Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 35

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 35

பனி 35

 

ஒரு நாள் ஆதி கிருஷியின் ரிபோர்ட் எடுக்கச் சென்று இருந்தான். கிருஷி அறையில் அடைந்திருக்க முடியாமல் கீழே செல்ல வர மாடிப்படிகளில் இறங்கும் போது அவளுக்கு தலைவலி ஏற்பட்டது. அவள் ஒரு கையால் தலையைப் பிடித்து மறு கையால் சுவரைப் பிடித்து நிற்க அவள் கை சுவரில் இருந்து தட்டி விடுபட்டது.

 

பின்னால் திரும்பி அவள் யார் தன் கையை தட்டிவிட்டது எனப் பார்க்க முன்னே அவள் சமனிலை இல்லாமல் விழப்போக ஆதி அவளை ஓடி வந்து தாங்கிக் கொண்டான். ஆதி ரிபோர்ட்சை எடுத்து உள்ளே நுழையும் போது கிருஷி தலையைப் பிடித்து பின்னால் திரும்புவதைப் பார்த்தவன் வேகமாக வர அவள் விழப்போவதைபக் கண்டவன் ஓடி அவளைத் தாங்கினான்.

 

ஆதிக்கு கிருஷியின் மேல் கோபம் வந்தாலும் அதை அடக்கி,

 

“எதுக்கு டி தனியா வந்த?” என்று கேட்க,

 

“ரூமிலேயே இருக்க முடியல்லை டா. கஷ்டமா இருக்கு. அதான் எல்லோர் கூடவும் கீழ இருக்கலாம்னு வந்தேன்” என்றாள் அவன் நெஞ்சில் சாய்ந்தபடி.

 

அவள் கூற்றில் உண்மை இருப்பதைப் உணர்ந்தவன்,

 

“நான் இருக்கும் போது இப்படி பன்னு நவி மா. நான் வராவிட்டால் உன் நிலமையை யோசிச்சியா?” என்று கூறி அவளை தன் கையில் ஏந்தி அவளை ஹாலிற்கு அழைத்து வந்து அமரவைத்தான்.

 

“அம்மா” என்ற கர்ஜனையில் அனைவரும் ஹாலில் ஒன்று கூடினர்.

 

“என்னாச்சு தேவ்? எதுக்கு சத்தம் போடுற?” என்று ராஜேஸ்வரி கேட்க,

 

“என் நவி உங்களை என்ன பன்னா?” என்று கேட்க,

 

“தெளிவா பேசு தேவ்” என்று சங்கரன் கூற

 

“சித்தப்பா இப்போ கிருஷியோட கையை தட்டிவிட்டு அவளை யாரோ விழவைக்கப் பார்த்தாங்க” என்று கூற கிருஷி அதிரந்து அவனைப் பார்த்தாள்.

 

‘இவனிடம் தன் கையை  தட்டிவிட்டதைப் பற்றி நான் கூறவே இல்லையே எப்படி கண்டு பிடித்தான்’ என்று தன்னுள் பேசினாள்.

 

“தேவ் எங்க குடும்பத்துல யாருமே அப்படி பன்றவங்க இல்லை” என்று கோமதி கூற

 

“நிலா இப்போ உண்மையை சொல்ல போறியா? இல்லையா?” என்று ஆதி உறும

 

அதில் பயந்தவள், “அண்ணா அது…” என்று அவள் தடுமாற

 

“நிலா நான் பொலிஸ். முகத்தை வச்சே நான் கண்டு பிடிச்சுடுவேன். இப்போ நீ சொல்லு இல்லை நான் பொலிஸா மாறி என் பொன்டாட்டியை கொல்ல பார்த்தற்கு அரெஸ்ட் பன்னி உள்ள போடுவேன்” என்றான் ஆதி.

 

“திவி தான் அண்ணியோட கையை தட்டிவிட்டா” என்று கூற திவியும் பயத்தில் நிற்க மற்றவர்கள் அதிரந்தனர்.

 

ஆதி திவியின் அருகில் சென்றவன் அவள் கன்னத்தில் அறைய அவள் சுருண்டு கீழே விழுந்து மிரட்சியுடன் பார்த்தாள்.

 

“என்ன அப்படி பார்க்குற? நான் எதுக்கு நிலா கிட்ட கேட்டேன்னா? நான் சொல்லும் போது நீ பயத்துல என்னை பார்த்த அவ சொக் ஆகி உன்னையும் என்னையும் மாறி மாறி பார்த்தா, அப்போ தான் கண்டு பிடிச்சேன் நீ தான் பன்னேன்னு” என்றான் கோபமாக.

 

“ஆமா நான் தான் பன்னேன், என்னால் அவளை நான் இருக்க வேண்டிய இடத்துல பார்க்க முடியல்லை. என்ன இருந்தாலும் அவ எதிரி வீட்டு பொண்ணு தானே” என்றாள் திவி.

 

“யாரு சொன்னா அவ எதிரி வீட்டு பொண்ணுன்னு? அவ இந்த வீட்டு பொண்ணு எங்க வம்சத்தோட இரத்தம் தான் அவ உடம்பில் ஓடுது” என்று ஆதி கத்தினான்.

 

அனைவரும் அவனை புரியாமல் பார்க்க,

 

“இவ பனி மலர் அத்தைக்கும் ராஜ் மாமாவிற்கு பிறந்த குழந்தை  அதற்கான DNA ரிபோர்டை வாங்க தான் போய் இருந்தேன்” என்று ஆதி கூற அதிர்ச்சியாய்ப் பார்த்தனர்.

 

“ஆதி பனிமலருக்கு குழந்தை இல்லையே” என்று சங்கரன் கூற

 

“அது நாங்க நம்பிட்டு இருக்கிற விஷயம்” என்றான்.

 

“என்னப்பா சொல்ற?” என்று அம்பிகா கேட்க,

 

“அதற்கான பதிலை இப்போ அவங்க சொல்லுவாங்க” என்று ஆதி வாயில் புறத்தைக் காட்ட,

 

அங்கே கிருஷியின் அம்மா கனகா வந்துக் கொண்டு இருந்தார்.

 

“அம்மா” என்று கிருஷி அழ கனகா அவள் அருகில் அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டார். அவருடன் தளிரும் வந்திருந்தாள்.

 

“ரொம்ப வலிக்குதாடா?” என்று தலையைத் தடவிக் கேட்க,

 

“ஆமா மா” என்று அவர் மடியில் தலை வைத்தாள்.

 

“அம்மா, நான் உங்க பொண்ணு இல்லையா?” என்று கவலையாகக் கேட்க,

 

“இல்லை டா. நீ எங்களுக்கு பிறந்த குழந்தை இல்லை மா. பனிமலருக்கும், ராஜாதம்பிக்கும் பிறந்த குழந்தை. எங்களுக்கு பிறந்த குழந்தை இருபத்து மூன்று வருஷங்களுக்கு முன்னாடியே இறந்து போச்சு” என்றார்.

 

“ஆனால் பனிமலருக்கு குழந்தை” என்று சங்கரன் கேட்க,

 

“எல்லாமே என் புருஷனால தான்…” என்று இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னே நடந்ததைக் கூற ஆரம்பித்தார்.

 

பனிமல், ராஜேஸ் இருவருமே பூனேவில் தன் நண்பனின் உதவியுடன் அங்கே தங்கி வேலை செய்தார்கள். நாட்கள் செல்ல பனிமல் கர்பம் தரிக்க ராஜா அவளை கையில் வைத்து தாங்கினான். இருவருமே கர்பம் தனித்த தினத்தில் இருந்து குழந்தையுடன் பேசுவது வழக்காமாகிப்போனது. ராஜாவை விட பனியே குழந்தையுடன் அதிகம் பேசுவாள்.

 

அவள் நிறைமாத கர்பிணியாக இருந்த சமயத்தில் ராஜாவின் நண்பனின் திருமணத்திற்கும், பனியிற்கு வளைகாப்பு செய்வதற்காக இருவரையும் அவர்கள் ஊரிற்கு அழைக்க அவர்களும் மறுக்கமுடியாமல் சென்றனர். பனியிற்கு இது ஒன்பது மாதம் என்பதால் இடையில் செல்லும் போது அவளுக்கு பிரசவவலி திடீரென்று ஏற்பட அவளை பக்கத்தில் இருந்த திருனல்வேலி ஹொஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.

 

பனிமலரின் பிரசவத்திற்காக அவளை அட்மிட் செய்திருந்த அதே ஹொஸ்பிடலில் கனகாவும் பிரசவ வலியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கனகாவின் குழந்தை பிறந்த சிலநிமிடங்களில் இவ் உலகை விட்டு உயிர் நீத்தது. அதை தாங்க முடியாமல் அவர் மயக்க நிலமைக்குச் சென்றார். அப்போது பனிமலருக்கு ஒரு பெண்குழந்தை ஆரோக்கியமாக பிறந்து இருந்தது.

 

சிவபெருமாள் தன் மகள் இறந்த கவலையில் வரும் போதே அவர் பனிமலரையும் அவள் குழந்தையையும் பார்த்தார். அதே நேரம் அங்கு வேலை விடையமாக வருகை தந்த வாசுதேவனும் தன் தங்கையையும், அவள் பிள்ளையையும் பார்த்து அவர்களிடம் செல்ல அதே இடத்திற்கு சிவபெருமாளும் வருகை தந்தார். ராஜா அவளுக்காக மருந்தை வாங்கச் சென்று இருந்தார்.

 

குழந்தையை வாங்கிப் பார்த்தவர் தன் தம்பியைப் போல் இருந்ததால் அவளை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க பனிமலர் தடுத்தாள். அதற்காக கோபமடைந்து அவளை வெட்டும் போதே இடையில் வாசுதேவன் புகுந்ததால் அவறின் வயிற்றில் கத்தி இறங்கியது. பனிமலர் அதைக் கண்டு அலற தன் குழந்தையை விட்டு விடும்படி கெஞ்சினாள்.

 

மனதில் சிறு துளியேனும் இரக்கமற்ற அந்த அரக்கன் குழந்தைப் பற்றிய எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று பிள்ளைப் பெற்று எடுத்த உடம்பு என்று பாராமல் அவளையும் கத்தியால் குத்தினார். அவருடைய திட்டம் இந்தக் குழந்தையை வளர்த்து அவள் தாயின் குடும்பத்தையே அழிக்க வைக்க வேண்டும் என்று.

 

உடனே டாக்டரிடம் பணத்தைக் கொடுத்து குழந்தைப் பற்றி எந்த தகவலும் வைத்தியசாலையை விட்டு வெளியேறக் கூடாது என்று கூறிவிட்டார். தான் பெற்ற மகளை அருகில் இருந்த மயானத்தில் ஒருவருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தார். பனிமலர் மற்றும் தன் தம்பியின் குழந்தை கனகா, சிவபெருமாளின் குழந்தையாக வளர ஆரம்பித்தது. நாளிடைவில் தன் தம்பியின் சாயல் அவளிடம் இருப்பதால் பழி உணர்ச்சியை விட்டு தன்னுடைய மகளாகவே பாசமூட்டி வளர்க்க ஆரம்பித்தார்.

 

சிறுவயதில் பனி கிருஷியின் கனவில் வருவதற்கான காரணம் பனிமலரின் தன் மகள் மீதான ஆத்தமார்த்தமான அன்பே.

 

கனகாவிடம் இந்த உண்மையை வெளியிடக் கூடாது என்று மிரட்டி வைத்தார். அவருக்கும் கிருஷியை பிறந்து தன் கையில் வழங்கிய நொடியில் இருந்தே தன்னுடைய மகளாகவே நினைக்க ஆரம்பித்து இருந்தார். அதனாலேயே சிவபெருமாளினால் பனியின் அண்ணன் மகனை தன்னுடைய மாப்பிள்ளையாக ஏற்க முடியவில்லை. அவர் நினைத்தது போலவே கிருஷியும் இங்கு இருப்போருடன் ஒன்றியது கிருஷியின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது” என்று கூறி முடித்தார்.

 

“அம்மா நான் கிருஷியை முதன் முதலா பார்த்தப்போ அவ கண்ணு தான் என்னை ஈர்த்துச்சு. அப்பொறம் கொஞ்ச நாளைக்கு பிறகு தான் அவளை காதலிக்க ஆரம்பிச்சேன். இவ சிவபெருமாளோட பொண்ணுன்னு தெரிஞ்சப்போ நான் அத்தை ரூமிற்கு போய் இருந்தேன். அப்போ அத்தை முகத்தை பார்க்கும் போது, அவ கண்ணும் இவளோட கண்ணும் ஒரே போல இருந்தது. அதனால் தான் அந்த கண்ணு எனக்கு பரீட்சயமானது தோணிட்டே இருந்தது.

 

அப்பொறம் கிருஷி இங்க வீட்டிற்கு வந்த போது பனி அத்தையைப் போல் சமைச்சதுக்காக கோமதி சித்திக்கு முத்தம் கொடுத்தா. பனி அத்தை கோபம் வந்தால் கிருஷி எந்த பூச்சாடியை மண்டையில போட்டு உடைப்பேன்னு சொன்னாளோ அதே போல் தான் சொல்லுவாங்க. அப்போ என்னோட சந்தேகம் வளர ஆரம்பிச்சது.

 

கிருஷிக்கு அடிபட்டப்போ நான் தான் பிளட்டை கொடுத்தேன். அப்போ டாக்டர் எங்க இரண்டு பேரோட பிளட்டு 80%  எல்லா வித்திலேயும் மெச் ஆகுதுன்னு, அது ஓரே குடும்ப ஆளுங்களுக்கு மட்டும் தான் சாத்தியம்னு டாக்டர் சொன்னாரு. அப்பொறம் எனக்கு ஞாபகம் வந்தது, விகி இங்கே வந்தப்போ அவனுக்கு அடிபட்டு மருந்துக்காக நாங்க ஹொஸ்பிடல் போனோம். அப்போ சிவபெருமாளோட பிளட் சாம்பல் மிகுதியா இருந்தது.

 

அந்த பிளட்டையும் கிருஷி பிளட்டையும் செக் பன்னி பார்த்தால் அவருக்கும் 80% தான் பொருத்தமா இருந்தது. பெற்ற தகப்பனா இருந்தால் 100% மெச் ஆகனும்னு டாக்டர் சொன்னாரு. அதனால் நான் எதிர்பார்த்தது பனலவே நெகடிவ் ரிசல்ஸ் தான் வந்தது. அப்போ இவ பனி அத்தையோட பொண்ணா? அந்த டவுட் வந்தது. உடனே DNA TEST எடுக்க சொன்னேன். பனி அத்தை ரூமில் அவங்க கூந்தலை பின்னும் போது கொட்டுகிற முடியை ஒரு போத்தலில் இட்டு வைப்பாங்க.

 

அந்த போத்தல் இன்னும் இருக்கு. அதில் இருந்து முடியை கொண்டு போய் கொடுத்தேன். அதே நேரம் தான் சங்கரன் சித்தப்பா கிட்ட பனி அத்தைக்கு குழந்தை இருக்கான்னு கேட்டேன். அவரு இல்லைன்னு சொன்னாரு. நேசனிடம் விசாரிச்சப்போ கிருஷியோட பிறப்பை பற்றி சொன்னான். நேற்று நைட் டாக்டர் போன் பன்னி ரிசலஸ் பொசிடிவ்னு சொன்னாரு. உங்க எல்லோருக்கும் புரூவ் பன்ன தான்  இன்றைக்கு காலையில் போய் ரிபோர்டை எடுத்து வந்தேன்” என்று கூறி முடித்தான் ஆதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12

பனி 12   பவியின் வீட்டிற்குச் செல்லும் வழியில் கிருஷி மொபைலில் ஏதோ செய்ய,   “என்ன டி பன்ற? அதுவும் சிரிச்சிகிட்டே?” என்றாள் பவி.   “இன்றைக்கு 12.36க்கு தான் லக்ஷன் புரொபோஸ் பன்னான். அதான் சேவ் பன்னி வைக்குறேன்”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10

பனி 10   மாலை கோலேஜ் முடித்தவுடன் மோலிற்கு செல்லும் போது ஒரு கார் அவளை போலோ செய்வதைக் கவனித்தவள் சற்று வேகமெடுத்துப் போக, அவளை இடமறித்து அந்த கார் அவள் ஸ்கூர்டியின் முன்பு வந்து நின்றது.   காரிலிருந்து ஒருவன்

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 2யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 2

பனி 2   காலேஜை வந்தடைந்தாள் கிருஷி. தனது ஸ்கூர்டியை பார்கிங்கில் நிறுத்தி, நேரடியாக பிரின்சியின் அறைக்குச் சென்றாள்.   “குட் மோர்னிங் சேர்” என்று புன்னகைக்க,   “குட் மோர்னிங் கிருஷி” என்றார்.   “சேர் என்னோட டைம் டேபள்”