Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 18

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 18

பனி 18

 

“மாமா நான் வேணியை கல்யாணம் பன்னிக்குறேன்”என்றான் நேசன்.

 

“நேசன், நீயா? ஆனால் அவ இதை ஒத்துகுவாளான்னு தெரியாது” என்று பெருமாள் கூற

 

“மாமா இப்போ கேட்டால் யாரையும் கல்யாணம் பன்னமாட்டேன்னு உறுதியா சொல்லுவா. கொஞ்ச நாள் போகட்டும் நானே அவளோட மனசை மாற்றி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்குறேன்” என்று கூற

 

“ஏதோ செய், ஆனால் அந்த பையனை மட்டும் அவ கல்யாணம் பன்ன கூடாது. அது மட்டும் நடக்கவே கூடாது” என்றார் கோபமாக.

 

“நிச்சயமா மாமா. அவளை நான் தான் கல்யாணம் பன்னுவேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்க தைரியமா இருங்க. அந்த ஆதியை பற்றி நானே அவ கிட்ட பேசுறேன்” என்றான் நேசன்.

 

சிவபெருமாளும் அரைமனதாக சம்மதித்தார். அவருக்கு தன் மகளையும், மனைவியையும் நினைக்கும் போது இவர்கள் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்களோ என்ற கலக்கமும் ஏற்பட்டது. இதைப்பற்றி இப்போது யாரிடமும் பேசக் கூடாது என்ற முடிவையும் எடுத்தார் சிவபெருமாள். நேசனோ உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருந்தான்.

 

‘தேவ், கடைசியில் என் வேணி விஷயத்திலேயும் போட்டியா வந்துட்டியே, உன்னையும், அவளையும் எப்பவுமே சேர விடமாட்டேன். அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன், நீ ஆசைபட்ட பொண்ணு கழுத்துல நான் தான் தாலி கட்ட போறேன்’ என்று வஞ்சகமாகச் சிரித்தான்.

 

அன்றிரவு விகி பவிக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“சொல்லு டா எருமை” என்று கூற

 

“அடியேய், நான் உன்னை கல்யாணம் பன்னிக்கப் போறவன் டி, அந்த மரியாதை கொஞ்சமாவது உன் மனசுல இருக்கா?” என்று கேட்க,

 

“உனக்கு இந்த அளவு மரியாதை கொடுக்குறதே பெரிசு, என்ன விஷயமா போன் பன்ன?” என்று கேட்க,

 

“உன் கூட பேசி ஜெயிக்க முடியுமா? அதை விடு நான் விஷயத்துக்கு வரேன், நான் நாளைக்கு ஆதியோட ஊருக்கு போறேன்” என்றான்.

 

“என்ன டா சொல்ற? முன்னாடியே சொல்லி இருந்தால் நானும் லீவிற்கு அப்ளே பன்னி இருப்பேன்” என்று கூற

 

“இப்போவும் ஒன்னும் கெட்டு போக இல்லை. கிருஷியோட சித்தப்பாவை உன் சித்தப்பாவாக தத்தெடுத்து, அவரு இறந்திட்டாருன்னு சொல்லி உடனே கிளம்பனும்னு மெயில் அனுப்பு” என்று கூற

 

“அடப்பாவி எவளோ அசால்டா சொல்ற? நீ பொலிஸா? இல்லை கிருமினலா?” என்று கேட்க,

 

“கிருமினால் மூளை இருக்கிற பொலிஸ்” என்று கூற

 

“ஐயோ, உனக்கு பஞ்ச் டயலோக் செட் ஆக இல்லை டா, பிளீஸ் திரும்பி இதை போல ஏதாவது சொல்லிறாத கை எடுத்து கும்பிடுறேன்” என்று கூற

 

“சரி டி, இப்போ நீ வரியா? இல்லையா?” என்றான்.

 

“கண்டிப்பா நான் வரேன், இந்த லூசு கிருஷி தேவையில்லாமல் யோசிட்டு இருக்கா. அவளுக்கு கொஞ்சம் வேப்பில்லை அடிக்க இருக்கு” என்றாள் பவி.

 

“ஆதியையும், கிருஷியையும் எப்படியாவது மீட் பன்ன வைக்கனும்” என்று விகி கூற

 

“கிருஷி அவங்க ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய கல்மலையை பற்றி சொல்லி இருக்கா, அவங்க இரண்டு பேரையும் அங்க மீட் பன்ன வைக்கனும்” என்றாள் பவி.

 

“ஓகே டி, நான் அவன் மனசை மாற்றி முதலில் ஆதியை அங்கே கூட்டிட்டு வரேன், முதலில் நீங்க வந்திங்கன்னா, அவளோட பாதுகாப்பிற்கு வந்த ஆளுங்க நம்மளை பார்த்துடுவாங்க. ரொம்ப பெரிய பிரச்சனை வந்திரும்” என்றான் விகி.

 

“சரி டா நான் அவளை பாத்துக்குறேன், நான் வீட்டிற்கு போனதுக்கு அப்பொறமா போன் பன்ன மாட்டேன். ரிஸ்க் எடுக்க முடியாது. மெசேஜ் போடுறேன். நாளைக்கு விடிய காலையில் இருக்கிற பஸ்ஸில் போலாம். இப்போ போய் எல்லாம் ரெடியாகி வச்சிட்டு தூங்கு” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

 

“கல்யாணம் பேசி வச்சிட்டா மற்றைய கபிளஸ் எவளோ ரொமேன்டிக்கா பேசுவாங்க. எனக்கு வந்து வாச்சிருக்கே பீலிங்சே இல்லாத ஒரு மரக்கட்டை” என்று விகி புலம்பினான்.

 

‘இரு நான் அவ கிட்ட சொல்றேன்’ என்றது மனசாட்சி.

 

‘மனசாட்சி கூட எனக்கு சபோர்ட் பன்னுது இல்லை. எல்லாம் என் நேரம்’ என்று புலம்பிக் கொண்டே ஆடைகளை அடுக்கி வைத்து உறங்கினான்.

 

அடுத்த நாள் விடியற் காலையிலேயே இருவரும் கிருஷியையும், ஆதியையும் பார்க்க புறப்பட்டுச் சென்றார்கள். ஆதியிற்கு ஏற்கனவே கூறியிருந்ததால் விகியை அழைத்துச் செல்ல ஆதியே வருகை தந்தான். அவனுடம் சிறிது நேரம் பேசிய பிறகு பவி கிருஷியின் ஊரிற்கு பயணமானாள். ராமிற்கு அழைத்து தான் வருவதாகவும், கிருஷியிடம் இதைப் பற்றி எதையும் கூற வேண்டாம் என்றதால் அவளை அழைத்துச் செல்ல வண்டியும் வந்தது.

 

வீட்டிற்குள் நுழையும் போது அனைவரும் முகம்கோணாமல் அவளை வரவேற்றார்கள். ஆனாலும் அனைவரின் முகத்திலும் சோக ரேகைகளும் இருந்தது. ஏதோ அறுவருக்கத்தக்க பார்வை தன் மேல் படர்வதை உணர்ந்த பவி திரும்பிப் பார்க்க அங்கே நேசன் நின்று இருந்தான். அவன் புன்னகைக்க, அவளும் பதிலுக்கு வேண்டா வெறுப்பாக புன்னகைத்து உடனடியாக கிருஷியின் அறைக்கு நடையைக் கட்டினாள்.

 

கதவைத் திறந்து உள்ளே செல்ல கிருஷி இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் கன்னத்தில் காய்ந்த கண்ணீர் தடத்தைப் பார்த்தவள் இரவு முழுவதும் அழுது இருக்கிறாள் என்பது தெரிந்தது. இவள் மனம் அவளுக்காக வருந்தியது. அருகில் சென்று அவள் தலையை வருட, அதில் விழித்துக் கொண்டாள் கிருஷி.

 

அவசரமாக எழுந்து அமர்ந்தவள்,

 

“ஏய் பவி எப்போ வந்த? என் கிட்ட சொல்லவே இல்லை?” என்றாள் உண்மையான சந்தோஷத்துடன்.

 

“இப்போ தான். சப்ரைசாக இருக்கட்டும்னு சொல்ல இல்லை. ராம் அண்ணா கிட்ட சொன்னேன், அவரு வண்டியை அனுப்பினாரு, அதில் தான் வந்தேன்” என்றாள்.

 

“இரு நான் குளிச்சுட்டு வரேன்”  என்று கூறி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள் கிருஷி.

 

அவள் குளித்த பிறகு, பவியும் குளிக்கச் சென்றாள். பின் இருவரும் காலை உணவை உண்ண கீழே இறங்கி வந்தார்கள். கிருஷியின் முகத்தில் இப்போது சந்தோஷத்தைப் பார்த்த வீட்டில் உள்ள அனைவரும் நிம்மதி அடைந்தனர். சிவபெருமாள் இதைப் பார்த்து பவி சென்ற பிறகு திருமணத்தைப் பற்றி பேசும் மன நிலையில் கிருஷி இருப்பாள் என்று அவளிடம் பேச முடிவு செய்தார்.

 

அதற்குள் கிருஷி, ஆதியின் திருமணம் முடிந்துவிடும் என்று அவர் அறிந்து இருக்கவில்லை.

 

“பவித்ரா வீட்டில் எல்லோரும் எப்படி மா இருக்காங்க?” என்று கனகா கேட்க,

 

“எல்லாரும் சூப்பரா இருக்காங்க அம்மா, ஆமா தளிர், ருத்ரா எங்கே?” என்றாள் பவி.

 

“ருத்ரா ஸ்கூலுக்கு போயிருக்கான், தளிர் கோலேஜூக்கு போயிருக்கா” என்றாள் நந்தனி.

 

“நீங்க நந்தனி அண்ணி தானே? சொரி அண்ணி உங்களை போடோவில் தான் பார்த்து இருக்கேன், நான் உங்க கூட பேசினதே இல்லையா, அதான் கண்டுபிடிக்க முடியல்லை” என்றாள் பவி உண்மையான வருத்தத்துடன்.

 

“பரவால்லை விடு டா, நீ என்ன பன்ற?” என்று நந்தினி கேட்க,

 

“நான் **** கம்பனியில் டீம் லீடராக இருக்கேன்” என்றாள்.

 

“எப்போ கல்யாணம்?” என்று சிவபெருமாள் கேட்க,

 

“அடுத்த மாசம் கடைசியில் தான், கண்டிப்பா எல்லோருமே வரனும்” என்று பவி சந்தோஷமாக கூற

 

“பையன் என்ன மா பன்றான்?” என்றார் கனகா.

 

“அவன் என் அத்தை பையன் தான்,  அசிஸ்டன் கமிஷனரா இருக்கான்” என்று கூற நேசனுக்கு புரையேறியது.

 

“பார்த்து சாப்பிடுங்க அண்ணா, அவசரபாடாதிங்க. இல்லன்னா தொண்டையில் சிக்கிக்கும்” என்று நக்கலாக கூறி தண்ணீரை வழங்க, கிருஷி அவளை வித்தியாசமாகப் பார்த்தாள்.

 

அதைக் கண்டுகொள்ளாது செவ்வனே சாப்பிட்டாள் பவி. பின் சிறிது நேரம் அங்கேயே பேசிக் கொண்டு இருந்தார்கள். மாலை நேரம் அருகில் இருக்கும் கல்மலைக்குச் சென்று வருவதாகக் கூற, சிவபெருமாளும் அவளுடைய மனமாற்றத்திற்காக பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.

 

விகியுடன் வீட்டிற்குள் நுழைய அவனுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அவன் ராஜேஸ்வரியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்றான். பின் மற்றவர்களுடன் நல விசாரிப்பின் பின் ஆதியின் அறைக்குள் நுழைந்தான்.

 

“மச்சான் குட்டிபேபி கூட பேசினியா?” என்று கேட்க,

 

“இல்லை டா, அவளை பார்த்தே இரண்டு நாளாச்சு. அவளை பார்க்காமல் இருக்க முடியல்லை. அடுத்தது எங்கே இருந்து அவளுக்கு ஆபத்து வரும்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சது தான் மிச்சம். இந்த சித்தப்பா வேற எதையுமே சொல்ல மாட்டேங்குறாரு” என்றான் ஆதி எரிச்சல் கலந்த குரலில்.

 

“அவருக்கு உன் மேலே சந்தேகம் வந்து இருக்குமோ?” என்று விகி கேட்க,

 

“இல்லை டா, அவரு சந்தேகம் வந்து இருந்தால் உடனே என்னை சென்னைக்கு அனுப்பி இருப்பாரு. அதை அவரு பன்ன இல்லை. பசங்க கிட்ட தான் பேசி பார்க்கனும்” என்று கூறினான்.

 

“இப்போ என்ன பன்றது?” என்று கேட்க,

 

“அவளுக்கு எந்த ஆபத்து வராமல் பாதுகாக்கனும் டா, அவளால் சின்ன அடியை கூட தாங்க முடியாது. அன்றைக்கு அவ கீழ விழுந்து கையில் சிராய்ப்பு வந்தப்போ எவளோ கஷ்டபட்டு வந்தான்னு எனக்கு தான் தெரியும்” என்று கவலை தோய்ந்த குரலில் கூறினான்.

 

“புரியிது டா, ஏதாவது யோசிக்கலாம்.

நான் முதலில் போய் குளிச்சிட்டு வரேன், அப்பொறமா இரண்டு பேரும் சேர்ந்து ஒபரேஷன் டிரகஸ், ஒபரேஷன்  கெ.பி பற்றி டிஸ்கஸ் பன்னலாம்” என்றான்.

 

“அதென்னடா கெ.பி? எனக்கு தெரியாத ஒபரேஷன்?” என்று கேட்க,

 

“உனக்கு நல்லா தெரிஞ்ச ஒபரேஷன் தான், குட்டி பேபி” என்று குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான் விகி.

 

“ஐயோ இவனை எல்லாம் பெத்தாங்களா? இல்லை கையால் செஞ்சாங்களா?” என்று தலையில் அடித்துக் கொண்டே பல்கனிக்குச் சென்றான்.

 

விகி குளித்த பிறகு இருவரும் சேர்ந்து காலை உணவை உட்கொண்டனர். அங்கே விகியின் திரமணத்தைப் பற்றிக் கூறி அனைவரையும் அழைத்தான்.

 

“உன் வயசு தான் நம்ம தேவுக்கும் அவன் கல்யாணம் வேணான்னு சொல்றானே பா” என்று சங்கரன் கவலைப் பட

 

விகி ஆதியின் முகத்தைப் பார்த்தான். அவன் முகம் பாறைப் போல் இறுகி இருந்தது. இதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் ஆதி எழுந்து சென்றுவிட்டான். அவன் பின்னே விகியும் சென்று, மாலை நேரம் அந்த கல்லிற்குச் செல்ல சிறிது நேரத்தில் கிருஷி,பவியும் வந்து சேர அங்கு வாய்ப்பேச்சு அதிகமாகி கிருஷி அழுதாள். அவளை ஆதி அணைத்துக் கொண்டான். அதே நேரம் அங்கு வருகை தந்த இளந்தளிர் இக்காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11

பனி 11   “நவி” என்று ஆதி கத்தினான். கீழே விழுந்த கிருஷி எழுந்து நின்ற ஐந்து நிமிடங்களில் ஆதி அங்கு பைகில் வந்து இறங்கியவன் பைக்கை ஸ்டேன்ட் வைத்து நிற்பாட்டாமல் கீழே கிடத்தி விட்டு அவள் அருகில் ஓடி வந்தான்.

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

பனி 17   “அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.   சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1

பனி 1   நிலா நடு வானத்தில் வந்து தனது ஒளியை முடியுமானளவு அந்த ஊரிற்கு வழங்க, அந்த நிலாவின் வெளிச்சத்தில் அந்த ஆள் அரவமற்ற வீதியில் உயிர் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனைத் தொடர்ந்து பலர் கைகளில் அறுவாளுடனும்,