Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 25

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 25

பனி 25

 

கிருஷி சாப்பிட அமர்ந்து ஒருவரையும் பார்க்காமல் சாப்பிடுவதிலேயே குறியாய் இருந்தாள்.

 

‘புருஷன் சாப்பிட்டானான்னு ஒரு வார்த்தை கேட்குறாளா? ஐயோ இவ சாபிடுற வேகத்தை பார்த்தால் நமளுக்கு சாப்பாடு இருக்காது’ என்று நினைத்தவன் அவசரமாக கைகளை கழுவி அமர்ந்து சாப்பிட்டான்.

 

மூக்கு பிடிக்க சாப்பிட்டவள் கை கழுவி வந்தாள்.

 

“யாரு சாப்பாடு சமைச்சிங்கன்னு எனக்கு தெரியாது, பட் நான் அவங்க பேன் பா” என்று கூறி மாடி ஏறினாள்.

 

ஆதி புன்னகைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தவன்,

 

“டினர் எங்க இரண்டு பேருக்கும் வேணாம்” என்று கூறி மேலே படிகளில் ஏறியவன் திரும்பி அனைவரிடமும் வந்தான்.

 

“அவ கிட்ட வம்பு பன்றதும், சிங்கத்தோட குகைக்கு தனியா போறதும் ஒன்னு தான்” என்று கூறி அறைக்குச் சென்றான்.

 

ராஜேஸ்வரி தன் மகனின் நடவடிக்கைகளை வைத்து இவளையே ஆதி காதலித்து இருக்கிறான் என்பதைப் புரிந்துக் கொண்டார். நிலாவிற்கு இது 80% உறுதியானது. ஆனால் தன் தமையன் எதிரியை பழிவாங்க அவன் திருமண் செய்தான் என்று கூறியதிலும் உண்மை இருப்பதாகவும் தோன்றியது.

 

அவள் பல்கனியில் நின்று வெளியே பார்க்க, ஆதி குளித்து ஆடை மாற்றி அவள் அருகில் வந்து நின்றான்.

 

“நல்லா பேசுன” என்று கூற

 

“எனக்கு நான்கு வயசுல இருந்தே நல்லா பேச தெரியும் மிஸ்டர் ஆதி. நீங்க புதுசா பாராட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை” என்று கூறினாள் வெடுக்கென்று.

 

‘அப்போ என் மேலே இன்னும் கோபமா? அதானே அவளாவது என் மேலே இருக்கிற கோபத்தை குறைச்சிட்டாலும், பரவால்லை இது கூட நல்லா இருக்கு’ என்று உள்ளுக்குள் சிரித்தான்.

 

“சரி, என் மேலே கோபம் இருக்கிறதுக்கு எதுக்கு அங்கே இருந்த அத்தனை பூச்சாடியை விட்டுட்டு மூலையில் இருந்த பூச்சாடியால் அடிப்பேன்னு சொன்ன?” என்று ஆதி கேட்க,

 

“இது என்ன கேள்வி? எனக்கு தோனுச்சு அவளோ தான்” என்று கூற அவளையே பார்த்தான் ஆதி.

 

“எதுக்கு இப்படி குறுகுறுன்னு பாக்குற?” என்று அவள் கேட்க,

 

“என் பொன்டாட்டி இன்றைக்கு ரொம்ப அழகா இருக்கா” என்றான் அவளை இரசித்தப்படி.

 

“உன்னை யாரு என்னை பார்க்க சொன்னது? இந்த மாதிரி பார்க்குற வேலை எல்லாம் வச்சிகாத” என்று முகத்தைத் திருப்பி உள்ளே செல்ல அவனும் அவள் பின்னே உள்ளே நுழைந்தான்.

 

அவள் கைபிடித்து அவளை அருகில் இழுக்க அவனுடன் மோதி நின்றாள்.

அவள் கையை அவள் முதுகுப்புறம் மடக்கிப் பிடித்து, தன்னோடு மேலும் நெருங்கி நிற்க வைத்தவன், அவள் முகத்திற்கு நேராகப் பார்த்து,

 

“நீ என் பொன்டாட்டி. நான் உன்னை மட்டும் தான், உன்னை நான் மட்டுமே பார்ப்பேன். அந்த ரைட்ஸ் எனக்கு மட்டுமே இருக்கு. என் பொன்டாட்டியை எவனாவது பார்த்தான் கண்ணை நோண்டி காக்காக்காவிற்கு போட்டுடுவேன்” என்றான்.

 

அவன் கண்களையே அவள் பார்க்க, அவனும் அவள் கண்களையே பார்த்தான். இருவருமே மாய வலைக்குள் கட்டுண்டு கிடப்பது போல் வெகு நேரமாக நின்று இருந்தனர். முதலில் சுதாகரித்த கிருஷி அவனை தள்ளிவிட்டாள். இதை எதிர்பார்க்காத ஆதி சற்று தடுமாறி நின்றான்.

 

“இதோ பாரு, இப்படி பக்கத்துல வர வேலையை வச்சிகாத” என்றாள் சுவரைப் பார்த்தபடி.

 

“ஐயோ குட்டிபேபி, எத்தனை தடவை சொல்றது? என்ன சொன்னாலும் அதை என்னை பார்த்து சொல்லு” என்றான் மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டியபடி.

 

‘இவன் கண்ணை பார்த்தால் நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னே புரியாது. இந்த லட்சணத்துல இவனை பார்த்து பேசுன, உன் கோபம் எல்லாமே மறந்துவிடும். கண்டிப்பா அவனை பார்க்கக் கூடாது’ என்று தன்னுள் முடிவு எடுத்தவள்,

 

“இங்கே பாரு, உன் கிட்ட வெட்டியா பேச எனக்கு நேரம் இல்லை. உன் லெப்பை கொடு எனக்கு வேலை இருக்கு” என்று அவன் முகத்தை பார்த்து கூறி விட்டு பல்கனிக்கு அவசரமாகச் சென்றாள். இல்லை ஓடினாள்.

 

ஆதி சிரித்து தன் லெப்டொப்பை எடுத்து அவளிடம் வழங்க அவள் ஒன் செய்ய, பாஸ்வேர்ட் கேட்டது. அவள்  ஆதியைக் கேள்வியாய் பார்த்தாள்.

 

“ஐ லவ் யூ நவி” என்று கூற ஆதியை அதிர்ச்சியாய் பார்த்தாள் கிருஷி.

 

“ஹலோ மெடம் நாங்க ஒன்னும் உங்களுக்கு சொல்ல இல்லை. என் பாஸ்வேர்டை சொன்னேன், உனக்கு புரைபோஸ் பன்னுவேங்குற நினைப்பு வேற இருக்கா?” என்றான்.

 

அதில் அவளுக்கு உள்ளுக்குள் வலித்தாலும், அதை வெளிக்காட்டாது, தன் கோலேஜ் பிரின்சிபலிற்கு மெயில் அனுப்ப ஆரம்பித்தாள்.

 

அவளைப் பார்த்த ஆதி அவள் வலியை புரிந்துக் கொண்டவன்,

 

‘மனசுல காதல் இருக்கு, ஆனால் அதை வெளிகாட்ட மாட்டாங்களாம்’ என்று பேசி கட்டிலில் அமர்ந்து கேஸ் விஷயமாக விகியிடம் பேச ஆரம்பித்தான்.

 

இருவரும் தத்தமது வேலைகளை முடித்து உறங்க வர ஒன்பது மணியானது. கிருஷி ஒன்று கூறாமல் சுடிக்கு மாறி அவளிடத்தில் படுத்துக் கொள்ள கிருஷி மீண்டும் அமைதியாக மாறியது அவனுக்கே கவலை ஏற்பட்டது. மீண்டும் இதைப் போன்று அவளிடம் பேச கூடாது என்று முடிவெடுத்தான் நவியின் லக்ஷன். அவன் அறியவில்லை இதை விட அதிகமாக அவளை நோகடிக்க உள்ளான் என்பதை.

 

அவள் சிறிது நேரத்தில் உறங்கி விட, அவள் நன்றாக உறங்கிவிட்டாள் என்பதை அறிந்தவன் அவள் எழா வண்ணம் அவளை இழுத்து தன் மார்பில் தலையை வைத்து அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான். இன்றே அவன் இத்தனை நாட்களில் நிம்மதியாய் உறங்கினான். இரவில் கிருஷி கண்விழிக்க ஆதியின் அணைப்பில் இருப்பதை உணர்ந்தாள்.

 

அவனை விட்டு விலக முயற்சிக்க அது பயனற்று போக அவ்வாறே உறங்க ஆரம்பித்தாள். அதிகாலையில் ஆதியை முதலில் கண்விழித்தான்.

 

‘நவி குட்டிபேபி அவதாரம் எடுக்க முன்னாடி அவளை தலையணையில் உறங்க வைக்கனும்’ என்று எண்ணியவன் அவளை மெதுவாக தலையணையில் கிடத்தி விட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

அவன் வெளியே செல்ல தயாராகி முடிய, அவள் விழித்தாள். அவசரமாக சென்று குளித்து வர அவளுக்கும் சேர்த்து காபி எடுத்து வந்தான்.

 

“இன்றைக்கு டைமிற்கு சாப்பிடுவாய் என்று நினைக்கிறேன்” என்று கூற

 

அவனை ஒரு முறைப் பார்த்து காபி குடிப்பதில் பிசியானாள். அவன் இவளிடம் கூறிய பிறகு வெளியே சென்றான்.

 

கிருஷி காபி கப்பை எடுத்து கீழே வர அனைவரும் அவளைப் பார்க்க,

 

“குட் மோர்னிங்” என்று அனைவரையும் பார்த்து கூறினாள்.

 

அவளை முறைக்க ” அத்தை பதில் கூட யாருக்கும் தெரியாத அளவிற்கா எல்லோரையும் வளர்த்து வச்சிருக்கிங்க?” என்று கேட்க,

 

” எங்க அண்ணியை பற்றி குறை சொல்லாத. அவங்க வளர்ப்பை பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று மகாலிங்கம் கோபமாக கூற

 

“அப்போ பதில் சொல்லி இருக்கனுமே சின்ன மாமா” என்று இழுத்து கூறினாள் கிருஷி.

 

“சின்ன மாமா அப்படி கூப்பிடாத, கடுப்பாகுது” என்று அவர் எழ

 

“சின்ன மாமா” என்று இழுத்து நீட்ட அவர் காதுகளைப் தன் கைகளால் மூடிக் கொண்டு

 

“சே” என்று அங்கிருந்து அறைக்குச் செல்ல அம்பிகாவும் அவளை முறைத்து தன் கணவின் பின்னால் சென்றார்.

 

கிருஷி புன்னகைத்து கிச்சனிற்குள் நுழைந்து கப்பை கழுவி வைத்து தனது அறைக்குச் சென்று லெப்டொப்பை எடுத்துக் கொண்டு வெளியே இருந்த கார்டனிற்குச் சென்றாள்.

 

“நிலா, இது உங்க அண்ணா லெப் டொப் ஆச்சே, இவ இதில் இருக்கிற தகவல் எதையாவது அவங்க வீட்டிற்கு அனுப்பி நம்மளை பழிவாங்க பாக்குறா” என்று திவி கூறி அவளையும் அழைத்துக் கொண்டு கிருஷி இருந்த இடத்திற்கு சென்றாள்.

 

கிருஷி மொபைலில் பேசிக் கொண்டிருக்க, அங்கே வந்த திவி,

 

“ஏய் இது என் மாமா லெப்டொப் நீ எதற்கு இதை எடுத்து வந்த?” என்று கத்த

 

“நான் ஒரு பைவ் மினிட்ஸ்ல திரும்ப கூப்பிடுறேன்” என்று அழைப்பை துண்டித்தாள்.

 

“இது உன் மாமா லெப் தான். பட் இப்போ என் புருஷனோட லெப்” என்றாள்

 

“நீ இங்க இருக்கிற தகவல் எல்லாவற்றையும் உன் வீட்டிற்கு அனுப்பி எங்களை பழிவாங்க பாக்குறியா?” என்று திவி கோபமாக கேட்க,

 

“ஆமா, இப்போ அனுப்பி வச்சிட்டேனே” என்றாள் கிருஷி கூலாக.

 

“என்ன? எங்க மாமா உன் கிட்ட பாஸ்வேர்ட் சொல்லி இருக்கமாட்டாரு” என்று திவி லெப்பை அவசரமாகப் பார்க்க, அது இன்னும் உயிர்பற்ற நிலையிலேயே இருந்தது.

 

அதை உயிர்ப்பித்தவள் பாஸ்வேர்ட் கேட்க, ஆசையாக அவளுடைய பெயரை அடிக்க தப்பென்று காட்டியது. இரண்டாவது முறையாக ஆதியின் முழுப்பெயரையும் பதிக்க அதுவும் தப்பென்று காட்டியது.

 

மூன்றாவது முறையாக அழுத்துவதற்கு திவி யோசிக்க, கிருஷி லெப்பைத் தன்புறம் திருப்பி

அவனுடைய பாஸ்வேர்டை அடிக்க லெப் ஒபனாகியது.

 

இதைப்பார்த்த நிலா, திவி இருவருக்குமே அதிர்ச்சியே.

 

“நீ என் மாமாவிற்கு தெரியாமல் அவரோட பாஸ்வேர்டை ஒளிஞ்சு பார்த்து இருக்க” என்று கூற

 

“அட போமா, உன் மாமா ஒரு ஆள்னு அவனை நான் பார்க்கவா?” என்று முகத்தை சுளித்துக் கூற

 

“என் மாமாவிற்கு என்ன டி குறை? பார்க்க ஹீரோ போல் இருக்காரு” என்றாள் திவி.

 

“உனக்கு மட்டும் தான் உன் மாமா ஹீரோ. எனக்கு எப்போவும் வில்லன் தான். அவனும் அவன் மூஞ்சும்” என்று நேற்று அவளைத் தடுமாற வைத்ததிற்காக அவனுக்கு திட்டினாள்.

 

“ஏய் என்னடி விட்டா ஒவரா பேசுற?” என்று திவி எகிற

 

“இங்க பாருங்க மிஸ் திவ்யா, உன் கூட சண்டை போட எனக்கு நேரமும் இல்லை. மூடும் இல்லை. இன்னொரு தடவை நல்லா பிரிபெயாராகி வா” என்று லெப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

 

திவ்யா அவளை முறைத்து நிற்க, நிலா சிரிப்புடன் நின்று இருந்தாள். இதை ஒரு ஜோடி விழிகள் வேறு ஒரு இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32

பனி 32 “அப்பா நான் உங்க பொண்ணு பா” என்றாள் கிருஷி அழுகையுடன்.   “நீ என் பொண்ணே இல்லை. நான் பெத்த பொண்ணு இருபத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டா” என்று சென்றுவிட்டார்.   கிருஷி இதைக்கேட்டு அதே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 26யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 26

பனி 26   கிருஷி மெயில் அனுப்பி, தனக்குப் பதிலாக ஒரு மாதத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு வேண்டி இருந்தாள். அதற்காக அவர்களும் வேறு ஒருவரை நியமித்து இருந்தனர். திவி கோபத்தில் அவ் இடத்தை விட்டு வெளியேற நிலா அவள் பின்னாலேயே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 21யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 21

பனி 21   சிவபெருமாள், அவரது குடும்பம் முழுவதுமே அவர்கள் இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்தது. தளிர் ஆதியைப் பார்த்து ஒருவரும் கவனியா வண்ணம் புன்னகைத்தாள். சிவபெருமாளின் ஆட்கள் அவர் அருகில் வந்து,   “ஐயா மன்னிச்சிருங்க, எங்களால் ஒன்னும் பன்ன முடியாதது