Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),சிறுகதைகள் இனி எல்லாம் சுகமே – Audio

இனி எல்லாம் சுகமே – Audio

வணக்கம் தோழமைகளே,

‘இனி எல்லாம் சுகமே’ என்ற அழகான கதையின் மூலம் நம் தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் சூர்யா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இந்தக் கதை அனைவருக்குமானது அல்ல என்று முன்னரே எழுத்தாளர்  குறிப்பிட்டுவிட்டார். இருந்தாலும் கதையின் ஒவ்வொரு வார்த்தையும் எங்களையும் அந்த சூழலுக்கே அழைத்து சென்றது. நன்றி சூர்யா.

இனி எல்லாம் சுகமே  

சூர்யா

 

 

காலை மணி 4 :40 . இப்போதெல்லாம் வழக்கமாக 5 :30 க்கு  அலறும் அலாரத்திற்கு முன்பாகவே முழிப்பு வந்துவிடுகிறது . இதோ இன்னுமொரு யுகம் ஆரம்பித்துவிட்டது . மீண்டும் இரவு உறக்கம் வரும் வரையில் ஏதோ ஒரு உறுத்தல் உறுத்தி கொண்டே இருக்கும் .
எவ்வளவு தான் புரண்டு புரண்டு படுப்பது .சரி எழுந்துவிட வேண்டியதுதான்.  படுக்கை அசைவில் தூக்கம் கலைந்த கணவன் என் கைகளை பற்றினான் .
“ம்ம்ம்ம்ம் இதோ வரேன் …..” என்று சொல்லி நழுவினேன் .
இப்போதெல்லாம் எதிலும் நாட்டம் இல்லை .

காலை கடமைகளை முடித்துவிட்டு , உறக்கத்தில் இருக்கும் எனது ஏழு வயது  மகனை பார்த்தேன் . நன்றாக தூங்கிகொண்டு இருந்தான். அவனருகில் என் அம்மா , இந்த வாரம் எங்களோடு தங்கிவிட்டு செல்வதாய் வந்திருக்கிறார் . அம்மா உடன்  இருக்கும் வரை சற்று ஆறுதலாக இருக்கும். கொஞ்சம் குழந்தையை நான் கவனிப்பதுபோலவே   பார்த்துகொள்வர். இந்த உலகத்தில் நானும் என் கணவரும் ஆதரவாக தலை சாய்த்துக்கொள்ளும் ஒரே ஜீவன்.
விறுவிறுவென அடுப்புவேலையை முடித்து , மூவர்க்கும் லஞ்ச்பேக் பண்ணிகொண்டு அலுவலகத்திற்கு ரெடி ஆகியாச்சு .குழந்தை சார்விக்கையும் கிளப்பியாச்சு .நானும் அவரும் ஒரே ஆபீஸ்என்பதால் வழியில் சார்விக்கை அவன் போகும் பள்ளியுள் விட்டு விட்டு செல்வோம்.
ஏனோ அந்த பள்ளிக்குள் செல்லும் ஒரு ஒரு முறையும் மனம் ஒப்பவே மாட்டேன்கிறதே ….., அங்கு இருக்கும் ஒரு ஒரு குழந்தையும் பார்க்கவே முடிவதில்லை …., இவர்களோடு நான் பெற்ற மகனும் …
கடனே என்று ஒரு புன்னகையுடன் வெளியே வந்து கார்றில் ஏறி ஆபீஸ் வந்தாச்சு.வழி முழுவதும் பெரும்பாலும் மௌனமே …

மணி 9 :35  இன்னும் ஒரு 8 மணி நேரத்திற்கு விடுதலை . வழக்கமான அலுவல்களில் மூழ்குவதே ஒரு இளைப்பாறுதல்தான் . இடையில் காபி பிரேக் . வழக்கமாக கூடும் மூன்று தோழிகள் வாந்தாச்சு. அணைத்து வயதையும் ஒட்டிய தோழிகள்.
எங்கள் எல்லோருக்கும் இந்த இடைவேளை ஒரு வரப்பிரசாதம் தான் .
எங்களுக்கு  இருக்கும் பிரச்சனைகள் மற்றும் சந்தோசங்கள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படும்.

ஒருவர் தனது உடல் சார்ந்த பிரச்னை பற்றியும் , ஒருவர் தனது வளர்ந்த  கல்லூரி செல்லும்  பிள்ளைகளை பற்றியும் , அவர்களால் உண்டாகும் மனஉளைச்சல் பற்றியும் அங்கலாய்ப்பார்.

இன்னும் ஒரு தோழி என்னை போன்றவர் .பெரும்பாலும் நாங்கள் இருவரும் தனிமையில் தான் பேசிக்கொள்வோம். ஆம் இருவரும் ஒரே போன்ற தொனியில் பயணிப்பவர்கள் …
எங்கள் மனஅழுத்தம் எங்களை போன்றோருக்கு மட்டுமே புரிக்கும் .
நாங்களும் எல்லோரை போலவே பயணத்துக்கு தயாராகிறோம் , ஆனால் எங்கள் பயணம் மட்டும் வேறு எதோ போக்கில்… விளங்காத விவரிக்க முடியாத ஒரு பயணம். எந்நேரமும் ஒரு படபடப்பு ,எந்நேரமும் ஒரு தவிதவிப்பு …  எப்போதும் ஒரு மனபாரம் …

ஆம், என் பிள்ளைக்கு ஆட்டிசம் … பிறந்து முதல் ஒண்ணரை வருடம் எந்த பிரச்னையும்  இல்லாமல் மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. மெல்ல மெல்ல அவன் செயல்களின் வித்யாசம் தெரிய , மருத்துவரின் ஆலோசனை செய்தோம். அன்றோடு போனது என் நிம்மதி . வழக்கமாக செய்யும் அணைத்து விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.
சிரிப்பு குறைந்தது, நன்றாக அலங்காரம் செய்வது குறைந்தது , கணவரிடம் ஆசையாக பேசி நாளாச்சு.  கல்யாணம் ,விஷேசம் , பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் தவிர்க்க ஆரம்பிச்சாச்சு.
இரெண்டு வருஷத்திற்கு  ஒருமுறை ரிலீஸ் ஆகும் என் தலைவர் படத்திற்கு கூட போவது இல்லை. ஒரே ஆறுதல் அலுவலகமும் , என் அம்மா என் வீட்டிற்கு வரும் நாட்கள் மட்டும் தான் .
வயது ஏற ஏற அவனை சமாளிப்பது பெரிய வேலையாகவே உள்ளது . மக்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்கு போகவே முடிவதில்லை . எப்போ அமைதியாக இருப்பான் , எப்போ அலறுவான் என்று யூகிக்கவே முடியாது.

அவன் குதித்து அலறி ஓடும்போது நம்மை பாவத்தோடு பார்க்கும் பார்வைகள் குத்திக்கிழிப்பதாகவே தோன்றுகிறது. அவனை சமாளித்து ஆசுவாசப்படுத்தி அமரவைப்பதற்குள் அப்பப்பா… இப்போதெல்லாம் கைவலி வேறு …
இதற்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா ? இன்று ஏனோ மனம் அதிக பாரமாகவே உள்ளது.
திடீரென அழைத்த கைபேசி என் எண்ணத்தை சிதறடித்து .என் கணவர் தான் …

“கிளம்பலாமா…?” ஒரே வார்த்தை தான் .
“ம்ம்ம்ம்ம்ம்…..” மீண்டும் ஒரே வார்த்தை …
மீண்டும் அதே பயணம் , பள்ளியை நோக்கி …
உள்ளே சென்றதும் , என்னை பார்த்த என் குழந்தை சார்விக்

“ம்ம்ம்ம்மாஆஆஆ………..”  என்றபடி ஓடி வந்தான்.

ஆம் அவன் பேசும் ஒரே வார்த்தை …
என்ன ஒரு வெகுளியான நேர்மையான அன்பான சிரிப்பு … அதுவும் எனக்கே எனக்கு சொந்தமான , எனக்கே எனக்காக மட்டுமே சிந்தும் இந்த சிரிப்பு …

கூடவே  ஓடி வந்து எனது கால்களை கட்டி அணைத்து … என் முகத்தையே  ஆழுந்து பார்க்கும் பார்வை , அதில் தெரிய போகும் புன்னகைகாக ஏங்கும் பார்வை… நிறைய நேரம் அதை நான் கவனிப்பதே இல்லை.
ஆனால் இன்று ஏனோ அவன் சிரிப்பு , அவன் பரவசம் என்னை ஏனோ செய்தது. என்னுள் பல கேள்விகளை எழுப்பியது …
ஆம் . எதற்காக  இந்த நெருடல் ? எதற்காக  இந்த பாரம்? எதற்காக இந்த மனப்போராட்டம் ? யாரை நினைத்து இந்த கூனிக்குறுகல் ?
என்னைப்  போன்றோர் மகிழ்ச்சியாக இருக்கவே முடியவில்லையே ?
இன்று இந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் . …… ஆம் .
நன்றாக யோசித்து பார்த்ததில் ஒன்று சட்டென்று உதித்தது

தோழியே … இப்போது நம்மிடையே வாழும் மனிதர்களில் பாதிபேர் இன்னும் 50 வருடம் கழித்து இந்த உலகத்தில் இருக்க போவதில்லை … நாம் வாழும் வாழ்க்கையை யாரும் கல்வெட்டுகளில் எழுதபோவதில்லை … பிறகு ஏன் இன்னும் இந்த கவலை ?

தன் மகள் வயிற்று  பேரன் பேத்திகளுடம்  என் மகனை ஒப்பிட்டு , நான் படும் பாட்டை பார்த்து எள்ளி நகையாடும் மாமியாரை எண்ணிக்  கவலையா?

விட்டுதள்ளு  அதன் டிசைனே அப்படித்தான். நன்றாக வாழ்பவர்களை பார்த்துகூட அது அப்படித்தான் சிரிக்கும் , வெகு சில மாமியார்களை தவிர ….. பிறகு ஏன் இன்னும் இந்த கவலை ?
மித்த இயல்பாக இருக்கும் குழந்தைகளோடு ஒப்பிடும் பொழுது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது ….உண்மைதான் ….மித்த பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் அறிவில் வளர்ந்து வரும் போது , நாம் மட்டும் இன்னும் பேசுவதற்கும் , சாப்பிடுவதைக்கும், கக்காய் போவதற்கும் சொல்லிக்கொடுக்க பாடாய் படும் போது ஏற்படும் ரணத்திற்கு மருந்தே கிடையாதுதான் …..

ஆனால் ஒன்று யோசித்து பார்….. ஆம் . எதற்காக அந்த இயல்பான குழந்தைகள் அவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறார்கள் ? பிற்காலத்தில் சந்தோசமாக இருப்பதற்கு தானே … அப்படி இருக்க இயற்கையிலேயே சந்தோசமாக இருக்கும் உன் குழந்தையை நீ ஏன் உன் ஊனகண் கொண்டு  பார்க்கிறாய் …?
உன் சிறு குழந்தை உன் முகத்தில் தெரியும் சிரிப்பிற்காக அல்லவா ஏங்குகிறது …..இனி எப்பேர்ப்பட்ட பார்வை உன்னை குத்திக் கிழிந்தாலும் சரி உன் குழந்தைகாக மட்டுமே ஆவண செய்… எப்போதும் உன் குழந்தையின் சிரிப்பிற்காக மட்டுமே மெனக்கிடு .

உன்னில் இருக்கும் கேள்வி என்ன ?  உன் குழந்தையின் எதிர்காலம் தானே…??  விட்டு தள்ளு . இயல்பாக நல்ல கால் கை சுகத்தோடு இருக்கும் நமக்கே நாளை என்ன நடக்கும் என்று தெரியாதபோது இந்த குட்டி கடவுளை பற்றி ஏன் கவலை படுகிறாய் தோழியே …..கவலை வேண்டாம் . Everybody has space in this world  !!!!!
நாம் செய்யும் நன்மைகள் நம் பிள்ளைகளை காப்பாற்றும் !!
இனி ஒரு போதும் இந்த சிரிப்பு ஏன் முகத்தை விட்டு மாறாது…

— எழுத்தாளர் சூர்யா

6 thoughts on “இனி எல்லாம் சுகமே – Audio”

 1. Hi Surya,
  I happened to read your story accidentally. Yes, i am also Mother of special child.in the same path. Don’t get time to do normal things..very nicely written.
  It is hard to ignore those situations, people but we have to that for children’s well-being.. Many people in Our society including family don’t understand that Kids with Autism can observe and understand even though they can’t express like others. Changing the attitude and happily playing or joining the child can make so much difference in child’s life. I appreciate you for writing this story and what you are doing for your Son. Thank you..

 2. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… இக்கருவை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு…

  இதுபோன்ற ஸ்பெஷல் பிள்ளைகள் உள்ள பெற்றோர்கள் மட்டுமே கூடுதலான மனஅழுத்தமும் இன்னல்களும் எதிர்கொள்ளவேண்டிய நிலையை என்ன சொல்ல???? அவர்கள் எதிர்ப்பார்ப்பது பரிதாப பார்வையோ ஏளன பார்வையோ அல்ல என்று எவ்வளவு எடுத்துக் கூறினாலும் புரிந்தும் புரியாமல் போகும் மக்களை என்ன சொல்ல? நம் சமூகத்திற்கும் இதில் பங்குள்ளது … இதுபோன்ற பள்ளியில் சேர்க்கும் நிலை கூட இல்லாத பெற்றோர்கள் நிலையை என்ன சொல்ல?
  சமூக நலத்துறை என்ற ஒன்று நம் நாட்டில் உள்ளதே … அதன் மூலம் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை நல்லவிதமாக மாற்றி அமைக்க முடிந்ததா?
  சிறுவயது முதலே மற்றவரிடம் அன்புசெலுத்தும் பண்பை (நிறம், மொழி, மதம், இனம்.. வேறுபாடின்றி) வளர்ப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு வளரும் குழந்தை எதிர்காலத்தில் என்னிலையிலும் ஏளனமாக/பரிதாபமாக பார்க்காது…
  தனிமனிதனே குடும்பம் மற்றும் சமூகத்தின் அங்கம்.. ஆகையால் ஒன்றோடுஒன்று பின்னிப்பிணைந்த கட்டமைப்பு பலமாக இல்லையேல் இதுபோன்ற குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்/ குடும்பம் நிலையில் மாற்றம் இருக்காது….

  அன்பும் அரவணைப்புமே எல்லோருக்கும் தேவை!

 3. Romba urukkamaana kadhai. Intha maadhiri kuzhandhaigaloda parentsin mananilai romba azhagaa solli irukkeenga. Neenga sollra maadhiri andha kuzhandhaigal pure hearted and innocent. Avargal ethir paarpu anbai thavira veru ondrume illai. Ulagathukkaaga bayanthundu namba kuzhandhaigalta veruppum dhveshamum kaanbithaal adhu nalladhu illai. Parentsku niraiya mana varutham irukkum namakku mattum aen ippadi endru. But adhu ellaam thaandi dhaan vara vendi irukku.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’

மதுரை, பெரியார் பஸ்டாண்டில் காளவாசல் வழியே செல்லும் பஸ்ஸில் ஏறினாள் வைஷாலி. இளங்கலை முடித்து விட்டாள். கையில் டிகிரி சான்றிதழ் வாங்கியவுடன் சந்தோஷமாய் மீனாக்ஷி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தோழியர்களிடம் பிரியா விடை பெற்றுக் கிளம்பினாள். அப்பா இறந்ததும் அவர்கள் 

அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’

1        அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,      “மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…” என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின்

உள்ளம் குழையுதடி கிளியே – 28உள்ளம் குழையுதடி கிளியே – 28

அத்யாயம் – 28 காலையில் வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கேட்டுக் கண்விழித்த ஹிமாவுக்கு நடந்ததெல்லாம் கனவா நினைவா என்று நம்பவே முடியவில்லை. செல்லும் திக்குத் தெரியாமல் நடுரோட்டில் குழந்தையுடன் நின்றவளை நோக்கி ஒரு சுமோ வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் சரத்தின்