Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5

நிலவு 5

 

கீழே உருண்டு விழுந்த அஸ்வின் ‘யார் அவன் கையணைப்பில் உள்ளார்’ எனப் பார்த்த போது மீரா கண்கள் சிவக்க அவன் கீழ் விழுந்து இருந்தாள். அவனோ தன்னவள் நெருக்கத்தில் அவளை இரசித்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன் சிறு பெண்ணாக இருந்த அழகி இன்று பேரழகியாக வந்து இருக்கிறாள். அவளை இரசித்தவன் அவளின் கண்களில் தொலைந்தான். இத்தனைக்கும் அவள் இடுப்பினைச் சுற்றியிருந்த கையை எடுக்கவோ, அவன் எழவோ இல்லை.

 

“டேய், எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க, ஒரு பொண்ணு மேலே விழுந்திருக்கோமே நம்மளோட எடையை அவளால் தாங்க முடியுமா? யோசணை இருக்கா மிஸ்டர். எந்திரி முதலில்” என்று கத்தினாள். 

 

அவன் எழுந்து அவளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

‘என் மீராவிற்கு இத்தனை தைரியமா? அவளுக்கு இவ்வாறு எல்லாம் பேச முடியுமா? அவளுக்கு நான் யாரென்று தெரியுமா?’ என்று ஒரு மனம் கூற

 

‘நான் யாரென்று தெரியாமல் தான் என்னை திட்டி இருக்கிறாள்’ என்று தன் மனதை சமாதானபடுத்திக் கொண்டான். 

 

மீரா, “ஹலோ மிஸ்டர் அஸ்வின் நீங்க நகர்ந்தா நான் உள்ள போலாம்” என்க, 

 

‘இவ நீ யாருன்னு தெரிஞ்சு தான் திட்டியிருக்கா’ என்று அவன் மனசாட்சி அவனை கேலி செய்தது. 

 

நடந்ததை பார்த்த மற்றவர்களுக்கும் அதிர்ச்சியே, அவளுக்கு அஸ்வின் என்றாள் உயிர், அவனிடமே இவ்வாறு பேசுகிறாளே, இந்த ஐந்து வருடங்களில் எத்தனை மாற்றங்கள் என்று வியந்தனர். அவள் உள்ளே சென்று குடும்பத்தினரிடம் தயங்கித் தயங்கி பேச ஆரம்பித்து பின் வழமைப் போல பேசினாள். நண்பர்களும் அவள் நிலையைப் புரிந்து அவளுடன் சகஜமாகப் பேசினர்.

 

அஸ்வின் ஒருவன் இருப்பதை ஒரு பொருட்டாகவே அவள் கருதவில்லை.  அஸ்வின் ‘அவள் பேச மாட்டாள்’ என்று அவனாகவே அவளுடன் பேச முயற்சிக்க, 

 

அதை புரிந்த மீரா “அம்மா நான் என் ரூமுக்கு போய் பிரஷ் ஆகுறேன் மா” என்று நகர, 

 

“உன் ரூமை தர்ஷு, மாதேஷுக்கு கொடுத்திருக்கோம்மா நீ கிறுஸ்தி ரூமுக்கு போமா” என்றார் சாவித்ரி. 

 

“சரி அத்தை” என்று அவ்விடத்தை விட்டு அறைக்குச் சென்றாள். 

 

‘சரியான திமிருபுடிச்சவ, உடம்பு பூரா திமிரு’ என்று முணுமுணுத்தான் அஸ்வின்.

 

அஸ்வினின் நிலையைப் பார்க்க அனைவருக்கும் கவலையாக இருந்தாலும், நண்பர்களுக்கு இன்னொரு புறம் சிரிப்பாகவும் இருந்தது. 

 

“மச்சான் எங்களை எத்தனை தடவை கலாய்ச்சி இருப்பாய்? இப்போ நல்லா அனுபவி டா” என்றனர் நண்பர்கள். 

 

அஸ்வினும் தனது அறைக்குச் சென்று பிரஷப் ஆகி வந்தான். மீராவும் வர அனைவரும் இரவு உணவை உட்கொண்டனர். அஸ்வினுடன் மட்டும் மீரா பேசுவதை தவிர்த்துக் கொண்டே வந்தாள். 

 

‘பாக்கலாம் டி எவளோ நேரம் என் கூட பேசாம இருக்க என்று’ என்று மைன்ட் வொய்சில் பேசினான் அஸ்வின் அவளை பார்த்துக் கொண்டே.

 

‘மைன்ட் வொய்சில் பேசுறியா? ஐந்து வருஷமா நான் உன் கூட பேசவே இல்லை, இப்போ தான் பேச போறேனா?’ என்று மீரா அவனைப் பார்த்து கண்களால் கூற, 

 

‘அப்போ நான் தூரமா இருந்தேன். இப்போ உன் முன்னாடி இருக்கேன். இப்போ எப்படி பேசாம இருக்கன்னு நானும் பாக்குறேன்’ என்று இவனும் கண்களாலேயே பதில் கூற 

 

மற்ற அனைவரும் இருவருக்குள்ளும் உள்ள காதல் குறையவில்லை. வீண் பிடிவாதத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டு நிம்மதி அடைந்தனர்.

 

‘இப்போ எதுக்கு டி அவனை சைட் அடிக்கிற?’ என்று அவள் மனசாட்சி கேட்க, 

 

‘நான் ஒன்னும் அவனை சைட் அடிக்க இல்லை, அவன திட்டிட்டு இருக்கேன்’ என்றாள். 

 

‘அதானே பார்த்தேன் நீ நல்லவள் டி அவனை நீ சைட் அடிக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் ஒரு கிளாரிபிகேஷனிற்கு தான்’ என்றது அவள் மனசாட்சி. 

 

‘யாரு சொன்னது அவனை நான் சைட் அடிக்கவே இல்லன்னு?’ என்று இவள் கேட்க, 

 

‘இப்போ தானே சொன்ன?’ என்று மனசாட்சி கூற, 

 

‘ஆமா நான் இப்போ சைட் அடிக்க இல்லை’ என்றாள் அவள். 

 

‘என்னை குழப்பாதடி’ என்றது அவள் மனசாட்சி.

 

‘மற்றைய இடங்களில் நான் தான் ஆளுங்களை குழப்பிவிடுவேன். இங்க நீ என்னை குழப்பி விடுற’ என்று குற்றம் கூறியது அவள் மனசாட்சி. 

 

அவள் சிரித்து, ‘நான் அவனை உள்ளே வரும் போதே அணுவணுவா இரசிச்சிட்டேன். என்ன இருந்தாலும் அவன் என் அத்தான் இல்லையா? எனக்கு அவனை சைட் அடிக்க இல்லாத உரிமையா?’ என்று அவள் கேட்க, 

 

‘அடி போடி’ என்றது அவள் மனசாட்சி. 

 

இவ்வாறே அனைவருக்கும் அந்த நாள் இனிய நாளாக நிறைவடைந்தது.

 

அடுத்த நாள் மாலை வேளையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் கிறுஸ்தி. அனைவரும் அவளை வரவேற்க, உள்ளே வந்தவள் தன் தாயைப் பார்க்க, சாவி அவளை முறைத்துக் கொண்டிருந்தார். அமைதியாக வந்தவள் தன் மாமாவுடனும், அத்தையுடனும் முதலில் பேச அருணிற்கு குற்ற உணர்ச்சி நீங்கியதோடு, மற்றவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. பின் தன் தந்தையுடனும், சித்தப்பா சித்தி தாத்தாவுடன் பேசினாள்.

 

அஸ்வின் அவளை கட்டியணைத்து அவள் நெற்றியில் இதழ்பதித்து 

 

“கிரு நீ ரொம்ப அழகா இருக்கடி” என்றான். 

 

மீராவிற்கோ அஸ்வின் இதழ்பதித்தது சற்று பொறாமையாக இருந்தது. அதை அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை, ஆனாலும் அவளவன் அதை நன்றாகவே புரிந்து மனதால் சிரித்தான். 

 

“கிறுஸ்தி என்னடி போன மாதிரியே ரிடன் வந்திருக்க?” என்று வினோ கேட்க, 

 

“என்னடா உழர்ற?” என்று அவள் கேட்க, 

 

“அதே ஹைட்டில் திரும்பி வந்தது போல இருக்க, கொஞ்சம் சரி வளரவே இல்லையேடி” என்று கூறியது தான் அருகில் உள்ள  பூச்சாடியை கையில் எடுத்துக் கொண்டு அவனை அடிக்க ஓடினாள்.

 

“நில்லுடா தடிமாடு, அடேய் எருமை நில்லடா” என திட்டிக் கொண்டே ஓட தடுமாறி மீராவின் மேல் விழுந்தாள். இதைப் பார்த்து வினோ நின்றான் நின்ற இடத்திலே. 

 

அப்போதே மீராவும், கிறுஸ்தியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். சிறிது நேரம் அவ்விடம் அமைதியாக இருக்க, கிறுஸ்தி மீரா அவளுடன் பேச மாட்டாள் என்று நினைத்து அவள் நகர அவள் கையைப் பிடித்திழுத்து அவளை கட்டியணைத்து அழுதாள். சிறிது நேரம் இருவரும் இடம் மறந்து சிறு பிள்ளைகள் போல் அழுதனர்.

 

மீரா, “எதுக்குடி நீ என் கூட பேசாம போற?” என்க, 

 

“நீ பேச மாட்டியோன்னு நினைச்சேன்” என்றாள் கிறுஸ்தி. 

 

“சரி நான் பேசா விட்டாலும் உனக்கு வாயிருக்குல்ல பேச வேண்டியது தானே?” என்று மீரா கூற, 

 

“நான் பேசி நீ பேசஇல்லை என்றால் என்னால தாங்க முடியாது” என்று கிறுஸ்தி கூற 

 

“உன் அண்ணனைப் போலவே நீயும் மட சாம்பராணி டி, எப்படி டி என்னால உன்னை எவொய்ட் பன்ன முடியும்” என்று கிறுஸ்தியை மீண்டும் கட்டியணைத்தாள் மீரா.

 

அனைவரின் கண்களும் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பியது. சகஜ நிலைக்கு மாற்ற, 

 

மாதேஷ், “கிரு நீ நெஜமாவே அழகா இருக்கடி” என்றான். 

 

கவின், “ஆமாடி ஆனாலும் நீ ஒன்னு பன்னியிருக்கலாம்” என்று அவன் கூற 

 

“என்ன?” என்றாள் கிறுஸ்தி, 

 

“கொஞ்சமா கொம்ப்ளைன் குடிச்சிருக்கலாம்” என்று கூற இருவரின் பின்னாலும் கிறு ஓடினாள். 

 

பின்னால் திரும்பிப் பார்க்க, கிரு அவர்களை துரத்தவில்லை என்பதை புரிந்துக் கொண்டவர்கள், அவள் எங்கே என்று எட்டிப் பார்க்க, அவர்கள் ஆஆஆ என்று கத்தினர்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44

நிலவு 44   “என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை காதலிச்சிட்டே இருப்பேன், என்னோட உயிருக்கும் அதிகமா உன்னை நேசிப்பேன், ஐ லவ் யூ கண்ணம்மா” என்று அவள் ரோஜா இதழ்களை மென்மையாக சிறைபிடித்தான்.   அவளும் கண்மூடி

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 65யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 65

நிலவு 65   நாட்கள் நகர ஷ்ரவன், கீதுவின் நிச்சய நாளும் வந்தது. அன்று அனைவரும் மீண்டுமொரு முறை ஒன்று சேர்ந்ததால் மகிழ்ச்சியாக இருந்தனர்.    “மச்சான் உனக்கு இந்த ஹெயார் ஸ்டைல் செட் ஆகல்ல டா” என்று வினோ கலைக்க,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52   “வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான்.    “ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,   “வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.   அத்தை,