Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 7

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 7

நிலவு 7

 

ஆரவைப் பார்த்த கிறுஸ்திக்கு ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது. கிறுஸ்தியைப் பார்த்த ஆரவ் அவளுடைய ஒவ்வொரு அசைவு, முகபாவனைகளை பார்த்துக் கொண்டு இருந்தான். மற்றவர்கள் இருவரையும் பார்த்ததால், கிறுஸ்தி மயங்கி விழப் போவதை பார்க்கவில்லை. அவள் மயங்கிச் சரிவதைக் கண்டவன் ஓடி வந்து அவளை தன் கரங்களில் தாங்கினான். மற்றவர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். 

 

கண்களைக் கடினப்பட்டு திறந்த கிறு அவன் முகத்தைப் பார்த்து, 

 

“கண்ணா” என்று அழைத்து தன் கண்களை மூடினாள். 

 

அவளின் அந்த அழைப்பு அவன் உயிரைத் தீண்டியது. 

 

‘ஆம் இது அவளின் குரல் தான். தினமும் என் கனவில் வந்து என்னை அழைப்பவள் கிறுஸ்தியா?’ என்று கூற முடியா உணர்ச்சிப்பிடியில் சிக்கி இருந்தான் ஆரவ். 

 

அவன் கண்களும் கலங்கி விட்டன. அவளை தன் கைகளில் பூப்போல் ஏந்தியவன் அவளது அறைக்குத் தூக்கிச் சென்றான். 

 

அவனின் பின்னால் மற்றவர்கள் பதட்டத்துடன் வந்தனர். அஸ்வின் மறக்காமல் டாக்டருக்கு அழைத்து உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறினான். அவளை கட்டிலில் கிடத்தியவன் எழுந்து செல்லப்போக அவனால் முடியாமல் போனது. திரும்பிப் பார்த்தவன், அவனது சீனி விரலை இறுக்கமாக பற்றி இருந்தாள் கிறுஸ்தி. அவனுக்கு அவளது கைகளை விலக்க மனமும் வரவில்லை. அனைவரையும் சங்கடமாக பார்த்தவனை காப்பற்ற டாக்டரே அங்கு வந்தார்.

 

“ஹலோ சேர்” என்று அரவிந்தை பார்த்துக் கூற அவரும் பதில் கூறினார். கிறுஸ்தியின் அருகில் வந்தவர், அவளை பரிசோதனை செய்தார். 

 

“டாக்டர் என்னாச்சு என் பொண்ணுக்கு?” என்று சாவி பதற, அவரை தன் தோள்களுடன் அணைத்து அமைதிபடுத்தினார் அரவிந். 

 

“நீங்க பயப்படுகிறது போல ஒன்னும் இல்லை. இவங்க அதிகமா ஸ்டரசில் இருந்திருக்காங்க, அதோடு  அதிர்ச்சியும் ஏற்பட்டு இருக்கு. இந்த இரண்டாலும் தான் மயங்கி இருக்காங்க. மற்றப்படி ஒன்றுமில்லை. சில மணி நேரத்துல முழிச்சிருவாங்க, நல்லா ரெஸ்டா இருக்க சொல்லுங்க” என்று அங்கிருந்து டாக்டர் நகர்ந்தார்.

 

அனைவருமே மயங்கிய நிலையில் இருந்த கிறுஸ்தியைப் பார்க்க, கண் கலங்கிவிட்டது. 

 

ஆரவ், “எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னால தான் இவளுக்கு இந்த நிலமை. நீங்க எல்லாருமே கஷ்டபடுறதுக்கு காரணமும் நான் தான்” என்று கண்கள் கலங்க கூறியவன், தாத்தாவை நோக்கி, 

 

“இதற்க்கு தான் தாத்தா நான் அப்போவே வர மாட்டேன்னு சொன்னேன். நீங்க தான் கேட்க இல்லை. நான் இருக்கிற இடத்தில் யாருக்குமே சந்தோஷம் இருக்காது. எல்லாரோட நிம்மதியையும் நான் தான் கெடுக்குறேன், பாருங்க கிறுஸ்திய எப்படி இருக்கான்னு, ஒரு பட்டாம் பூச்சி மாதிரி இருந்தவ என்னால் இந்த நிலமைக்கு வந்துட்டா. என்னால் இவளை இந்த நிலமையில் பார்க்க முடியல்லை தாத்தா. நான் தனியாவே வாழ்ந்தா எல்லாருமே நிம்மதியா சந்தோஷமா இருப்பாங்க” என்று அழுது அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்லப் போக, மயக்கத்தில் இருந்து கிறுஸ்தியின் பிடி இறுகியது.

 

மீண்டும் கிறுஸ்தியை திரும்பிப் பார்க்க, அவளது கண்களில் இருந்தும் கண்ணீர் தானாக வழிந்தது. 

 

“என்ன சொன்ன ஆரவ் என் பேத்திக்கு உன்னால தான் இந்த நிலமையா? கிறுஸ்தி நீ பேசினதை கேட்டு, உன் கைய கூட விடாமல், கண்ணீர் வடிக்கிறா. நீ பேசும் போது கொஞ்சமாவது அவளை பற்றி யோசிச்சியா? அவ உனக்கு என்ன பன்னா?” என்று கேட்க, 

 

அவனோ அமைதியாக தன்னவளை பார்த்துக் கொண்டு இருந்தான். 

 

“ஆரவ் நீ தேவை இல்லாம பேசுறடா எதுக்கும் நீ காரணம் இல்லை” என்றான் அஸ்வின்.

 

வினோ ஆரவைப் பார்த்து, 

 

“ஆரவ் அண்ணா நீங்க எதுக்கும் காரணம் கிடையாது. அது கடவுளோட விருப்பம். அதை நம்மளால் எப்பவுமே மீற முடியாது. நடந்தது நடந்து முடிந்தது, நடக்க போகிறதை இப்போ பாருங்க அண்ணா” என்று கூறி அறையை விட்டு வெளியேறினான். 

 

மாதேஷ், “ஆரவ் நீ தேவையில்லாமல் யோசிக்கிற, நீ இருந்தால் நிம்மதியும் சந்தோஷமும் போயிரும்னு எவனோ ஒரு அறிவு கெட்டவன் சொன்னான்னு உன்னையே நீ தாழ்த்திகாத” என்றான். 

 

கவின், “நாங்க எல்லாரும் உன் கூட தான் இருக்கோம், இருப்போம் உன்னால இதுக்கு அப்பொறம் தனியா ஒதுங்கி வாழ முடியாது. கிறுஸ்தியும் உன்னை அப்படி வாழ விடமாட்டா” என்றான்.

 

“இங்க பாரு ஆரவ் எல்லா பழியையும் சும்மா உன் மேல தூக்கி போட்டுக்காத” என்றாள் தர்ஷூ. 

 

“கிறுஸ்திய பற்றி யோசிச்சு பார்த்து எதை பன்றன்னாலும் பன்னு” என்றாள் ஜீவி. 

 

அரவிந், சாவி இருவரும் ஆரவின் தலையைத் தடவி விட்டு சென்றனர். இந்து அவனைப் பார்த்து புன்னகைக்க, ராம் அவன் அருகில் வந்து 

 

“நீயும் இந்த வீட்டு பிள்ளை தான்” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார். 

 

தேவி அவன் அருகில் வந்து, “உன் மேலன எனக்கு எந்த வருத்தமும் இல்லை பா, எப்பவும் போல நீ என்னை தேவிமா அப்பிடின்னே கூப்பிடு” என்று கூறி நகர, அருணாச்சலமோ ஒன்றும் கூறாமல் ஆரவைப் பார்த்து விட்டு நகர்ந்தார்.

 

மற்ற இரு ஜோடிகளும், தாத்தாவும் அறையை விட்டு வெளியேறினர். 

 

மீரா, “அண்ணா என் கிருத்திய பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கே அவளைப் பற்றி நல்லா தெரியும். அவ இந்த ஐந்து வருஷமும் ரொம்ப கஷ்டபட்டுட்டா அண்ணா, அவளை கஷ்டப்படுத்தாமல் எந்த முடிவை வேனுன்னாலும் எடுங்க” என்று கூறி நகர, அங்கு நின்றிருந்த அஸ்வினை மீரா முறைத்துப் பார்க்க, அதில் கட்டுப்பட்டவன் அவள் பின்னே அமைதியாகச் சென்றான்.

 

அறையில் தனித்து விடப்பட்ட ஆரவ் கட்டிலில் இருந்த கிறுஸ்தியைப் பாரத்தான். அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்தவன், 

 

“ஏன் கிறுஸ்தி, யாருமே என்னை புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க, நான் யார் பக்கத்துல இருந்தாலும் அவங்களுக்கு சந்தோஷம் போயிடும் டி. நான் ஒரு தடவை தான் உங்க ஊருக்கு வந்தேன். உன் முழு குடும்பத்தோட சந்தோஷமும் போயிருச்சி டி. நீ இப்படி கஷ்டபடுறதுக்கும் நான் தான் டி காரணம். எனக்கு யாரோட அன்பும் வேண்டாம் டி. நான் எப்பவும் போலே தனியா இருக்கிறது தான் எல்லாருக்குமே நல்லது. எனக்கு அன்பு காட்டுறவங்களுக்கு நான் எப்பவுமே கஷ்டத்தை மட்டும் தான் டி ரிடன் கிப்டா கொடுத்திருக்கேன். எனக்கு யாருமே வேணாம் கிறுஸ்தி, பிளீஸ் டி நீயாவது புரிஞ்சிக்கோ” என்று அவளது கைகளை தன் நெஞ்சில் வைத்து அழுதான். 

 

அவன் அறியவில்லை அவள் தான் இவனுடன் வாழ்க்கை பூராக வரப்போகிறாள் என்று.

 

அவ்வாறே கிறுஸ்தியின் கள்ளங் கபடமில்லா குழந்தை முகத்தைப் பார்த்தவன் அவ்வாறே கட்டிலின் ஓரத்தில் தலைவைத்து களைப்பின் காரணமாக உறங்கியும் போனான். வெளியே வந்த மீரா, 

 

“யேன்டா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? எல்லாரும் வெளியே வந்த உடனே உனக்கும் வெளியே வர இருந்ததே, அண்ணாவை கொஞ்சம் யோசிக்க தனியா விட்டா கொஞ்சம் யோசிப்பாரு. நீ என்னடான்னா சிலை மாதிரி நின்னுட்டு இருக்க” என்று அவள் திட்ட, 

 

அஸ்வினோ மாறாக சிரித்துக் கொண்டு இருந்தான்.

 

‘அவள் வந்ததில் இருந்து தன்னோடு ஒரு வார்த்தை பேசமாட்டாளா?’ என்று ஏங்கியவனுக்கு அவளாகவே பேசுவது ஏகபோக குஷி. 

 

‘இவன் என்ன லூசா?’ என்று தன்னுள்ளே நினைத்தவள், 

 

“டேய் அஸ்வின்” என்று அவன் அருகில் வந்து அவனை உலுக்க, தன்னவளின் ஸ்பரிசத்தில் திக்குமுக்காடினான். 

 

அவன் அவளை முழித்துப் பார்க்க, ‘இவனுக்கு என்னாச்சு இப்போ சம்மந்தமே இல்லாம ரியெக்ஷன கொடுக்குறான். ஒரு வேலை காய்ச்சலா இருக்குமோ’ என்று அவன் அருகில் சென்றான். 

 

‘காய்ச்சலா?’ என்று அவனின் நெற்றி, கழுத்து என அவன் அருகில் தொட்டுப் பார்க்க, அவளை அள்ளி அணைக்க நினைத்த கைகளை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவன் அவள் காதிற்கு அருகில் குனிந்து, 

 

“இப்படியே தொட்டுட்டு இருந்தன்னா இதற்கு அப்பொறமா என்ன நடந்தாலும் அதற்கு அத்தான் பொறுப்பில்லை” என்றான் காதலுடன். 

 

“என்னாச்சு உனக்கு தேவையில்லாமல் உழர்ற?” என்று எதுவும் புரியாமல் மீரா அவனிடமே கேட்க, 

 

“கடவுளே இவளை கல்யாணம் பன்னி நான் குடும்பம் நடத்த போகும் போது எனக்கு அறுபதாம் கல்யாணமே வந்துரும் போல இருக்கே” என்று சத்தமாக புலம்பினான். 

 

அவன்  கூறியதன் அர்த்தம் புரிய, கன்னங்கள் சிவப்பு நிறத்தை தத்தெடுக்க அங்கிருந்து ஓடினாள் மீரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 14யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 14

ஆரவ் கன்னத்தில் கை வைத்துப் பார்க்க, அவன் முன் காளியாய் நின்று இருந்தாள் கிறு.   “இதற்கு அப்பொறம் உன்னை தாழ்த்தி ஒரு வார்த்தை பேசினாய் என்றால் கொன்னுடவேன்” என்றாள் கண்கள் சிவக்க.   இன்று அனைவரும் பார்ப்பது புதிய கிறுவை.

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2

நிலவு 2   வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம்.    ‘என் மகன் வளர்ந்து விட்டானா? எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா? நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறுக்காக இருக்கிறேனா? ஒரு வேளை வினோ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6

நிலவு 6   ‘கிறுஸ்தி துரத்தி வருகிறாள்’ என்று ஓடியவர்கள், பின்னால் திரும்பிப் பார்க்க, அவர்களின் நெற்றியை பதம் பார்த்தது இரண்டு அப்பிள்கள்.    அதனால் “ஆஆஆ” என்று கத்தினர்.    “அப்பிள் ரொம்ப நல்லா இருக்குடா வேன்னா டேஸ்ட் பன்னி