Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 4

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 4

நிலவு 4

 

அன்று மாலை நேரம் தேவி, அருணாச்சலம் அனைவரும் வந்து சேர்ந்தனர். அவர்களை வீட்டுப் பெண்கள் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கே அனைவரும் எவ்வாறு பேசுவது என்று அமைதியைக் காக்க, அதை புரிந்துக் கொண்ட வினோ 

 

“அத்தை இன்னைக்கு எல்லாமே எனக்கு புடிச்சதா தான் லன்ச் இருக்கனும். அம்மா கையால் சாபிட்டு என் நாக்கு செத்து போச்சு” என்றான். 

 

“சொல்லுவடா இதுவும் சொல்லுவ இதுக்கு மேலேயும் சொல்லுவ. சென்னைக்கு போனதுக்கு அப்பொறமா என் கையால தான் சாப்பாடு போடனும் அப்போ உப்பை அள்ளி போடுறேன் பாரு” என்று பொய்யாக அவனை மிரட்டினார் தேவி.

 

இதைக் கேட்டு அனைவரும் சிரிக்க தன் தாயை சமாதானப்படுத்தச் சென்றான் வினோ. இவ்வாறே கொஞ்சமாக அனைவரும் சகஜ நிலைக்கு மாற, ஆண்கள் அமைதியாகவே இருந்தனர். 

 

பின் ராம் தொழிலைப் பற்றி பேச ஆரம்பித்து அக்கதை உலகம் பூராகவும் அரசியலில் நின்றது. அதனை பேசி முடித்தவர்கள் இறுதியாக வீட்டு அரசியலில் வந்து நிற்க, பழைய சம்பவங்களை அனைவருக்கும் நினைவுபடுத்தியது. பின் அருணாச்சலம் குற்ற உணர்வு தாங்காமல் மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டார். 

 

அவ்விடம் பெண்களும் வந்து சேர்ந்து ஆனந்தக் கண்ணீர் அவ்விடத்தை நிரப்பிக் கொண்டு இருந்தது. இவ்வாறே அந்த நாள் முழுவதும் அனைவருக்கும் அழகாக சென்றது.

 

அடுத்த நாள் காலை அனைவருக்கும் அழகாக விடிந்தது. கோயமுத்தூரில் உள்ளோர் மற்றவர்களின் வருகைக்கான ஏற்பாடுகளை பார்த்தனர். அரவிந்திற்கு மொபைலில் அழைப்பொன்று வர அதை ஏற்றவர், 

 

“சொல்லு டா குட்டிமா” என்க, 

 

“அப்பா எனக்கு டிகட் இன்றைக்கு கிடைக்க இல்லை பா, நான் நாளைக்கு காலையிலேயே வெளியாகிருவேன்” என்றாள். 

 

“கார்ட்ஸ்  உன் கூட தான் வருவாங்க என்று அவர் கூற, இப்பவும் எனக்கு கார்ட்ஸ் தேவையா பா?” என்றாள். 

 

“நீ எங்கே போறன்னாலும் அவங்க உன் கூட வருவாங்க, எப்பவும் போல அவங்க உன்னை விட்டு தள்ளி தான் இருப்பாங்க. நீ ஊருக்கு வந்ததுக்கு அப்பொறமா நீ தனியா எங்கே வேண்டும் என்றாலும் போலாம். புரோமிஸ்” என்றார் அரவிந். 

 

“done பா நான் உங்க எல்லாருக்கும் கிப்ட் வாங்க  shopping போக போறேன் bye” என்று அழைப்பைத் துண்டித்தாள். 

 

அஸ்வின் தனது பி.ஏ தீப்தியிடம் பத்து நாளைக்கு செய்ய வேண்டிய வேலைகளைக் கூறிக் கொண்டிருக்க அவளோ இவனை இரசித்துக் கொண்டிருந்தாள்.

 

“அன்ட் மிஸ் தீப்தி பிரிங் தெட் பைல் இமீடியெட்லி” என்று கூற அவளோ அசையாது நிற்க 

 

“மிஸ் தீப்தி என்ன பன்னிட்டு இருக்கிங்க?” என கத்த முழித்துக் கொண்டவள், 

 

“ஐம் சொரி சேர்”  என்று அவள் கூற 

 

“இதோ பாருங்க வேலையை பார்க்குற இடத்துல வேலையை மட்டும் பாருங்க இல்லை வேற வேலையை தேட வேண்டி இருக்கும். டிட் யூ அன்டர்ஸ்டேன்ட்?  என்று விட்டு 

 

“மிஸ்டர் படேலோட ஓட பைலை  எடுத்துட்டு வாங்க, எனக்கு பிளைட்டுக்கு டைம் ஆச்சு” என்று கோபத்தில் கத்த அவள் பயந்தே பைலை எடுக்க வந்தாள். 

 

“எங்கிருந்து தான் வாராங்களோ” என்று முணுமுணுத்தபடியே வேலையில் மூழ்கினான்.

 

வெளியே வந்தவள், ‘என் ஆளு கோபட்டா கூட அழகா தான் இருக்கான். நொட் பேட்’ என்று பைலை தேடினாள். 

 

தீப்தி அஸ்வினை ஒரு தலையாக காதலிப்பவள், அவனுடைய பணத்திற்காக மட்டும், அவள் மிடல் கிளாஸ் என்பதால் செல்வச் செலிப்பான வாழ்க்கையை வாழ ஆசைபட்டு அஸ்வினை காதலிக்கிறாள். பாவம் அவள் அறியவில்லை அவன் மனதில் ஆழ் மனதிலே ஒருவள் பல வருடங்களாக  மனைவி எனும் இடத்தில் காதலால் ஆக்கிரமத்து குடியிருக்கிறாள் என்று.

 

அங்குள்ள அனைத்து வேலைகளையும் நண்பகல் 12 மணி போல் முடித்து, தேவையான பைல்களை மட்டும் எடுத்துக் கொண்டு கோயமுத்தூரை நோக்கி பயணமானான். 

 

கோயமுத்தூரில்…..

 

அந்தப் பெரிய வீட்டின் முன் வந்து நின்றது இரண்டு கார்கள். அதில் இருந்து ஆறடி ஆணமகன்கள் இருவரும் பேரழிகிகள் இருவரும் வந்து இறங்கினர் ஒவ்வொரு காரிலிருந்தும். சாவித்ரியும், இந்துமதியும் கையில் ஒவ்வோரு ஆரத்தி தட்டுடன் அவ்விரு ஜோடியின் முன்பு நின்றனர். சாவித்ரி மாதேஷ், தர்ஷிகா ஜோடியிற்கு ஆரத்தி எடுக்க, கவின், ஜீவிதா ஜோடியினருக்கு இந்துமதி ஆரத்தி எடுத்து 

அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்றார்கள்.

 

மாதேஷ் goldenship companyன் MD,  27 வயதுடைய ஆணழகன், கவின் Amara products ன் MD, அவனும் 27 வயது ஆணழகன். அவர்கள் இருவரும் தம் தந்தைக்கு ஓய்வை வழங்கி கம்பனியை திறம்பட நடத்தி வரும் இளம் தொழிலதிபர்கள். இந்தியாவின் டாப் 10 கம்பனிகளில் இரண்டும் உள்ளடங்கும்.

 

“மன்னிச்சிருங்கப்பா, உங்க இரண்டு பேரோட கல்யாணதிற்கும் எங்களால் வர முடியாமல் போயிருச்சு” என சாவித்ரி மனமுருகி மன்னிப்புக் கேட்க, 

 

வீட்டில் உள்ள அனைவருமே ஒருவர் பின் ஒருவராக அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர். 

 

“ஐயோ அம்மா, என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்க? எங்களால் உங்களோட நிலமையை புரிஞ்சிக்க முடியுமா இருக்கு. கவலையா இருந்தது பட் இப்போ திரும்பி உங்க எல்லாரையும் மீட் பன்னதுல எல்லாக் கவலையும் போச்சு. அதை விடுங்க. முடிஞ்சத பற்றி பேசாம நடக்க போறத பற்றி பேசலாமே” என்றனர் அவர்கள்.

 

அனைவரும் கலகலப்பாக பேச நேரம் போவது தெரியாமல் மகிழ்ச்சியாக இருந்தனர். பின் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்று, பிரஷ் ஆகி உணவிற்கு அனைவரும் டைனிங் டேபளில் ஆஜராகினர். அங்கும் அனைவரும் சிரித்துப் பேசி உணவை முடித்தனர். 

 

அன்றைய நாளும் அவர்களுக்கு நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. இரவு 7 மணியளவில், அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, 

 

ராமை நோக்கி இந்து, “என்னங்க அஸ்வின் இன்னும் வரவில்லையேங்க?” எனக் கேட்கும் போதே, 

 

“ஹாய்” எனக் கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தான் அஸ்வின்.

 

அஸ்வினைக் கண்டவர்கள் மகிழ்ச்சியில் தத்தளிக்க, கவினும், மாதேஷூம் அவனை ஓடிச் சென்று அணைத்தனர். 

 

“மச்சான்” என்று இருவரும் கத்த 

 

“மச்சான்ஸ்” என்றான் அஸ்வின். 

 

இதைக் கண்ட அனைவரின் முகத்திலும் புன்னகையும், கண்களும் கலங்கின. இத்தனை பாசம் உள்ள நண்பர்களா இத்தனை வருடங்கள் சந்திக்காமல் இருந்தார்கள் என்று நினைத்தது அனைவரின் மனதும். பின் ஏதோ நினைவு வந்தவர்களாய் அவர்கள் இருவரும் அஸ்வினை தள்ளிவிட்டனர்.

 

மற்றவர்கள் முகத்தில் அதிர்ச்சி தெரிய, அஸ்வின் மட்டும் புன்னகைத்துக் கொண்டு இருந்தான். 

 

அஸ்வின் “டேய்” என்க, 

 

“பேசாதடா” என்றான் மாதேஷ். 

 

“மச்சான் நான் இன்றைக்கு மௌனவிரதம் இல்லையே டா” என்றான் அஸ்வின். 

 

“இந்த அல்ப காமடிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றான் கவின். 

 

“நீ இன்றைக்கு காமடி பன்ன மாட்ட அதான் நான் கொஞ்சம் டிரை பன்னலாம்னு” என்று கூறி முடிய முன்னரே அவனை இருவரும் சேரந்து அடித்தனர்.

 

“ஜீவி, தர்ஷூ என்ன காப்பாத்துங்கடி” என அவர்கள் பின் ஒளிய வரும் போது,

 

“டேய் எங்க சார்பாவும் இவனுக்கு நாலு அடி போடுங்கடா” என்று அவனின் காலைவாரினார்கள் ஜீவி மற்றும் தர்ஷூ. 

 

இவர்களின் செல்லச் சண்டைகளை பாரத்தவர்களுக்கு, இன்று தான் ஓரளவு நிம்மதியும், சந்தோஷம் இவ்வீட்டிற்கு வந்துள்ளதாக நினைத்தனர். தர்ஷு, ஜீவியை பாவமாக பாரத்தவன் தப்பிச் செல்வதற்கு வாசல் பக்கமாக ஓடியவன், எவர் மீதோ மோதி நிலைத்தடுமாறி அவர்களுடன் கீழே உருண்டு விழுந்தான். 

 

அப்போதே ‘அவன் கையணைப்பில் யார் உள்ளார்’ என பார்த்த போது, கண்கள் சிவக்க அவன் உடலின் கீழே கோபத்தில் இருந்தாள் மீரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 17யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 17

கிறு அவளறியாமல் ஆரவின் கையில் சாய்ந்து உறங்க, அதைப் பார்த்த ஆரவின் இதழ்கள் விரிந்தன. அவள் உயரித்திற்கு ஏற்றவாறு அவன் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் கிறுவின் கண்ணா. அழகான விடியலாக அனைவருக்கும் அன்றைய விடியல் இருந்தது. அஸ்வின்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44

நிலவு 44   “என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை காதலிச்சிட்டே இருப்பேன், என்னோட உயிருக்கும் அதிகமா உன்னை நேசிப்பேன், ஐ லவ் யூ கண்ணம்மா” என்று அவள் ரோஜா இதழ்களை மென்மையாக சிறைபிடித்தான்.   அவளும் கண்மூடி

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48

நிலவு 48   ஆரவின் அருகில் சென்ற கிறு அவன் தோளில் இடித்தாள். அவன் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டான்.   “என்ன அமைதியா இருக்க? ஹீரோ எங்க என்று கேட்குங்குறாபா?” என்று கண்ணடிக்க   அவள் இடையில்