Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

பனி 17

 

“அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.

 

சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.

 

“என்ன மா சொல்ற? அந்த பையனா?” என்று கனகா கேட்க,

 

“ஆமா மா” என்று அழுதாள்.

 

சிவபெருமாள்” இந்த விஷயத்தை இதோடு விடுங்க. நான் பாத்துக்குறேன். அந்த பையனை மறந்திரு. நான் உனக்கு வேறு மாப்பிள்ளை பாக்குறேன்” என்று அங்கிருந்து வெளியே சென்றார்.

 

‘அவன் என்னையே ஏமாற்ற பாக்குறானா, ராஜேஸ்வரியோட பையனாச்சே இப்படி தான் பன்னுவான். என் பொண்ணு கல்யாணத்தை அவன் கண் முன்னாடி இன்னும் கொஞ்ச நாளையில் நடத்திக் காட்டுறேன்’ என்று அங்கிருந்து தோட்டத்திற்குச் சென்றார்.

 

“அம்மா, நான் எப்படி மா அவனை மனசுல வச்சிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பன்றது? நான் அவன் ராஜேஸ்வரி அம்மாவோட பையானா இருப்பான்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று கனகாவை அணைத்துக் கொண்டு அழ

 

“அவனும் எதிர்பார்க்க இல்லை வேணி மா, அவன் கண்ணை நான் பார்த்தேன். அவனும் ஏமாந்து இருக்கான். ஆனால் உன் மேல இருக்கிற காதல் இமியளவும் அவன் மனசுல குறைஞ்சு இருக்காது” என்று கூற

 

“அம்மா நீ என்ன சொல்ற? உனக்கு எப்படி அவனை தெரியும்?” என்று கிருஷி கேட்க,

 

” அவங்க பரம்பரையில் ஓடுகிற இரத்தத்துலேயே அது ஊறி இருக்கு. அதை இதற்கு முன்னாடி கண் கூடா பார்த்து இருக்கேன். அதனால் உன்னை யாருக்கும் நிச்சயமா விட்டுக் கொடுக்க மாட்டான்” என்று கூற

 

அவள் கேள்வியாய் தன் தாயைப் பார்க்க, அவரே தொடர்ந்தார்

 

“அவன் தான் உனக்கு சரியான பொருத்தம். நான் இப்போ சொன்னேன்னு ஞாபகம் வச்சிக்கோ உன் கழுத்துல ஆதி தான் தாலி கட்டுவான். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார் உறுதியாக.

 

“என்னால் அவனை கல்யாணம் பன்னிக்க முடியாது. அது அப்பாவுக்கு துரோகம் பன்றதுக்கு சமன், வேறு யாரையும் கூட கல்யாணம் பன்னவும் மாட்டேன்” என்றாள்.

 

“உன் அப்பா நிச்சயமா உனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்ப்பாரு. அவரை மீறி உன்னால் எதுவும் பன்ன முடியாது. நீ சம்மதிச்சாலும் இல்லைன்னாலும் ஆதி தான் உன் கழுத்துல தாலி கட்ட போறான்” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.

 

‘என்ன நடந்தாலும் சரி, நான் அவனை கல்யாணம் பன்ன மாட்டேன், என்னை மீறி என்னை அவன் எப்படி கல்யாணம் பன்றான்னு நானும் பார்க்குறேன்’ என்று சவால் விட்டுக் கொண்டாள். இன்னும் சில நாட்களில் தன் கழுத்தில் அவன் கட்டும் தாலியை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று விதி அவளைப் பார்த்து சிரித்தது.

 

அடுத்த நாள் விகி ஆதிக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“மச்சான் எப்படி இருக்க?” என்று விகி கேட்க,

 

“இருக்கேன் டா, கேஸ் எந்த லெவலில் இருக்கு?” என்று கேட்க,

 

“அதைப் பற்றி சொல்கிறதுக்கு தான் மச்சான் கோல் பன்னேன். இந்த கேஸோட பெரிய தலை ரொம்ப தந்திரக்காரனா இருப்பான் போலடா. அவன் யாருன்னே மற்றவர்களுக்கு தெரிரியாத அளவுக்கு பாத்துக்குறான். நாம கண்டு பிடிச்ச எல்லோருமே சின்னவனுங்க தான் டா. அவனுங்களை எவளோ அடிச்சும் கேட்டு பார்த்தாச்சு டா, அவனுங்க தலை யாருன்னே தெரியாதுன்னு தான் சொல்றாங்க” என்றான் விகி.

 

“நான் எதிர்பார்த்தது தான் டா. அவன் என்னோட ஒவ்வொரு அக்டிவிடியையும் வொச் பன்றான் போல இருக்கு டா” என்றான் ஆதி.

 

“இருக்கலாம் டா, மச்சான் அடுத்த மாசம் கோடிக் கணக்கு பெறுமதியான சரக்கு சென்னை வழியா வர போகுதுன்னு நியூஸ் கிடைச்சி இருக்கு டா, அவனுங்களை அதற்கு முன்னாடி கண்டுபிடிச்சே ஆகனும்” என்றான் விகி.

 

“சரி டா, பார்த்துக்கலாம்” என்றான்.

 

“மச்சி நான் நாளைக்கு உன் ஊருக்கு வரேன் டா” என்று கூற

 

“வா டா, என்னால் இங்கே தனியா இருக்க முடியல்லை டா. நீ வந்தால் எனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” என்று கூறி சில பல விடயங்களைப் பேசிய பிறகு அழைப்பைத் துண்டித்தான்.

 

ஆதியை அவன் தாய் அழைக்க மொபைலை அவன் லொக் செய்யாமல் அப்படியே வைத்து விட்டு கார்டினிற்குச் சென்றான். அதே நேரம் ஆதியைத் தேடி வந்த அவன் நண்பன் ராஜேஸ் ஆதியின் மொபைலின் வோல்பேபரில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அதே போல் வைத்து விட்டு வந்த தடையம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றான்.

 

ஆதி தன் தாயுடன் பேசி, நண்பர்களைப் பார்க்கச் செல்ல அங்கே ராஜேஸ் மட்டுமே இருந்தான்.

 

“என்ன டா நீ மட்டும் இருக்க மற்றவர்கள் எங்கே?” என்று கேட்க,

 

“மகாலிங்கம் ஐயா கூப்பிட்டாங்க அதனால் தான் போய் இருக்காங்க” என்றான்.

 

“ஓஓ” என்று கூறி அமைதியானவன்,

 

“வேணி தான் அண்ணியா?” என்று கேட்க,

 

‘என்ன?’ என்று ராஜேஸை அதிர்ச்சியாய்ப் பார்க்க,

 

“நீ காதலிக்கிற பொண்ணு வேணியா?” என்று ராஜேஸ் கேட்க,

 

எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி “ஆமா” என்றான்.

 

“அப்போ அன்றைக்கு அதனால் தான் நீ அவளை வெட்ட இல்லை , நேற்று கூட நீ தான் அவளை காப்பாற்றி இருக்க” என்று கேட்க,

 

“ஆமா” என்றான் ஆதி.

 

“ஏன்டா இப்படி பன்ற? அவங்க நமளுக்கு பகை குடும்பம் டா” என்று ராஜேஸ் கூற

 

“எனக்கு அவ சிவபெருமாளோட பொண்ணுன்னு அவளை வெட்ட போகும் போது தான் தெரியும்” என்றான் ஆதி கலங்கிய குரலில்.

 

“என்ன டா, அவ யாருன்னே தெரியாமல் தான் காதலிச்சியா?” என்று கேட்க,

 

“ஆமா டா” என்று அவளை பார்த்தது முதல் நேற்று அவளைக் காப்பாற்றியது வரை கூறினான்.

 

“அவ என் உயிர் டா, என்ன தான் அவள் எதிரியோட பொண்ணா இருந்தாலும் அவளை நான் காதலிக்கிறேன் டா. அவளுக்கு சின்ன கீறல் பட்டா கூட என்னால் தாங்க முடியாது டா. என் அடி மனசுல அவ ஆழமா பதிஞ்சிட்டா. என் வாழ்கையில் அவளை தவிற வேறு எந்த பொண்ணுக்கும் இடமே இல்லை, நான் அவளை மறக்கவும், வெறுக்கவும் முயற்சி பன்னி பார்த்துட்டேன் டா, ஆனால் பிரதிபலன் பூச்சியம். அந்த அளவுக்கு என்னோடு அவ கலந்து இருக்கா” என்றான் கண்கள் கலங்கிக் கொண்டு.

 

“நீ இவளோ அந்த பொண்ணை காதலிக்கிறியா?” என்று கேட்க,

 

“நீயும் யாரையாவது காதலிச்சு பாரு அப்போ அதோட வலி புரியும். அந்த சிவபெருமாள் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு அப்பொறம் தான் நான் என் காதலை அவ கிட்ட சொன்னேன். காதலை சொல்லி முழுமையா ஒரு நாள் கூட எங்க இரண்டு பேராலும் அனுபவிக்க முடியல்லை. அதற்குள்ள நானே அவளை வெட்ட போயிட்டேன்” என்று கண்ணீர் வடிக்க,

 

“சிவபெருமாளோட நம்பர் உன் கிட்ட இருக்கேடா” என்று கூற

 

“ஆமா, ஆனால் இது அவரோட பேர்சனல் நம்பர், அவரோட குரலும் எனக்கு ஞாபகம் இல்லை. அதான் கண்டுபிடிக்க முடியல்லை” என்றான் நம் நாயகன்.

 

“அந்த பொண்ணு என்னடா சொல்றா?” என்று ராஜேஸ் கேட்க,

 

“அவளாளும் என்னை மறக்க முடியல்லை. ரொம்ப கஷ்டபடுறா டா. அதை விட அதிகமா அழறாடா. என்னால் பார்த்துட்டு சும்மா இருக்க முடியல்ல. என்னை பிரச்சனை வந்தாலும், நான் அவளை பாதுகாப்பேன்னு அவ நம்பிக்கை வச்சிருந்தா டா. நானே அதை உடைச்சிட்டேன்” என்றான் உடைந்த குரலில்.

 

“மச்சான் உன் நிலமை புரியிது டா. அவளும் உன்னை போலவே அதிகமா பாதிகபட்டு இருப்பா. இதில் இரண்டு பேருக்கும் தான் கஷ்டம் அதிகமா இருக்கு” என்று ராஜேஸ் கூற

 

“மச்சான் நான் பொலிஸ் மனசை கட்டுபடுத்த ஒரளவுக்கு முடியும். அவ ரொம்ப சொப்டான கரெக்டர், அவளால் இதை ஏத்துக்குறது ரொம்ப கஷ்டம் டா. அவளை நினைச்சா தான் என்னால் முடியல்லை. பாவம் டா அவ. நாங்க யாருக்குமே எந்த துரோகமும் பன்னவே இல்லை. அப்படி இருக்கும் போது யேன் டா எங்களுக்கு மட்டும் இப்படி ஒரு சோதனை?” என்று கவலைப்பட

 

“மச்சான் கடவுள் நமக்கு நல்லதையே தான் தருவாருன்னு நம்புவோம். உங்க இரண்டுபேரோட காதலும் உண்மையா இருந்தால், நிச்சயமா ஒன்னு சேருவிங்க” என்றான் ராஜேஸ்.

 

“எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு  டா. அவ எனக்கு தான்னு, ஆனால் இப்போ நான் கவலைபடுகிறது அவளோட உயிரை நினைச்சு தான் டா” என்றான் ஆதி.

 

“இப்போ கூட, மகா ஐயா அவளை போடுறதுக்கு தான் பிளேன் பன்றதுக்கு அவங்களை கூப்பிட்டு இருக்காரு டா” என்றான்.

 

“அவளை கொல்றதுக்கு என்னை வேணுன்னாலும் பிளேன் பன்னட்டும் கடைசி நிமிஷத்துல கண்டிப்பா நான் காப்பாத்திருவேன், பிளேனை கூட என் கிட்ட சொல்ல வேண்டாம். அவளுக்கு எதுவுமே ஆக விடமாட்டேன்” என்றான் புன்னகை உடன் குரலில் உறுதிமாறாமல்.

 

“மச்சான் எப்போவுமே நீ நினைக்குறது நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. அதனால் ஜாக்கிரதையா இரு. அவளையும் கவனமா பார்த்துக்க” என்று ராஜேஸ் கூற

 

அதை ஆமோதித்த ஆதி, அவளைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

 

அதே தினம் மாலையில்,

 

“என்ன மாமா நேற்றில் இருந்து ஏதோ தீவிரமா யோசிச்சுட்டு இருக்கிங்க?” என்று நேசன் கேட்க,

 

“எல்லாம் நம்ம வேணியை பற்றி தான்” என்று பெருமாள் கூற

 

“அவளுக்கு என்ன மாமா, இப்போ ஓரளவுக்கு நல்லா தானே இருக்கா?” என்று கேட்க,

 

“அவ ஒரு பையனை விரும்பினா” என்று கூறும் போதே,

 

நேசனிற்கு அவனின் மீது கட்டுக் கடுங்காத கோபமும், கொலை வெறியும் ஏற்பட அதை மறைத்துக் கொண்டு புன்னகை மாறா முகத்துடன்,

 

“நல்ல விஷயம் தானே மாமா, ஆமா அந்த பையன் யாரு மாமா?” என்று கேட்க,

 

“தேவ், ராஜேஸ்வரியோட பையன்” என்று கூற

 

நேசனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. அவர் நடந்த அனைத்தையும் கூற, அதில் நிம்மதியடைந்த நேசன்,

 

“மாமா நான் ஒன்னு சொன்னால் தப்பா எடுத்துகாதிங்க. இப்போ நம்ம வேணி வேறு எந்த மாப்பிள்ளைய பார்த்தாலும் வேணான்னு தான் சொல்லுவா, யேன்னா எந்த ஆம்பளையையும் அவ நம்ப மாட்டா” என்று கூற

 

“ஆமா நேசன், நீ சொல்றதும் உண்மை தான், ஆனால் நான் சீக்கிரமா வேணிக்கு கல்யாணம் பன்னி வச்சே தீரனும்” என்று கூற

 

“மாமா, நானே அவளை கல்யாணம் பன்னிக்கிறேன்” என்றான் நேசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13

பனி 13   சிவபெருமாளின் வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் ஏறியவன் தன் நண்பன் ஒருவனிடம்   “வீட்டில் யாரு யாரு இருக்காங்க?, மற்றவர்கள் எல்லோருமே போயிட்டாங்களா? இல்லை கொஞ்சம் பேர் சரி வீட்டில் இருக்காங்களா?” என்று கேட்க,   “மச்சான் நமளுக்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7

பனி 7   டாக்டர் கிருஷி விழித்து விட்டதாக கூறி அவர்களது சண்டைக்கு முற்றிப் புள்ளி வைத்து, அடுத்த டொம் என்ட் ஜெரி சண்டையை ஆரம்பிக்க உதவி செய்தார். மூவரும் கிருஷியைப் பார்க்க உள்ளே சென்றனர்.  கிருஷி மூவரையும் பார்த்தாள்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 2யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 2

பனி 2   காலேஜை வந்தடைந்தாள் கிருஷி. தனது ஸ்கூர்டியை பார்கிங்கில் நிறுத்தி, நேரடியாக பிரின்சியின் அறைக்குச் சென்றாள்.   “குட் மோர்னிங் சேர்” என்று புன்னகைக்க,   “குட் மோர்னிங் கிருஷி” என்றார்.   “சேர் என்னோட டைம் டேபள்”