பனி 26
கிருஷி மெயில் அனுப்பி, தனக்குப் பதிலாக ஒரு மாதத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு வேண்டி இருந்தாள். அதற்காக அவர்களும் வேறு ஒருவரை நியமித்து இருந்தனர். திவி கோபத்தில் அவ் இடத்தை விட்டு வெளியேற நிலா அவள் பின்னாலேயே சென்றாள்.
‘நிலா நல்லா பொண்ணா இருக்காளே’ என்று எண்ணி தன் வேலைகளைப் பார்த்தாள் கிருஷி.
லெப்பை தனது அறையில் வைத்தவள், கீழே வந்தாள்.
“பெரிய அத்தை நீங்களா சமைபிங்க?” என்று கேட்க,
சங்கரினின் மனைவி அவளைப் பார்த்து விழித்தார். தன் கணவனின் உயிரைக் காத்தவள் , சின்னச் சின்ன குறும்புகள் என்பவற்றை பார்த்து கிருஷியைப் பார்த்து பிடித்துப் போனது என்பது உண்மை. ஆனால் தன்னுடன் நேரடியாகவே பேசுவாள் என்று அவர் எண்ணவில்லை.
“ஐயோ நான் அவளோ பயங்கரமாவா இருக்கேன், இப்படி முழிக்கிறிங்க?” என்றாள்.
“அது அது” என்று அவர் தடுமாற,
“விடுங்க, நீங்களா சமைப்பிங்க?” என்று கேட்க,
அவர் ஆம் என்று தலையை ஆட்ட அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். இதைப் பார்த்த ஒரு ஜோடி விழிகளுக்கும், சங்கரனின் மனைவிக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன ஆச்சு திருப்பி விழிக்கிறிங்க பெரிய அத்தை?” என்று கிருஷி கேட்க,
அதற்கு கோமதி “நீ எப்போவும் இப்படி முத்தம் கொடுப்பியா?” என்று அவர் கேட்க
“ஆமா அம்மா கையால் சாப்பிடும் போது, எப்போவும் இப்படி பன்னுவேன். ஆனால் பத்து வருஷம் வெளியே இருந்ததால் அம்மா சாப்பாடை ரொம்ப மிஸ் பன்னேன். பட் இப்போ உங்க கையால் சாப்பிட போறேன். உங்களை பார்க்கும் போது என் அம்மாவே என் பக்கத்துல இருக்கிறது போல பீல் பன்றேன்” என்றாள்.
அவர் மறுபுறம் திரும்பி கண்ணீர் வடிந்த கண்களை துடைத்துக் கொண்டார். அந்த ஜோடிக் கண்களின் கண்களும் கண்ணீர் சுரந்து இருந்தது.
“பெரிய அத்தை நான் எதாவது தப்பா பேசிட்டேனா? சொரி சொரி” என்று கிருஷி கூற
“ஐயோ இல்லை டா, பழைய ஞாபகங்கள் வந்தது. அதான்” என்றார்.
“நான் இன்றைக்கு சமைக்கட்டுமா?” என்று கேட்க,
“வேணா மா. பிரச்சனை வரும் மா, நானே பாத்துக்குறேன்” என்றார் கோமதி அவசரமாக.
“அத்தை, என்ன பிரச்சனை வந்தாலும் நானே பேஸ் பன்றேன்” என்று புடவையை இடுப்பில் சொருகி சமைக்க ஆரம்பித்தாள்.
சாப்பாடு அனைத்தையும் சமைத்து முடித்து சாம்பார் செய்துக் கொண்டு இருந்தாள்.
“எதுக்கு சாம்பார்? அதான் நன்வெஜ் சமைச்சி இருக்கியே?” என்று கேட்க,
“நான் வெஜ் பெரிய அத்தை, பட் நொன்வெஜ் சமைப்பேன்” என்றாள்.
கோமதியோ இவளின் நடவடிக்கைகளில் குழம்பி இருப்பதால் திவியின் தாய் வருவதை கவனிக்கவில்லை.
“என்ன கோமதி சூப்பரா வாசணை வருது?” என்று சமையலறையினுள் நுழைய கிருஷி சமைப்பதைப் பார்த்தவர, வெகுண்டு எழுந்தார்.
“உனக்கு யாருடி சமைக்கு சொன்னா? என்னை தைரியம் இருந்தால் நீ சமைய கட்டுக்குள்ள போயிருப்ப? விஷம் வச்சி நம்ம எல்லாரையும் கொல்ல பாக்குறியா?” என்று அவளை இழுத்து வெளியே தள்ள அவள் கீழே விழ முன் அங்கே தன் பைலை எடுக்க வருகை தந்த ஆதி அவளை பிடிக்கவும் சரியாக இருந்தது.
திவியின் தாயின் கத்தலில் வேறு வேலைகளில் ஈடுபட்டு இருந்த அனைவரும் அவ்வித்திற்கு வர, ஆதியும் வருகை தருவதும் ஒரே சமையமாகவும் இருந்தது. எவருமே ஆதியை எதிர்பார்க்க இல்லை.
“நவி மா, அடிபட்டிச்சா?” என்று அவளை எழுப்பிவிட்டவன் அவள் இல்லை என்று தலை ஆட்டினாள்.
“தேவ் இவ சாப்பாட்டுல விஷம் வச்சி கொல்ல பாக்குறா டா. அதான் அவளை சமையகட்டில் இருந்து வெளியே துரத்தி விட்டேன்” என்று கூறி அடுத்த நொடி சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்தின் கண்ணாடி தூளாகியது. அனைவரும் மிரட்சியாய் அவனைப் பார்க்க கிருஷி நடுங்கும் உடலுடன் அவனை ஏறிட்டாள்.
இதுவரை பார்த்திராத தேவ், ஆதி. அகியூஸ்டுகளின் முன் நிற்கும் DSP ஆக அனைவரின் முன்னிலையிலும் நின்று இருந்தான். இத்தனை கோபத்தை இதுவரையில் அங்கு இருந்த ஒருவருமே அவனைப் பார்த்தது இல்லை. தன் அத்தையின் புறம் திரும்பியவன்,
“உங்களை அடிக்க முடியாது, அதனால் தான் இப்படி” என்று படத்தைக் காட்ட அனைவருமே அவனை அதிர்ச்சியாய் பார்க்க, அவன் கன்னத்தைப் பதம் பார்த்தது ஒரு கை.
அடித்தவரை அதிர்ந்து பார்க்க கிருஷி கோபத்துடன் நின்று இருந்தாள்.
“பெரியவங்கிட்ட இப்படி தான் பேசுவியா? முதலில் உன் கோபத்தை குறை. ஒரு பொலிஸ்காரனுக்கு நிதானம் ரொம்ப முக்கியம் லக்ஷன், முதலில் அவங்கிட்ட மன்னிப்பு கேளு” என்று கூற அவன் அவளை முறைத்தான்.
“உன்னால அவங்கிட்ட மன்னிப்பு கேட்க முடியுமா? முடியாதா? நீ மன்னிப்பு கேட்க இல்லைன்னா, நான் அவங்க காலில் விழுந்து உனக்காக மன்னிப்பு கேட்பேன்” என்று மிரட்ட
“இப்போ என்ன டி நான் மன்னிப்பு கேட்கனும் அவளோ தானே? கேட்டுத் தொலைகிறேன்” என்று கோபமாக கூறி அத்தை புறம் திரும்பியவன்,
“மன்னிச்சுடுங்க அத்தை” என்று கூறி
“அவ உங்களை எல்லாரையும் கொல்லனும் நினைக்க மாட்டா. அப்படி நினைச்சா இதை போல் கீழ்தரமான வேலைகளை பன்ன மாட்டா. அதுவும் நாம எல்லாரும் சாபிடுற சாப்பாட்டுல விஷம் கலக்குற அளவிற்கு அவ கீழ்தரமான பிறவி இல்லை” என்றான் கைமுஷ்டியை முறுக்கியபடி. அவன் அங்கிருந்து செல்லப் போக அவன் கைபிடித்து நிறுத்தினாள் கிருஷி.
“மிஸ்டர் ஆதி நீங்க இப்போவே எங்க போறிங்க? நான் இந்த சிடுவேஷனை எப்படி சமாளிக்கிறிங்கன்னு பாருங்க” என்றாள் கிருஷி.
“இப்போ என்ன நான் சமைச்ச சாப்பாடை யாருமே சாப்பிட மாட்டிங்க?” என்று கேட்க, ஒருவரும் பதில் கூறவில்லை.
“இனிமேல் நானே சமைப்பேன், யாருக்கு வேணுமோ சாப்பிடலாம். பட் வெளியில் இருந்து எந்த புட்டும் ஓடர் பன்னி சாப்பிட கூடாது, அப்படி ஏதாவது பன்னலாமனு நினைக்க வேணாம். அந்த சாப்பாடை கேர்டிற்கு உள்ளே விடமாட்டேன்” என்றாள்.
“நீ சொன்னால் நாங்க சாப்பிடுவோமா?” என்று மகாலிங்கம் கேட்க,
“வேற ஒப்ஷன் இல்லையே, அப்போ எந்த நாளும் பட்னி இருக்க வேண்டியது தான்” என்றாள்.
“என்ன டி ரொம்ப ஒவரா போற” என்று திவி கோபமாக கேட்க,
“நீங்க யாரும் சாப்பிடாமல் இருந்தால் என்னை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துரிங்க, என் புருஷன் உங்களை திட்டினதுக்கு அவரை காயபடுத்தினிங்க அப்படின்னு மோகன் அண்ணா கிட்ட கம்பிளைன் பன்னுவேன்” என்று கூற ஆதி சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான்.
“என்ன மிரட்டுறியா?” என்று அம்பிகா கேட்க,
“சின்னத்தை நீங்க எப்படி வேணுன்னாலும் எடுத்துக்கலாம். நான் கம்பிளைன் பன்னா எதுவுமே கேட்க மாட்டாங்க. யேன் தெரியுமா? நான் உங்க எதிரியோட பொண்ணு நான் சொல்றது உண்மை அப்படின்னு உடனடியா நம்பிருவாங்க. அது மட்டும் இல்லை மோகன் அண்ணா என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டாரு, யேன்னா இந்த தங்கச்சி மேலே அம்புட்டு பாசம். என் புருஷன் சபோர்ட் வேறு எனக்கு இருக்கு” என்றாள்.
மற்றவர்கள் இவள் செய்தாலும் செய்துவிடுவாள் என்ற பயத்தில் சாப்பிடுவோம் என்று ஒத்துக் கொள்ள, ஆதியின் அருகில் வந்தவள் தனக்கு இல்லாத கொலரை தூக்கிக் காண்பித்து அறைக்குச் சென்றாள்.
“நீங்க மனசாட்சி இல்லாமல் நடப்பீர்கள் நான் எதிர்பார்க்கவே இல்லை, இப்போ தான் எல்லோரோட சுயரூபமும் வெளிவருது” என்று அனைவரையும் ஒரு முறை பார்த்து தனது அறைக்குச் சென்றான்.
ராஜேஸ்வரி எதுவும் கூறாமல் அங்கு இருந்து சென்றார். நிலா 90% உறுதி செய்துக் கொண்டாள். மற்றவர்கள் தத்தமது வேலைகளைப் பார்க்கச் செல்ல சங்கரன் கிருஷியை நினைத்து புன்னகைத்தார். ஆனால் ஆதியின் மீது சந்தேகம் அனைவருக்கும் இப்போது எழுந்தது.
கிருஷி வேறு புடவைக்கு மாறியவள், பரஸ்ட் எய்ட் கிட்டை எடுத்தாள். ஆதி அறைக்கு வந்தவுடன் அவனிடம் பெர்ஸ்ட் எய்ட் கிட்டை வழங்க அவன் மருந்திட கஷ்டப்பட கிருஷியே மருந்திட்டு டிரசிங் செய்தாள். ஆதி அவளை நமட்டுப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
பகல் வேலையில் அனைவரும் சாப்பிட அமர கிருஷியே அனைவருக்கும் பறிமாறினாள். அதை சாப்பிட்டவர்கள் அவளைப் பார்த்து பிறகு எதுவும் கூறாமல் சாப்பிட்டனர்.
“உனக்கு யாரு கிருஷி சமைக்க கத்து கொடுத்தா?” என்று கோமதி கேட்க,
“என் அம்மா” என்றாள். அதற்கு மேல் பெரியவர்கள் ஒன்றும் பேசவில்லை.
“பெரியத்தை நான் சமைச்சது நல்லா இல்லையா?” என்று கோமதியிடம் கேட்க,
“ரொம்ப நல்லா இருக்கு” என்றார். கிருஷி ராஜேஸ்வரியைப் பார்க்க அதைப் பார்த்தவர்
“ரொம்ப நல்லா இருக்கு” என்றார் புன்னகைத்தப்படி.
நிலா, சங்கரன் கிருஷியைப் பார்த்து புன்னகைத்தனர். மகாலிங்கம், அம்பிகா, திவியின் தாய், திவி ஒருவரும் குறை எதுவும் கூறவில்லை. அதுவே மற்றவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. ஆதி தன் வேலைகளை முடித்து அப்போதே அங்கு வந்தான். கிருஷியை பாராட்டியது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.
“வா தேவ் வந்து சாப்பிடு” என்று சங்கரன் கூற
தன் கைகளைப் பார்த்தவன், “இல்லை சித்தப்பா நான் அப்பொறமா சாபிடுறேன்” என்று கூற கிருஷி அவனுக்கு உணவை எடுத்து வர சரியாக இருந்தது.
அவனை சோபாவில் அமர வைத்தவள் அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள். ஆதிக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவனும் எதுவும் மறுப்பு தெரிவிக்காமல் அவள் ஊட்டுவதை வாங்கிக் கொண்டான். திவியோ கோபத்தில் எழுந்து செல்ல திவியின் தாயும் எழுந்து சென்றுவிட்டார்.
கிருஷியோ எதையும் சாட்டை செய்யாது அவனுக்கு ஊட்டி முடித்த பிறகே அவ்விடத்தை விட்டு அகன்றாள். ஆதியோ சந்தோஷத்தில் பறக்காத குறையே. பெரியவர்கள் எதுவும் கூறாமல் இதைக் கண்டு கொள்ளாது சாப்பிட்டனர். அவர்களின் இதழ்கள் புன்னகையில் விரிய மறக்கவில்லை.
சிவபெருமாள், ” நான் சொன்னது போல வெளி ஆளுங்களை உள்ளே இறக்கிட்டியா நேசன்?” என்று கேட்க,
“ஆமா மாமா அந்த தேவ் தனியா மாட்டினால் அவன் கதையை முடிச்சிட்டு இவங்க போயிட்டே இருப்பாங்க” என்றான் நேசன்.
“என்னை அவமானபடுத்தின அவன் உயிரோட இருக்கவே கூடாது. புலி பதுங்குதுன்னா பாய போகுது அப்படிங்குறதை அந்த பொடிப்பையன் கவனிக்க இல்லை. நான் அமைதியா இருக்கிறதை அவனுக்கு பயந்துட்டு இருக்கிறதா நினைச்சி இருக்கான்” என்றார் சிவபெருமாள்.
“ஆமா மாமா, அவனுக்கு நாளைக்கு கடைசி நாள்” என்றான் நேசன்.
“ஆதிலக்ஷதேவன், நீ நாளைக்கு உன் சாவை சந்திக்க தயாரா இரு” என்று கர்ஜித்தார் சிவபெருமாள்.
Super episode..thank you.