Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 29

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 29

பனி 29

 

ஆதியைக் கிருஷி பார்க்க அவன் தன் வசீகரப் புன்னகையை சிந்தினான்.

 

அவள் “எதுக்கு சிரிக்கிற? எதுக்கு தளிர் நடிச்சா?” என்று கேட்க,

 

“அதை நீ அவ கிட்டையே கேளு” என்று தன் மொபைலில் இருந்து அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி ஸ்பீகரில் இட்டான்.

 

தளிர் அழைப்பை ஏற்று “ஹாய் மாமா, என்ன திடீர்னு அழைச்சு இருக்கிங்க?” என்று கேட்க,

 

“உன் அக்கா, கரெக்ட் பன்ன ஏதாவது குடேன்” என்று ஆதி கூற

 

“அவ ஒரு ஆள்னு அவளை கரெக்ட் பன்ன ஐடியா கேட்குறிங்க? அவ எல்லாம் பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுத்தாலே நம்ம வழிக்கு வர ஆளு” என்று தளிர் கூற

 

ஆதி கடினப்பட்டு சிரிப்பை அடக்கினான். அதில் கோபம் அடைந்த கிருஷி

 

“யேன்டி, நான் பஞ்சுமிட்டாய்க்கு மயங்குறவளாடி?” என்று கேட்க,

 

“என்ன மாமா அக்கா வொய்ஸ்ல மிமிகிரி பன்றிங்க? எப்போ இருந்து மிமிகிரி பன்ன கத்துகிட்டிங்க?” என்று கேட்டாள் தளிர்.

 

ஆதி சிரித்தான்.

 

“மாமா என்னாச்சு?” என்று கேட்க,

 

“நான் உன் கூட பேச இல்லை மா, உன் அக்கா தான் பேசினா” என்றான் சிரித்து.

 

“என்ன?” என்று ‘அப்போ என் நான் நடிப்பு திறமையை காட்டனுமே’

 

“என் சேர் நீங்க இப்படி பன்றிங்க? என்னை வச்சு எதுக்கு என் அக்காவை கஷ்டபடுத்திறிங்க? அதற்கு என்னை ஒரேடியாக கொன்னுடலாமே” என்று பயந்தவள் போல் பேச,

 

“ஏய் நிறுத்துடி, இத்தனை நேரமா மாமா மாமான்னு பேசிட்டு இப்போ பயந்தவள் போல பேசுற? எதுக்கு டி என்னை ஏமாத்தின?” என்று கிருஷி கவலையாய் கேட்க,

 

“மாமாவிற்காக தான் அக்கா. பவி அக்கா உங்க இரண்டு பேரை பற்றியும் சொன்னாங்க. மாமா உங்களை ரொம்ப காதலிக்கிறாங்க. உங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்க தான் நடிச்சேன். என்னை, வச்சு மிரட்டினா நீ நிச்சயமா கல்யாணத்துக்கு ஒத்துப்பன்னு தெரியும், அதான்” என்று கூற

 

கிருஷி சிரித்தாள்.

 

“என் தங்கை சின்னவன்னு நினைச்சுட்டு இருந்தேன், நீயும் பெரியவளாயிட்டன்னு புரிய வச்சிட்டியே” என்றாள்.

 

“அக்கா என் மேலே கோபமா இருக்கியா?” என்று கேட்க,

 

“கொஞ்சமா இருக்கு. எல்லோருமா சேர்ந்து என்னை ஏமாத்திட்டிங்களேன்னு” என்றாள் கிருஷி.

 

“சொரிகா, மாமா உன்னை நல்லா பாத்துப்பாரு. அவரை விட பொருத்தமான, நல்லா பார்த்துக்கக் கூடிய மாப்பிள்ளை உனக்கு கிடைக்கமாட்டாரு” என்று தளிர் கூற

 

கிருஷி ஆதியைப் பார்க்க ஆதி புன்னகைத்தான்.

 

“ரெகம்மன்டேஷனா?, அதை நான் அப்பொறமா சொல்றேன்” என்று கேட்க,

 

“ஈஈஈ அதை விடு, என் நடிப்பு எப்படி இருந்திச்சு?” என்று தளிர் கேட்க,

 

“நான் பயந்துட்டேன் டி, ரியலா இருந்தது. ஆனால் நான் முகத்துல உண்மையான ஒரு தயக்கம், பயத்தை பார்த்தேன். பொய் சொல்லாமல் உண்மையை சொல்லு” என்று கூறு

 

“அது ஒன்னும் இல்லை கா, இன்னொரு நாள் சொல்றேன், நீ மாமாவை போய் பாரு. அந்த ஆளு இப்போ டென்ஷனில் இருக்கும்” என்று தளிர் கூற

 

“என்ன தளிர் உன் மாமாவை இப்போ அந்த ஆளுன்னு சொல்ற?” என்று ஆதி பொய்க்கோபத்தில் கேட்க,

 

“நீங்க இன்னும் அந்த இடத்தை விட்டு போகவே இல்லையா?” என்று கேட்டாள் தளிர்.

 

“இல்லையே” என்றான்.

 

“என் அம்மா கூபிடுறாங்க, நான் அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள் தளிர்.

 

“என்ன? மிஸஸ் ஆதி டவுட் எல்லாம் கிளியராயிருச்சா?” என்று ஆதி கேட்க,

 

யோசிப்பதைப் போல் பாவனை செய்தவள்,

 

“கொஞ்மா” என்று கூற

 

“யேன்டி, இவளோ நேரமா நான், பவி, தளிர் கஷ்டபட்டு புரிய வச்சோம், இப்போ கொஞ்சமா சொல்லுற?” என்று ஆதி கேட்க,

 

கிருஷி சிரிக்க,

 

“பொய்யா சொல்லுற?” என்று அவளை பிடிக்க செல்ல அவனிடம் இருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தாள்.

 

ஒரு கட்டத்தில் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் அவள் கைகளை மடக்கி அவள் முதுகிற்கு பின் கொண்டு சென்றவன், அவள் தலையில் குட்ட ஆரம்பித்தான்.

 

“லக்ஷன் வலிக்குது டா” என்று அவள் கூற

 

“பரவால்லை, அப்போ தான் திரும்ப பொய் சொல்ல மாட்ட” என்று குட்டினான்.

 

“ஐ லவ் யூ” என்று அவள் கூற

 

அவன் காதுகளுக்கு கேட்டது தவறோ என்று குட்டுவதை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

 

கிருஷி புன்னகைத்து,

 

“ஐ லவ் யூ லக்ஷன்” என்று கண்டித்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

அவள் கொடுத்த அதிர்ச்சியில் அவன் சிலையாய் நின்றான்.

 

அவனைப் பார்த்த கிருஷி சிரித்தாள்.

 

“எதுக்கு டா பேயறைந்த போல இருக்க?” என்று அவள் சிரித்து கேட்க,

 

தெளிந்து அவன் கண்கள் கலங்கின.

 

“இந்த வார்த்தையை உன் வாயால் கேட்கமாட்டோமான்னு எத்தனையோ நாள் ஏங்கி இருக்கேன். நீ திடீர்னு சொல்லும் போது நம்ப முடியல்லை” என்றான்.

 

“என்னை விட்டு போயிடாதடா” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

 

“ஐ லவ் யூ நவி மா” என்று கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

 

வெகு நேரம் அதே நிலையில் இருந்தார்கள்.

 

“நான் உனக்காக ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன் டி” என்று அவள் கைபிடித்து அழைத்துச் சென்றான்.

 

“என்ன?” என்று அவள் கேட்க,

 

“ஒரு நிமிஷம்” என்று தன் கபோர்டை திறந்து நகைபெட்டியை எடுத்தான். அதில் கொலுசை வெளியே எடுத்தான்.

 

“இது என் மனைவிக்காக வாங்கி வச்சது, நல்லா இருக்கா?” என்று கேட்க,

 

அதைக் கையில் எடுத்துப் பார்த்தவள்,

 

“அழகா இருக்கு டா” என்றாள்.

 

“நான் உனக்கு போட்டு விடட்டுமா?” என்று கேட்க,

 

அவள் சரியென்று தலை ஆட்டினாள். அவளை கட்டிலில் அமர வைத்து ஆதி தரையில் அமர்ந்து அவள் காலை தன் தொடை மேல் வைத்து கொலுசை அணிவித்தான். இவ்வாறே மற்றைய காலிற்கும் அணிவித்து இதழ்பதிக்க, கிருஷி அவசரமாக கால்களை எடுத்தாள்..

 

“என்ன பன்ற?” என்று அவள் தடுமாறி கேட்க,

 

“நான் என்ன பன்னேன்?” என்று அவன் குறும்புடன் கேட்க,

 

“அது, அது, ஒன்னும் இல்லை. எனக்கு தூக்கம் வருது, குட்நைட்” என்று அவள் இடத்தில் சென்றுபடுத்துக் கொண்டாள்.

 

ஆதி புன்னகைத்து அவளை அணைத்துக் கொண்டு உறங்க,

 

“லக்ஷன் எனக்கு ஒரு டவுட்?” என்றாள் கிருஷி.

 

“என் பொன்டாட்டி தூக்கம் வருதுன்னு சொன்னாலே” என்று கூற

 

“கேளேன்” என்றாள்.

 

“சொல்லுங்க மெடம்” என்று அவன் கூற

 

“நான் தூங்கும் போது என் இடத்தை விட்டு நகரமாட்டேன். பட் காலையில் உன் பக்கத்துல எப்படி வருகிறேன்னு தெரியல்லை. புதுசா உருள்கிற பழக்கம் கூட வருமா?” என்று கேட்க,

 

“இல்லை பொன்டாட்டி, நான் தூக்கி என் பக்கத்துல வச்சிப்பேன், அதனால் என் பக்கத்துல இருந்த” என்றான் ஆதி.

 

அவனை முறைத்தவள்,

 

“அடப்பாவி, உன்னை போய் நல்லவன், வல்வன்ன்னு நினைத்தேனே” என்று அடிக்க, அதை அவன் புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.

 

“சொரி லக்ஷன், உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்” என்று கவலையாய் கூற

 

“இல்லை நவி மா, இது விதி. நீ ஒன்னு யோசிச்சு பாரு. நான் என் காதலை சொல்லி ஒரு நாள் கூட முடிய முன்னாடி அந்த காதல் அந்தரத்துல மிதந்தது. இப்போ நம்ம கல்யாணம் முடிந்து ஒரு கிழமைக்கு முன்னாடியே அந்தரத்தில் மிதந்த அந்த காதல் கைகூடி இருக்கு டி” என்றான்.

 

பின் சிறிது நேரம் இருவருமே பேசி உறங்கினார்கள்.

 

அடுத்த நாள் காலை இருவருக்கும் அழகாக விடிந்தது. கிருஷி காலையில் எழுந்து குளித்து சுடி ஒன்றை அணிந்து சாமியறைக்குள் நுழைந்து விளக்கு ஏற்றினாள். பின் கோமதிக்குச் சென்று உதவி செய்து ஆதிக்கு காபியை எடுத்துக் கொண்டு மாடியேறினாள். கிருஷியின் இம்மாற்றத்தை அனைவருமே பார்த்தனர். திவியன் தாய், திவி, மகலிங்கம் அவள் விளக்கு ஏற்றியதற்கு எதுவும் கூறவில்லை.

 

ஏதாவது கூறும் நேரத்திற்கு சரியாக அங்கு ஆதி வந்துவிடுவான். அவனிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள அதிகாலையிலேயே அவர்கள் விரும்பவில்லை.

 

“அண்ணி, நான் இன்றைக்கு பக்டரிக்கு போகிறேன். அண்ணா வீட்டில் இருப்பார்” என்று கூறி தனது அறைக்கு பக்டரிக்குச் செல்ல தயாராகி வந்தார்.

 

“அண்ணி, நானும் திவியும், மகா போகிற வழியிலே இருக்கிற கோயிலுக்கு போயிட்டு வரோம்” என்றனர்.

 

பின் மூவரும் வெளியேற ஆதி, கிருஷியின் கைபிடித்து அழைத்து வந்தான். அனைவருமே அதை அதிசயமாகவே பார்த்தனர். இத்தனை நாட்களில் இவர்கள் ஒன்றாக இவ்வாறு வந்ததே இல்லை.

 

“என்ன எல்லோரும் அப்படி பார்க்குறிங்க?” என்று ஆதி கேட்க,

 

“இல்லை பா, இன்றைக்கு வெளியில் போகாத, வீட்டுல ரெஸ்ட் எடு” என்று ராஜேஸ்வரி கூற

 

“சரி மா, மகா சித்தப்பா, திவி, அத்தை எங்கே?” என்று ஆதி கேட்க,

 

வெளியே சென்று இருப்பதாகக் கூறினார்கள்.

 

“நான் உங்க எல்லோர் கிட்டவும், ஒரு உண்மையை சொல்ல நினைத்தேன். இப்பபோ அவங்க இல்லையே” என்றான்.

 

“நாங்க இருக்கோம் தேவ், நீ சொல்லு” என்றார் சங்கரன்.

 

“அது நான் நவியை காதலிச்சு தான் கல்யாணம் பன்னேன். பட் அவளுக்கு இது கட்டாய திருமணம் தான்” என்று அனைவரையும் பார்க்க

 

அதிர்ச்சியைக் காட்ட வேண்டிய பிரதானமான முகங்கள் புன்னகையுடனேயே அவனை ஏறிட்டன.

 

“அம்மா, நிலா, சித்தப்பா எதுக்கு சிரிக்கிறிங்க?” என்று கேட்க,

 

“இதை நாங்க எதிர்பார்த்தோம் அண்ணா” என்றாள் நிலா.

 

“அம்மா, நீங்க” என்று கூற

 

“என் பிள்ளையை பற்றி எனக்கு தெரியாதா? உன்னையும் அவளையும், பார்த்து இருக்கேன் எல்லா இடங்களிலும், உனக்காக அவ அழுது இருக்கா, உனக்கு அடிபட்ட போது அவ சாப்பிடவே இல்லை. ஆனால் அவ பாசமா இருப்பதை வெளிக்காட்ட இல்லை” என்றார் ராஜேஸ்வரி. (ஒரு ஜோடிக் கண்கள் இவருடையது)

 

“உண்மையை சொல்லனும்னா, நான் கிருஷியை யாருன்னு தெரியாமல் காதலிச்சேன். சிவபெருமாளிடம் இவளை பொண்ணு கேட்டேன்” என்று கூற அனைவருமே தற்போது அதிர்ந்தனர்.

 

பின் தான் சென்னையில் உள்ள கோலேஜில் அவளை சந்தித்தது முதல் திருமணம் வரை நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான். கிருஷி அமைதியாய் இருந்தாள். மற்றவர்கள் ஆதியின் கோபத்தில் இருந்தனர்.

 

“தேவ், ஒரு சின்ன பொண்ணை வச்சி மிரட்டி கல்யாணம் பன்னி இருக்கியே?” என்று ராஜேஸ்வரி கோபமாக திட்ட

 

“அத்தை தளிரை வச்சி அவன் என்னை மிரட்ட இல்லை. அவளும் இவங்க கூட சேர்ந்து கூட்டுக் களவானித்தனம் பன்னி இருக்காங்க, நேற்று தான் எனக்கு தெரியும்” என்றாள் கிருஷி.

 

கிருஷி தளிர் நடித்ததைப் பற்றி அனைவரிடமும் விளக்கினாள். மற்றவர்கள் இதைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.

 

பின்னர் ஆதியே

 

“இதை உங்க எல்லோர்கிட்டவும் மறைத்ததற்கு மன்னிச்சுருங்க” என்றான்.

 

பின் அனைவரும் சகஜமாகப் பேச, அம்பிகாவிற்கும் கிருஷியைப் பிடித்துப் போனது.

 

ஆதி அவளிடம்,

 

“நவி வா, முக்கியமான ஓர் இடத்தை பார்க்கனும்” என்று அவளை மூடி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

 

அவள் உள்ளே நுழைய கூற முடியா ஓர் உணர்வு அவளுள் எழுந்தது. சுற்றிப் பார்த்து உடனடியாக அவ்வறையின் ஜன்னலை திறந்தாள். அப்போதே அவள் சுவரில் தொங்கிய புகைப்படத்தைப் பார்த்து சிலையானாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22

பனி 22   “பெரியம்மா உள்ள வரலாமா? பிசியா இருக்கிங்களா?” என்று நிலா அனுமதி கேட்டு ராஜேஸ்வரியின் அறையின் கதவு அருகில் நின்று இருக்க,   “வா நிலா, பைல்சை பார்த்தேன். நீ உள்ள வா” என்றார் ராஜேஸ்வரி.   உள்ளே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11

பனி 11   “நவி” என்று ஆதி கத்தினான். கீழே விழுந்த கிருஷி எழுந்து நின்ற ஐந்து நிமிடங்களில் ஆதி அங்கு பைகில் வந்து இறங்கியவன் பைக்கை ஸ்டேன்ட் வைத்து நிற்பாட்டாமல் கீழே கிடத்தி விட்டு அவள் அருகில் ஓடி வந்தான்.

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23

பனி 23   “மச்சான் தங்கச்சை சமாளித்தாலும் உன் குடும்பத்தை சமாளிக்க முடியுமா?” என்று விகி கேட்க,   “கேள்வியை மாற்றி கேக்குற டா” என்றான் ஆதி.   “புரியிர மாதிரி சொல்லு?” என்று கூற   “என் குடும்பத்தை சமாளிப்பேன்,