Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 33

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 33

பனி 33

 

டாக்டர் ஆதியை அழைக்க,

 

“ஏதாவது கிருஷிக்கு?” என்று அவன் தழுதழுத்த குரலில் கேட்க,

 

“இல்லை ஆதி, இது வேறு” என்று கூறினார்.

 

அவர் கூறிய செய்தியில் அதிரந்து நின்றான்.

 

“என்ன டாக்டர் சொல்றிங்க?” என்று ஆதி கேட்க,

 

“ஆமா, ஆதி எனக்கும் நம்ப முடியல்லை. பட் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றார் அவர்.

 

‘அப்போ என் சந்தேகம் சரி தான்’ என்று நேராக ஹொஸ்பிடலில் இருந்த பிள்ளையாரிடம் சென்றான்.

 

“பிள்ளையாரப்பா தயவு பன்னி என் நவியை எனக்கு திருப்பி கொடுத்துடு. அவ எங்க வீட்டிற்கு வந்ததுக்கு அப்பொறமா தான் எங்க  வீடு சந்தோஷமா இருக்கு, நான் நினைக்குறது உண்மையா இருந்தால் நூறுபேருக்கு இலவசமா சாப்பாடு வழங்குவேன்” என்று வேண்டிக் கொண்டு கிருஷி அறையிற்கு வெளியில் நின்றான்.

 

பின் தன் சித்தப்பாவிற்கு அழைத்து விடயத்தைக் கூறி வீட்டில் உள்ளவர்களை அழைத்து வரச் சொன்னான். பலமாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டு இருந்தான். கண்களை மூடி தன்னுடன் அவளுடைய ஒவ்வொரு தருணங்களையும் நினைவுபடுத்தினான். வலியில் புன்னகைக்க, கண்ணீரும் அனுமதி வழிந்தது.

 

சிறிது நேரத்தில் மொத்தக் குடும்பமும் அங்கே இருந்தது. ஆதியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப் பார்த்த நிலா அவன் கண்ணீரைத் துடைக்க அவன் கண்களைத் திறந்தான். தன் முன்னே தன் மொத்தக் குடும்பமும் இருப்பதைப் பார்த்தவன் அழுகையை அடக்க முயன்று தோற்றான்.

 

நிலாவை அணைத்துக் கொண்டு அழுதவன்,

 

” நிலா, உன் அண்ணி என்னை தனியா விட்டுட்டு போயிடுவாளோன்னு பயமா இருக்கு” என்று கூற

 

“அண்ணா, அண்ணிக்கு உங்க மேலே பாசமும் அதிகம். காதலும் அதிகம். அவளோ சீக்கிரமா உங்களை விட்டு போகமாட்டாங்க” என்றாள்.

 

தன் மகனின் அழுகையை பார்க்க முடியாத ராஜேஸ்வரி

 

“கிருஷிக்கு எதுவும் ஆகாது தேவ். தைரியமா இரு. கடவுளும் கை விட மாட்டாரு” என்றார் ஆறுதல் கூறினார்.

 

ஒருவர் மாற்றி ஒருவர் அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால் திவி, திவியின் அத்தைக்கு இருவரும் காதலிக்கின்றனர் என்பதைக் கேட்டு ஒரு புறம் அதிர்ந்தாலும் மறு புறம் இவை தன் குடும்பத்தின் அனைவருக்குமே தெரியும் என்பதில் இன்னும் அதிர்ச்சியடைந்தனர். மகாலிங்கமும் அதே நிலையிலேயே இருந்தார்.

 

அதே நேரம் அவருக்கு அழைப்பு ஒன்று வர, தனியாக சென்று பேசி வந்தார்.

 

“அண்ணா முக்கியமான பிரச்சனை ஒன்று வந்திருக்கு பக்டிரியில், நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று கூறி அங்கிருந்து அவசரமாகச் சென்றார்.

 

“தேவ் நீ கிருஷியை காதலிக்கிறியா?” என்று திவியின் தாய் கேட்க,.

 

“ஆமா, ரொம்ப நாளா” என்று அமைதியானான்.

 

பின் நிலா இருவரின் காதல் கதை முழுவதையும் கூறி முடித்தாள். இருவரின் முகத்திலும் அப்பாட்டமாக அதிர்ச்சி தெரிந்தது.

 

“தேவ், எப்படி நீ திவி உனக்காக காத்துட்டு இருக்கும் போது அவளை காதலிப்பாய்?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த,

 

‘இந்தக் கேள்வி இந்நிலமையில் முக்கியமா’ என்று அனைவரும் அவரை முறைத்தனர். ஆனால் அவரோ அதைக் கண்டுக் கொள்ளாமல் ஆதியின் பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தார். ஆதி எந்த சலனமும் இன்றி இத்தோடு இதை முடித்து, தன்னவள் முழுமையாக மீண்டும் அனைவரின் அனுமதியுடன் நுழைய வேண்டும் என்று பதில் கூற ஆரம்பித்தான்.

 

“அத்தை, யாரு எனக்கு திவியை கல்யாணம் பன்னி வைக்கனும் முடிவு பன்னிங்க?” என்று ஆதி கேட்க,

 

“வீட்டில் எல்லோரும்” என்றார்.

 

“யாரந்த எல்லோரும்?” என்று கேட்க,

 

“நான், மகாதம்பி….” என்று கூறி நிறுத்தினார்.

 

“வேறு…” என்று கூற அவரிடம் பதில் இல்லை.

 

“அத்தை எனக்கு உங்க பொண்ணு திவ்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்காக என்னால் அவளை கல்யாணம் பன்ன முடியாது. யேன்னா அவ மேலே எனக்கு காதல் வரவே இல்லை. எனக்கு கிருஷியை பார்த்த உடனே காதல் வர இல்லை அத்தை. அவ கூட பழகபழக தான் அவ என் மனசுல ஆழமா பதிந்தாள். காதல் ஒரு அழகான உணர்வு அத்தை அது யாரு மேலே? எப்போ? எப்படி? வரும் யாருக்குமே தெரியாது” என்றான்.

 

“அது மட்டும் இல்லை, திவி மனசுல என் மேலே ஆசையை வளர்த்தது நீங்க தான். நான் இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணத்தில் பழக இல்லைன்னு அவளுக்குத் தெரியும். இப்போ நான் நவிக்கு மட்டும் சொந்தமானவன். இந்த ஜென்மம் மட்டும் இல்லை, இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவ எனக்கு தான். நான் அவளுக்கு தான். இதை யாராலும் மாற்ற முடியாது. திவி மனசுல ஆசையை வளர்த்த நீங்களே நான் இன்னொருத்திக்கு சொந்தமானவன்னு புரிய வைங்க. இன்னொரு விஷயம் அத்தை, நவியை திட்றது, பழிபோடுகிறதை இதோடு விட்ருங்க” என்று கூறி முடித்தான்.

 

ஆதியை நரஸ், டாக்டர் அழைப்பதாகக் கூற அவன் உடனியாக டாக்டரைப் பார்க்கச் சென்றான்.

 

“ஆதி நீங்க சொன்னது போலவே செக் பன்னேன். ரிசல்ஸ் நிச்சயமா நெகடிவ் தான் பட், மற்றைய விஷயத்திற்கு எனக்கு டைம் வேணும்” என்று டாக்டர் கூற அவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

 

“ஒகே டாக்டர், டேக் யூர் ஓன் டைம், இப்போ நவி எப்படி இருக்கா?” என்றான்.

 

“சி இஸ் அவுட் ஒப் டேன்ஜர். அவங்க கண்விழிக்க எப்படியும் ஒரு திரீ அவர்ஸ் ஆகும். இப்போ தான் அப்பரேஷன் முடிந்து இருக்கு” என்றார்.

 

“தெங்கியூ டாக்டர். தெங்கியூ சொ மச்” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

 

“அம்மா, நவி கண்விழிக்க டைம் ஆகும். நீங்க எல்லோரும் வீட்டிற்கு கிளம்புங்க” என்றான்.

 

“இல்லை தேவ், நாங்க அவ கண் விழிச்சதுக்கு அப்பொறமாவே போறோம்” என்றார் ராஜேஸ்வரி.

 

“சித்தப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான் ஆதி.

 

அவனுடன் தனியாகச் சென்ற சங்கரன்,

 

“என்ன விஷயம் ஆதி?” என்று கேட்க,

 

“சித்தப்பா, பனி அத்தைக்கு குழந்தை இருந்ததா?” என்று கேட்க,

 

“இல்லை ஆதி” என்றார் அவர். அவன் முகம் சுருங்கியதைப் பார்த்தவர்

 

“என்னாச்சு தேவ்?” என்று கேட்க,

 

“நான் இதைப்பற்றி அப்பொறமா பேசுறேன்” என்றான்.

 

அவர் பழையதை நினைத்து கண்கள் கலங்க,

 

“சொரி சித்தப்பா பழையதை ஞாபகப்படுத்திட்டேன்” என்றான் கவலையாக.

 

“நாம எல்லோருமே பனிக்காகவும், அண்ணனுக்காவும் மட்டும் தான் இன்னும் இந்த பகையை வச்சிட்டு இருக்கோம் டா. இது உனக்கே தெரியும். அன்றைக்கு அந்த சிவபெருமாள் பனியையும், அண்ணனையும் கொல்லாமல் இருந்தால், இப்படி இரண்டு குடும்பமும் பகை வளர்ந்து இருக்காது. முழுமையா இல்லை என்றாலும் இரு குடும்பமும் ஓரளவு சமாதானம் ஆகாயிருப்போம். இந்த அளவிற்கு ஒருத்தரை ஒருத்தர் கொல்லனும் வெறி இருந்து இருக்காது” என்று கண்ணீர் வடித்தார்.

 

“அதனால் தானே சித்தப்பா அவசரபட்டு கத்தியை தூக்க வேணாம்னு நானும், சூர்யா மாமவும் சொன்னோம்” என்றான்.

 

“சரி பா நீ கிளம்பு, நாங்க கிருஷியை பார்த்துக்குறோம்” என்றார்.

 

“அவளோட உயிருக்கு ஆபத்து இருக்கு சித்தப்பா. நான் வரும் வரைக்கும் அவளை பத்திரமா பார்த்துக்கொங்க. முக்கியமான வேலை ஒன்னு பாக்கி இருக்கு” என்று தன் நிமிர்நடையில் அங்கு இருந்து சென்றான்.

 

பின் அங்கிருந்து நேசனை அடைத்து வைத்திருந்த பங்களாவை நோக்கிச் சென்றான். அங்கே விகி ஆதிக்காக காத்துக் கொண்டு இருந்தான்.

 

“வாடா, கிருஷிக்கு இப்போ எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னாரு?” என்று கேட்க,

 

“இப்போ எந்த பிரச்சனையும் இல்லை டா. அவ இன்னும் திரீ அவர்ஸ்ல கண் விழிச்சிடுவா. அதற்குள்ள நான் அந்த நேசனை முடிக்கனும்” என்று நேசன் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

 

அவன் இன்னும் மயக்கத்தில் இருக்க, ஆதி அருகில் இருந்த தண்ணீரை அவன் முகத்தில் முழுவதுமாக ஊற்றினான். நேசன் திடிக்கிட்டு விழித்தான்.

 

“நாங்க யாருன்னு தெரியுமா? இல்லை மறந்துட்டியா நேசன்?” என்று விகி நக்கலாக கேட்க,

 

“தெரியும். எதுக்காக இங்க என்ன அழைச்சிட்டு வந்திங்க?” என்று நேசன் கேட்க,

 

“நீ எத்தனை நல்ல காரியம் பன்னி இருக்க? அதற்கான பலனை அனுபவிக்கனுமே ராசா” என்று ஆதி அவனை கதிரையில் அமர வைத்து அவனை கதிரையோடு கட்டினான்.

 

“இப்போ நீயும், உன் மாமாவும் பன்ன தில்லுமுல்லு வேலை எல்லாம் சொல்லுவியாம், நாங்க கேட்டுப்போமாம்” என்று விகி கூற

 

“என்னால முடியாது” என்றான் நேசன்.

 

“மச்சான் நீயே டிரீட்மன்டை ஆரம்பி” என்றான் விகி.

 

“சரி மச்சான்” என்று அலவாங்கை எடுத்து வந்தவன் அதன் கூர் முனையால் அவனுடைய காலின் பெருவிரலில் ஓங்கிக் குத்தினான். அதில் ‘ஆஆஆஆஆ’ என்ற நேசனின் அலறல் அக்காடு முழுவதும் எதிரொலித்தது.

 

பெருவிரலில் இருந்து இரத்தம் பீரிட்டு வழிய,

 

“இதே போல தானே டா என் நவிக்கும் வலிச்சு இருக்கும். அவளால் ஒரு சின்ன காயத்தை கூட தாங்க முடியாது டா. அவளை போய் கட்டையால் அடிச்சு விழ வச்சிருக்கியேடா” என்று கத்திக் கொண்டே அவன் நெஞ்சிலே ஆதி மிதிக்க கதிரையோடு தள்ளி விழுந்தான் நேசன்.

 

விகி அவனைத் தடுக்கவே இல்லை. ஆதியினுடைய காதல் அவனுடைய வலி என்பவற்றை அவன் நேரடியாய் பார்த்தவன் ஆயிற்றே.

 

“எதுக்குடா என் நவியை கட்டையால் அடிச்ச?” என்று ஆதி கோபமாக கேட்க,

 

அவன் பயத்தில் கூறவில்லை. அமைதியாகவே இருந்தான்.

 

“சொல்லுடா” என்று ஆதி கோபமுற,

 

அவன் விழித்துப் பார்க்க ஆதி கோபத்தில் அலவாங்கை ஓங்கினான்,

 

“இல்லை நான் சொல்கிறேன்” என்று நடந்த அனைத்தையும் கூற நெருப்பாக அவன் முன்னே நின்று இருந்தான் ஆதி.

 

“என் நவி கிட்ட தப்பாவா நீ நடக்க பார்த்த?” என்று அவனை புரட்டி எடுத்து அவன் இரு கைகளையுமே முறித்தான்.

 

“டேய் விடுடா இவன் நம்ம கையால் இல்லை, இன்னொருத்தவங்க கையால் சாகனும்” என்று விகி கூற

 

“யாரு டா ?” என்று ஆதி கேட்க,

 

“இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திருவாங்க, அப்போ உனக்கு புரியும்” என்றான் விகி.

 

“இப்போ உன் மாமாவும், நீயும் செய்த தப்பெல்லாம் சொல்ல போறியா இல்லையா?” என்று ஆதி திரும்ப மிரட்டிக் கேட்க,

 

வலி தாங்க முடியாமல் அனைத்தையும் கூறுவதாக ஒப்புக் கொள்ள இருவரும் செய்த நிலஅபகரிப்பு, கொலை, போதைப் பொருள் வியாபாரம் அனைத்தையும் ஒன்று விடாமல் ஒத்துக் கொண்டான். விகி, ஆதி இருவருமே ஆதாரமாக இதை வீடியோ எடுத்தனர்.

 

“ஒரு நிமிஷம் அப்போ என்ன சொன்ன? கிருஷி சிவபெருமாள் பொண்ணு இல்லையா? அப்போ யாரோட பொண்ணு ?” என்று கேட்க,

 

கிருஷியைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அவன் கூற இருவருமே அதிரந்தனர்.

 

அப்போது “அண்ணா” என்ற குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்க்க ஒரு பெண் நின்று இருந்தாள்.

 

இருவரும் “ஐஷூ” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 26யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 26

பனி 26   கிருஷி மெயில் அனுப்பி, தனக்குப் பதிலாக ஒரு மாதத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு வேண்டி இருந்தாள். அதற்காக அவர்களும் வேறு ஒருவரை நியமித்து இருந்தனர். திவி கோபத்தில் அவ் இடத்தை விட்டு வெளியேற நிலா அவள் பின்னாலேயே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7

பனி 7   டாக்டர் கிருஷி விழித்து விட்டதாக கூறி அவர்களது சண்டைக்கு முற்றிப் புள்ளி வைத்து, அடுத்த டொம் என்ட் ஜெரி சண்டையை ஆரம்பிக்க உதவி செய்தார். மூவரும் கிருஷியைப் பார்க்க உள்ளே சென்றனர்.  கிருஷி மூவரையும் பார்த்தாள்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22

பனி 22   “பெரியம்மா உள்ள வரலாமா? பிசியா இருக்கிங்களா?” என்று நிலா அனுமதி கேட்டு ராஜேஸ்வரியின் அறையின் கதவு அருகில் நின்று இருக்க,   “வா நிலா, பைல்சை பார்த்தேன். நீ உள்ள வா” என்றார் ராஜேஸ்வரி.   உள்ளே