Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 36

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 36

பனி 36

 

ஆதி அனைத்தையும் கூறி முடித்து,

 

“இப்போ சொல்லு திவ்யா? என் வைப் எதிரியோட பொண்ணா? சொல்லு” என்றான்.

 

அவள் அமைதியாக இருக்க,

 

“அம்மா இவ இருக்கிற வீட்டில் என் மனைவிக்கு ஆபத்து இருக்கு. எங்களால் நிம்மதியா வாழ முடியாது. நான் இவளை சென்னைக்கு அழைச்சிட்டு போகிறேன்” என்று மாடியேற,

 

“லக்ஷன் நில்லுடா” என்றாள் கிருஷி.

 

“என்ன நவி?” என்று கேட்க,

 

“நீ இங்கே வா” என்று கூற மறுபேச்சு பேசாமல் அவள் அருகில் வந்து நின்றான்.

 

“எதுக்கு கோப்படுற?, அவ ஏதோ தெரியாமல் பன்னிட்டா. அதற்கு கோயிச்சுட்டு போயிருவியா?” என்று  கிருஷி கேட்க

 

“நவி மா நீ எனக்கு ரொம்ப முக்கியம் மா. என் உசிரு டி நீ உனக்கு ஏதாவது நடந்தால் என்னால் தாங்க முடியாது. உனக்கு அடிபட்டதில் இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் நான் படுகிற கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றான் கண்கலங்கி.

 

“மாமா, தப்பு பன்னிட்டேன் எனக்கு மன்னிப்பு கேட்குற தகுதி கூட இல்லை. நான் கொஞ்ச நாளைக்கு உங்க எல்லோரையும் விட்டு தள்ளி இருக்கேன், அப்போ என் மனசு மாறிடும்” என்று தன் தாயின் புறம் திரும்பியவள்,

 

“அம்மா, நான் பொரின் போய் படிக்க ஏற்பாடு பன்னுங்க. அதுவரைக்கும் நாம எங்க ஊரில் இருக்கலாம்” என்று அறைக்குச் சென்று தன்னுடைய ஆடைகளை அடுக்கி ஊரிற்குச் செல்ல தயாராகி வந்தாள்.

 

கிருஷியிடம் வந்தவள்,

 

“சொரி, நான் உங்களை அதிகமா காயப்படுத்தி இருக்கேன். என்னை மன்னிச்சிருங்க. நீங்க எனக்கு அக்கா மாதிரி தான். நான் திரும்பி வரும் போது உங்க தங்கையா தான் திரும்பி வருவேன் நம்புங்க” என்று திவி கூற

 

“ஓகே தங்கையே” என்று புன்னகைத்தாள்.

 

பின் திவியின் குடும்பம் அனைவரிடம் இருந்தும் விடைப் பெற்றது. கனகா, தளிர் இருவருமே அனைவரிடம் கூறி விடைப்பெற்றார்கள். கிருஷியிடம் வந்தவர்கள் அன்புமழையைப் பொழிய ஆரம்பித்தனர் உரிமையாக. பின் கிருஷியை ஆதி அறைக்கு அழைத்துச் சென்றான்.

 

“லக்ஷன், அம்மா எப்படி இங்கே வந்தாங்க?” என்று கேட்க,

 

“நான் தளிருக்கு அவங்களை கோயிலுக்கு அழைச்சிட்டு வர சொன்னேன். அப்பொறமா அவங்களை சமாதானப்படுத்தி இங்கே அழைச்சிட்டு வந்தேன்” என்றான்.

 

“என் அம்மா உன் அத்தை டா. அதனால் தான் அவங்க அறைக்கு போகும் போது எனக்கு வித்தியாசமான பீல் வந்திருக்கு. ஆனால் அப்பா என் அம்மாவை கொன்னுட்டாங்களே, எனக்காக அதைத்தான் தாங்க முடியல்லை டா” என்று அழ அவளை அணைத்துக் கொண்டான்.

 

“விடு டி, நடந்தது முடிந்து விட்டது, நடக்க போகிறதைப் பார்க்கலாம்” என்றான்.

 

“அப்பாவிற்கு கண்டிப்பா தண்டனை வாங்கி கொடுக்கனும். ஆமா நான் கேட்கவே மறந்தேன், நீ எப்படி தண்டவாளத்திற்கு வந்தாய்?” என்று கிருஷி கேட்க,

 

அன்று நடந்தது அனைத்தையும் ஆதி கூறினான்.

 

“அப்போ நேசன்” என்று கேட்க,

 

“அவனை புதைச்ச இடத்தில் இப்போ புல் முளைச்சு இருக்கும்” என்றான்.

 

“புல் கூட நல்ல இடத்துல தான் முளைக்கும். அவன் கெட்டவன் அதனால் புல் முளைச்சி இருக்காது. பக்கத்துல் இருந்த புல் செத்து போய் இருக்கும்” என்றாள் வெறுப்பாக.

 

அன்றைய தினம் அனைவருக்கும் சந்தோஷமாகவே சென்றது. அடுத்து வந்த நாட்கள் ஆதி, கிருஷி இருவருக்குமே நன்றாகவே சென்றது. இதற்கிடையில் சிவபெருமாளுக்கு எதிராக ஆதரங்களையும் ஆதி தேடிக் கொண்டு இருந்தான்.

 

விகி,”மச்சான் சரியான ஆதாரம் கிடைக்க இல்லை டா. இனிமேலும் அந்த சிவபெருமாளை விட்டு வச்சிருக்கிறது எல்லோருக்கும் ஆபத்து” என்றான்.

 

“புரியிது டா. அவன் அரசியலில் இருக்கான், அவளோ சீக்கிரமா அரெஸ்ட் வோரன்ட் கிடைக்காது. கண்டிப்பா நமளுக்கு முக்கிய ஆதாரம் தேவைப்படும் டா” என்றான் ஆதி.

 

“என்ன டா பன்றது?” என்று விகி சலித்துக் கேட்க,

 

“நான் மட்டும் ஐடியாவை ஸ்டொக்ல வச்சிட்டு வஞ்சகமா பன்றேன்” என்றான் ஆதி கடுப்பாக.

 

“நீ பன்னாலும் பன்னுவ. இப்போ கூட உன் மைன்டுல ஏதாவது ஓடிட்டு தான் இருக்கும், கடைசி நேரத்தில் பிளேனை சொல்லுவ, அதுவும் அரை குறையா நாங்கள் எல்லோரும் முழிச்சுட்டு இருக்கனும்” என்றான் அதே கடுப்புடன்.

 

“விடு மச்சான், இந்த வாட்டி பிளேனை கண்டிப்பா சொல்லுவேன்” என்றான் ஆதி.

 

“எதோ பன்னித் தொலை. நான் என் ஆளுகிட்ட பேசிட்டு வரேன். இன்னும் பத்து நாளில் எனக்கு கல்யாணம் டா. அதற்கு முன்னாடி அந்த சிவபெருமாளை அரெஸ்ட் பன்னிடனும் டா. இல்லைன்னா எப்போ அவனுங்களை பிடிக்க என்னை கூப்பிடுவன்னு நிம்மதியே இல்லாமல் இருக்கனும்” என்றான் விகி சீரியசாக.

 

“மச்சான் அதற்கு முன்னாடி நாம பிடிச்சிடலாம் டா” என்றான் ஆதி

 

“பவி ரொம்ப கவலைபட்டா டா, கிருஷி அவ கூட இருக்க முடியல்லையேன்னு” என்று கூற

 

“கிருஷியை இப்போ வெளியில் அழைச்சிட்டு போறது ஆபத்துடா, பட் கண்டிப்பா கல்யாணத்திற்கு அழைச்சிட்டு வருவேன்” என்றான் ஆதி உறுதியாக.

 

ஒருநாள் தளிர் கிருஷிக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்,

 

“சொல்லு தளிர் என்ன புதுசா அக்காவை கூப்பிட்டு இருக்க? இல்லைன்னா மாமாவை தானே கூப்பிடுவ?” என்று கிருஷி கேட்க,

 

“அக்கா முக்கியமான விஷயம், கேளு கா” என்று சீரியசாக கூற

 

“சொல்லு டி” என்றாள் கிருஷி.

 

“பெரியப்பா கொஞ்ச நாளாகவே டென்ஷனா இருக்காரு. அந்த நேசனை தேடிட்டு இருக்காரு, வேறு ஏதோ ஒரு விஷயம் அவர் மண்டையில் ஓடிட்டே இருக்கு” என்று தளிர் கூற

 

“என்ன டி சொல்ற?” என்று கேட்க,

 

“ஆமா கா, பெரியப்பா ஏதோ பெரிய ஒரு தப்பு பன்றாரு. அவரோட குடோனை சீல் வச்சதில் இருந்து அவரு டென்ஷனாவே இருக்காரு. அங்கே போதைபொருள் இருந்து அரெஸ்பன்னதற்கு நேசன் தான் காரணம்னு சொல்லிட்டாரு. ஆனால் இவரு எதுக்கு டென்ஷன் ஆகனும்னு புரியவே இல்லை” என்று தளிர் கூற

 

“நான் இதை லக்ஷன் கிட்ட உடனே சொல்கிறேன்” என்று கிருஷி கூற

 

“அக்கா அம்மா கூபிடுறாங்க நான் அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள் தளிர்.

 

அன்றிரவு ஆதியுடன் நவி இதைப் பற்றி பேசினாள்.

 

“அப்பாவிற்கும், உன் டிரக்ஸ் கேசிற்கும் தொடர்பு இருக்கா?” என்று கேட்க,

 

“அது, ஆமா” என்றான்.

 

தன் வளர்ப்புத் தந்தை இத்தனை தீய குணங்களையும், சட்ட விரோத தொழில்களையும் செய்பவர் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

“லக்ஷன் அவரு ரொம்ப கெட்டவரா இருப்பாருன்னு நினைக்கவே இல்லை டா” என்று அழ

 

“இங்க பாரு நவி, தினம் தினம் ஏதாவது சிவபெருமாளைப் பற்றி புதியதாக கேளவியுற்று இப்படி அழறதை முதலில் நிறுத்து. யதார்தத்தை ஏத்துக்க” என்று ஆதி கூற கிருஷி சம்மதமாய் தலை அசைத்தாள்.

 

“லக்ஷன், அவரு ரொம்பவே டென்ஷனா இருக்காறாம், ஏதோ பிளேன் பன்றாரோ தெரியான்னு தளிர் சந்தேகபடுறா” என்று கூற

 

“நாங்களும் அவரை அரெஸ்ட் பன்றதுக்கான ஸ்ட்ரோங் எவிடன்சை தான் தேடிகிட்டு இருக்கோம்” என்றான் ஆதி தீவிரமாக.

 

“எனக்கு ஏதாவது தெரிந்தால் நான் உன் கிட்ட சொல்கிறேன்” என்றாள் கிருஷி.

 

“அவரு ஏதாவது பழிவாங்குறது என்றால் உனக்கும் ஆபத்து இருக்கும் ஜாக்கிரதையா இரு நவி மா” என்று கூற

 

“சரி டா” என்று எழுந்தாள்.

 

“எங்கே போற?” என்று ஆதி கேட்க,

 

“சும்மா பல்கனிக்கு போய் நிற்க போகிறேன்” என்றாள்.

 

அவளுடன் சேர்ந்து அவனும் அவளை பின்னிருந்து அணைத்து நின்றுக் கொண்டு இருந்தான்.

 

“லக்ஷன் இங்கே இடம் அதிகமா இருக்கு” என்றாள் நக்கலாக.

 

“பரவால்லை பொன்டாட்டி. நான் இப்படியே இருக்கேன், இதான் எனக்கு பிடிச்சிருக்கு” என்றான்.

 

“நவி மா, இதை போல் எல்லோர் ஆசிர்வாதத்துடன் நம்ம கல்யாணம் நடந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் டி” என்று கூற

 

“ஓகே லக்ஷன் திரும்ப எல்லோர் முன்னாடியும் கல்யாணம் பன்னலாம்” என்றாள்.

 

“உண்மையாகவா டி?” என்று கேட்க,

 

“சத்தியமா டா” என்றாள்.

 

“அப்போ கல்யாணத்தை ஏற்பாடு பன்னிட்டா போச்சு” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

 

“இப்போ தூங்கலாம்” என்று கூற

 

“ஓகே பொன்டாட்டி” என்று அவளை கையிலேந்திச் சென்றவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

 

இரண்டு நாட்களின் பின், ஆதி கிருஷியிடம்

 

“தளிர் ஏதாவது போன் பன்னாளா?” என்று கேட்க,

 

“இல்லை டா, என்னால் அழைக்கவும் முடியாது. அது அவளுக்கே பிரச்சனையா போய் முடியும்” என்றாள் கிருஷி.

 

“எனக்கு முக்கியமான வேலை இருக்கு வெளியில் போயிட்டு வரேன். பத்துரமா இரு” என்று கூறி வெளியே சென்றான்.

 

கிருஷி அனைவரிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

 

“என் அம்மா மேலே உங்களுக்கு கோபமே இல்லையா அத்தை?” என்று ராஜேஸ்வரியிடம் கேட்க,

 

“அவ என் பொண்ணு மா எப்படி கோபப்பட முடியும்? ஆரம்பத்துல கோபம் இருந்தது. அப்பொறமா அது வருத்தமா மாறிருச்சு” என்று கூற

 

“அம்மாவை ரொம்ப மிஸ் பன்றிங்களா?” என்று கண்கலங்க கேட்க,

 

“ஆமா மா. கடைசி நேரம் கூட அவ கஷ்டபட்டு தான் இறந்து இருக்கான்னு தெரியும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது. அவளை நான் ஆசையா வளர்த்தேன். ஆனால் அவளோட முடிவு இப்படி கொடூரமா இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை” எனறு அழுதார்.

 

“அக்கா அழாதிங்க அக்கா. அதான் அவ நமளுக்கு அவளோட இரத்ததை விட்டுட்டு போய் இருக்காளே” என்று அம்பிகா சமாதானம் செய்தார்.

 

“அண்ணி, கிருஷியும் பனியைப் போல தான். அவ தான் இவன்னு நினைத்து வாழுவோம்” என்றார் மகாலிங்கம்.

 

அப்போது கிருஷியின் மொபைல் அலற தளிர் அழைப்பதைப் பார்த்து தனியாக சென்று பேச ஆரம்பித்தாள்.

 

“சொல்லு தளிர்” என்று கூற

 

“அக்கா, பெரியப்பா….” என்றதோடு அவளது சத்தம் கேட்கவில்லை.

 

“தளிர் தளிர்” என்று அழைக்க எதிர் முனையில் எந்த பதிலும் இல்லை.

 

மீண்டும் தளிருக்கு அழைக்க மொபைல் ஸ்விச்ஓப் என்று வந்தது.

 

கிருஷி செய்வதறியாது நிற்க அவளுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

 

“ஹலோ” என்று கிருஷி கூற

 

“தளிரை உயிரோட பார்க்க வேணுன்னா தனியா நாங்க சொல்கிற இடத்துக்கு வா. உன் புருஷன் கூட பேச முயற்சி செய்த அநியாயமா இரண்டு உயிர் போயிரும்” என்றான் எதிர் முனையில் உள்ளவன்

 

“இரண்டு உயாரா?” என்று கிருஷி கேட்க,

 

“ஆமா நீயே வந்து பாரு” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

தன் கைக்கடிகாரத்தை கட்டி அவசரமாக ஹேன்ட் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். பெரியவர்கள் தத்தமது அறைகளில் இருந்ததால் எவரும் அவள் செல்வதைக் கவனிக்கவில்லை.

 

ஆதி சிவபெருமாளுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“என்ன மாமா நல்லா இருக்கிங்களா?” என்று ஆதி நக்கலாக கேட்க

 

“என்ன நக்கலா? என் கிட்ட மோதி இருக்க விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” என்றார்.

 

“வளர்த்த பொண்ணை பகையை காரணம் காட்டி கொலை பன்ன பார்த்த ஆளு தானே நீ?” என்று ஆதி கூற

 

சத்தமாக சிரித்த சிவபெருமாள், “பகைக்காக, கௌரவத்திற்காகவும் தம்பியை கொன்ன எனக்கு அவன் பொண்ணு உயிர் பெரிசு இல்லை ஆதி” என்றார்.

 

ஆதியோ இதைக் கேட்டு சிலையாக நின்று இருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 29யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 29

பனி 29   ஆதியைக் கிருஷி பார்க்க அவன் தன் வசீகரப் புன்னகையை சிந்தினான்.   அவள் “எதுக்கு சிரிக்கிற? எதுக்கு தளிர் நடிச்சா?” என்று கேட்க,   “அதை நீ அவ கிட்டையே கேளு” என்று தன் மொபைலில் இருந்து

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12

பனி 12   பவியின் வீட்டிற்குச் செல்லும் வழியில் கிருஷி மொபைலில் ஏதோ செய்ய,   “என்ன டி பன்ற? அதுவும் சிரிச்சிகிட்டே?” என்றாள் பவி.   “இன்றைக்கு 12.36க்கு தான் லக்ஷன் புரொபோஸ் பன்னான். அதான் சேவ் பன்னி வைக்குறேன்”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

பனி 17   “அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.   சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.