Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 19

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 19

பனி 19

 

பவி கிருஷியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கல் மலைக்கு சென்றாள். இவர்கள் இருவரின் பாதுகாப்பிற்காக மலையின் அடிப்பகுதியில் ஆட்கள் நின்று இருந்தனர். இவர்கள் மேல் சென்ற போது அங்கே ஆதியும், விகியும் இருந்தனர் ஒருவருடன் ஒருவர் பேசிய படி. அவர்கள் இருவரின் வருகையைப் பற்றி முன்னேயே பவி அறிந்து இருந்ததால் அவள் அதிர்ச்சியாகவில்லை. ஆனால் ஆதியும் கிருஷியும் அதிர்ந்தனர். அப்போதே இவை பவி, விகியின் திட்டம் என்பதை மற்ற இருவரும் யூகித்தனர்.

 

பவி, விகி இருவரும் அருகில் நிற்க கிருஷி, ஆதி இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“உங்க இரண்டு பேருக்கும் அறிவு இல்லையா? கீழே எங்க ஆளுங்க இருக்காங்க, இவனை பார்த்தால் உடனே ஏதாவது பன்னிடுவாங்க” என்றாள் கிருஷி கோபமாக.

 

“உனக்கு எதுக்கு என் மேலே அக்கறை? சாகுறன்னா நான் தானே சாகபோறேன்” என்றான் ஆதி.

 

“உன் மேலே எந்த அக்கறையும் இல்லை. எங்க வீட்டுல இருக்கிறவங்களை இன்னொரு முறை தப்பு பன்ன விட மாட்டேன். அதற்கு தான், பேசும் போது அபசகுணமா பேசாத” என்றாள்.

 

“உனக்கு என் மேலே அக்கறை இல்லை ஆனால் நான் சாககூடாது. எப்போ இருந்தாலும் போக போற உசிரு, உன் கண்ணு முன்னாடியே போகட்டும். அதற்கு முன்னாடி நான் உன் கூட பேச வேணும்” என்றான்.

 

“என் கூட பேச என்ன இருக்கு? அதான் எல்லாமே முடிஞ்சு போச்சே, திரும்பத் திரும்ப பேசுறாதால் எந்த அர்த்தமும் இல்லை. நாம இரண்டு பேரும் பிரிந்து இருக்கிறது நம்ம இரண்டு குடும்பத்துக்கும் நல்லது” என்றாள் கிருஷி மறுபுறம் திரும்பி.

 

“யேன்டி இப்படி இருக்க? அண்ணா உன்னை எவளோ காதலிக்கிறாங்கன்னு தெரிந்து இருந்தும் நீ இப்படி பேசுறியே?” என்று பவி கவலைப் பட,

 

“நான் வேணுன்னு இதெல்லாம் பன்ன இல்லையே. அவனுக்கு இருக்கிற அதே வலி தானே எனக்கும் இருக்கு. ஆனால் மறக்குறது தான் இரண்டு குடும்பத்துக்கும் நல்லது” என்றாள் அழுதுக் கொண்டே.

 

“கிருஷி நீ யேன் புரிஞ்சிக்க மாட்டேங்குற? ஆதி நீ இல்லைன்னா நிதானமா இருக்கமாட்டான். உன் மேலே பைத்தியமா இருக்கான்” என்றான் விகி கோபமாக

 

அவள் அவனைப் புரியாமல் பார்க்க,

 

“அன்றைக்கு உன்னை அரைந்தான், ஞாபகம் இருக்கா? அப்போ அவன் நிதானமா இல்லை. உன்னை பார்க்க முடியல்லை அதனால் அவன் எவளோ கஷ்டபட்டான்னு தெரியுமா? அன்றைக்கு உன்னை பார்த்துட்டு சந்தோஷமா இருந்தப்போ நீ முகத்தை திருப்பின. அவன் அந்த கோபத்துல வேறு ஒரு ரெட் டொப் வியர்பன்னி இருக்கும் பொண்ணுக்கு பதிலா எதையும் யோசிக்காமல் நீ தான் அந்த பொண்ணு அப்படின்னு உன்னை அரைந்தான். நீன்னுன்னு வந்தால் அவன் எதையுமே யோசிக்கிறான் இல்லை கிருஷி” என்றான் விகி.

 

“அந்த பொண்ணை எதுக்கு நீங்க பிடிக்கனும்?” என்று கிருஷி கேட்க,

 

“அவ தான் அந்த இடத்துக்கு டிரக்ஸ் சப்ளே பன்றவ” என விகி கூறும் போது

 

ஆதியின் சேர்ட் கொலரை கெத்தாகப் பற்றியவள்,

 

“என்னை பார்த்தால் உனக்கு டிரக்ஸ் சப்ளையர் போல இருக்காடா? சொல்லுடா? கடைசியில் இவளோ சீபா என்னை நினைச்சி இருக்க?  அப்போ நான் அந்த அளவுக்கு கேவலமான பொண்ணாவா டா  இருந்தேன்? நீ யோசிக்காமல் என்னை அந்த நேரம் அப்படிபட்ட பொண்ணு அப்படின்னு எப்படி டா முடிவு எடுக்கலாம்?” என்று கிருஷி கத்தினாள்.

 

விகியை பவி, ஆதி இருவரும் முறைத்தனர். கிருஷியின் முகத்தை தன் கையில் ஏந்திய ஆதி,

 

“இல்லை நவி, உன்னை பார்த்ததுக்கு அப்பொறம் எவளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா? நீ மறுபக்கம் திரும்பின இல்லையா? அப்போ என்னை பார்க்க பிடிக்காமல் தான் திரும்பிட்டன்னு நினைத்தேன், அந்த கோபம் தான் டி” என்று கூற

 

அவனிடம் இருந்து விலகியவள்,

 

“பிளீஸ் டா எனக்கு ரொம்ப வலிக்குது” என திரும்பிச் செல்ல அவள் கையைப் பிடித்தவன்,

 

“என்னை விட்டு நீ தூரமா போனால், நான் நிஜமா நானா இருக்கமாட்டேன் டி” என இழுத்து அவளை அணைத்துக் கொண்டான். அவன் அழ, கிருஷியும் அழுதாள். அதே நேரம் தளிர் தன் தாயிடம் அவர்கள் எங்கு சென்று இருக்கிறார்கள் என்று கேட்டு இங்கே வந்தாள். தன் அக்கா, தன் அக்காவை கொலை செய்ய வந்தவன் இருவரும் அணைத்து அழுவதைக் கண்டவள் ஸ்தம்பித்து நின்றாள்.

 

“அக்கா” என்று தளிர் அழைக்க

 

நால்வரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர். கிருஷி, ஆதி இருவரும் விலகி நின்றனர்.

 

“இங்கன என்ன நடக்குது? அவன் தான் உன்னை கொலை பன்ன வந்தான், நீ அவன் கூட எப்படி?” என்று தளிர் கேட்க,

 

“ஒரு நிமிஷம் தளிர்” என்று ஆதியிடம் திரும்பிய கிருஷி,

 

“என்னால் என் குடும்பத்துக்கு எந்த பிரச்சனையையும் வர விடமாட்டேன் ஆதி. நீ உன் வழியில் போ. நான் என் வழியில் போறேன். என்னை கிருஷியா பார்க்குறதை விட்ரு. சிவபெருமாளோட பொண்ணா மட்டும் பாரு. நானும் உன்னை ராஜேஸ்வரி அம்மாவோட பையானா மட்டும் பார்க்குறேன்” என்று பவியையும் அழைத்துச் செல்ல,

 

“நல்லா கேட்டுக்கோ கிருஷ்ணவேனி சிவபெருமாள், நான் தான் உன் கழுத்தில் தாலி கட்டுவேன். நீ தான் என் பொன்டாட்டி. எங்க வீட்டு மருமகள் நீ தான். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றான்.

 

“என் அனுமதி இல்லாமல் என் கழுத்தில் தாலி ஏறாது. என்னை மீறி கட்டனும்னா அது கட்டாய தாலி தான். அதுவும் நான் சுயநினைவு இல்லாதபோ தான் கட்டனும் மிஸ்டர் ஆதிலக்ஷதேவன்” என்றாள்.

 

“உன் அனுமதியோட, உன் சுயநினைவோட கண்டிப்பா நான் கட்டாய தாலி கட்டுவேன். உன் கழுத்துல தாலியை கட்டி என் மனைவியா எல்லோருக்கும் அறிமுகப்படுத்த இல்லை, என் பெயரை நான் மாத்திக்குறேன்” என்றான் கேலி நிறைந்த குரலில்.

 

“உன்னால் எது முடியுமோ அதை பார்த்துக்க” என்று கூறி மற்ற இருவரையும் அழைத்துச் சென்றாள்.

 

“என்ன மச்சான் இப்படி பேசுற? அவ விருப்பம் இல்லாமல் தாலி கட்டுறன்னு தைரியமா சொல்ற? வில்லன் போல பேசுற?”  என்று விகி கேட்க,

 

“நான் முடிவு எடுத்துட்டேன் டா. என்ன பிரச்சனை வந்தாலும் சரி அவளை தான் கல்யாணம் பன்ன போறேன். அவ என் பக்கத்துல இருந்தால் மட்டும் தான் அவளுக்கு பாதுகாப்பு. அது மட்டும் இல்லை மச்சான் அவ கிட்ட லக்ஷன் ஆவோ, ஆதியாவோ பேச முடியாது. தேவாக பேசினால் மட்டும் தான் அவளை என் வழிக்கு கொண்டு வர முடியும்” என்றான் உறுதியான குரலில்.

 

“முடிவு எடுத்துட்ட இனி அதை யாராலும் மாற்ற முடியாது. தெளிவா இருக்கடா, ஆனால் நீ ஏதாவது கோல்மால் வேலை பன்ன என் கிட்ட இந்த நேரம் கொடுத்து இருக்கனும் அதை பன்னவே இல்லை அது அதிசயம் தான். இப்போ தான் நான் நிம்மதியா இருக்கேன்” என்றான் விகி சந்தோஷத்துடன்.

 

“மச்சான் அவளோ சீக்கிரம் நான் உன்னை விட மாட்டேனே டா” என்று ஆதி கூற

 

“என்ன டா பேச்சே வித்தியாசமா இருக்கு?” என்று விகி கேட்க,

 

“நீ என்ன பன்ற நான் சொல்கிற வேலையை பன்ற?” என்று தன் திட்டத்தை கூறியவன்,

 

“டேய் கிருஷி உன்னை வெறுத்துருவா டா நீ இப்படி பன்னன்னா” என்றான் விகி.

 

“வெறுக்கட்டும் டா. பட் என் பக்கத்துல தான் அவ இருப்பா. அது எனக்கு நிம்மதி. நானே என்னோட அன்பையும், காதலையும் போகப் போக அவளுக்கு புரிய வைப்பேன் டா” என்று ஆதி தீர்க்கமான குரலில் கூறினான்.

 

“ஒகே டா, நான் அந்த வேலையை பார்க்க ஆரம்பிக்கிறேன்” என்றான் விகி.

 

இருவரும் கீழே இறங்கும் போது, அக்கல்லில் விகியின் கால் அடிபட்டு இரத்தம் வர

 

“எங்க டா பார்த்துட்டு வர?” என்று திட்டினான் ஆதி.

 

“இல்லை மச்சான் கவனிக்கயில்லை” என்றான் விகி.

 

ஆதி அவனை அழைத்துக் கொண்டு ஹொஸ்பிடலிற்குச் சென்றான்.

 

அங்கே சிவபெருமாள் இரத்தப் பரிசோதனைக்காக வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு செல்ல ஆதி டாக்டரின் அறைக்குள் நுழைய பெருமாள் ஹொஸ்பிடலை விட்டு வெளியேறினார்.

 

“எதுக்கு டாக்டர் எம்.எல்.ஏ வந்து இருக்காரு?” என்று ஆதி கேட்க,

 

“அவர் சுகர் செக் பன்ன வந்தாரு” என்றார்.

 

நேர்ஸ் உள்ளே வந்தவுடன்,

 

“டாக்டர் பிளட் சாம்பிள் ஒன்னை அனுப்பி வச்சிட்டேன். மற்றைய சாம்பள் தேவையில்லை அதை என்ன பன்னட்டும்?” என்று கேட்க,

 

“பின்னாடி தேவைப்படலாம் வைங்க” என்று கூறினார் டாக்டர்.

 

“சரி டாக்டர்” என்று சென்றார் தாதி.

 

ஆதிக்கே அது உபயோகப்படும் என்பதை அறியாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

விகியிற்கு டிரசிங் முடிந்தவுடன் அவனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர இருவரிடமும் விசாரணைப் படலம் முடிய இருவரும் அறைக்கு வந்தனர்.

 

இருவரும் பேச ஆதி கபோர்டை திறந்து பைல் சிலதை எடுக்கும் போது, ஒரு பொக்ஸ் ஒன்று விழுந்தது. அதை எடுத்துப் பார்க்க அதில் வெள்ளிக் கொலுசு ஒன்று இருந்தது.

 

அதைப் பார்க்கும் போது உள்ளே நுழைந்த திவி

 

“என்ன மாமா கொலுசு வாங்கி இருக்கிங்க?” என்று கேட்டாள்.

 

“இது நான் என் முதல் முறையா சம்பளம் வாங்குறப்போ என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு அதாவது என் மனைவிக்காக வாங்கினது” என்றான் நவியை நினைத்து.

 

திவி அது தனக்காக வாங்கி இருப்பார் என்ற நினைப்பில் இருக்க அவளது தாய் அழைக்க அங்கிருந்து சென்றுவிட்டாள்.

 

வீட்டிற்கு சென்ற மூவரும் கிருஷியின் அறைக்குள் அடைக்கலம் ஆனார்கள்.

 

“பவி அக்கா என்ன தான் நடக்குதுன்னு நீங்களாவது சொல்லுங்களே” என்று தளிர் கேட்க,

 

பவி சென்னையில் நடந்தது முதல் நேற்று வரை இங்கு நடந்தது அனைத்தையும் கூறினாள். தளிருக்கோ அதிர்ச்சி.

 

“ஆதி அண்ணா, கிருஷியை ரொம்ப காதலிக்கிறாரு. உங்க பெரியப்பா கூட பேசி கல்யாணத்துக்கு ஒகே சொன்னதுக்கு அப்பொறம் தான் அண்ணா கிருஷிகிட்ட லவ்வையே சொன்னாரு. அப்போ உன் பெரியப்பாக்கும் சரி, ஆதி அண்ணாவுக்கும் இவங்க இரண்டு பேருமே யாருன்னே தெரியாது” என்றாள் பவி.

 

“அன்றைக்கு அந்த அண்ணா அக்காவை வெட்ட போகும் போது அவரோட கண்ணு கலங்கிச்சி நான் அதைப் பார்த்தேன்” என்றாள் தளிர்.

 

“சரி இதைப் பற்றி நாம அப்பொறமா பேசலாம். நீ முதலில் போய் சாப்பிடு” என்று தளிரை அனுப்பியவள் மொட்டை மாடிக்குச் செல்ல நேசன் அவன் நண்பனிடம் கிருஷிக்கும் தனக்கும் திருமணத்திற்கு தன் மாமா ஒத்துக் கொண்டதாகக் கூற இதைக் கேட்ட பவி அதே இடத்தில் அதிர்ச்சியில் சிலையானாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4

பனி 4   “அக்கா, அக்கா” என்று உள்ளே வந்தான் நேசன்.   “ஏன் டா கத்துற? மாமா தூங்குறாரு. நேற்று இராத்திரி அவரு வர ரொம்ப லேட் ஆகிறிச்சி” என்றார் சிவபெருமாளின் மனைவியான கனகவள்ளி.   ‘பசிக்குது அக்கா” என்று

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 15யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 15

பனி 15   அடுத்த நாள் காலையில் கண் விழித்த கிருஷியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அது வரையில் மூவரும் ஹொஸ்பிடலை விட்டு வெளியேறவில்லை. அவளுக்கு ஓய்வு எடுக்க கூறிய பிறகு, அவரவர் வேலைகளை கவனிக்கச் சென்றனர். சிவபெருமாள் தனியாக