Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 24

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 24

பனி 24

 

அடுத்த நாள் காலை ஆதி கண்விழிக்க இமைகளை இறுக்க மூடி தன் மார்பை தொட வெற்றிடமாக இருந்தது. கண்களைத் திறந்து பார்க்க, கிருஷி அதே இடத்தில் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

 

‘சே எல்லோருக்கும் போல் நைட்டில் நம்ம ஆளும் கட்டிபிடிச்சுட்டு தூங்குவான்னு எதிர்பார்த்தால் அவ தூங்கின அதே இடத்துல அசையாமல் தூங்குறா. போர்வை கசங்கி கூட இல்லை. இவளை இப்படி கரெக்ட் பன்னலாம் பார்த்தால் இவ அசையாமல் தூங்குறவளா இருக்காளே. கடவுளே இது என்ன எனக்கு வருகிற சோதனை’ என்று வேண்டிக் கொண்டவன் தன்னவளை பார்த்தான்.

 

தளர்வாக பின்னலிட்ட கூந்தலை தலைக்கு மேலே இட்டு இருந்தாள். இமைகளை மூடி இருந்தாலும் சிறிய பேசும் கண்கள், சிறிய நுனியில் சிவந்த மூக்கு, பிங்க் நிற காய்ந்த இதழ்கள், ஆயினும் புன்னகைக்க மறக்கவில்லை. பஞ்சுக் கன்னங்கள், அதில் அவள் அனுமதியின்றி தொட்டுச் செல்லும் முன் முடிக்கற்றைகள், ஒரு கன்னத்தில் மடித்து வைத்திருந்த மென்மையான கைகள் என்று அவளை இரசித்தான்.

 

அலார்ம் அடித்து அவனது இரசணையை களைக்க கிருஷியும் விழித்துக் கொண்டாள். அவன் அப்போதே விழித்துக் கொண்டவன் போல கைகளை உயர்த்தி உடலை முறுக்கியவன், அவளைப் பார்த்து

 

“குட் மோர்னிங்” என்று புன்னகைக்க

 

அவனை முறைத்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள் கிருஷி.

 

‘இப்போ என்ன சொன்னேன்? எதுக்கு முறைக்குறா?’ என்று தன்னுள் பேச,

 

‘நான் ஒரு மானங்கெட்ட மனசாட்சி இவன் கேள்விக்கு பதில் சொல்ல ஓடோடி வந்திருவேன்’ என்று தலை அடித்துக் கொண்ட மனசாட்சி

 

‘டேய் நீ பன்ன வேலைக்கு முறைக்குறதோட விட்டுட்டான்னு சந்தோஷபடு’ என்று மனசாட்சி கூற

 

‘ஏ நீங்க இங்கே தான் இருக்கியா? நல்லா இருக்கியா? ரொம்ப நாளைக்கு அப்பொறமா மீட் பன்னி இருக்கோம்’ என்று தன் மனசாட்சியுடன் பேச

 

‘அடேய் அடங்கு டா. இப்போ உன்னை அடக்குறதுக்கு ஒருத்தி வந்துட்டா. நான் பட்ட கஷ்டங்களுக்கு உனக்கு தண்டனை கொடுக்க போறா’ என்று அவன் மனசாட்சி சிரிக்க,

 

அவன் அவன் மனசாட்சியை முறைக்க அவன் மனசாட்சி திடீரென்று மறைந்தது.

 

அப்போதே தன்னை ஒருவர் பார்ப்பது போல் உணர்ந்தவன் திரும்பிப் பார்க்க, ‘ இவனுக்கு என்ன லூசா?’ என்ற பார்வையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் கிருஷி.

 

“ஐயையையோ, நம்மளை கண்டிப்பா லூசுன்னு நினைச்சு இருப்பா” என்று டவளை எடுத்துக் கொண்டு பாத்ரூமினுள் நுழைந்துக் கொண்டான்.

 

கிருஷி தனது சேலையை சரி செய்து தலையை துவட்டி தன் முழுக் கூந்தலையும் சிறிய கிளிப்பில் அடக்கி, நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைத்தாள். பின் பல்கனியில் சென்று நிற்க ஆதி குளித்து, கீழே சென்று இருவருக்கும் காபி எடுத்து வந்தான்.

 

“நவி உனக்கு காபி எடுத்து வந்திருக்கேன். எனக்கு கேஸ் விஷயமா வெளியில் வேலை இருக்கு டைமிற்கு சாப்பிடு” என்று கூற

 

அவள் எதுவும் கூறாமல் காபியை எடுத்துக் கொண்டாள். அவனும் தயாராகி பொலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான். கிருஷி அறையை விட்டு வெளியே வரவில்லை. அறையில் பல்கனிக்குச் சென்று நின்றவள்,

 

‘எதுக்குடா என் தங்கையை வச்சி கல்யாணம் பன்ன? உன்னை ரொம்ப காதலிச்சேன் டா. என் மனசை உடைச்சிட்டியே டா. தாலி கட்டும் போது சரி ஒரு வார்த்தை கட்டவான்னு கேட்டிருக்கலாமே, யேன்டா அதை கூட செய்ய இல்லை. உன்னை காதலிச்சாலும் நீ என் புருஷனா மாறிய முறை ரொம்ப தப்புடா’ என்று தன்னுள்ளே பேச அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதை துடைத்தவள் உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

 

சென்னையில் இருவரின் சந்திப்பு அவனுடைய நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தாள்.

 

விகி, ஆதிக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“சொல்லு மச்சான்” என்று ஆதி கூற

 

“டேய் சரக்கு எல்லாமே குணா அப்படிங்குற லோகல் ரவுடிக்கு தான் போகுது. மே பி அவனுக்கு அவனுங்க தலயை தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்று கூற

 

“அப்போ கண்டிப்பா அவன் உன்னை வொச் பன்னிட்டு தான் இருப்பான். நீ ஜாக்கிரதையா இரு. மச்சான் நான் இங்கே இருக்கேன், நீ சென்னையில் நடக்குறதை அப்டேட் பன்னு” என்று கூறினான் ஆதி.

 

“சரி டா” என்றான் விகி.

 

“இங்கே டிரக்ஸ் சப்ளே பன்றவன், யாருன்னே தெரியாத அளவிற்கு ஒளிந்து பன்றான் ஒருத்தன், அவனை எப்படியாவது கண்டு பிடிக்கனும்” என்று கூற

 

“சரி டா நீ அங்கே பாரு நான் இங்கே பார்க்குறேன்” என்று விகி கூற அழைப்பைத் துண்டித்தான்.

 

ஆதி எப்படி அவனைக் கண்டு பிடிப்பது என்று யோசித்தவன் அன்றைய தினம் முழுவதும் யாரும் அறியாமல் தகல் சேகரித்து வீட்டிற்கு வரும் போது ஆறு மணியாகி இருந்தது.

 

வீட்டிற்குள் நுழைந்தவன் கிருஷியைத் தேட அவள் அங்கு இருக்கவில்லை. நேரடியாக அறைக்குச் செல்ல அவள் தலையணையை இறுகப் பற்றிக் கொண்டு கண்களை மூடி இருந்தாள்.

 

“நவி மா” என்று தலையை வருட

 

மெதுவாகக் கண்களைத் திறந்தாள்.

அவள் சோர்வாக இருப்பதை பார்த்தவன்,

 

“சாப்டியா?” என்று கேட்க,

 

அவள் மௌனமாக இருக்க,

 

“உன்னை தான் கேட்குறேன் சாப்டியா?” என்று அதட்டி கேட்க

 

“அது… எனக்கு தனியா கீழே போக ஒரு மாதிரி இருந்தது. அதனால் நான் போய் சாப்பிட இல்லை” என்று தலையைக் குனித்துக் கொண்டு மெதுவான குரலில் கூறினாள்.

 

இதைக் கேட்டு இவள் மீதும் , தன் குடும்பத்தின் மீதும் ஜிவு ஜிவு என கோபம் தலைக்கு ஏறியது. அவள் கைப்பிடித்து அவளை ஹாலிற்கு இழுத்துச் சென்றான்.

 

‘என்னை விடு டா’ என்று அவள் கூறுவதைக் கூட கண்டுக் கொள்ளாது, ஹாலிற்கு அழைத்து வந்து நிறுத்தினான். அவள் கையை மேலும் அழுத்திக் கொண்டிருக்க அதன் வலியால் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதை அறியாதவன் “அம்மா” என்று கர்ஜித்தான்.

 

அவன் கர்ஜனையில் அனைவரும் ஹாலிற்கு வர கிருஷியின் கைகளை இறுகப் பற்றி இருக்க அவள் கண்ணீர் வடிந்த நிலையில் இருக்க கோபத்தின் உச்சியில் அவன் இருந்தான்.

 

“இவ சாப்பிடாமல் இருந்து இருக்கா நீங்க எல்லாரும் எங்க பார்த்துட்டு இருக்கிங்க?” என்று கத்த

 

“அவ இரண்டு வேளை சாப்பிடாட்டி செத்துர மாட்டா” என்று திவியின் தாய் விஷத்தைக் கக்க

 

“போதும் நிறுத்துங்க அத்தை” என்றான் ஆதி உறுமலாக

 

அதில் மற்றவர்களும் பயந்தனர்.

 

தன்னை தைரியப்படுத்தியவள் “நீ தேவையில்லாத விஷயத்தை பெரிசு படுத்துற” என்றாள் கிருஷி.

 

அதைக் கேட்டு இன்னும் கோபம் அடைந்தான்.

 

“இவங்களை இல்லை டி, முதலில் உன்னை அறைந்து இருக்கனும். நான் அறைந்தால் நிச்சயாமக அன்றைக்கு போல் மயங்கி விழுந்துருப்ப. அப்படி ஒரு காரணத்துக்காக மட்டும் உன்னை அடிக்காமல் இருக்கேன்” என்றான் சத்தமாக.

 

கோபத்தில் தன் சிகையை அழுந்தக் கோதியவன்,

 

“யேன் மா சாப்பாடு கொடுக்காமல் இவளை சாகடிக்கபாக்குறிங்களா?” என்று அவன் கேட்க,

 

“லக்ஷன் உனக்கு என்ன லூசா? உன் அம்மா கிட்ட எப்படி பேசுறது, அது கூட மறந்து போச்சா?” என்று கிருஷி திட்ட

 

“ரொம்ப நல்லவள் போல நடிக்காத மா, உன்னால் தான் அவன் அக்காவிடம் இப்படி பேசுறான்” என்றார் கோமதி.

 

“எங்க மாமாவை நீ நல்ல மயக்கி வச்சிருக்க. வந்து மூன்று நாள் கூட இல்லை அதற்குள்ள அத்தைக்கும் மாமாவுக்கும் இடையில பிரச்சனையை உருவாக்கிட்ட. நீ எல்லாம் என்ன ஜென்மமோ?” என்றாள் திவி.

 

“ஒரு நிமிஷம், என்னமோ உன் மாமா கூட ஓடி போய் கல்யாணம் பன்னி வந்த மருமகள் கிட்ட பேசுறது போல எல்லோரும் பேசுறிங்க? உங்க பையன் என் விருப்பம் இல்லாமல் என்னை கட்டாயபடுத்தி தாலி கட்டி இருக்கான். எதுவா இருந்தாலும் முதலில் அவனை திட்டுங்க” என்றாள் கிருஷி.

 

அனைவரும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

 

“அண்ணி பார்த்திங்களா? புள்ள பூச்சி போல இருந்துகிட்டு எப்படி பேசுறா? இவளோட உண்மையான முகம் எப்படி வெளிவருது?” என்றார் மகாலிங்கம்.

 

ஆதி பதில் கூற போகும் போது,

 

“மிஸ்டர் ஆதிலக்ஷதேவன், இதை உங்க சித்தப்பா அதாவது என் மாமா என் கிட்ட தான் கேட்டாரு, நீ கொஞ்சம் அடங்கி வாசி, அவருக்கு பதில் சொல்லிட்டு உன்கிட்ட வரேன்” என்றாள்.

 

“நான் அமைதியான பொண்ணு அப்படின்னு நான் சொன்னேனா? இல்லை இதோ உங்க எல்லாரும் முன்னாடி நின்னுட்டு இருக்கானே உங்க வீட்டு மூத்த வாரிசு ஆதி, அவன் சொன்னானா? நீங்களா ஒன்னு கற்பனை பன்னதுக்கு நான் என்ன பன்ன முடியும்? எல்லாத்துக்கும் என்னை குறை சொல்லாதிங்க” என்றாள்.

 

“இங்க நடக்குற பிரச்சனை எல்லாத்துக்கும் நீ தான் டா காரணம். எனக்கு வருகிற கோபத்துக்கு” என்று சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றியவள்,

 

“அதோ அங்கே இருக்கிற பெரிய பூச்சாடியை எடுத்து உன் மண்டையில் விட்டு உடைக்கனும் போல் இருக்கு. எதையாவது பேசி என் வாயை கிளறாத” என்றாள் ஆதியின் நவி.

 

ஆதி உட்பட அனைவருமே அவளை அதிர்ச்சியாய் பார்த்தனர்.

 

‘என்ன நமளை இப்படி பாக்குறாங்க? இந்த நேரத்துக்கு “அண்ணி புருஷனையே அடிக்கனும் சொல்றா பார்த்திங்களா?” இந்த கேள்வி வந்து இருக்கனுமே’ என்று நினைக்க

 

முதலில் சுதாகரித்த ஆதி,

 

“உன்னால் அதை தூக்க முடியுமா குட்டிபேபி?” என்று நக்கலாக கேட்க,

 

“அடிங், யாரைப் பாரத்து குட்டிபேபின்னு சொல்ற, இந்த பெயரை சொல்லி பேசாதன்னு சொன்னால் கேட்குறியா?” என்று கூறி முடிய முன்னரே அவன் ஓட அவனைத் துரத்திக் கொண்டு கிருஷி ஓடினாள்.

 

மற்றவர்களின் இதழ்கள் இதைப் பார்த்து விரிந்தது (கொஞ்சம் பேர் சிரிக்க மாட்டாங்க) . இத்தனை வருடங்களாக இழந்த ஏதோ ஒன்று அவர்களுக்கு திரும்பக் கிடைத்தது போல் உணர்ந்தனர்.

 

“நிறுத்திறிங்களா? நீங்க என்ன சின்ன குழந்தைகளா?” என்று திவியின் அம்மா கத்த,

 

“ஐயோ பெரியம்மா சின்ன குழந்தைகள் மட்டும் தான் விளையாடனும் அப்படி ஏதாவது சட்டம் இருக்கா?” என்று கேட்டாள் கிருஷி.

 

“யாரு டி பெரியம்மா?” என்று அவர் எகிற

 

“ஐயோ அத்தை என்ன அத்தை இது? உறவு முறை கூட தெரியாத அளவுக்கு உங்க புருஷன் தங்கையை வளர்த்து வச்சிருக்கிங்க,முதலில் எல்லா முறையையும் சொல்லி கொடுங்க” என்றாள் கிருஷி அன்று ஆதி தன் வீட்டில் கூறிய டோனிலே.

 

“உனக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாகிருச்சி” என்று மகாலிங்கம் கூற

 

“சின்ன மாமா, நல்லா கேட்டுக்கங்க. நான் அமைதியா இருந்தால் எனக்கு சாப்பாடு கிடைக்காது, எதுவுமே கிடைக்காதுன்னு புரூவ் பன்னிட்டிங்க. இனி அதிரடி மட்டும் தான். எனக்கு கொலை பசி, நான் சாப்பிட்டு வரேன்” என்று டையனிங் டேபளுக்குச் செல்ல திரும்பி அதே இடத்திற்கு வந்தாள்.

 

“இன்னொரு விஷயம், என்னை வம்பிழுக்காத வரைக்கும் உங்களுக்கு நல்லது. என் கிட்ட வாலாட்டினால் வாலை கட் பன்னிருவேன்” என்று செய்கை மூலம் செய்து காட்டி கண்சிமிட்டு விட்டு சாப்பிட அமர்ந்தாள். மற்றவர்கள் அவளை அதிர்ந்துப் பார்க்க ஆதி ‘ என் குட்டிபேபி வந்துட்டா’ என்ற படி மெல்லிய சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6

பனி 6   அடுத்த நாள் காலையே ஆதி கிருஷியைப் பார்ப்பதற்கு ஆர்வமாகக் கிளம்பினான். அங்கு சென்று பிரின்சியிடம் அனுமதி வாங்கி, கிருஷியின் வகுப்பிற்குச் சென்றான். அங்கே, அவன் எதிர்பார்த்தது போல் கிருஷி இருக்கவில்லை. மாணவ, மாணவிகளிடம் விசாரணைகளை முடித்து உனடியாக

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13

பனி 13   சிவபெருமாளின் வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் ஏறியவன் தன் நண்பன் ஒருவனிடம்   “வீட்டில் யாரு யாரு இருக்காங்க?, மற்றவர்கள் எல்லோருமே போயிட்டாங்களா? இல்லை கொஞ்சம் பேர் சரி வீட்டில் இருக்காங்களா?” என்று கேட்க,   “மச்சான் நமளுக்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 5யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 5

பனி 5   மெகெனிக் அவ்விடம் வந்தவுடன் இருவரும் அமைதியாகவே இருந்தனர்.   “ஆமா, நீ எவளோ நாளாக லெக்சர் பன்ற?” என்று அவன் கேட்க,   “ஏன், நீ எக்ஸ்பீரியன்ஸ பார்த்து, செலரியை கூட்டி தர போறியா?” என்று அவள்