசித்தவன் ஒரு முடிவு எடுத்து தன் அறைக்குச் சென்றான். 

 

கிறுஸ்தி தோட்டத்தில் உள்ள கதிரையில் அமர்ந்து வானத்தை இரசித்தாள். அறையில் இருந்து வெளியே பார்த்த ஆரவின் கண்களில் கதிரையில் அமர்ந்து வானத்தை இரசிக்கும் கிறு பட்டாள். வெளியே வந்து கிறுவின் அருகில் அமர்ந்தான். 

 

“என்ன ஆரவ் தூங்க இல்லையா?” என்று அவள் கேட்க, 

 

“இல்லை புது இடம் அதான் தூக்கம் வரவில்லை, நீ தூங்க இல்லையா?” என்று கேட்டான் ஆரவ்.

 

“நான் இந்த வீட்டுக்கு வந்து ஐந்து வருஷம் ஆச்சு, சொ எனக்கும் புது இடம்” என்று புன்னகை பூத்தாள் அவன் முகம் பார்த்து. 

 

“இந்த ஐந்து வருஷமும் என்ன பன்ன தனியா?” என்று அவன் கேட்க, 

 

அவள் “படிச்சேன், விளையாடினேன், சமைத்தேன் இதை போல, நிறைய பன்னேன்” என்றாள். 

 

“நீ வெறியா உழைச்சு இந்தியாவோட டொப் டென் கம்பனில 8ஆவது இடத்தை பிடிச்சிருக்க சரியா?” என்றாள் அவனைப் பார்த்து, 

 

“என்னைப் பற்றி எல்லாமே தெரிஞ்சிருக்க போல” என்று அவன் கேட்க, 

 

“யேன் ஆரவ் நான் உன்னை பற்றி தெரிஞ்சிக்க கூடாதா? இல்லை எனக்கு அந்த உரிமை இல்லையா?” என்று அவள் கேட்க, அவன் அமைதியாக இருந்தான். 

 

“ஆரவ் நான் உன்கிட்ட மூன்று கேள்வி கேக்குறேன் அதுக்கு பதில் சொல்கிறாயா?” என்று கேட்க,

 

“சரி” என்றான். 

 

“இந்த ஐந்து வருஷமும் ஒழுங்கா சாப்பிட்டியா? தூங்கினியா? நிம்மதியா இருந்தியா?” என்று கேட்டாள். 

 

அவன் சிரித்து, மூன்று கேள்விக்குமே ஒரே பதில் தான் “இல்லை” என்றான். 

 

“ஆரவ் உன்னை கவனிக்காமல் நீ தொழில்னு இருந்து, நீ என்ன சாதிக்க போற?” என்க, அவன் அமைதியாக இருந்தான். 

 

“நீ உன் பிரன்சை மிஸ் பன்னியா” என்க, 

 

“ஆம்” என்றான். 

 

“எங்க பெமிலியை” என்க, 

 

“ஆம்” என்றான். 

 

“என்னை” என்று அவன் கண் பார்க்க, 

 

அவனும் அவள் கண்களை தான் பார்த்தான். 

 

அவள் கண் கலங்கி, “இன்னும் என்னை நீ உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையா?” என்று கேட்க, 

 

அவனும் கண்கலங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அவன் பதில் கூறாமல் இருக்க, அவளுக்கு இதயத்தில் எவரோ ஈட்டியைப் பாய்ச்சியது போல் இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 45யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 45

நிலவு 45   கிறு அவளது அலுவலகத்திற்கு சென்று காரில் இருந்து இறங்கும் போதே மெனேஜர் அவளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்க, அவளும் தனது நன்றியை தெரிவித்து உள்ளே செல்ல அனைவரும் அவளை வரவேற்க வரவேற்பரையில் நின்றிருந்தனர்.    அதே நேரம்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48

நிலவு 48   ஆரவின் அருகில் சென்ற கிறு அவன் தோளில் இடித்தாள். அவன் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டான்.   “என்ன அமைதியா இருக்க? ஹீரோ எங்க என்று கேட்குங்குறாபா?” என்று கண்ணடிக்க   அவள் இடையில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40

நிலவு 40   “நீ விருப்பம் இல்லாமல் தான் நெட்போலை விட்டு இருக்க. அன்றைக்கு டிரஸ் எடுக்க போகும் போது நீ ஸ்போர்ட்ஸ் டீ சர்டை பார்த்து கண்கலங்கின. அன்றைக்கு மீரா உன் கிட்ட பேசினப்ப கூட கண் கலங்கியது. அப்போ