Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34

பனி 34

 

கிருஷியைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் நேசன் கூற இருவருமே அதிரந்தனர்.

 

அப்போது “அண்ணா” என்ற குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்க்க ஒரு பெண் நின்று இருந்தாள்.

 

இருவரும் “ஐஷூ, உள்ள வா மா” என்றனர்.

 

உள்ளே வந்த ஐஷூ நேசனின் நிலைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.

 

நேசன் அவள் யாரென்று புரியாமல் பார்க்க,

 

“என்ன நேசன் அப்படி பார்க்குற?” என்று விகி கேட்க,

 

“அவனுக்கு என்னை தெரியாது அண்ணா, ஆனால் கவிதாவை தெரியும்” என்று தீப்பார்வை பார்த்தாள்.

 

‘கவிதா, இப்பெயரை தான் இதற்கு முன்னாக கேட்டிருக்கிறேன், ஆனால் யாரென்று தெரியவில்லை’ என்று நேசன் விழிக்க

 

“என்ன நேசன் அவளையும் மறந்திட்டியா? சிதம்பரம் அவ கிட்ட தப்பா நடந்ததுக்காக தான் உன் மேலே கம்பிளைன் பன்னான். அதனால் தான் அவனை கொலை பன்ன” என்றான் ஆதி.

 

அவன் அதிர்ந்து மீண்டும் ஐஷூவைக் கேள்வியாய்ப் பார்க்க,

 

“நான் அவளோட பிரன்டு. அவ சூசைட் பன்னி செத்துட்டா. அநியாயமா சமூகத்திற்கு சேவை செய்ய இருந்த ஒரு வருங்கால டாக்டரை கொன்னுட்டியே” என்று கண்ணீர் வடித்தாள்.

 

“ஐஷூ அழாதடா” என்று விகி, ஆதி இருவரும் கூற

 

“எப்படி அண்ணா அழாமல் இருக்க முடியும்? அவ ரொம்ப ஆசையா இருந்தா. நிறைய ஏழைகளுக்கு இலவசமா மருந்தை வழங்கனும். இங்க ஊரில் இருக்கிற ஹொஸ்பிடலில் இருக்கிற மருத்துவ வசதிகளை மேம்படுத்தனும். இப்படி நிறைய ஆசை இருந்தது அண்ணா. இவன் அவளை நாசமாக்கினான். அவ அவளோட கனவுகளை அழிச்சிட்டு ஒரேடியாக போய் சேரந்துட்டா” என்றாள் அழுதுக் கொண்டே.

 

“அழாதடா. இந்த மாதிரி நாயிங்க முன்னாடி உன்னை போல நல்ல பொண்ணுங்களோட ஒரு சொட்டு கண்ணீர் வடியகூடாது” என்றான் ஆதி.

 

“ஆதியோட கோபம் இன்னும் குறையவே இல்லை. அவனுக்கு இருக்கிற கோபத்திற்கு அடிச்சே கொன்னுடுவான். நான் தான் சொன்னேன் அவன் உன் கையால் சாகனும்னு, அப்போ தான் உன் மனசு ஆறும்னு” என்றான் விகி.

 

“ஐஷூவிற்கும் கவிக்கும் உள்ள சம்பந்தத்தை பற்றி உனக்கு எப்படி தெரியும்? என ஆதி கேட்க,

 

“இவ என் சித்தி பொண்ணுன்னு உனக்கு தெரியும். நான் ஊருக்கு போனப்போ ரொம்ப அப்சட்டா இருந்தா. என்னன்னு கேட்டும் அவ சொல்லவே இல்லை. அதட்டி கேட்டதுக்கு அப்பொறம் தான் கவியைப் பற்றி எல்லாமே சொன்னா. அவளுக்கு நடந்த அநியாயத்தை சும்மா விடகூடாதுன்னு சொன்னா. நானும் கண்டிப்பா அவனுக்கு நம்ம ஸ்டைலில் டிரீட்மன்ட் கொடுக்கும் போது உன்னை கூபிடுறேன். உன் கையாலேயே கொல்ல சொன்னேன். கடவுளோட அருள், அவளும் நேற்று தான் இந்த ஊரில் இருக்கிற அவ பிரன்டு வீட்டிற்கு வந்தா. இன்றைக்கு அவனை பிடிச்சுட்டு, அவளை இங்கே வர சொன்னேன்” என்று கூறி முடித்தான் விகி.

 

“உன் பிரன்டுக்கு நடந்த அநியாயத்திற்கா நீயே அவனுக்கு தண்டனையை கொடு” என்று ஆதி அவனது துப்பாக்கியை அவள் கைகளில் திணித்தான்.

 

அதை கைகள் நடுங்க வாங்கியவள் கண்களை மூடிக் கொண்டு ஒரு முறை சுட்டாள். அப்போது நேசனின் ‘ஆஆஆ’ என்ற அலறல் கேட்டு கண்களைத் திறந்தாள்.

 

அவனுடைய கால் ஒன்றில் தோட்டா இறங்கியது.

 

“அண்ணா, இவன் ஒரேடியா சாக கூடாது துடிதுடிச்சு சாகனும். எத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசம் பன்னி இருப்பான்? அதற்கு எல்லாம் சேர்த்து இவன் அனுபவிச்சு சாகனும்” என்றாள் ஐஷூ.

 

அவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டு அவனுடைய மற்றைய கால், கைகள் இரண்டு, மற்றும் இன்னொரு புலட்டை உடைந்த கையில் மீண்டும் இறக்கினான் ஆதி.

 

அவனுடைய அலறல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

 

“என்னால் முடியல்லை என்னை கொன்னுடுங்க” என்றான் நேசன் அலறலாக.

 

“ஒவ்வொரு பொண்ணும் இதைவிட வலியை அனுபவிச்சு இருப்பாங்கடா” என்றான் விகி கவலையாக.

 

“மச்சான் இது போதாது டா, இவன் என் சூர்யா மாமா கொன்னான். என் நவியையும் கொல்ல நினைச்சு இருக்கான். அதற்கு ஏதாவது தண்டனை கொடுக்கனும்” என்றான் ஆதி.

 

“என்ன பன்னலாம் டா?” என்று விகி கேட்க,

 

“அண்ணா நான் எப்போவும் என் சேப்டிக்கு மிளகாய் தூள் வச்சிருப்பேன். இப்போவும் அது இருக்கு. அதை இவன் காயத்தில் போட்டு விடுங்க. எரிஞ்சு துடிச்சு சாகுவான்” என்று ஐஷூ கூறி தன் பையில் இருந்து அதை ஆதியிடம் வழங்கினாள்.

 

ஆதி அதை எடுத்து அவன் காயங்களில் தூவ ஆரம்பித்தான். அதன் எரிவு காரணமாக மேலும் மேலும் அவனுடைய அரவம் அதிகரித்தது.

 

ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு அவனுடைய ஊசல் ஆடிக் கொண்டு இருக்க,

 

“எனக்கு நல்ல மனசு இருக்கு நேசன்” என்று நெற்றிப் பொட்டில் சுட்டு அவனை இவ்வுலகை விட்டு அனுப்பி வைத்தான் ஆதி.

 

“மச்சான் நீ ஐஷூவை அவ பிரன்டு வீட்டுல டுரொப் பன்னிட்டு ஹொஸ்பிடலுக்கு போ. நான் இவனை அப்புறபடுத்துற வழியை பார்க்குறேன்” என்றான் விகி.

 

“மச்சி, நம்ம கமிஷனர் இவன் எங்கே?எனக் கேட்டால்” என்று விகி கேட்க,

 

ஆதி சிரிப்புடன், “நாங்க அவனை பிடிக்கும் போது எங்க இரண்டு பேரையும் தாக்கிட்டு தப்பிச்சு போக பார்த்தான். எங்களோட தற்பாதுகாப்பிற்காக நான் இவனை சுட வேண்டியதா போச்சு” என்று கமிஷனரிடம் கூறுவதைப் போல் கூற அவனுடன் சேர்ந்து விகியும் சிரித்தான்.

 

“அண்ணா நான் கிளம்புறேன், அண்ணியை கேட்டதா சொல்லுங்க” என்று விகியிடம் இருந்து விடைப் பெற்று, ஆதியுடன் தன் நண்பியின் வீட்டிற்குச் சென்றாள் ஐஷூ.

 

ஆதி ஹொஸ்பிடலை நோக்கிச் சென்றான். டாக்டர் கூறிய மூன்று மணித்தியாலங்கள் கடந்து இருந்தது.

 

“அம்மா நவி கண் விழிச்சுட்டாளா?” என்று கேட்க,

 

“இன்னும் இல்லை பா, எனக்கும் பயமா இருக்கு” என்றார் ராஜேஸ்வரி கவலையாக.

 

கிருஷி இருந்த அறைக்குள் நுழைந்தவன், அவள் தலை, கை, கால்களில் கட்டுகளுடன் இருப்பதைப் பார்த்து அவன் கண்கள் கலங்கியது. அவள் அருகில் சென்று அமர்ந்தவன்,

 

“நவி மா, பிளீஸ் டா. கண்ணை திற டா, என்னால் உன்னை விட்டு இருக்க முடியாது டி. உன் கிட்ட உன்னைப் பற்றி சொல்ல இருக்குடி. கண்ணை திற டி. நீ கண்விழிச்சா எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்” என்று அவள் ஒரு கையை தன் இருகைகளுக்குள் இருக்க அதை தன் நெஞ்சில் வைத்து, கண்ணீர் வடித்தான்.

 

அவன் கண்ணீர் அவள் கையில் விழ அவள் தன் கண்களை மெல்ல அசைத்து கண்களைத் திறக்க முயன்றாள். அவள் கையும் ஆதியின் கையை இறுகப்பற்றிக் கொள்ள ஆதி அவசரமாக அவள் முகத்தைப் பார்த்தான்.

 

கிருஷி கண்களைத் திறந்து அவனைப் பார்த்து கடினப்பட்டு புன்னகைத்தாள். அவள் நெற்றியில் இதழ்பதித்து,

 

“ரொம்ப வலிக்குதா டி?” என்று கேட்க,

 

அவள் அவனை முறைத்தாள். தன் மறுகையால் ஒட்சிசன் மாஸ்கை கழற்றியவள்,

 

“யேன்டா, நான் அடிபட்டு கட்டு போட்டு இருக்கேன். என்னை பார்த்து கேட்குற கேள்வியா டா இது?” என்றால் மெது குரலில் திக்கித் திணறி.

 

“அடிபட்டு இருந்தாலும் என் கூட சண்டை போடுறதை நிறுத்த மாட்டியா?” என்று புன்னகையுடன் கேட்க,

 

“நான் சண்டை போடாமல் உன் கூட யாரு சண்டை போடுவா?” என்றாள் கிருஷி வலியில் முகத்தைச் சுருக்கி.

 

அதைப் பார்த்த ஆதி பதறி, ” என்ன டி வலிக்குதா? டாக்டரை கூபிட்டுமா?” என்று கேட்டு அவன் வெளியே செல்ல எத்தணிக்க, அவன் கைபிடித்தவள்,

 

“என்னை தனியா விட்டுட்டு போகதடா. எனக்கு பயமா இருக்கு. என் பயத்தை விட என் வலி பெராதா இல்லை ” என்று கண்ணீர் வடித்தாள்.

 

அவன் அருகில் மீண்டும் அமர்ந்தவன்,

 

“நான் உன் கூடவே இருக்கேன். எங்கேயும் போக மாட்டேன்” என்று தன் மொபைலில் இருந்து சித்தப்பாவிற்கு அழைத்து கிருஷி கண்விழித்து விட்டதாகவும், டாக்டரை அழைத்து வருமாறும் கூறி அழைப்பைத் துண்டித்தான்.

 

சிறிது நேரத்தில் டாக்டர் அவளைப் பரிசோதிக்க, தலைவலி இருக்கும் எனவும் மற்றையபடி பிரச்சனை ஏதும் இல்லை எனக்கூறிச் செல்ல மொத்தக் குடும்பமும் உள் நுழைந்தது.

 

அனைவரின் நலம் விசாரிப்புகளின் பின் அவர்களை ஆதி வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவளுடனேயே அன்று முழுவதும் இருந்தான். இரவு நேரம் விகி கிருஷியைப் பார்க்க இருவரிடமும் கூறி ஆதி வீட்டிற்கு குளித்து வரச் சென்றான். விகி அவளுக்கு பாதுகாப்பாக அவள் உடனேயே இருந்தான். பவியும் அவளிற்கு அழைத்து விசாரித்தாள். கிருஷியின் வேண்டுகோளிற்கேற்ப பவி கிருஷி வீட்டிற்கு இதைப் பற்றி அறிவிக்கவில்லை.

 

ஆதி வருகை தந்த பிறகு விகி ஹொஸ்பிடலில் இருந்து சென்றான். அடுத்த நாள் விகி சென்னையை நோக்கி புறப்பட்டான்.

 

“மச்சான் அந்த  MLL சிவபெருமாள்னு தெரிந்து போச்சு, அவரு MLA அதனால் அரெஸ்ட் வோரன்ட் கொடுப்பாங்களா டா? அவன் வெளியில் தப்பிக்க ஏதாவது பன்னமாட்டானா?” என்று விகி கமிஷனரிடம் செல்ல முன் கேட்க,

 

“ஆமா டா, நானும் அதைப் பற்றி எதுவுமே நவியை பார்த்ததற்கு பிறகு யோசிக்கவே இல்லை. இந்த வீடியோ ரெகோட்டை பத்திரமா வச்சுக்க. அவனை பக்கா எவிடன்சோட தான் தூக்கனும். அதற்கு டைம் இருக்கு. நாம் பிளேன் பன்னி தான் டா பன்னனும். நவி சரியானதுக்கு அப்பொறமா அவனை அரெஸ்ட் பன்னலாம். அதுவரைக்கும் அவனை போலோ பன்னு. அவன் கோல்சை ரெகோர்ட் பன்னு” என்றான் ஆதி.

 

“சரி டா மச்சான்” என்றான் விகி.

 

நாட்கள் எவருக்கும் நிற்காமல் நகர ஒருகிழமைக்கு பின் கிருஷி ஓரளவு தேறி இருக்க அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அதுவரை ஆதியே அவளை முழுமையாக பார்த்துக் கொண்டான். அப்போதே மற்றவர்கள் அவன் கிருஷியை எந்த அளவிற்கு காதலிக்கிறான் என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டார்.

 

வீட்டிற்கு வருகைத் தந்து இரண்டு கிழமைகள் கடக்க, கிருஷியின் தலைவலியைத் தவிற அவள் குணம் அடைந்திருந்தாள். அவளிற்கு தலையில் பலமாக அடிபட்டு இருப்பதால் திடீரென்று தலைவலி ஏற்படலாம் அதன் போது அவள் சமனிலையில் இருக்கமாட்டாள் ஆகவே அவளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு டாக்டர் கூறியிருந்தார். மேலும் ஒரிரு மாதங்களில் தலைவலி குறையும் என்று டாக்டர் கூறி இருந்தார்.

 

ஆதி அவளை நன்றாகவே கவனித்தான். அவளுக்கு தலைவலி ஏற்படுவதால் அவளை அவன் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பது இல்லை. ஒரு வேளை அவள் படிகளில் இறங்கும் போது தலைவலி ஏற்பட்டால் படிகளில் விழ வாய்ப்பு உள்ளது என்று. கிருஷியுடன் அனைவருமே அவளறைக்குச் சென்றே பேசினர்.

 

ஒரு நாள் ஆதி கிருஷியின் ரிபோர்ட் எடுக்கச் சென்று இருந்தான். கிருஷி அறையில் அடைந்திருக்க முடியாமல் கீழே செல்ல வர மாடிப்படிகளில் இறங்கும் போது அவளுக்கு தலைவலி ஏற்பட்டது. அவள் ஒரு கையால் தலையைப் பிடித்து மறு கையால் சுவரைப் பிடித்து நிற்க அவள் கை சுவரில் இருந்து விடுபட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 31யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 31

பனி 31   கிருஷியின் கால்களில் ஆதி வாங்கிக் கொடுத்த கொலுசைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.   ‘அப்போ மாமாவிற்கு என்னை விட அவளை தான் பிடிக்குமா? என்னை விட எப்படி அவளை மாமாவிற்கு பிடிச்சு போச்சு? இல்லை இல்லை மாமாவிற்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 3யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 3

பனி 3   கோலேஜ் இலிருந்து வெளியான ஆதி, விக்ரமன் நேராக ஹொஸ்பிடலிற்குச் சென்று, பி.எம் ஐப் பெற்று அவர்களது அலுவலகத்திற்குச் சென்றனர். தனது சீட்டில் வந்து அமர்ந்த ஆதி,   “எனக்கு அந்த கிளாஸ் ரூமுக்கு வெளியே இருக்கிற ரோடுக்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 5யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 5

பனி 5   மெகெனிக் அவ்விடம் வந்தவுடன் இருவரும் அமைதியாகவே இருந்தனர்.   “ஆமா, நீ எவளோ நாளாக லெக்சர் பன்ற?” என்று அவன் கேட்க,   “ஏன், நீ எக்ஸ்பீரியன்ஸ பார்த்து, செலரியை கூட்டி தர போறியா?” என்று அவள்