Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 27

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 27

பனி 27

 

அன்று மாலையில் அமைதியாக அனைவரும் தத்தமது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவருமே ஆதி, கிருஷியைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தனர். ஆதி களைப்பின் காரணமாக உறங்கி விட கிருஷி இன்று கோலேஜில் பத்து நாட்கள் ஸ்டடி லீவ் வழங்கி இருப்பதால் சற்று நிம்மதியாக இருந்தாள்.

 

நிலாவைப் பார்க்க அன்று மாலை அவளது நண்பி ஒருவள் வந்திருந்தாள்.

 

“ஹாய் நிலா” என்று உள்ளே வர

 

“வாடி எப்போ ஊருக்கு வந்தாய்?” என்று நிலா கேட்க,

 

“நேற்று நைட் அங்கிருந்து கிளம்பினேன். இன்றைக்கு காலையில் வந்தேன். அதான் இப்போவே உன்னை பார்க்க வந்தேன்” என்றாள் அவள்.

 

“பிசிக்ஸ் நோட்ஸ் எடுத்து வந்தியா?” என்று நிலா கேட்க,

 

“ஆமா, பட் எங்க மேம் இப்போ இரண்டு வாரமா கோலேஜூக்கு வரவே இல்லை. வேறு ஒருத்தவங்க ரிலீப் எடுத்தாங்க” என்று கூற

 

“ஐயோ, பரவால்லை விடு. எனக்கு சில டவுட்ஸ் இருக்கு. அதை கிளியர் பன்னு” என்றாள்.

 

“ஓகே” என்றாள் அவள். சில கேள்விகளை கூற அதை விளங்கப்படுத்தும் நேரம் கிருஷி ஆதிக்கு காபி எடுத்துச் செல்ல படிகளில் இருந்து இறங்க, நிலாவின் நண்பி படியில் இறங்குபவரை பார்த்து குனிந்தவள் மீண்டும் கிருஷியைப் பார்த்தாள்.

 

‘இவங்க கிருஷி மேமா இல்லை எனக்கு அப்படி இருக்கா?’ என்று மீணடும் கண்களை கசக்கிப் பார்க்க உண்மையானவள் என்றே தெரிந்தது.

 

“மேம்” என்று கூச்சலிட்டவாறே கிருஷியை அணைத்துக் கொள்ள கிருஷியும் அவளை அணைத்துக் கொண்டாள்.

 

“தியா நீ இங்கே எப்படி?” என்று கிருஷி கேட்க,

 

“அதை நான் கேட்கனும், நீங்க நிலா வீட்டுல எப்படி மேம்?” என்று கூற

 

அவளை செல்லமாக முறைக்க,

 

“சொரி….அக்கா” என்று தியா கூற கிருஷி புன்னகைத்தாள்.

 

இவள் இட்ட கூச்சலில் உள் இருந்தவர்களும் வெளியே வந்தனர்.

 

“நிலா, கையில் வெண்ணை வச்சிகிட்டு நெய்க்கு அலையுற டி” என்று தியா கூற

 

“என்ன சொல்ற?” என்று நிலா கேட்டாள்.

 

“இவங்க தான் என் பிசிக்ஸ் புரொப்” என்றாள்.

 

அவள் புரொப்பா என்று அதிர்ச்சியாய்ப் பார்க்க,

 

“தியா, நிலா உன் பிரன்டா?” என்று கிருஷி கேட்க,

 

“ஆமா மேம்… அக்கா” என்றாள் இளித்துக் கொண்டே.

 

“அக்கா நீங்க எப்படி இங்கே? உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா?” என்று அவள் தாலிக் கொடியையும், நெற்றியில் குங்குமத்தையும் பார்த்து கேட்க,

 

“ஆமா தியா. அவ என்னை தான் கல்யாணம் பன்னி இருக்கா” என்று அங்கு வந்தான் ஆதி.

 

“சேர் நீங்க எப்படி இந்த வீட்டுல? அக்காவை எப்போ கல்யாணம் பன்னிங்க? யேன் சேர் எங்கே யாரையுமே அழைக்க இல்லை?” என்று அவள் கேட்க

 

கிருஷி ஆதியைப் பார்க்க, ஆதி எந்த சலனமும் இல்லாமல்

 

“நான் நிலாவோட அண்ணன். ஐந்து நாளாகுது மா கல்யாணம் முடிந்து. கல்யாணம் பன்ன வேண்டிய கட்டாய சூழ்நிலை மா அதான்” என்றான்.

 

“நீங்க என்ன செய்தாலும் சரி தான் சேர். ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு. எங்க அக்காவிற்கு உங்களை விட நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாங்க ” என்று கூறி

புன்னகைக்க,

 

ஆதி கிருஷியைப் பார்க்க,

 

“ஏதாவது டவுட் இருக்கா தியா?” என்று பேச்சை மாற்றினாள் கிருஷி. இதைப் பார்த்த, ஆதி சிரித்தான்.

 

“ஆமா அக்கா நிறைய இருக்கு” என்றாள்.

 

“நவி, எனக்கு காபி கொடுத்த பிறகு அவங்களை பாரு, எனக்கு ரொம்ப வேலை இருக்கு” என்று ஆதி கூற

 

“சரி” என்று ஆதிக்காக காபியை தயாரித்து கொடுத்தாள்.

 

பின் கிருஷி நிலா, தியா இருவருக்கும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறி பாடங்களையும் அவர்கள் இருவருக்கும் புரியும் வகையில் விளக்கினாள்.

 

இருவருக்கும் பொறுமையாக விளக்கி ஏழுயணியாகியதால் நாளை மிகுதியை சொல்லித் தருவதாகக் கூறி தியாவை அனுப்பி வைத்தாள்.

 

நிலா “தேங்ஸ்” என்று கூற ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாள் கிருஷி.

 

அன்றைய தினம் இவ்வாறு அனைவருக்கும் நிறைவடைய பல மாற்றங்களிற்காக அடுத்த நாள் விடிந்தது.

 

அடுத்த நாள் கிருஷி ஆதிக்கு முன்னே விழிக்க, அவன் கையணைப்பில் தான் இருப்பதைப் பார்த்தவள் குழம்பினாள்.

 

‘நான் அசையாமல் தூங்குவேன். ஆனால் லக்ஷனோட கைவளைவுக்கு உள்ள எப்படி? இவன் என்னை இழுத்து அணைச்சிருக்க மாட்டான். அந்த அளவுக்கு பன்றவன் இல்லை அப்போ எப்படி?’ என்று யோசித்தவள்

 

‘இன்றைக் கண்டிப்பா எப்படியாவது கண்டுபிடிக்கனும்’ என்று நினைத்துக் கொண்டாள். குளித்து வந்தவள் நெற்றியில் குங்குமம் வைக்க குங்குமச்சிமிழை எடுக்க அதே நேரம் அவள் அருகில் பல்லி ஒன்று விழ அவள் கையிலிருந்து குங்குமச்சிமிழ் தவறி கீழே விழுந்து குங்குமம் சிதறியது.

 

அவளோ அதிர்ந்து ஆதியைப் பார்க்க அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தான். சிதறிய குங்குமத்தையே அமர்ந்து வெறித்துப் பார்க்க, ஆதி எழுந்து அவள் தோள் தொட்டான். அதில் நினைவு கலைந்தவள் அவனை அணைத்துக் கொண்டு நெஞ்சில் முகம் புதைந்து அழ ஆரம்பித்தாள்.

 

“நவி மா என்னாச்சு?” என்று அவள் கூந்தலை ஆதரவாய் வருட,

 

“எனக்கு பயமா இருக்கு டா, ஏதோ தப்பா நடக்க போகிறது போலவே இருக்குடா” என்று கூறினாள்.

 

“ஏன் டி சம்பந்தமே இல்லாமல் பேசுற?” என்று கேட்க,

 

“இங்க பாரு குங்குமம் கைதவறி கீழ விழுந்திருச்சி” என்று  திக்கித் திணறி கூறினாள்.

 

“கை தவறி தானே நவி கீழே விழுந்தது, இதை பெரிசுபடுத்துற? மனசை போட்டு குழப்பிக்காத” என்று கூறி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

கிருஷியின் மனது ஏதோ தவறு நடக்கப்போவதாகக் கூறிக் கொண்டே இருந்தது. அறையை சுத்தம் செய்தவள் ஆதிக்கு காபியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

அவன் வேலை விடயமாக காபியை பருகிய பிறகு சாப்பிடமால் வெளியே சென்றான். கிருஷி அறையை விட்டு வெளியேறவில்லை.

 

ஆதி தன் ஊரிற்கு வெளியே சென்று தன் வேலைகளை முடித்து வர மாலையாகியது. அதே நேரம் ஊரை நெருங்கும் போது அடைமழை பெய்யத் துவங்கியது. அவன் காரில் வரும் போது ஊரை நெருங்க கார் டயர் பஞ்சராகியது. அவன் காரை விட்டு வெளியிறங்கிப் பார்க்க ஆணியை வைத்து பஞ்சராக்கியது புரிந்தது.

 

உடனே தன்னைச் சுற்றி ஏதோ ஆபத்து இருக்கின்றது என்பதைப் புரிந்துக் கொண்டவன், தன்னை தயார்படுத்திக் கொண்டு அதே இடத்தில் நிற்க அவனைச் சுற்றி பதினைந்து பேர் சுற்றி வளைத்தனர். அவர்களின் முகத்தைப் பார்க்கும் போது வெளிமாநிலத்தில் இருக்கும் கூலிப்படை என்பதைப் புரிந்துக் கொண்டான்.

 

அவனைச் சுற்றி ஆயுதங்களுடன் நிற்க, முதலில் ஒருவன் கத்தியை எடுத்து தாக்க வர தனது கையை ஓங்கியவன் அதேவேகத்தில் அவன் நெஞ்சில் அடிக்க அப்படியே கீழே விழுந்தான் அந்த அடியாள். மீண்டும் அவன் நெஞ்சில் மிதிக்க அப்படியே கண்களை மூடினான்.

 

ஆதி தனது பிரேஸ்லட்டை முழங்கைப்புறமாக பின் தள்ளி இருக்கி அடுத்தவனை எதிர்பார்க்க அவனும் கத்தையை ஓங்க தனது காலால் அவன் கையை உதைய கத்தி தூரத்தில் சென்று விழுந்தது. அவன் கையைப் பிடித்து முறுக்க அவ்வடியால் வலியில் அலற மற்றைய கை முஷ்டியை மடக்கி முகத்தில் இரண்டு குத்துவிட மூக்கிழும், உதடு கிழிந்து இரத்தம் வழிய மயங்கிச் சரிந்தான்.

 

தனித்தனியாக தாக்குவதை விட ஒன்றாக சேர்ந்து தாக்க முடிவு எடுத்தனர். ஒருவன் பின்னிருந்து அவனை வெட்ட வர அக்கையை திரும்பால் பிடித்தவன் அவனை முன்னிழுத்து அவன் கைகளை உடைத்தான். அடுத்தவன் கத்தியால் குத்தவர அவன் கைகளைப் பிடித்து அடிக்க முன் வலது புஜத்தை பதம் பார்த்தது ஒரு கத்தி.

 

கிருஷியின் இதயமோ தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

அதில் சிறிது தடுமாறினாலும் தன்னை சமன்படுத்திக் கொண்டவன் அவனை புரட்டி எடுக்க இன்னொருவன் ஆதியை வெட்டச் செல்ல அவன் இரண்டடி பின் செல்ல அவன் வயிற்றில் கீறியது கத்தி. அவன் கத்தியைப் பிடித்து இழுத்து நெஞ்சில் மிதித்தான் ஆதி.

 

இன்னொருவன் கட்டையால் தலையால் அடிக்க ஆதியின் நெற்றியில் இருந்து குருதி வழிய ஆரம்பித்தது. அதைப் பொருட்படுத்தாதவன் அனைவரையும் புரட்டி எடுத்தான். ஆனால் கைகளில் இருந்தும், புஜத்தில் இருந்தும், வயிற்றிலிருந்தும் குருதி வழிந்தது. நெற்றியில் சற்று பலமாக அடிபட்டதால் வலியெடுத்தது. மழை அதிகமாகவும் பெய்ததால் காயம் எரிய ஆரம்பிக்க ராஜேஸிற்கு அழைத்து அவன் இருக்குமிடம் உடனே வருமாறு அழைப்பை துண்டித்தான்.

 

அங்கிருந்த ஒருவனின் மொபைல் அலற அவ் அழைப்பை ஏற்றான்.

 

“என்ன வேலை முடிஞ்சுதா?” என்று ஹிந்தியில் கேட்க,

 

“என்னை முடிக்கனும்னா அதுக்கு என் பர்மிசன் வேணும் நேசன்” என்றதோட எதிர்புற அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

ராஜேஸ் வரும் அங்கிருந்த நிலையைப் பார்க்க நடந்ததை யூகித்தவன் உடனே பொலிஸை அழைத்து ரௌடிக்கும்பலை அரெஸ்ட் செய்யச் சொல்லி ஆதியை அழைத்துக் கொண்டு ஹொஸ்பிடலிற்குச் சென்றான். அவனின் காயத்திற்கு மருந்திட்டு வீடு வந்து சேர்ந்தான்.

 

அவன் காயத்தின் கட்டுகளுடன் உள் நுழைய அனைவருமே பதறினர்.

 

“தேவ் என்னாச்சு?” என்று ராஜேஸ்வரி கேட்க,

 

“இல்லை மா, அது” என்று கூற முன்

 

“யாரோ தேவை கொலை பன்ன டிரை பன்னாங்க” என்றான் ராஜேஸ்.

 

“எல்லாம் இவன் வீட்டிற்கு கூட்டிகிட்டு வந்தானே அவளால தான்” என்றார் திவியின் தாய் நாக்கில் நரம்பு இல்லாமல்.

 

“ஏய் வெளிய வாடி. வந்து எங்க தேவைப் பாரு. உன்னால் தான் இப்படியெல்லாம் நடந்தது. வாடி வெளியில” என்று திவியின் தாய் கத்த

 

கிருஷி கீழிறங்கி வந்து அவன் நிலமையைப் பார்த்து அதிர்ந்து நின்றாள். அவளுக்கு பேச்சு வரவே இல்லை. அவன் காயங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனும் அவள் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டான். இருவரும் சுற்றி நடப்பவற்றைப் பார்க்காமல் வெவ்வேறு சிந்தனைகளில் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13

பனி 13   சிவபெருமாளின் வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் ஏறியவன் தன் நண்பன் ஒருவனிடம்   “வீட்டில் யாரு யாரு இருக்காங்க?, மற்றவர்கள் எல்லோருமே போயிட்டாங்களா? இல்லை கொஞ்சம் பேர் சரி வீட்டில் இருக்காங்களா?” என்று கேட்க,   “மச்சான் நமளுக்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12

பனி 12   பவியின் வீட்டிற்குச் செல்லும் வழியில் கிருஷி மொபைலில் ஏதோ செய்ய,   “என்ன டி பன்ற? அதுவும் சிரிச்சிகிட்டே?” என்றாள் பவி.   “இன்றைக்கு 12.36க்கு தான் லக்ஷன் புரொபோஸ் பன்னான். அதான் சேவ் பன்னி வைக்குறேன்”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 14யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 14

பனி 14   கிருஷி தனது மனக் கவலைகளைக் பவியிடம் கூறி அழுதாள். இடையில் அவள் அதிகமாக அழும் போது மூர்ச்சையாகி மயங்கிச் சரிந்தாள்.   பவி மறுபுறம் ஏதும் சத்தம் வராமல் போக,   “கிருஷி பேசுடி” என்று பேச