Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-34

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-34

34 – மீண்டும் வருவாயா?

விஜய் “ம்ம்.. அம்மாவும் பொண்ணும் எங்களை வெச்சு பிளான் போட்டிருக்கீங்க… பிராடுங்களா..” என அவன் மூக்கை பிடித்து வம்பிழுக்க நித்து சிரிப்புடன் “அப்பாவும், பையனும் சொன்ன பேச்ச கேட்கலேன்னா இப்படி தான்..” என கூறினாள். அவனும் சிரித்தான். பின் மௌனமாகவே இருக்க நித்து “என்ன சார் ஏதோ பலமா யோசிக்கறாரு போல…”

“ம்ம்.. எல்லாம் என்னோட ஏஞ்சல்ஸ் உங்கள பத்தி தான்… 8 வயசு தான் ஆகப்போகுது.. ஆனா ஜீவி குட்டி எவ்ளோ சமத்துல? சொன்னா புரிஞ்சுக்கறா.. அழகா சொன்னமாதிரியே செய்றா.. எவ்ளோ பொறுமையா விஷயத்தை ஹாண்டில் பண்ணிருக்கா பாரேன். அன்னைக்கே விஷயம் தெரிஞ்சதும் ரியாக்ட் பண்ணாம கேட்டுட்டு உன்கிட்ட பேசி அப்புறம் நீ சொன்னதை கேட்டு இப்போவரைக்கும் பொறுமையா அவங்களுக்கு ஒரு சான்ஸ் குடுத்து வெயிட் பண்ராலே.. கிரேட்ல. நான் எல்லாம் அவ வயசுல இப்டினு தெரிஞ்சிருந்தா இந்நேரம் எல்லாமே பறந்திருக்கும்… என் பொண்ணா இப்டினு யோசிச்சேன். அதுக்கு புல் கிரெடிட் என்னோட இந்த பெரிய ஏஞ்சல்க்கு தானே… ”

“அதுசரி… இதுல நான் என்ன பண்ணேன். என்ன இருந்தாலும் ஜீவி அவங்கள ஏத்துக்க ரெடியா இருக்கனும். சான்ஸ் குடுக்கணும்.. அத அவ பண்ணா. வீட்ல எல்லாரும் அவகிட்ட நல்லபடியா இருந்தாங்க. அதோட அந்த ஆக்சிடென்ட் அதுல அவங்களோட பீலிங்ஸ ஜீவி ரொம்ப நல்லாவே புரிஞ்சுக்கிட்டா.. சோ இப்போ அப்பப்போ கூட இருக்க ஓகேன்னு சொல்லிட்டா.. பட் தெரில.. கூடவே இருக்க ஓகே சொல்லுவாளானு..”

“கரெக்ட் தான் நித்து…ஆனாலும் அவளுக்கு சரியா அந்த நேரத்துல கைடு பண்ண நீ இருந்திருக்கேல..அதைத்தான் சொன்னேன். பொதுவா குழந்தைகளை அதட்டி நாம சொல்றது செய்னு சொன்னா செய்வாங்க…. ஆனா முழுமனசோட இல்லை.. திட்டி பதில் சொல்லாம விட்டா அவங்க மைண்ட்குள்ள அத எப்படி வேணாலும் எடுத்துப்பாங்க… சில சமயம் அது சரியாகும். சில சமயம் அது ரொம்ப தப்பாகும்… அவ்ளோ ஒரு டேஞ்சர்.. குழந்தைங்க மனசுல நாம இப்போ பதிய வெக்கிற விஷயங்கள் அவங்களோட பழக்கவழக்கம் தான் லைப் லோங்னு எல்லா பேரெண்ட்ஸ்க்கும் புரியுது. ஆனா அத அந்த குழந்தைங்க மனசார ஏத்துக்கற மாதிரி குடுக்கற வழிய தான் நிறையா பேர் மிஸ் பண்ணிடறாங்க.. ஏன் நானுமே கூட… என்னதான் இப்டி இருக்கணும்னு சொன்னாலும் நான் கோபத்தை குறைக்கல..என்னை பாத்து பழகுற ஜீவாவும் அதேதான் பாலோ பண்ரான்… நாம அட்வைஸ் பண்ணா மட்டும் குழந்தைங்க கேக்கறதில்லை. நம்மள அவங்க ரொம்ப அப்சோர்ப் பண்ராங்க.. அவங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடி நாம அதை செஞ்சாலே போதும்..நம்மள பாத்தே அவங்க சூப்பரா கத்துக்கிறாங்க.. இப்போ ஜீவி உன்னை பாத்து கத்திகிட்ட மாதிரி.. நீ பொறுமையா ஒரு விஷயத்தை யோசிச்சு தான் முடிவு பண்ற. எதுக்கு ரியாக்ட் பண்ணணுமோ அதுக்கு அளவா பண்ற.. அந்த நம்பிக்கை தைரியம் தெளிவு இதெல்லாம் அப்டியே ஜீவிகிட்ட பாத்தேன்.. முதல் தடவை அவள பாக்கும்போதே… அதனால தானோ என்னவோ ரொம்ப அட்டாச்மெண்ட்… ஜீவி ஓரளவுக்கு புரிஞ்சுக்கிட்டாலும் கண்டிப்பா அவங்க கூடவே இருக்க ஓகே சொல்லமாட்டா…” என இறுதியாக விஜய் கூற அவனை நித்து கேள்வியாக பார்க்க

“அத நானும் பண்ணமாட்டேன். ஜீவியும் பண்ணமாட்டா.. ஏன்னா அவளுக்கு மன்னிக்கற குணம் இருந்தாலும் அவ அம்மா மேல பாசமும் இருக்கு. நீ சொல்லு.. உன்னால அவங்க மேல கோபமில்லாம மனசார ஏத்துக்கமுடியுமா?”

மெல்லிய புன்னகையுடன் கூறினாள்… “கண்டிப்பா இன்னமும் கோபம் இருக்கு விஜய்.

இந்த ஆக்சிடென்ட் நடந்து ஜீவி உங்களை காப்பாத்த போனதால அவ டைம் இப்போ பெருசா தெரில. எனக்கு அடிபட்டதால இப்போ என் நேரமும் முக்கியமாபடல…அதுக்கு முன்னாடி வரைக்கும் அவங்க மனசுல அந்த பயம் இருந்திட்டே தானே  இருந்தது. அதனால தான் ஜீவிய உங்ககூட அவங்க தனியா அனுப்பவும் இல்லை.. அவளே அத கேட்டா தெரியுமா? ஏன் மா பாட்டி வீட்டுக்கு போனா அப்பாகூட என்னை வெளில போகவே பாட்டி விடமாட்டேங்கிறாங்க.. என்னை நல்லாத்தான் பாத்துக்கறாங்க…ஆனாலும் ஏன்னு? இப்படியா இன்னும் நினைக்கிறாங்கனு தோணுச்சு.. ஆனா குழந்தைகிட்ட என்ன சொல்றது.. உன்கூட அவங்க இருக்கறதுக்கு ரொம்ப ஆசைப்படறாங்க அதனால தான்னு சொல்லி சமாளிச்சிட்டேன். அவளும் நம்பிட்டு அத சந்தோசமா எடுத்துக்கிட்டா.. அது இந்த ஆக்சிடென்ட் விஷயத்துக்கு அப்புறம் உண்மை ஆகிடுச்சு. அவகூட இருக்கத்தான் அவங்களே ஆசைப்படறாங்க. ஆனா ஒருவேளை அந்த ஆக்சிடென்ட் நடக்காம இருந்திருந்தா இன்னும் அதேமாதிரி தானே அவங்க நினைச்சிருப்பாங்க.. அதான் ஒரு சின்ன வருத்தம்…

 

உங்களை அவ காப்பாத்த போகாம இருந்திருந்தா இந்நேரம் அவங்க மைண்ட் செட் பழைய மாதிரி தானே  இருந்திருக்கும். இன்னும் இதே மாதிரி சொசைட்டில இப்டி திங்க் பண்றவங்க இருங்காங்க தான். எல்லாருக்கும் அந்த ஜாதகம் ஜோசியத்தை தாண்டி அவங்க நம்ம மேல பாசமா தான் இருக்காங்கனு காட்றதுக்கு இந்த ஆக்சிடென்ட் மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்கிதா என்ன? அப்டி கிடைச்சு அவங்க பாசத்தை ப்ரூப் பண்ணாலும் ஒருவேளை அதுல அவங்க உயிரே போய்டிச்சுனா எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா உக்காந்து அழுவாங்களா ..அப்போ எல்லாமே சரி ஆகிடுமா? ஒருவேளை இவங்க பிரிஞ்சிருந்தா 100 சதவீதம் அவங்க லைப் நல்லா இருக்கும்னு சொல்லிருந்தாலாவது இவங்க இவ்ளோ பண்ணதுல ஒரு நியாயம் இருக்கும். யாருக்குமேசந்தோஸம் இல்லாத ஒரு தீர்வு இவங்க இஷ்டப்படி ஜாதகத்துல சொன்னமாதிரி பிரிஞ்சதால அவங்ககூட அதுல சந்தோசமா இல்ல, நம்ம இஷ்டப்படி உணர்வுகளுக்கு மதிப்பு குடுத்து நம்மளையும் முடிவெடுக்க விடல. எதுமே தெளிவா தெரியாத போது எதுக்கு இப்டி ஒரு முடிவெடுத்தாங்க.. அதுனால எவ்ளோ வருஷம் எவ்ளோ கஷ்டம் பிரச்சனை. இதுல ஏதாவது ஒரு விஷயம் ஒரு பேச்சுக்கு நெகடிவ்வா நினச்சு பாருங்க. ஜீவா ஒரு எக்ஸ்ட்ரீம்ல திங்க் பண்ணி அவன் அம்மாங்கிற உறவையே வெறுத்திருந்தா?

இல்ல ஜீவி உங்களை நம்ம பாமிலிய இவளோ நாள் இவங்க எங்க போனாங்கனு கேட்டு வேண்டாம்னு ஒதுக்கிருந்தா?

வீட்டை விட்டு போன எனக்கும் ஜீவிக்கும் ஏதாவது நடந்திருந்தா? ”

“ஏய் நித்து ஏன் டி இப்டி..?” என விஜய் சற்று பதற

“இல்ல விஜய்.. இதுல ஏதாவது  ஒன்னு மாறி  நடந்திருந்தாலும் இன்னைக்கு நாம இப்டி இருந்திருக்கமுடியுமா?திரும்ப பாத்திருக்காவது முடியுமா? எல்லாத்துக்கும் மேல ஒரு ஒரு வேளை நீங்க இங்க வராம இருந்திருந்தா.. ” என கூறும் போது அவள் கைகள் நடுங்க அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன் அவளை ஆசுவாசப்படுத்தினான்.

“அப்போவும் இவங்க இப்போ ஜீவிய ஏத்துக்கிட்ட மாதிரி ஏத்துக்கிட்டு இருந்திருப்பாங்களா? நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடில. ஆனா நம்ம குழந்தைக்காகனாலும் ஒரு உயிரே இல்லாத ஜடம் மாதிரி தானே வாழ்ந்திருப்பேன். ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா கூட நம்ம குழந்தைங்க என்ன பண்ணுவாங்கனு பயத்துலையே எவ்ளோ நாள் இருந்திருப்பேன் தெரியுமா? இப்போ எல்லாமே ப்ரோப்லேம் இல்லேனு அவங்க மனசுக்கு பட்டதும் தானே இவளோ தூரம் கேக்கறாங்க.. அதான் அந்த வருத்தம் கோபம் எனக்கின்னும் போகல. என்னதான் மனுசங்க எல்லாருமே இப்படித்தான்னு என் மூளைக்கு புரிஞ்சாலும் எனக்கும் மனசுனு ஒன்னு இருக்கும்ல.. உங்களை பிரிஞ்சு இருக்கும் போது அவ்ளோ மிஸ் பண்ணும் போது அட்லிஸ்ட் கத்தி அழுகணும்னாவது தோணும். ஆனா அப்டி பண்ணிட்டா குழந்தை சுத்தமா நம்பிக்கை இழந்துடுவா.. நானும் தான்… என்ன பிரச்னை நடந்தது. ஏன் இப்டி ஆச்சுன்னு கேள்வியே இல்லாத பதிலும் இல்லாத ஒரு வாழ்க்கை .. எல்லாமே கண்ட்ரோல் பண்ணி அடக்கி வெச்சு வெச்சு பைத்தியமே கூட ஆகிருப்பேன்..உங்களோட நினைப்பு நம்பிக்கைமட்டும் தான் என்னை இவளோ காலம் தாக்குப்புடிக்கவெச்சது…” என கூறும் போது அவனது இதயத்தை தொட்டது அவளது கண்ணீர்.

அவனுக்கும் கண்கள் கசிய “இங்க பாரு.. இனி அந்த மாதிரியெல்லாம் எதுவும் எப்போவும் நடக்காது… இதுவே பஸ்ட் அண்ட் லாஸ்ட்.. எவ்ளோ பீல் பண்ணணுமோ இங்கேயே முடிச்சிடு..கொட்டிடு… என்..என்னால திரும்ப நீ இவளோ பீல் பண்றத பாக்க முடியாது… ” என்றவன் அவளது இதழை இதழோடு அணைத்தான்.

 

நித்து பதற்றமாக “ஏங்க இவளோ தூரம் கேக்கிறேன்ல. என்னாச்சு ஜீவாக்கு திடிர்னு எப்படி காய்ச்சல் வந்தது.”

“நித்து மா.. இதென்ன வம்ப்பா இருக்கு.. காய்ச்சல் என்ன கால் லெட்டர் வாங்கிட்டா வரும்..அவன் ஏதாவது சும்மா இருக்கமாட்டாம தண்ணில விளையாடிருப்பான். நம்ம இரண்டுபேருமே இல்லை. வீட்ல நல்ல செல்லம்..ஐஸ் கிரீம்மா சாப்பிட்ருப்பான்.. சாதாரண காய்ச்சல் தானே சொல்லிருக்காங்க.. நீ ஏன் இவளோ பதற?”

வசந்த், வாணி “நேத்ரா நீ பயப்படற அளவுக்கு எதுவுமில்லை மா. இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்கே போயிடுவோம் நீ கொஞ்சம் ரிலாக்ஸ இரு..”

“சாதாரண காய்ச்சல்க்கு ஏன் என்கிட்ட பேசக்கூட இல்ல.. என்னமோ எல்லாரும் என்கிட்ட இருந்து எதையோ மறைக்கிறீங்க…”

வசந்த் “எது நாங்களா?..அது எப்படி சொல்ற? நாங்க என்ன பண்ணோம்?”

“இதோ இவரு முகத்தை பாத்து தான் சொல்றேன்..பிராடு .. முழிக்கறதபாரு..”

விஜய் “ஏய்…நான் பாட்டுக்கு டிரைவ் பண்ணிட்டு இருக்கேன். என்ன எதுக்கு டி வம்புக்கிழுக்கற…உன் பையன் ஏதாவது பண்ணிருப்பான்..”

“நீங்க சும்மா அவனை சொல்லாதீங்க. அவன் நான் சொன்னா கேட்டுப்பான்.. இந்த பிராடு வேலை உங்ககிட்ட இருந்து தான் வந்திருக்கும்…”

“ஏய்..”

வசந்த் “டேய்..நீ வேற ஏண்டா ..கொஞ்சம் சும்மாதான் வாயேன்.. மூஞ்சை தான் கொஞ்சம் நார்மல வெய்யேன்..எல்லாம் உன்னால தான்டா. அவங்க போன் பண்ணும்போதே நீ நேத்ராகிட்ட குடுத்து பேசச்சொலிருக்கலாம்ல.. அப்றம் டாக்டர் கிட்ட போய்ட்டாங்க..தூங்க போய்ட்டாங்கனு ரீசன சொன்னா அவ வேற என்ன பண்ணுவா…” என அவனை திட்ட நேத்ரா பதட்டமாக இருந்தாலும் சற்று அமைதியாகினாள். “சரி விடுங்க அண்ணா.. வீட்டுக்கு போயிடுவோம்ல. நேர்ல போயி பாத்துக்கலாம்..”

வாணி மெதுவாக “ஏங்க அண்ணா நார்மலா தானே இருக்காரு…இப்போ எதுக்கு நீங்க அவரை திட்டறிங்க?.”

வசந்த் “அவன் நார்மலா தான் முகத்தை வெச்சிருக்கான்.. ஆனாலும் உன் பிரண்ட் தெளிவா கண்டுபுடிக்கறாளே… ஏதோ இவன் மறைக்கிறானு… இப்போ நான் இவனை திட்டல நேத்ரா நம்மள திட்டியே ஒரு வழி பண்ணிடுவா.. உண்மையும் வாங்கிடுவா.. என்ன பண்ணாலும் அவளுக்கு அவ விஜயை திட்டுனா தாங்கிக்க முடியாது…” என சிரிக்க வாணி “ஓஒ…அதான் மேடம் உடனே அமைதியாகிட்டாங்களா..” என அவளும் சிரிக்க விஜய் மௌனமாக ஆனால் மனதினுள் சிரித்துக்கொண்டே வந்தான்.  மகனை பற்றி எண்ணிக்கொண்டே இருந்தவள் இவர்கள் சிரிப்பதையும் கவனிக்காமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே பதட்டத்தில் இருந்தாள்.

 

நள்ளிரவில் வீட்டை அடைந்ததும் வேகமாக கதவை திறக்க “ஹாப்பி பர்த்டே” என அனைவரும் கத்தினர்.

அவள் அதிர்ச்சியில் நிற்க ஜீவா ஜீவி ஓடிவந்து அவளிடம் “ஹாப்பி பர்த்டே மம்மி..” என அவள் ஆசுவாசமாக சற்று நேரம் எடுத்தது. அவள் எதுவும் கூறாமல் இருக்க அனைவரும் “நாங்க எவ்வளவோ சொல்லியும் இந்த சிறுசுங்க தான் டா  மா கேட்கவேயில்லை.. என பெரியவர்கள் ஜகா வாங்கிவிட வசந்த், வாணி, கீதா, சுரேஷ், குமார்,சுதா அனைவரும் “நீ பயந்துடுவனு சொல்லியும் இதுதான் பிளான்னு சொல்லிட்டாங்க நேத்ரா.. நாங்க மட்டும் என்ன பண்றது” என அவர்களும் கழண்டு கொள்ள ஜீவா, விஜய் இருவரையும் முறைத்தவள் அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

ஜீவா “டாடி.. என்ன அம்மா எதுமே பேசல…தப்பிச்சிட்டோமா?”

விஜய் “செமையா மாட்டிகிட்டோம்டா..” என்றவன் அனைவரையும் பார்த்துவிட்டு “உங்களை எல்லாம்..” என கத்த ஆரம்பிக்க எல்லாரும் “முதல அவகிட்ட பேசு.. சாரி சொல்லு. சமாதான படுத்து..” என ஆளாளுக்கு ஒவ்வொன்றாக கூற அவனுக்கு ஐயோவென இருந்தது.. இறுதியாக ஜீவாவும் “ஆமாப்பா.. போங்க..” என்றான்

விஜய் “என்னது..போகவா.. நீயும் வாடா.. என்னை மட்டும் மாட்டி விட பாக்கறியா?”

“ஹஸ்பண்ட் வைஃப் பேசும் போது 3ர்ட் பெர்சன் உள்ள வரக்கூடாது..அது மேனர்ஸ் இல்லைனு அத்தை சொல்லிருக்காங்க பா.. சோ நீங்க போயி பேசுங்க.. நான் அப்புறம் அம்மாகிட்ட பேசிக்கறேன்..” என அவன் கூறிய விளக்கத்தில் அனைவரும் தங்களுக்குள் சிரிக்க வேறு வழியின்றி உள்ளே சென்றவன் அவள் முன் மண்டியிட்டு “நித்து சாரிடா.. உன் பர்த்டே சோ சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான்.. உனக்காக தானே இதெல்லாமே.. ப்ளீஸ் வாயேன்.. ஏதாவது பேசு நித்து.. உன்னை ஹர்ட் பண்ண அப்டி பண்ணல.. இவங்க எல்லாரும் சும்மா சொல்ராங்க…நித்து நீ பயந்துடுவே பீல் பண்ணுவேன்னு நான் சொன்னேன். இவங்க தான் அப்டி கம்பெல் பண்ணி பிளான் போட்டது. அப்புறம் தான் நான் ஓகே சொன்னேன்..”

வெளியில் இருந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த ஜீவா வேகமாக ஓடி வந்து “அம்மா, டாடி தான் சொன்னாரு..”

விஜய் “நான் என்ன டா சொன்னேன்..”

“இருங்க டாடி..மம்மிகிட்ட பேசிட்டிருக்கேன்ல… அம்மா மம்மிக்கு எது எல்லாம் பிடிக்கும்னு கேட்டேனா.. இந்த டாடி தான் சொன்னாரு.. மம்மி க்கு ஷாக் சர்ப்ரைஸ் குடுத்தா ரொம்ப பிடிக்கும்னு… வெறும் சர்ப்ரைஸ் மட்டும் சொல்லிருந்தா இவளோ ப்ரோப்லேமே இல்லமா..”

“டேய் அதுக்கு நானா இப்டி ஐடியா குடுத்தேன்.. நீ தானே டா. சொன்னே.. நித்து இவனை நம்பாத.. அடிபட்டிருச்சுனு சொல்லி உன்னை வரவெக்கத்தான் பிளான்.. ஆனா நான் தான் என் நித்து ரொம்ப பயப்படுவ..சோ சின்னதா லைட்டா சொல்லலாம்னு சொன்னேன். அப்புறம் தான் பேசி ஒரு முடிவு பண்ணி காய்ச்சலோட விட்டாங்க.. இல்லாட்டி..”

“ஆனா எந்த டைம் கால் பண்ணனும்.. யாரு என்ன சொல்லணும்னு ஸ்கிரிப்ட் எல்லாம் டாடி தான் மா பண்ணாரு..” என இருவரும் மாட்டிவிட்டுக்கொள்ள நித்து இருவரின் காதையும் பிடிக்க “ஐயோ..” என இருவரும் கத்த “உங்க இரண்டுபேருக்கும் என்னை பாத்தா எப்படி தெரியுது..” என அவள் கத்த இதை வெளியில் இருந்து பார்த்து அனைவரும் வந்த இடம் தெரியாமல் சிதறி ஓட ஜீவி மட்டும் வயிற்றை பிடித்துக்கொண்டு உள்ளே வந்து சேரில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

கடுப்பான ஜீவா “அப்பா ஜீவி சிரிக்கிறா…” என புகார் செய்ய

விஜய் “ஜீவி குட்டி என்ன டா இது அப்பா இப்டி மாட்டிகிட்டு இருக்கும் போது நீ இந்த மாதிரி சிரிக்கலாமா?” என

ஜீவி “அது ஒண்ணுமில்ல பா… என்னை அம்மாகிட்ட பேசக்கூடாது. பிளான் பத்தி சொல்லக்கூடாதுனு எல்லாரும் சொன்னிங்க.. ஆனா நான் அப்போவே சொன்னேன்ல..நீங்களே எல்லாரும் போயி மாட்டிக்குவிங்கனு அதான் இப்போ அத நடந்ததை நினச்சு சிரிப்பு வருது.”

“ஓ..நீங்க எல்லாரும் பண்ற பிராடு வேலைக்கு தான் அவளையும் கூட்டு சேத்துக்கிட்டு இருக்கீங்களா..இதுக்கு தான் அவகிட்டேயும் என்னை நேத்துல இருந்து பேச விடலையா?” என விஜய் காதை நன்றாக அழுத்த விஜய் “நித்து..வலிக்கிது.. ப்ளீஸ் ப்ளீஸ்” என இவளும் இருவரையும் விட்டுவிட விஜய் ஜீவா இருவரும் முறைத்துக்கொண்டு எதிரெதிரே நின்றனர்.

“கொஞ்சமாவது தோணவேண்டாம்… எதுல விளையாடுறதுனு இல்லை..இத்தனை வருஷம் கழிச்சு இப்போதான் பாத்திருக்கேன்.. எவ்ளோ பயப்படுவேன்னு தெரியவேண்டாம்.. அவன் சொன்னா உங்களுக்கு எங்க போச்சு புத்தி…”

விஜய் “எல்லாருமே சொல்லும் போது நான் ஏன் என்ன நித்து பண்ணமுடியும்..?” என அவன் பாவமாக கேட்க

ஜீவி “நீங்க அம்மாகிட்ட மட்டும் தனியா சொல்லிருக்கலாம்ல… நீ தெரிஞ்சமாதிரி காட்டிக்காத..இது சர்ப்ரைஸ்காகனு அம்மாகிட்ட சொல்லி கூட்டிட்டு வந்திருந்தா அம்மா அவ்ளோ பயந்திருக்க மாட்டாங்க தானே…அதோட அப்பா இங்க எல்லாருமே ஒருவேளை அம்மா பயங்கரமா டென்ஷன் ஆகிட்டா அது உங்க பிளான்னு சொல்லிடலாம்னு பேசி வெச்சுட்டாங்க… ” என எடுத்துக்கொடுக்க

விஜய் “ஆ..அது வந்து… நான்..ஆமா நீ ஏன் இத எனக்கு முன்னாடியே சொல்லல..” என அவன் விழிக்க

ஜீவி சிரித்துக்கொண்டே “இத சொல்லத்தான் நான் திரும்பவும் கூப்பிட்டேன்.. ஆனா நீங்க குட்டி மா வீட்டுக்கு வர வரைக்கும் நீ சொல்லக்கூடாது..அம்மாகிட்ட பேசக்கூடாது.. என்கிட்டேயும் பேசாத.. பேசுனா உன் அம்மா பிளான கண்டுபுடிச்சிடுவானு சொல்லி பிளான காப்பாத்தி இப்டி நீங்க மாட்டிகிட்டீங்களே?” என அவள் மீண்டும் சிரிக்க நித்து தலையில் அடித்துக்கொண்டு “எப்போதான் நீங்க ஒருத்தர் சொல்றதை காது குடுத்து கேக்கப்போறிங்களோ எனக்கு தெரில விஜய்..” என அவன் அமைதியாக இருக்க அவளே எழுந்து வந்து அவன் காதை தேய்த்துவிட்டவள் “ரொம்ப வலிக்கிதா..” என அவன் பதில் கூறும்முன் ஜீவா வேகமாக இடித்துக்கொண்டு வந்து “ஆமா மம்மி..ரொம்பா..” என அவன் காதை காட்ட நித்துவும் சிரித்துவிட்டு அவனை தூக்கி கொண்டு தேய்த்துவிட கடுப்பான விஜய் “டேய் பிராடு ..அவ என்கிட்ட தானே கேட்டா.. நீ எதுக்கு இப்போ மட்டும் வர.. எனக்கு நல்லா தெரியும் அவ உன் காதை பிடிச்சாலே தவிர அழுத்திருக்கவே மாட்டா..வாங்குறது எல்லாம் நானு..நீ” என அவன் முடிக்கும்முன் ஜீவா அம்மாவின் தோளில் முகம் புதைத்து “பாருங்க மம்மி டாடி திட்டுறாரு..  உங்க பர்த்டேக்காக தானே இவ்வளவும்..” என பாவமாக சாய்ந்துகொள்ள அதன்பின்னும் அவளால் மகனிடம் கடுமையாக இருக்க முடியுமா என்ன..”

“சரிடா. கண்ணா.. அப்பா திட்டமாட்டாரு..நான் சொல்லிடறேன்..வா ” என அணைத்துக்கொண்டு வெளியே எடுத்து சென்றாள்.

விஜய் அவனை முறைத்துக்கொண்டே நிற்க ஜீவி அவனிடம் வந்து “அப்பா..அவங்க போய்ட்டாங்க.. போஸ் குடுத்தது போதும்.. கேக் தீந்திடும்.. அவனை அப்புறமா முறைச்சுக்கலாம்..வாங்க..” என படுதீவிரமாக அப்பாவுக்கு தீர்வு சொல்லி அழைத்துச்சென்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30

30 – மீண்டும் வருவாயா?   அவ்வழி வந்த வாணி வசந்த் இருவரும் இவர்களை பார்த்துவிட்டு அருகே வந்தனர். “என்ன டா இங்க உக்காந்திட்டே?” “தெரில வசந்த் ..ஏனோ இந்த இடம் பாக்க நல்லா இருக்கு. இங்கிருந்து பாரு பாக்கிற இடமெல்லாம்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-7ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-7

7 – மீண்டும் வருவாயா?   நாட்கள் நகர மழை காரணமாக பள்ளி விடுமுறை என அறிவிக்க ஜீவன்க்கு தவிர்க்க முடியாமல் வெளியூர் செல்லவேண்டிய வேலை இருப்பதால் ராமுவிடம் சொல்லிவிட்டு ஜீவாவை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். மதியம் 3 மணி வரை ஜீவா,

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28

28 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு நேத்ரா விஜய் இருவரும் குழந்தைகளுடன் வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அனைவரும் அவளிடம் விசாரிக்க என்ன வேணுமோ சொல்லு நாங்க செஞ்சு தரோம் நீ நல்லா ரெஸ்ட் எடுடா மா..