Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23

பனி 23

 

“மச்சான் தங்கச்சை சமாளித்தாலும் உன் குடும்பத்தை சமாளிக்க முடியுமா?” என்று விகி கேட்க,

 

“கேள்வியை மாற்றி கேக்குற டா” என்றான் ஆதி.

 

“புரியிர மாதிரி சொல்லு?” என்று கூற

 

“என் குடும்பத்தை சமாளிப்பேன், ஆனால் உன் தொங்கச்சை சமாளிக்க நிறைய ஸ்ட்ரென்த், மூளை, அப்பாவி முகம் வேணும் டா” என்று ஆதி கூற

 

“அதென்டா மூளை, ஸ்ட்ரென்த், அப்பாவி முகம்” என்று கேட்டான் விகி.

 

“மச்சான் அவ அடிக்கும் போது அடி வாங்க ஸ்ட்ரென்த் வேணும். அவ எதையாவது அடிக்க ஆயுதம் எடுத்தால் அதிலிருந்து தப்பிக்க மூளை வேணும். அடிக்கும் போது அப்பாவியா முகத்தை வச்சிகிட்ட ஓரளவு என்னை மன்னிக்க வாய்ப்பு இருக்கு” என்று ஆதி கூற

 

“டேய் நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை. நீ பொழைச்சிப்ப” என்றான் விகி.

 

நால்வருக்கும் பகல் உணவை நிலா அறைக் எடுத்துக் கொடுத்தாள். அவள் வரும் போது பவியின் மடியில் கிருஷி படுத்திருக்க அவள் தலையை பவி வருடி விட்டாள். அதைப் பார்த்த நிலா பார்த்தும் பார்க்காதது போல சென்றுவிட்டாள்.

 

கிருஷியை அழைத்துக் கொண்டு ஆதி அங்கிருந்து சென்ற பின் சிவபெருமாள் அமைதியாக உட்கார்ந்தார்.

 

“அப்பா என்ன நடக்குது இங்கே? அவன் சொல்கிறது எல்லாமே உண்மையா? நீங்க பஞ்சாயத்து கூட்டாமல் என்ன பன்றிங்க?” என்று ராம் கத்த

 

கனகா சென்னையில் நடந்தது அனைத்தையும் கூற தளிர் இதை முதல் தடவை கேட்பது போன்ற ரியெக்ஷனை கொடுத்தாள். மற்றவர்களும் அதிரச்சியாக இருந்தனர்.

 

“அப்பா இப்போ என்ன பன்னலாம்?” என்று ராம் கேட்க,

 

“பஞ்சாயத்தை கூட்ட முடியாது. அவன் ரெகோட் பன்னியதை எல்லோர் முன்னாடியும் காட்டினால், நமக்கு அது அசிங்கம். மாமா யாரு எவருன்னே விசாரிக்காமல் முடிவு எடுத்து இருக்காருன்னு தப்பா பேசுவாங்க. அவன் யோசிச்சு ஒவ்வொரு அடியையும் வச்சிருக்கான்” என்று நேசன் கூற

 

“வேறு வழியே இல்லையா?” என்று ராம் கேட்க,

 

“இந்த நேரத்திற்கு இல்லை” என்று நேசன் கூறினான்.

 

“தேவ் உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன் டா” என்று அங்கே கர்ஜித்தார் சிவபெருமாள்.

 

இதைப் பார்த்த தளிருக்கு ஆதிக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று இதை பவியிடம் கூற வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

 

அன்றைய தினம் முழுவதும் அழுகையுடனே கழிந்தது அவர்களுக்கு.

 

பகல் உணவை பவி வற்புறுத்தி கிருஷிக்கு ஊட்டிவிட்டாள். பின் மற்ற மூவரும் உண்டனர். கிருஷி ஒரு வார்த்தையேனும் பேசாதது அவனுக்கு பயத்தை அதிகரிக்க வைத்தது.

 

மாலை நேரம் பவிக்கு அலுவலகத்தில் இருந்து அவளை வேலைக்கு அவசரமாக வருமாறு அழைப்பு வர நாளை மறு நாள் நிச்சயமாக வருவதாகக் கூறினாள்.

 

“அண்ணா நான் நாளைக்கு கிளம்பனும், விகி நீ எப்போ வருகிறாய்?” என்று பவி கேட்க,

 

“நானும் உன் கூடவே வரேன் டி. எனக்கும் வேலை இருக்கு. ஆதி இங்கே இருந்தே அவன் கேசை பார்த்துக்குவான். கமிஷனரிடம் அனுமதி வாங்கிட்டோம்” என்றான் விகி.

 

மாலை நேரம் கிருஷிக்காக ஆதி ஆடர் செய்த ஆடைகள் அடங்கிய பேக் வர அதை எடுத்து அறைக்கு வந்தான் ஆதி. திவிக்கோ இதை அனைத்தையும் பார்க்கும் போது கிருஷியின் மேல் இருந்த பழிவாங்கும் உணர்வு அதிகரித்தது.

 

அன்று இரவு கிருஷி எதுவும் உண்ணாமல் ஆதியின் அறையில் பவியுடன் உறங்க, ஆதியும்,விகியும் கெஸ்ட் ரூமில் உறங்கினர். அடுத்த நாள் இருவரும் அனைவரிடம் விடைபெற ஆதியிடம்,

 

பவி “அண்ணா கிருஷியை பற்றி உங்களுக்கு தெரியும். அவளை நல்லா பார்த்துகொங்க. அவளை கஷ்டபடுத்தாதிங்க. அவளுக்கு எப்பவும் துணையா இருங்க” என்பதை பல முறை கூறியிருப்பாள்.

 

விகியும் அவன் பங்கிற்கு, ” மச்சான் கிருஷி பாவம் டா, அவ கூடவே இரு. அவ எது பேசினாலும், திட்டினாலும் பொறுமையா இரு…” என்று தொடர

 

இருவரையும் பார்த்து கும்பிட்டவன்,

 

“அவ என் பொன்டாட்டி. அவ என் உயிரு டா. அவளுக்கு நான் பொறுப்பு. அவளை நல்லா பாத்துக்குறேன். அவ கிட்ட இருந்து யாரு என்னை காப்பாற்ற போறதுன்னு பயந்துட்டே இருக்கேன்” என்றான் ஆதி.

 

பவியும், விகியும் புன்னகைத்து அவனிடம் இருந்து விடைப் பெற்றனர். அன்றைய தினம் கிருஷி அறையை விட்டு வெளி வரவே இல்லை.

 

“நவி” என்று ஆதி அவளை அழைக்க அவளின் எரிக்கும் பார்வையில் அவன் அமைதியானான்.

 

அன்றிரவு வரை அவள் எதுவும் சாப்பிடாமல் இருக்க ஆதியே அவளுக்கு உணவை எடுத்துச் செல்ல, அவள் முதலில் மறுத்தவள் பின் அமைதியாய் சாப்பிட்டாள்.

 

‘ஆதி உன்னை அடிக்க சக்தி வேணும் வீக்காக கூடாதுங்குறதுக்காக நல்லா சாப்பிடுறா. அடிக்க போகிற அவளே இவளோ சாபிடுறா. அடி வாங்க போற நீ நல்லா சாப்பிடனும்’ என்று தன்னுடைய உணவை சாப்பிட்டான்.  பின் இருவருடைய தட்டையும் எடுத்து கீழே சென்றான்.

 

ராஜேஸ்வரி தன் மகனின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்தார். ஆதி அவளுக்காக உணவு எடுத்துச் செல்வது, அவளை கவனித்துக் கொள்வது மகாலிங்கத்திற்கும், திவியின் தாய்க்கும், திவிக்கும்  எரிச்சலை ஏற்படுத்தியது. அவள் உண்ட பிளேட்டை சென்று வொஷின்  பேசனில் இட்டவன் மேலே செல்ல,

 

“தேவ் ஒரு நிமிஷம்” என்ற மகாதேவனின் அழைப்பில் டையனிங் டேபளின் அருகில் வந்தான்.

 

“யேன் மகா ராணி அவ சாப்பிட்டை தட்டை கீழே கொண்டு வரமாட்டாளா? கால் வலிச்சுருமா?” என்று திவியின் தாய் கேட்க,

 

“அவ கீழே வந்தால் சமையல் கட்டுக்குள்ள விடுவிங்களா?” என்று திருப்பி கேள்வியை வைக்க அவர் அமைதியானார்.

 

“தேவ் நீ பன்றது சரியே இல்லை. அவளுக்கு இந்த அளவிற்கு சேவகம் பன்ன வேண்டிய அவசியம் இல்லை” என்று மகாலிங்கம் கூற

 

“சித்தப்பா என் அம்மா பொண்ணுங்களை மதிக்க கத்து கொடுத்து இருக்காங்க. அவ இனி என் பொன்டாட்டி அவ இயல்பா மாறுகிற வரைக்கும் நான் அவளுக்கு உதவி செய்வேன். தாலி கட்டினால் கடமை முடிந்தது. அப்படி நினைக்குற ஆள் நான் இல்லை. அவ எதிரியோட பொண்ணா இருந்தாலும், அவளுக்கும் மனசு, உணர்ச்சிகள் இருக்கு. அதற்கு நாம மதிப்பு கொடுக்க வேணும், இதை பற்றி இத்தோடு விட்ருங்க” என்று கூறி மாடிப்படியேற அது வரையில் அவன் பேசியதை அறைவாசலில் இருந்து கேட்ட கிருஷி அறைக்குள் நுழைந்தாள்.

 

அறைக்குள் நுழைய அவள் வாஷ்ரூமில் இருந்தாள். அது வரையில் அவன் கட்டிலில் அமர்ந்து கண்களை மூடினான்.

 

வாஷ் ரூமில் இருந்து வெளியே வந்தவள், பல்கனியின் வாசற் கதவில் சாய்ந்து நின்று வானத்தைப் பார்த்தாள்.

 

‘நவி’ என்று தோள் தொட

 

“சீ கையை எடு” என்று கத்தினாள் கிருஷி.

 

“உனக்கு உன் காதல் ஜெயிக்கனும், அதற்காக நீ எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவ. உனக்கு நான் தானே வேணும். என் தங்கையை வைத்து எதுக்குடா அப்படி பன்ன? உன் மேலே இருந்த மதிப்பு, நம்பிக்கை எல்லாமே போயிருச்சு. உன் மனைவியா நான் இப்போ இருக்கேன். என்னை முழுசா எடுத்துக்க. அதற்கு தானே ஆசைபட்ட எடுத்துக்கோ” என்று அவனது டீசர்ட் காலரை பற்றினாள்.

 

“நவி நீ ரொம்ப தப்பா பேசுற அப்பொறமா பேசலாம்” என்று ஆதி கூற

 

“என்ன டா தப்பா பேசினேன், எல்லா ஆம்பளைங்களை போல தான் நீயும், பொண்ணுங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குறது இல்லை. என் விருப்பம் இல்லாமல் என்னை மிரட்டி தாலி கட்டினவன் தானே நீ” என்று கூற

 

“கிருஷி சொன்னால் கேளு, இதோட விட்ரு, நாளைக்கு பேசலாம்” என்று ஆதி கூறி விலகிச் செல்ல

 

“என் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு போ” என்றாள் கோபமாக.

 

அவன் அதே இடத்தில் நிற்க,” இதே இடத்துல வேறு ஒரு பொண்ணு இருந்தாலும் அவளை கல்யாணம் பன்னி கொஞ்ச நாள் அவ கூட வாழ்ந்துட்டு அவளை துரத்திட்டு என்னை கல்யாணம் பன்னி தானே இருப்ப?” என்று கூற

 

“நீ எல்லையை மீறி பேசுற கிருஷி” என்று கூறினான் ஆதி.

 

“நான் சரியா தான் பேசுறேன். இப்போ என் அப்பாவை பழிவாங்குறதுக்காக என்னை கல்யாணம் பன்னிட்டு எனக்கு ஒரு குழந்தையை கொடுத்த பிறகு என்னை துரத்தி விட்டு இருப்ப” என்று கூற

 

“கிருஷி என் கோபத்தை அதிகபடுத்துற” என்றான் அடக்கிய கோபத்துடன்.

 

“இது தானே உன் திட்டம், என்னமோ என் கூட சந்தோஷமா வாழ்ந்து குடும்ப நடத்தி கடைசி வரைக்கும் வாழபோறவன் போல பேசுற! என்னை விரட்டினதுக்கு அப்பொறம் அந்த திவ்யாவை கல்யாணம் பன்ன தான் போற, அதற்கு எதுக்குடா இந்த காதல் நாடகம்?”

 

“அவ கூட சரி கடைசி வரைக்கும் வாழுவியா? இல்லை அவளை துரத்துவியா? அது சரி அவ கூட வாழத்தானே வேணும். அவ உன் குடும்பத்து பொண்ணாச்சே. அப்போ அவ மேலே காதல் இருக்கும். என் மேலே இருக்கிற காதல் அப்போ மறைந்து விடும். உன் காதல் எந்த பொண்ணு உன் கூட வாழுறாளோ அவளுக்கு கிடைக்கும். ஒரு பொருள் போல” என்று கூறி முடியும் போது அவள் கன்னத்தை பதம் பார்த்தது அவன் கை.

 

அதில் சுருண்டு விழ அவள் நெற்றி மேசையில் அடிபட இரத்தம் வழிய

 

‘நவி’ என்று ஆதி கத்தினான்.

 

அப்போதே கண்விழித்தவன், கண்களைத் திறந்து பார்க்க கட்டிலின் முன்னே நின்று மார்பிற்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தாள்

 

“என்ன சேர் நான் உங்களை கோபபடுத்தி என்னை அறையிறது போல கனவு கண்டிங்களா?” என்று கேட்டாள் கிருஷி.

 

அவன் மேலும் கீழுமாக தலையாட்டினான். பின் கிருஷி எதுவும் கூறாமல் சென்று கட்டிலின் மறுபுறத்தில் சென்று படுக்க முன் கட்டிலின் தலையணைகளை நடுவில் அடுக்கினாள். அவளுடைய இடத்தில் போர்வையை எடுத்து போர்த்திப் படுத்தாள்.

 

ஆதி அவளின் செய்கையை விழித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

‘என்னடா இது அமைதியா இருக்கா, ஒன்றுமே சொல்ல மாட்டேங்குறா? என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசித்து வாஷ்ரூமிற்குச் சென்று வந்து அவன் இடத்தில் உறங்க,

 

‘என் நவி என்றைக்கும் அப்படி பேச மாட்டாள். என் காதலை கொச்சபடுத்த மாட்டா. நல்ல வேளை அது கனவு. இல்லை என் நவியை நானே அடிச்ச குற்ற உணர்ச்சியில் இருந்து இருப்பேன். என் நவியை எப்படியாவது பழைய மாதிரி மாற்ற வேணும்’ என்று எண்ணியவன்,

 

“கடவுளே என் நவியை நான் சந்தோஷமாக பார்த்துக்கனும், என்னை விட்டு எப்போதும் பிரிச்சிராத, அவளை பாதுகாப்பா பார்த்துக்கனும்” என்று வேண்டினான்.

 

அவனது பாதுகாப்பு விடயம் மட்டும் அவர் காதுகளுக்கு எட்டவில்லை போலும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 34

பனி 34   கிருஷியைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் நேசன் கூற இருவருமே அதிரந்தனர்.   அப்போது “அண்ணா” என்ற குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்க்க ஒரு பெண் நின்று இருந்தாள்.   இருவரும் “ஐஷூ, உள்ள வா மா”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 18யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 18

பனி 18   “மாமா நான் வேணியை கல்யாணம் பன்னிக்குறேன்”என்றான் நேசன்.   “நேசன், நீயா? ஆனால் அவ இதை ஒத்துகுவாளான்னு தெரியாது” என்று பெருமாள் கூற   “மாமா இப்போ கேட்டால் யாரையும் கல்யாணம் பன்னமாட்டேன்னு உறுதியா சொல்லுவா. கொஞ்ச

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 28யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 28

பனி 28   கிருஷியும், ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கிருஷியோ அவன் அருகில் வரவே இல்லை. தூரத்தில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் கண்ணில் வலியைக் கண்டவன் தன் முகத்தைச் சீர் செய்துக் கொண்டான் தன்