Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 38

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 38

பனி 38

 

“என்ன உங்க தம்பி பொண்ணு, நீங்க வளர்த்த பொண்ணு இரண்டு பேரையுமே கொன்னு இருக்கிங்க” என்று கூற

 

“உங்க குடும்பத்து ஆளுங்க தானே” என்று சிரித்தார் சிவபெருமாள்.

 

“நீங்க வளர்த்த பொண்ணு உடம்புல உங்க குடும்ப இரத்தம், என் குடும்ப இரத்தம் இரண்டுமே ஓடுது” என்றும்,

 

“இதோ இவன் உடம்புல எங்க குடும்பத்து இரத்தம் மட்டும் தான் ஓடுது” என்றான் MLL ஆதியைக் காட்டி.

 

“இன்றைக்கு இவனை நீங்க போட்டு தள்ளாட்டி, நானே போட்டு இருப்பேன், விட்டா நான் தான் MLL என்று கண்டுபிடிச்சு இருப்பான்” என்றான் MLL கோபமாக.

 

“அதான் போட்டு தள்ளியாச்சே, அப்பொறம் எதுக்கு பயப்படுறிங்க?” என்று சிவபெருமாள் கேட்க,

 

“ஆமா, அந்த கொரியாவில் இருந்து ஒரு டீல் வந்ததே, அது என்னாச்சு?” என்று MLL கேட்க,

 

“அதை பொலிஸ் பிடிச்சிருச்சு” என்று ஒரு குரல் கேட்க, அனைவருமே அதிர்ச்சியாய் திரும்பிப் பார்த்தனர்.

 

அங்கே விகி கூலரை அணிந்து மாங்காய் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

 

“ஏய் நீ எப்படி இங்கே? அதுவும் தனியா?” என்று சிவபெருமாள், MLL பதற,

 

“அட இதற்கே இப்படி பதறினா எப்படி? இன்னும் நீங்க இரண்டு பேரும் நிறைய பார்க்க இருக்கே. இந்த இடத்தை பொலிசும், கமான்டர்சும் ரவுன்ட்அப் பன்னி முப்பது நிமஷமாச்சு” என்றான் விகி அங்கே இருந்த கதிரையில் அமர்ந்தபடி.

 

இருவரின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாய் தெரிய முகத்தில் ஈஈஈ ஆடவில்லை. இருவரின் முகமும் வெளவெளத்து வியர்வையால் வழிந்து இருந்தது. பயத்தில் வார்த்தை எழவில்லை.

 

“இதற்கே ஹார்ட் எடெக் வந்தால் எப்படி? கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்க” என்று விகி கூற

 

இருவருமே திரும்பிப் பார்க்க, ஆதி சிவபெருமாள் அமர்ந்து இருந்த அதே மேசையில் கால் மேல் கால் இட்டு ஸ்டைலாக அமர்ந்து இருக்க கிருஷி மொபைலில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள். மற்ற இருவருமே கொஞ்சிக் கொண்டு இருந்தனர்.

 

“கிருஷி உன் தங்கை மட்டும் இல்லை நீ கூட நல்ல நடிகை தான்” என்றான்.

 

“எப்படி என் நடிப்பு வளர்ப்பு தந்தையே மற்றும், என் சின்ன மாமனாரே ?” என்று கிருஷி இருவரிடமும் கேட்க,

 

“அட நவி மா, சும்மா சொல்லக் கூடாது சூப்பரா நடிச்ச” என்று கன்னத்தில் இதழ்பதித்தான்.

 

“அடேய் நாங்க எல்லோருமே இங்கே தான் இருக்கோம். உங்க இரண்டு பேரோட ரொமேன்சை தனியா வச்சிக்கங்க. எனக்கு இன்னும் எட்டு நாளில் கல்யாணத்தை வச்சிட்டு கடுப்பாக்குறானுங்க” என்று விகி சலித்துக் கொண்டான்.

 

“உன்னை யாரு பவி கூட ரொமேன்ஸ் பன்ன வேணான்னு சொன்னா?” என்று ஆதி கேட்க,

 

“யேன்டா சொல்ல மாட்ட? எனக்கு தேவை தான்” என்றான் விகி கோபமாக.

 

“ஆமா, ராஜேஸ் தளிர் அப்படி இரண்டு பேர் இருந்தாங்களே டா? அவங்க எங்கே?” என்று ஆதி கேட்க,

 

“என்னை கடுப்பாக்குறதுக்கே அங்கே தூரமா போய் கட்டிபிடிச்சிட்டு இருக்குதுங்க” என்றான் அவர்களை காட்டி.

 

“என்ன நடக்குது இங்கே?” என்று மகாலிங்கம் கோபமாகக் கேட்க,

 

“என்னாச்சு இவரு இத்தனை நேரமா கோமாலையா இருந்தாரு?” என்று தளிர் கேட்க,

 

“யேன் செல்ல குட்டி அப்படி கேட்குற?” என்று அவள் கன்னம் கிள்ளி ராஜேஸ் கேட்க,

 

“அடேய் என் பொறுமையை சோதிக்காதடா. என் ஆள் பக்கத்துல இல்லைன்னு நானே கடுப்புல இருக்கேன். எவனாவது கொஞ்சினிங்க கொன்னுடுவேன்” என்றான் விகி எரிச்சல் கலந்த குரலில்.

 

“பொறாமை பிடிச்சவனே” என்று மற்ற நால்வரும் முணுமுணுத்தனர்.

 

“இல்லையே. இவளோ நேரமா நடந்தது எல்லாவற்றையுமே இவரு பார்த்துட்டு தானே இருந்தாரு. எனமோ இப்போ தான் விழிச்சது போல என்ன நடக்குதுன்னு கேட்குறாரு?” என்றாள் தளிர் குறைபடும் குரலில்

 

“போதும் நிறுத்துங்க, செத்த நாலு பேரும் எப்படி உயிரோட?” என்று மகாலிங்கம் கேட்க,

 

“நான் சொல்கிறேன் சின்ன மாமா” என்றாள் கிருஷி நக்கல் கலந்த குரலில்.

 

“எப்போ இவனுங்க நேசனை கொன்னானுங்களோ அப்போ இருந்து எஸ்.பி டென்ஷனாவே இருந்தாரு. அதாவது அவரோட பயம் குறையவே இல்லை. சரி எப்படியும் இந்த எஸ்.பி” என்று கிருஷி கூற இடையில்,

 

“ஒரு நிமிஷம் யாரிந்த எஸ்.பி?” என்று விகி சீரியசாக கேட்க,

 

“சிவபெருமாள் டா…டேய் விக்ரமன் நானே ஒரு புளோல சொல்லிட்டு போகிறேன். இடையில் ஏதாவது பேசுன கொன்னுடுவேன் டா” என்றாள் கிருஷி.

 

“யம்மா என்னா வாய்? நாம அடக்கி வாசிச்சா நம்ம மரியாதையை காப்பாத்திக்கலாம்” என்று விகி அமைதியாக ஆதி அவனை நமட்டு புன்னகையுடன் ஏறிட்டான்.

 

“ஆதி, விகி சந்தேகபட்டது இந்த பெரிய மனிஷன் எதுக்கு டென்ஷன் ஆகுறாருன்னு? நேசன் மேலே பழியிட்டதால், அவருக்கு இலகுவா தப்பிக்க இருந்தது. ஆனால் இவரு பதட்டமாவே இருந்தாரு. சொ இவருக்கு நிச்சயமா பாட்னர் ஒரு ஆளு இருக்காருன்னு முடிவுக்கு வந்தாங்க.

 

சரி எப்படியும் இவருக்கு என்னை கொல்ல வேணும். ஆனால் கடத்த முடியாது. எனக்கு பாதுகாப்பு அதிகம். சொ என்னை நிச்சயமா மிரட்டி தான் வெளியே வர வைப்பாருன்னு தெரியும். அவரு நிச்சயமா ஆயுதமா அம்மா, தளிர் இரண்டு பேரில் ஒருத்தரை கடத்துவாரு. அம்மாவிற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு. ஆகவே கண்டிப்பா, நம்ம தளிர் தான் டார்கட்டுன்னு தெரியும்.

 

அதனால் அவளை பாதுகாப்பா இருக்க சொன்னோம். எஸ்.பி தளிரை வொச் பன்னிட்டே இருந்தாரு. நாம யாருக்கும் தளிரை மீட் பன்ன முடியாது. அவளுக்கு புலட் ஜெகட் ஒன்னை கொடுக்க இருந்தோம். ஒரு நாள் ராஜேஸ் இடம் கொடுத்து புலட்ஜெகட்டை கொடுக்க சொன்னோம். அவ எங்கே வெளியில் போறன்னாலும் இதை போட்டுக்க சொன்னோம். ராஜேஸ் தளிர் விஷயத்தை ரொம்ப அக்கறையோடு பன்னாரு.

 

அப்போ தான் ராஜேஸ், தளிருக்கு இடையில் ஒரு காதல் இருக்குன்னு புரிஞ்சிகிட்டோம். நாங்க எல்லோருமே வெளியே எங்கே போகிறதாக இருந்தாலும் புலட் ஜெகட்டை அணிந்து தான் போனோம்” என்று கிருஷி கூற

 

“அட சிவபெருமாள் நீங்க கண்டிப்பா துப்பாக்கி மட்டும் தான் பயன்படுத்துவிங்கன்னு எங்களுக்கு எப்படி தெரியும்னு கேளுங்களே” என்று ஆதி கூற அவர் விழித்தார்.

 

“அட கேளுயா” என்றாள் கிருஷி.

 

“எப்படி தெரியும்?” என்று அவர் உட் சென்ற குரலில் கேட்க

 

“கேட்க இல்லை” என்றான் விகி.

 

“எப்படி தெரியும்?” என்று சற்று குரலை உயர்த்தி கேட்க,

 

“கேட்க இல்லை” என்றான் விகி

 

“அடச்சீ நிறுத்து, என்ன பிகில் விஜய்னு நினைப்பா? வாய மூடிட்டு இரு” என்று ஆதி கூறினான்.

 

“உங்களுக்கு கத்தியை கட்டாயமா உங்க கையால் பிடிக்கனும். அதாவது கிளவுஸ் பயன்படுத்தியோ, இல்லை உங்க ரேகைகளை எங்களுக்கு கண்டுபிடிக்க முடியாதது போல துணி பயன்படுத்துறது ரொம்ப கஷ்டம். சொ எங்களை கொல்றதுக்கு நிச்சயமா துப்பாக்கியை பயன்படுத்துவிங்கன்னு எதிர்பார்த்தோம்” என்றான் ஆதி.

 

“நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்த நாளாக இன்றைக்கு இருந்தது. ராஜேஸ் தளிரை பார்க்க கோலேஜூக்கு போகும் போது தான் நீங்க கடத்தினிங்க. கிருஷியை மிரட்டி வர வைக்கும் போது அவ கட்டி இருக்கிற வொச்சில் ஒரு அலர்ட் பட்டன்னை செட் பன்னி இருந்தோம். அதை அவ பிரஸ் பன்னிட்டு தான் உங்களை பார்க்க வந்தா. அப்போ எங்க எல்லோருக்கும் நீங்க எங்களை கொல்ல போறிங்கன்னு தெரிந்தது.

 

அவ எடுத்து வந்த பேகில் ஒரு மைக்ரோ கெமரா செட் பன்னி இருந்தோம். நீங்க என்ன பேசுறாங்கன்னு ரெகோர்ட் ஆகிட்டே இருந்தது. இவ உங்களை பார்க்க வந்ததை தெரிந்து தான் உங்களுக்கு நான் மொபைலில் அழைச்சேன். என்னையும் வர சொன்னிங்க. எங்களோட வேலையும் இலகுவா இருந்தது. நாங்க இங்கே வருகை தந்து பத்து நிமிஷத்தில் கமான்டரஸ், பொலிஸ் சுத்தி வளைச்சிட்டாங்க.

 

அதோட சிக்னல் தான் நான் கிருஷியை அழ கூடாதுன்னு சொன்னேன். எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறிங்களா?” என்று ஆதி தன்னுடைய காதில் ஒரு சிறிய கருவிப் பொருளை எடுத்தான்.

 

“இது மினி இயர்பட் ஸ்பெஷல் ஒபிசர்சுக்கு மட்டும் கவர்மன்டால் யாருக்கும் தெரியாமல் கொடுப்பாங்க. ஆனாலும் நீங்க அறிவாளின்னு நினைச்சேன். நீங்க சூட் பன்ன உடனே எங்களுக்கு பிளட் வருகிறதா இல்லையான்னு பார்க்கவே இல்லை. அது உங்களுக்கு தெரிய கூடாதுன்னு தான் நான்கு பேருமே முதுகுபுறம் மற்றவர்களுக்கு தெரியிரது போல் நடிச்சோம்.

 

எங்களுக்கு கண்டிப்பா தெரியும் உங்க பார்ட்னர் உங்களை தேடி வருவாருன்னு. அது வரைக்கும் நடிப்பை கன்டினியூ பன்னோம். எப்போ மிஸ்டர் MLL அதாவது மகாலிங்கம் லீடர் பேசும் போதே அவரு தான்னு கண்டு பிடிச்சோம். அப்போவே எந்திரிச்சி இருப்பேன்.பட் விகி வரும் வரைக்கும் வெயிட் பன்னோம். எப்போ விகி உள்ள வந்தானோ அப்போ எந்திரிச்சோம். நாங்க எந்திரிச்சதை கூட யாருமே பார்க்க இல்லை. யேன் தெரியுமா விகி வந்ததுக்கு அப்பொறமா உங்க எல்லோரோட கவனமும் அவன் மேலே தான் இருந்தது” என்றான் ஆதி.

 

“இப்போ சொல்லுங்க மிஸ்டர் மகாலிங்கம் எங்க பிளேனிங் எப்படி இருக்கு?” என்று ஆதி கேட்க, அவர் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

“நாங்க எதிர்பார்க்காத ஒரு விஷயம் ராஜேஸ், தளிரோட புரொபோஸல். இதை வச்சு கண்டுபிடிச்சிடுவிங்களோன்னு நான் ரொம்ப பயந்து இருந்தேன். பட் கண்டுபிடிக்க இல்லை. இதுங்க இரண்டுக்கும் எப்போ எதை பன்னனனும்னே தெரியாது” என்று கிருஷி தலையில் அடித்துக் கொண்டாள்.

 

“நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34

பனி 34   கிருஷியைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் நேசன் கூற இருவருமே அதிரந்தனர்.   அப்போது “அண்ணா” என்ற குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்க்க ஒரு பெண் நின்று இருந்தாள்.   இருவரும் “ஐஷூ, உள்ள வா மா”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 5யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 5

பனி 5   மெகெனிக் அவ்விடம் வந்தவுடன் இருவரும் அமைதியாகவே இருந்தனர்.   “ஆமா, நீ எவளோ நாளாக லெக்சர் பன்ற?” என்று அவன் கேட்க,   “ஏன், நீ எக்ஸ்பீரியன்ஸ பார்த்து, செலரியை கூட்டி தர போறியா?” என்று அவள்