Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 22

பனி 22

 

“பெரியம்மா உள்ள வரலாமா? பிசியா இருக்கிங்களா?” என்று நிலா அனுமதி கேட்டு ராஜேஸ்வரியின் அறையின் கதவு அருகில் நின்று இருக்க,

 

“வா நிலா, பைல்சை பார்த்தேன். நீ உள்ள வா” என்றார் ராஜேஸ்வரி.

 

உள்ளே வந்தவள் ராஜேஸ்வரியின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

 

“நேற்றுலிருந்தே உங்களுடன் பேச வேணும்னு இருந்தேன். திவி என் கூட இருக்கா,ஸ. அதனால் பேச முடியல்லை. இப்போ அவ பிரன்சு கூட பேசிட்டு இருக்கா. அவ வர இன்னும் ஒன் ஹவர் ஆகும்” என்றாள்.

 

“என்ன விஷயம் மா?” என்று கேட்க,

 

“பெரியம்மா அண்ணாவோட கல்யாண விஷயத்தை பற்றி” என்று கூறி தயங்கி அவரைப் பார்க்க

 

அவர் புருவங்களை சுருக்கி அவளைப் பார்க்க,

 

“புரியிது, நான் இதைப் பற்றி இந்த சின்ன வயசுல பேச கூடாது. ஆனால் அண்ணா கஷ்டபடுகிறதை பார்க்க முடியல்லை. நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்று கேட்க,

 

“நீ உன் அண்ணனுக்காக பேசுறதுக்கு வந்திருக்க, இதுல தப்பா நினைக்க எதுவுமே இல்லை” என்றார்.

 

“அண்ணா வேறு ஒரு பொண்ணை காதலிக்கிறாரு ” என்று கூற

 

“எப்படி சொல்ற?” என்று கூற

 

“அண்ணா கடைசி முறை வந்தப்போ, நாங்க லவ் கேம் விளையாடினோம்” அந்த கேமைப் பற்றி விவரித்தாள்.

 

“அப்போ அண்ணாவோட வாய் மெதுவாக ஒரு பொண்ணோட பெயரை உச்சரிச்சது. அதை திவி கவனிக்க இல்லை. நான் கவனிச்சேன். நாங்க கேட்டதுக்கு அப்படி யாருமே இல்லையேன்னு ரூமுக்கு போயிட்டான். அதற்கு அப்பொறமா, அண்ணாவோட முகம் பிரைய்டா, சந்தோஷமா இருந்தது. அவளை தவிற அண்ணா நிச்சயமா வேறு எந்த பொண்ணையும் கல்யாணம் பன்ன மாட்டான்” என்று நிலா கூற

 

அன்று அவன் மீண்டும் சென்னைக்கு செல்லும் போது, அவனுடைய முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை நினைத்துப் பார்த்தார். ஆம் அவன் காதலிக்கிறான் என்பதை நானும் கண்டுபிடித்தேனே. ஆனால் அவன் முகத்தில் இருந்து வலியின் ரேகைகளுக்கு காரணம் என்ன? மீண்டும் இங்கே வருகை தந்த அடுத்த நாள் அவன் முகத்தில் இருந்த தெளிவும், சந்தோஷமும் காணாமல் போய் இருந்ததே என்று நினைத்தார்.

 

“அண்ணி” என்ற கத்தலில் நிலாவும், ராஜேஸ்வரியும் கீழ்மாடிக்கு அவசரமாகச் சென்றனர்.

 

ஆதி காரை விட்டு இறங்கும் போது,

 

‘இவள் என் மனைவி, யாரிற்காகவும் இவளை விட்டுக் கொடுக்கக் கூடாது. இவளும் இவள் பாதுகாப்பும் என் பொறுப்பு. இவளுக்கு துணையாக நான் நிற்க வேண்டும். காதலையும், அன்பையும் இவளுக்கு வழங்கி வாழ்கை முழுவதும் இவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற உறுதியுடன் அவள் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

 

அவர்கள் இருவரும் மணக் கோலத்தில் வந்து நிற்பதைக் கண்ட மகாலிங்கம் கொதித்து எழுந்து

 

“அண்ணி” என்று கத்த முழுக் குடும்பமும் அங்கே ஆஜராகியது. அனைவருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

 

“யாரை கேட்டு தேவ் சிவபெருமாளோட பொண்ணை கல்யாணம் பன்ன?” என்று மகாலிங்கம் கர்ஜிக்க

 

மற்றவர்கள் இந்த அதிர்ச்சியில் உறைந்தார்கள் என்பது உண்மையே.

 

சங்கரன் “இவ சிவபெருமாளோட பொண்ணா? நீ சென்னையில் தானே இருந்த?” என்று கூற

 

இது வரையில் தலை குனிந்து இருந்த கிருஷி தனக்கு பரீட்சயமான குரல் என்று தலைநிமிர்ந்துப் பார்த்தாள்.

 

“அங்கிள் நீங்க எப்படி இங்க?” என்று கிருஷி கேட்க,

 

“நான் ஆதியோட சித்தப்பா” என்று கூறியதில் கிருஷி தற்போது அதிர்ச்சியானாள்.

 

“தம்பி இந்த பொண்ணை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்று ராஜேஸ்வரி கேட்க,

 

“ஆமா அண்ணி” என்று கிருஷியை பார்த்தது எவ்வாறு என்று கூறினார்.

 

அவர் கம்பனி விஷயமாக வெளியே சென்ற போது காரில் இவர் அமர்ந்து இருக்க, இவருக்கு பிரஷர் குறைந்தால் மயக்கம் ஏற்பட்டு அப்படியே மயங்கி இருந்தார். டிரைவர் இவருக்கு சாப்பாடு வாங்கச் சென்று இருந்தான். அவருடைய கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு அருகில் தன் ஸ்கூர்டியை நிறுத்தப் பார்த்தவள் இடம் போதாமல் போக, அவருடைய காரை சிறிது முன்னால் நிறுத்துமாரு கூற வந்தவள் முன் இருக்கையில் டிரைவர் சீட்டிற்கு அண்மையில் சாய்ந்து கண்மூடி இருப்பவரைக் கண்டாள்.

 

“ஹலோ சேர்” என்று கண்ணாடியைத் தட்ட அவர் எழவில்லை.

 

தொடர்ந்து தட்டியும் அவர் எழாமல் இருக்க, கிருஷி பயத்தில் அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க டிரைவரும் அங்கு வந்து சேர்ந்தான்.

 

“அண்ணா நீங்க டிரைவரா?” என்று கிருஷி கேட்க,

 

“ஆமா மெடம் என்னாச்சு?” என்று அவர் கேட்க,

 

“உள்ள இருக்கிறவரு மயங்கிட்டாரு. அவசரமா கதவை திறங்க” என்று கூற அவரும் கதவைத் திறந்து பார்க்க சங்கரன் மயங்கி இருப்பதைப் பார்த்தவள் உடனே ஹொஸ்பிடலிற்கு அழைத்துச் செல்ல கிருஷி அவளது ஸ்கூர்டியில் அவர்களது காரை பின் தொடர்ந்தாள்.

 

அவரை உடனே அட்மிட் செய்து டீரிட்மன்டை ஆரம்பித்தனர்.

 

பிரஷர் குறைந்து இருப்பதாகக் கூற, சில மருந்துகளை வாங்கக் கூறி டாக்டர் சென்றார்.

 

“மெடம் நான் வரும் வரைக்கும் சேர் கூட பக்கத்துல இருக்க முடியுமா?” என்று கேட்க,

 

முதலில் தயங்கியவள் பின் ‘தன் தந்தைக்கு இவ்வாறு நிகழ்ந்து இருந்தால் நான் நிச்சயமாக இருப்பேனே’ என்று நினைத்து சரி என்றாள்.

 

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவள், அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள். அவர் கண்களை விழிக்க,

 

“நீ யாருமா?” என்று கேட்க,

 

“இல்லை சேர் நீங்க காரிலேயே மயங்கி இருந்திங்க. அதை பார்த்த பிறகு உங்க டிரைவர் கூட வந்து உங்களை அட்மிட் பன்னேன்” என்று தெளிவான குரலில் கூறினாள்.

 

சங்கரனுக்கு பார்த்த உடனேயே அவளைப் பிடித்துப் போனது. ஆதியைப் போலவே இவளுக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உள்ளதே என்று தேவுடன் இவளைச் சேர்த்துப் பார்க்க ஜோடிப் பொருத்தம் அமோகமாக இருந்தது.

 

டிரைவர் உள்ளே வர,

 

“சேர் எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன். டைமுக்கு சாப்பிடுங்க நல்லா ரெஸ்ட் எடுங்க” என்று கூறினாள்.

 

“சேர் அப்படி பேசாத மா, அங்கள் ன்னு பேசு” என்று சிரித்த முகமாக கூற

 

“வரேன் அங்கிள், திரும்ப மீட் பன்னலாம்” என்று கூறி புன்னகைத்து விடைப் பெற்றாள்.

 

என்று கூறி முடியும் போது எவருக்கும் என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

 

“சரி எதுக்காக இவளை கல்யாணம் பன்ன தேவ்?” என்று மகாலிங்கம் கேட்க,

 

“சித்தப்பா உங்களுக்கு சிவபெருமாளை இவளை வச்சி பழிவாங்கனும். அதற்கு இவளை கொல்ல அவசியம் இல்லையே. இது அவரு வாழ்க்கை பூரா அவர் மேலே பூசப்பட்ட கறி. இதை அவரால் துடைத்து எறிய முடியாது” என்றான்.

 

கிருஷியோ அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்.

 

“தேவ் உனக்கு நாங்க திவியை கல்யாணம் பன்னி வைக்க இருந்தோம். நீ என்னடான்ன இவளை போய் கல்யாணம் பன்னிட்டு வந்து இருக்க?” என்று அவன் அத்தை கேட்க,

 

“நான் திவியை கல்யாணம் பன்னிக்குறேன்னு சொல்லவே இல்லையே அத்தை” என்றான் ஆதி.

 

“பார்த்தியா எங்க பையனை வந்ததும் வராததுமா எங்களையே எதிர்த்து பேச வச்சிட்டாளே இந்த கேடுகெட்டவள்” என்று கத்தினார் திவியின் அம்மா.

 

‘எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துட்ட இல்லை?’ என்ற பார்வையை அவன் மீது வீசினாள் அவள்.

 

“அத்தை இப்போ இவ என் மனைவி. உங்க யாருக்கும் இவளை ஏத்துக்க முடியல்லன்னா விட்டுடுங்க, அதை விட்டுட்டு தப்பா பேசாதிங்க” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்

 

“தேவ் என்ன இருந்தாலும் இவ நம்ம எதிரி வீட்ட பொண்ணை கல்யாணம் பன்னி உன் வாழ்க்கையை நாசமாக்கி இருக்கக் கூடாது” என்று கோமதி கூற

 

அனைவரும் அதை ஆமோதிப்பதாய் அவரை பார்த்தனர்.

 

“சித்தி எனக்கு கல்யாணம் பன்னி வைக்கனும் அப்படின்னு எல்லாரும் ஆசைபட்டிங்க. கல்யாணம் பன்னிட்டேன். இதை இத்தோடு விட்ருங்க” என்று கூறி பவியிடம் திரும்பியவன்

 

“பவி உனக்கு ஒரு ரூம் ரெடி பன்ன சொல்றேன் அது வரைக்கும் என் ரூமில் கிருஷி கூட இரு” என்று கூறி பவியை அழைத்துக் கொண்டு கிருஷியை உள்ளே அழைத்துச் சென்று அவன் அறைக்கு சென்றான்.

 

திவி கிருஷியை குரோதத்துடன் பார்க்க இனிமேல் அவளை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று முடிவு எடுத்தாள். நிலாவோ அண்ணன் காதலித்த பெண் இவளாக இருக்குமோ என்ற சந்தேகமாகப் பார்த்தாள். ஏனோ சங்கரனுக்கு இருவரின் மீதும் கோபம் வரவில்லை. மகாலிங்கம் இதை ஏற்க முடியாமல் இருக்க, எவ்வாறாவது அவளை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தார்.

 

ராஜேஸ்வரி அவன் இங்கு வருகை தந்தில் இருந்து அவள் கையை விடவே இல்லை என்பதைப் பார்க்க அவருக்கு குழப்பங்கள் தெளிவது போல் இருந்தாலும், இன்னும் இரண்டு குடும்பத்தின் பகை அதிகரித்துவிட்டதே, இனி எது எல்லாம் நடக்க இருக்கின்றதோ என்று பயந்தார். மகனின் முகத்தில் தெரிந்த தெளிவும், நிம்மதியும், சந்தோஷமும் அவருக்கு ஆறுதலாக இருந்தது.

 

ஆதி பவியை அழைத்துச் செல்வதைப் பார்த்த ராஜேஸ்வரி

 

“யாரு தம்பி அந்த பொண்ணு?” என்று விகி கேட்க,

 

“நான் கல்யாணம் பன்ன போறவ, கிருஷியோட பிரன்டு” என்று கூறி அங்கிருந்து மெதுவாக நழுவி அவனும் ஆதியின் அறைக்குச் சென்றான்.

 

“அண்ணி பார்த்திங்களா? நாங்க அவளோ சொல்லியும் அந்த சிறுக்கியை அவன் ரூமிற்கே கூட்டிட்டு போயிட்டான்” என்று பொரிந்துத் தள்ளினார் மகாலிங்கம்.

 

“தம்பி புரியிது, தேவ் யோசிக்காமல் எதையும் பன்ன மாட்டான். அது உங்களுக்கே நல்லா தெரியும். நாங்கள் எது சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். அவன் சொன்ன விஷயங்களிலும் உண்மை இருக்கே. அவளை கொல்கிறதுக்கு அவசியம் இல்லையே. குடும்ப பிரச்சனையில் பொண்ணுங்களை உள்ள இழுக்கிறது தப்பு தம்பி. பொறுத்து பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு?” என்று கூறி அவர் அறைக்குச் சென்றார்.

 

சங்கரன் அவர் மனைவி, நிலா, அம்பிகா அனைவரும் உள்ளே செல்ல திவ்யா அழுதுக்கொண்டே அறைக்கு ஓடினாள். மகாலிங்கம், அவரது தமக்கையும் அதைப் பார்த்துக் கவலைப்பட்டனர்.

 

“தம்பி அவளை சும்மா விட கூடாது, என் பொண்ணை அழ வச்சிட்டா” என்று வஞ்சகத்துடன் கூற

 

“நான் பார்த்துக்குறேன் அக்கா” என்று அங்கிருந்து வெளியே சென்றார்.

 

அறைக்கு வந்த நால்வரும் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. ஆதி கூறியபடி முகம் அலம்பி அங்கு இருந்த கதிரையில் அமர்ந்தாள் கிருஷி. அவள் அருகில் அமர்ந்த பவி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

 

ஆதியும், விகியும் பல்கனியில் நின்றுக் கொண்டு இருந்தனர்.

 

“மச்சான் என்ன டா என் தங்கச்சி ஒரு வார்த்தை சரி பேச இல்லை. இது தான் புயலுக்கு முன் அமைதிங்கிறதா?” என்று கேட்க,

 

“ஆமா டா, அதை நினைச்சா எனக்கு கூட வயித்துல ஏதோ பன்ற மாதிரி இருக்குடா, பயமா தான் இருக்கு” என்றான் ஆதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

பனி 17   “அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.   சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 26யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 26

பனி 26   கிருஷி மெயில் அனுப்பி, தனக்குப் பதிலாக ஒரு மாதத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு வேண்டி இருந்தாள். அதற்காக அவர்களும் வேறு ஒருவரை நியமித்து இருந்தனர். திவி கோபத்தில் அவ் இடத்தை விட்டு வெளியேற நிலா அவள் பின்னாலேயே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 16யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 16

பனி 16   கிருஷி கால்களை நனைப்பதற்காக கோயிலின் குளத்தில் கடைசிப் படியில் நிற்க, அதே நேரம் மகாலிங்கம் அனுப்பிய ஆள் அவள் அவளை தன் புறம் திருப்பி வயிற்றில் கத்தியை இறக்க கையை ஓங்கும் அதே நேரம் அவளை குளத்தில்