Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6

நிலவு 6

 

‘கிறுஸ்தி துரத்தி வருகிறாள்’ என்று ஓடியவர்கள், பின்னால் திரும்பிப் பார்க்க, அவர்களின் நெற்றியை பதம் பார்த்தது இரண்டு அப்பிள்கள். 

 

அதனால் “ஆஆஆ” என்று கத்தினர். 

 

“அப்பிள் ரொம்ப நல்லா இருக்குடா வேன்னா டேஸ்ட் பன்னி பாருங்க” என்றாள் கிறு டைனிங் டேபளில் அமர்ந்து அப்பிள் சாப்பிட்டுக் கொண்டே. 

 

“அடியேய்” என்று அவளை துரத்த அவள் ஓட, அவளை துரத்தியவர்கள், களைத்து, 

 

“போதும் டி எங்களால முடியவில்லை” என்றனர்.

 

“கிறுஸ்திகா டா” என்று தனக்கு இல்லாத கோலரை தூக்கினாள் அவள். 

 

“எதுக்குடி அடிச்ச?” என்று கேட்க, 

 

“உங்க டிரைனிங் எந்த அளவில் இருக்குன்னு பார்க்க தான்” என்றாள். 

 

“வாட்?” என்க, 

 

“என்னடா வாத்து கோழின்னு பேசுறிங்க?” என்றாள். 

 

“என்னமா லந்தா?” என்க, 

 

“அட போங்க அண்ணிங்களா, இந்த சின்ன அடியவே தாங்க மாட்டேன்றானுங்க, நீங்க கொடுக்கப் போற அடியை எப்படி தாங்குவானுங்க?” என்றாள் கிறுஸ்தி.

 

“அதானே, கிருத்தி, நீ வேன்னா இந்த பத்து நாளும் அடி வாங்க, சுமை தூக்க டிரைனிங்க கொடு” என்றாள் தர்ஷூ. 

 

“எங்களுக்கும் வேலை ஈசியாகும், அது மட்டுமில்லை, உன்னோட டிரைனிங்கில் அவனுங்க ரொம்ப ஸ்ட்ரோங்கா இருப்பானுங்க” என்றாள் ஜீவி. 

 

“ஏ நிறுத்து, இப்போ என்னடி சம்மந்தம் இல்லாமல் பேசுறிங்க?” என்று மாதேஷ் கேட்க, 

 

“சத்தியமா புரியல்லை” என்றான் கவின் பாவமாக.

 

அதனைப் பார்த்து சிரித்தவர்கள், 

 

“தம்பி, நீங்க இன்னும் வளரவில்லை. நானே புரிய வைக்கிறேன். நீ கல்யாணம் பன்னா அவள பாத்துக்க வேண்டியது யாரு?” என கிரு கேட்க, 

 

“நாங்க” என்றனர் இருவரும், 

 

“அவங்களோட ஆசைகளை நிறைவேற்ற வேண்டியது யாரு?” என்க, 

 

“நாங்க” என்றனர், 

 

“அவளை Shopping க்கு கூட்டிட்டு போக வேண்டியது யாரு? “என வினவ 

 

“நாங்க” என்றனர், 

 

“அப்போ அதையெல்லாம் தூக்கிட்டு வர வேண்டியது யாரு?” என வினவ அதற்கும் 

 

“நாங்க” என்றனர் இருவரும்.

 

இதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க, அப்போதே தாங்கள் கூறியதை புரிந்துக் கொண்டவர்களாய் கிருவைப் பார்த்து முறைத்தனர் இருவரும். 

 

“என்னடா அப்படி பாக்குறிங்க? இதை மட்டும் இல்லை. உங்க பொன்டாட்டிங்க கையால் அடி வாங்கவும் டிரைனிங் கொடுக்க சொல்லி அவங்க உங்களை என் பொறுப்பில் விட்டு இருக்காங்க. இதை நானும், எனது உற்ற தோழி மீராவும் தங்கள் இருவருக்கும் பயிற்சி வழங்க தயாராய் உள்ளோம். சிஷ்யர்களே நாளையில் இருந்து பயிற்சிக்கு தயாராகுங்கள். இது உங்கள் குருவின் உத்தரவு” என கிறு கூறி முடியும் போதே சிரிப்பலை கிளம்பியது.

 

அவர்கள் தம் துணைகளை முறைக்க, அவர்களோ அதை கண்டு கொள்ளவில்லை. 

 

“என்னடா அவங்களை முறைக்கிறிங்க?” என்று கிரு கேட்க, 

 

மீரா “இவளோ நாளா௧ எங்க தொல்லை இல்லாமல் சந்தோஷமா இருந்து இருப்பிங்க, இதுக்கு அப்பொறமா நிம்மதியை தேட வேண்டியது தான்” என்றாள். 

 

“இன்றையிலிருந்து four super heroines ஒட பவர் கூடிருச்சி, நாளையிலிருந்து பாப்பிங்க டா நாங்க யாருன்னு” என்றனர் நால்வரும். 

 

நால்வரும் ஒருவரின் கை மீது ஒருவர் வைத்து “பொண்ணுங்க பா” என்று கத்தி கைகளை எடுத்தனர்.

 

“கொடுமை டா” என்று அஸ்வின் தன் நண்பர்களுடன் இணைய 

 

“ஆரவ் சீக்கிரமா வந்துரு டா” என்றனர் மூவரும் ஒன்றாக. 

 

கிறுஸ்தி அதிர்ச்சி அடைந்தாலும் அவள் மற்றவர்களுக்கு அதை காட்டவில்லை. பின் தன் தாயை சமாதானம் செய்யச் சென்றாள். 

 

“அம்மா” என்று பேச, 

 

“கிறுஸ்தி பேசாம போயிரு” என்றார் சாவித்ரி கோபமாக. 

 

“என்னமா வீட்டுக்கு இப்போ தான் வரா அவ கிட்ட உன்னோட கோவத்தை காட்டுற?” என்று கடிந்துக் கொண்டார் விஜயசோதிலிங்கம்.

 

“ஐயோ அப்பா விடுங்க, அம்மாவையும் பொண்ணையும் பற்றி தான் உங்களுக்கு தெரியுமே, சின்ன குழந்தைகள் போல்” என்றார் அரவிந் சமாளிக்கும்விதமாக. 

 

“அம்மா மேலே எந்த தப்பும் இல்லை தாத்தா. நான் தான் தப்பு பன்னேன்” என்றாள் கிறுஸ்தி கவலையாக. 

 

“என்னமா பன்ன?” என்று அவர் கேட்க, 

 

மொபைல் ரிங் பற்றி அனைத்தையும் கூறினாள். மற்றவர்களுக்கு சிரிப்பும், கோபமும் ஒரு சேர வர, 

 

“சொர்ணாக்கா நீ இன்னும் திருந்தவே இல்லையாடி?” என்றான் கவின்.

 

“இன்னும் சொர்ணாக்கா வேலை பாக்குறாளே” என்று வினோ, அஸ்வின், மாதேஷ் பொய்யாய் ஆச்சரியப்பட்டனர். 

 

பெண்களோ சிரிப்பை அடக்கிக் கொண்டு அமைதியாய் இருந்தார்கள். 

 

‘எல்லாம் என் நிலமை டா உங்க கிட்ட இப்படி பேச்சு வாங்க இருக்கே’ என்று மனதில் நினைத்து அமைதியாக இருந்தாள் கிரு. 

 

‘அம்மாவாச்சு பொண்ணாச்சு’ என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் தாத்தா. சாவிக்கும் சிரிப்பாக இருந்தாலும் அதை காட்டாது, 

 

“இந்து அவளை போய் பிரஷ் ஆகி வர சொல்லு” என்று கூறி நகர்ந்தார்.

 

தன் தாத்தாவிடம் சென்று தன் தாயை சமாதானப்படுத்த ஐடியா கேட்க, 

 

“சாவிக்கு பிடித்தது போல நடந்துக் கொண்டால் ஒரளவு அவர் கோபத்தை குறைக்கலாம்” என்றார். 

 

தனதறைக்கு வந்தவள் தன் தாயிற்கு பிடித்தது போல தாவணி அணிய முடிவு எடுத்தாள். 

 

“ஐயோ என் கிட்ட தாவணி இல்லையே” என்று கட்டிலில் அமர்ந்தாள். 

 

அறைக்கு வந்த மீரா, தர்ஷூ, ஜீவி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். 

 

“எந்த கப்பல் கவுந்திருச்சின்னு இப்படி உட்கார்ந்து இருக்க?” என்று தர்ஷூ வினவினாள்.

 

“அட போ  தர்ஷூ அம்மாவை கூல் பன்ன தாவணி டிரஸ் பன்னலாம்னு பார்த்தால் என் கிட்ட தாவணியே இல்லை” என்றாள் கிரு. 

 

“மீரா உன் கிட்ட தாவணி இருக்கா?” என்க, 

 

“ஏய் என்னோட பிளவுஸ் எப்படி உனக்கு கரெக்டா இருக்கும்? நீ பப்பாளி போல இருக்க”  என்றாள் மீரா. 

 

“ஹலோ மிஸ் மீரா நீங்க எலும்பு கூடு போல இருக்கிறதுக்கு நான் என்ன பன்ன முடியும்?  உங்க பக்கத்துல யாரு நின்றாலும் பப்பாளி போல தான் இருப்பாங்க. என்னோட சைஸ் தான் கரெக்ட் ஈர்க்கில் குச்சி” என்றாள் கிரு.

 

“மிஸ் கிருத்தி நா ஒன்னும் ஈர்க்கில் குச்சு கிடையாது” என்றாள் மீரா கோபமாக. 

 

“ஐயோ இரண்டு பேரும் நிறுத்துங்க டி இப்போ தாவணிக்கு என்ன பன்னலாம்னு  யோசிங்க” என்றாள் ஜீவி. 

 

“நான் ஒன்னு கேக்கட்டா, நீங்க மூனு பேரும் எப்படி இவளோ உயரமா இருக்கிங்க? கொம்பிளேன் குடிச்சிங்களா?” என்று கிறு கேட்க, மற்ற மூவரும் சிரித்தனர். 

 

“அடி எங்க ஜீன் அப்படி இருக்கு” என்றாள் தர்ஷூ. 

 

“என்னோட அப்பா, அம்மா இரண்டு பேருமே நல்ல உயரம் நான் மட்டும் எப்படி இவளோ குள்ளமா இருக்கேன்” என்று கேட்டாள் கிரு.

 

“அது தான் விதி” என்றனர் மூவரும். 

 

“ஆமான்டி யோசிச்சு பாரு, நீங்க மூனு பேரும் உங்க புருஷனை ஹக் பன்னால் அவங்களோட கழுத்து வரை உங்க காது இருக்கும். நான் என் புருஷனை ஹக் பன்னால் அவனோட இதயத்துக்கு நேராக என் காது இருக்கும். எனக்காக துடிக்கிற இதய துடிப்பை  என்னால் நேரடியா கேட்கலாம். ஒ.எம்.ஜி என்று கத்தி விட்டு கடவுளுக்கு என் மேல எவளோ பாசம்?” என்றாள் கண்கள் மின்ன. 

 

“குட்டையா இருக்கிறதுக்கு ஒரு காரணத்தை கண்டு பிடிச்சிட்ட வெல் டன்” என்றனர் மூவரும்.

 

“கிருத்தி, என் கிட்ட இன்னொரு பிளவுஸ் இருக்கு, அது எனக்கு பெரியது, நீ வேன்னா அந்த தாவணி செட்டைப் போடேன்” என்றாள் மீரா. 

 

“நீ முதலில் அதை கொடு” என்றாள் ஜீவி. 

 

அதை வாங்கிய கிரு அனைத்தும் பொருத்தமாக இருக்க, இதை அணிந்துக் கொண்டு கீழே வருவதாகக் கூறி அவர்களை கீழே அனுப்பினாள். 

 

உடையணிந்து தனது கூந்தலை விரித்து அதை சிறிய கிளிப் மூலம் அடக்கினாள். அவள் அணிந்து இருந்த காதணியை கழற்றி வைத்து ஜிமிக்கி அணிந்தாள். காலில் கொலுசை அணிந்தாள். இப்போது அவளை பார்க்க தேவதை போல் இருந்தாள்.

 

அவள் தயாராகும் போது வீட்டை அடைந்திருந்தான் ஆரவ். அவனை அனைவரும் வரவேற்றனர். மாடிப்படிகளுக்கு பின்புறம் தெரியுமாறு வைக்கப்பட்ட சோபாவில் அமர்ந்தான் ஆரவ். அதற்கு எதிர்ப்புறம் உள்ள சோபாவில் சாவித்ரி அமர்ந்தார். அனைவரும் ஒவ்வொரு வித உணர்வின் பிடியில் இருந்தனர். 

 

ஆரவைப் பார்த்தால் கிறுஸ்தி எவ்வாறு ரியெக்ட் செய்வாள் என்றே அதிகமானோர் யோசித்தனர். மாடிப்படிகளில் இறங்கி வந்தாள் கிறுஸ்தி. நேராக தன் தாயிடம் சென்றாள்.

 

ஆரவிற்கு முதுகைக் காட்டி அமர்ந்து, தாயிடம், 

 

“சொரி மா நான் பன்னது தப்பு தான். இதற்க்கு அப்பொறமா இதை மாதிரி பன்ன மாட்டேன். புரோமிஸ்” என்று சிறு பிள்ளைப் போல் கெஞ்ச, 

 

‘மகள் இன்னும் ஆரவைப் பார்க்கவில்லையா?’ என்று முழித்தார் சாவி. கார்டனிற்குச் சென்ற மீரா திரும்பி உள்ளே நுழையும் போது, ஆரவைக் கண்டவள்,

 

“ஆரவ் அண்ணா” என்று சந்தோஷ மிகுதியில் கத்தினாள். 

 

இப்பெயரைக் கேட்ட உடனேயே கிருவின் இதயம் தாருமாறாக துடிக்க ஆரம்பித்தது. 

 

மீரா பார்த்த திசையில் திரும்பிப் பார்த்தாள். ஆம் ஆரவ் தான் இவள் முன் எழுந்து நின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் பாரத்துக் கொள்ள ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் இவள் கண் முன் தோன்றின. 

 

மூச்சை எடுக்க சிரமப்பட்டவள் கண்கள் செருக, கீழே விழப் போனவளை ஓடி வந்து கைகளில் தாங்கினான் ஆரவ். கண்களை கடினப்பட்டு திறந்தவள், அவன் முகத்தைப் பார்த்து “கண்ணா” என்று அழைத்து விட்டு கண்களை மூடி மயக்கமானாள் கிறுஸ்தி. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 43யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 43

நிலவு 43   இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்த கிறு தான் முதலில் வீட்டில் இருப்பதைக் கண்டு திகைத்தவள், பின் நடந்தது நினைவுர கண்ணீர் வடிந்தது. ஆரவ் அவளைப் பார்ப்பதற்கு வந்தவன்,   “இப்போ எதுக்கு அழற?” என்று கேட்க,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52   “வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான்.    “ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,   “வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.   அத்தை,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59

நிலவு 59   ஆரவ் செய்வதறியாது நிற்க, யோசித்தவன்   “வினோ உங்க மேனஜர் கிட்ட சொல்லி மிளகாய் ஒன் கே.ஜி வாங்கி வர சொல்லு, சீக்கிரம்” என்று அவன் அவசரபடுத்த   “சரி அண்ணா” என்று அவனும் மேனஜருக்கு அழைப்பை